Friday, December 23, 2011

இளவரசி குடும்பத்திற்கு மன்னிப்பா?

சசிகலாவின் அண்ணி என்று ஊர் அறிந்த இளவரசி எப்போதுமே சசிகலாவிடமிருந்து விளகிநிற்பவர் என்பது போன்ற ஒரு தோற்றத்தை காட்டி வந்தார் அல்லது சிலரால் அப்படி காட்டப்பட்டது. எல்லாவற்றிற்குமே காரணம் இல்லாமலா இருக்கும்?. இராமாயண காவியத்தில் ஜவகர்லால்நேரு எழுதியது போல,வட இந்திய மன்னர், தென்னிந்திய மன்னரை போர் தொடுத்த கதை என்பதில் தோன்றும் தென்னிந்திய மன்னன் தமிழ்மன்னன். அவனது பெயரை தாங்கினால் சரியாகிவிடுமா என்று இப்போது காவல்துறை அதிகாரிகள் கேட்கிறார்கள். உள்ளே இருக்கும்போது செய்த அட்டூழியங்கள், இப்போது வெளியே வந்த பிறகு வணடவாளம் ஏறும் அல்லவா? அதில் மாட்டி ஒருவர் அறுபது கோடி என்று கூற, ஒருவர் நூற்று ஐம்பது என்று கூற உள்ளே இருப்பதாக்க கூறுபவர் நானூறு கோடி எடுக்கப்பட்டது என்கிறார், எப்படியோ அந்த பெண்களை ஒடுக்கியதும் வெளிவருகிறது இப்போது. ஆனால் நெஞ்சு வலி என்று பொய்கூறி அந்த மயிலாப்பூர் கிறித்துவ மருத்துவமனையில் படுத்து விட்டாரே?

சரி.அப்படியானால் இளவரசி மீது எந்த தவறுமில்லை என்று கூறிய வாரம் இருமுறை ஏடு வந்து, உடனேயே அவரது சம்பந்தி நீக்கப்பட வேண்டுமா? நினைவு படுத்தி விட்டுட்டீங்களே அய்யா? என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கேட்கலாம்.ஏன் என்றால் அவர்தானே அவரது தாயார் மறைந்தபோது, அடக்கம் எல்லாம் கவனித்தவர். எதற்காக? அவர்தானே அந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் மணல் வணிகத்தில் பங்காளி? இப்படி இருந்தால் ஆட்சி மாறி என்ன பயன்? அதனால்தான் இந்த நீக்கங்கள்.ஓகோ? அந்த காட்சி ஊடகத்திலும் அப்படியே. இன்னும் எங்கெங்கு எத்தனை பேர் பதுங்கி இருக்கிறார்கள் என்று யாருக்கு தெரியும்?

2 comments:

rajamelaiyur said...

//அவர்தானே அந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் மணல் வணிகத்தில் பங்காளி? இப்படி இருந்தால் ஆட்சி மாறி என்ன பயன்? அதனால்தான் இந்த நீக்கங்கள்.ஓகோ? அந்த காட்சி ஊடகத்திலும் அப்படியே. இன்னும் எங்கெங்கு எத்தனை பேர் பதுங்கி இருக்கிறார்கள் என்று யாருக்கு தெரியும்?

//

நல்ல கேட்டிங்க .. ஆனால் பதில்

rajamelaiyur said...

இன்றய ஸ்பெஷல்


நடிகர் விஜய்யின் நண்பன் சிறப்பு போட்டோ பதிவு

Post a Comment