Sunday, January 1, 2012

இந்தி ஒரு அந்நிய மொழி-உயர்நீதிமன்ற உத்தரவு.

பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் 1938 ஆமாண்டு தனத்தை பெரியாரால் துவங்கி வைக்கப்பட்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம், 1965 இல் மாணவர்களால் நடத்தப்பட்டு, அதனாலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதன்பின் இன்றுவரை இந்தி மொழியை உள்ளே விடாத தமிழ்நாட்டின் நீதிமன்றங்கள் அப்படி ஒரு உத்தரவை போட தீரமிக்க நிலையில் உள்ளதாக நீங்கள் தப்பு கணக்கு போட்டுவிட வேண்டாம். தமிழ்நாட்டில் உய்ரநீதிமன்ர நீதியரசர்களாக அதுவும் தலைமை நீதியரசர்களாக வருபவர்கள் அனேகமாக வட இந்திய இந்தி பேசும் மாநிலத்தவர்களாக ஐருப்படு வழமை. ஆனால் இந்த உத்தரவு குஜராத் நீதிமன்றத்திலிருந்து வந்துள்ளது.


ஐந்து நாட்கள் முன்னால், சென்ற ஆண்டின் கடைசி நாட்களில் டிசம்பர் 29 இல் குஜராத் நீதிமன்றத்தில் நீதியரசர் வி.எம்.சஹாய், இப்படிஒரு தீர்ப்பை கொடுத்துள்ளார். அதாவது இந்தி மொழி ஒரு அந்நிய மொழி. குஜராத்தில் நம்ம ஊர் போலவே "தேசிய நெடுஞ்சாலை துறை" இரண்டு வழி சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற ஒரு திட்டத்தை முன்வைத்தது. அந்த திட்டத்தை பணம் படைத்தவர்கள், அந்த வட்டாரத்தில் செல்வாக்கு மிக்கவர்கள், ஜனகத், ராஜ்காட் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நெடுஞ்சாலை ஓரத்தில் நிலங்களை அனுபவிப்பவர்கள், அரசிடம் கூறி அல்லது லஞ்சம் கொடுத்து, மாற்றி பல ஏழை விவசாயிகளுக்கு மட்டும் பாதிப்பு வரும் வகையில், புதிய திட்டத்தை அறிவ்த்தார்கள். அதை அந்த இந்திய தேசிய நெடுஞ்சாலை அதிகாரம் என்ற என்.எச்,ஏ.அய். கிராம மக்களுக்கு புரியும் குஜராத் மொழியில் அனுப்பாமல் இந்தியிலும், ஆங்கிலத்திலும் அனுப்பி உள்ளனர்.

அதை விளங்கி கொள்ள முடியாத ஜனகத் மாவட்ட சரகடா கிராம விவாசயிகள் தேசிய நெடுஞ்சாலை சட்ட பிரிவு மூன்றில் "அ " பிரிவில் மூன்றாம் எண்ணில் கூறியுள்ளபடி,வட்டார மொழியில் உத்தரவு இருக்கவேண்டும் என்ற உரிமையை கோரி நீதிமன்றம் சென்றார்கள். அதற்குதான் அந்த நீதியரசர் சஹாய், குஜராத்தில் ஆரம்ப பள்ளிகளில் கற்று கொடுக்கும் மொழி குஜராத்தி மொழிதான் என்றும் ஆகவே அந்த மக்களுக்கு புரியாத மொழியான இந்தி மொழி அவர்களுக்கு அந்நிய மொழி என்றும் தீர்ப்பு கூறி, இந்தியில் வெளியான ந்த நெடுஞ்சாலை துறையின் உத்தரவை செல்லாது என அறிவித்து விட்டார். பழைய திட்டத்தை நிராகரிக்கவும் மறுத்து விட்டார்.

இது இந்தி பேசாத மாநிலங்களுக்கு ஒரு வாய்ப்பான தீர்ப்பு.உடனேயே இந்தி பேசாத தென் மாநிலங்கள், வட கிழக்கு மாநிலங்கள், மேற்கு மாநிலங்கள், வடக்கு மாநிலங்கள் ஆகியவற்றின் எம்.பி.கள் இணைந்து குரல் கொடுத்து இந்தி மொழி திணிப்பை எதிர்த்தால் அவர்கள் கோரும் மாநிளுரிமைகளில் ஒரு சிறு முன்னேற்றம் கிடைக்கும்.

2 comments:

Anand said...

நல்ல தீர்ப்பு.

சிவக்குமார் said...

இந்த தீர்ப்பு ஏற்கெனவே குஜராத் உயர்நீதி மன்றத்தால் ஒரு நுகர்வோருக்கான வழக்கில் வழங்கப்பட்டு விட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்பு என்று நினைவு.

Post a Comment