திமுக எம்.பி. ஆதிசங்கர் என்றாவது வாயை திறந்து ஏதாவது பேசியிருக்கிறாரா? அபப்டியே பேசினாலும் யாரையாவது எதிர்த்து பேசிய வரலாறு படைத்திருக்கிறாரா? அப்படியே படித்தாலும் இந்தியாவின் பெரிய கார்பொரேட் நிறுவனத்தை குறை கூறி பேச தைரியம் கொண்டவரா? அப்படியே தைரியம் வந்தாலும், ஆளும் கூட்டணி தலைமை எதிர்க்கும் கேள்வியை கேட்டிருக்கிறாரா? அப்படியே கேட்டாலும் தான் அங்கம் வகிக்கும் "நாடாளுமன்ற கணக்கு குழு" கூட்டத்தில் கேட்கும் அளவு அவருக்கு வீரம் வந்தது உண்டா? இப்படி கேள்விகளை நாம் கேட்கும் அளவுக்கு ஒரு நிகழ்வு நடந்து விட்டது.
ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா-கோதாவரி படுகையில் அதிகமாக "இயற்கை வாயு" கிடைகிறது என்று முதலில் கண்டுபிடித்தது, நமது நாட்டின் பெரும் பொதுதுறையான"ஒ.என்.ஜி.சீ".என்ற "எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்". அந்த கண்டுபிடிப்பை ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கோ, அல்லது உள்நாட்டு ஏகபோக நிறுவனத்திற்கோ, விற்று விடுவது இந்த நாட்டின் கேவலமான அரசியல் ஓழக்கம். அவ்வாறு இந்த கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளின் படுகைகளில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவை எடுப்பதற்கான குத்தகையை நமது அரசாங்கம் "ரிலையன்ஸ்" நிறுவனத்திற்கு கொடுத்து விட்டது. அதுவே பெரும் சர்ச்சைக்கு இப்போது உள்ளாகியுள்ளது. மத்திய கணக்கு பார்க்கும் குழு சமீபத்தில் அந்த ஒப்பந்தத்தால் நாட்டிற்கு எந்த அளவுக்கு நட்டம் என்பதை கணக்கு போட்டு, அமபலப்படுத்தியது. அந்த அளவுக்கு இந்த கிருஷ்ண-கோதாவரி படுகை எரிவாயு ஒப்பந்தம் அதிகமான குற்றச்சாட்டுகளை தாங்கி வரும் வேளையில், அந்த விவகாரம் நாடாளுமன்ற கணக்கு குழு முன்னும் வந்துள்ளது.
ஏற்கனவே முரளி மனோகர் ஜோஷி இது பற்றி கடும் விமர்சனத்தை காங்கிரஸ் ஆட்சி மீது கிளப்பியுள்ளார். அந்த விவகாரத்தில், இப்போது திமுக வின் ஆதிசங்கரும்,சரத் பவரின் தலைமையிலான தேசியவாத காங்கிரசின் அனவரும் சேர்ந்து ரிலையன்ஸ் மீது குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.ஏற்கனவே இரண்டாவது தலைமுறை அலைவரிசை ஊழலில் ரிலையன்ஸ் செயல்பாட்டிற்கு எதிராக டாடா நின்றது அம்பலமானது. அப்போது திமுக தலைமை. அதன் பிரதிநிதிகள் ஆ.ராஜா, சரத்குமார் ரெட்டி, கனிமொழி ஆகியோர் டாடா ஆதரவு என்றும் எதிர் தரப்பில் இருந்த தயாநிதி மாறன் ரிலையன்ஸ் ஆதரவு என்றும் அமபலமானது. அந்த அவ்ழக்கில் டாடா ஆதரவு சக்திகளை ரிலையன்ஸ் ஆதரவு சக்திகள் உள்ளே தள்ள ஏற்பாடு செய்ததும் அனைவரும் அறிந்ததே.அதேநேரம் டாடா ஆதரவு என்பது திமுக தலைமையுடன் மட்டுமே நிற்காமல், சரத் பவர் ஆதரவு பெற்ற "ஸ்வான்" நிறுவன பால்வா வும் கைது செய்யப்பட்டு பாதிக்கப்பட்டார்.
இப்போது கே.ஜி. படுகை எரிவாயு ஒப்பந்தத்தில் மாட்டிக் கொண்டிருப்பது ரிலையன்ஸ் நிறுவனம். ஆகவே அய்.மு.கூ. ஆட்சியின் தலைமையான காங்கிரசால் திமுக வும், சரத் பவர் கட்சியும் பாதிக்கப்பட்டதற்கு பதிலாக இவர்களும் மோதல் நடத்த வேண்டும். ரிலையன்ஸ், தயாநிதி மாறன், சோனியா, சீ.பி.அய். ஆகியோர் ஒருபுறமும், டாடா, திமுக, சரத்பவார், ஆகியோர் மறுபுறமும் என்று இந்தியாவிற்குள் நடக்கும் இந்த கார்போரெட் சண்டை இப்போது புது வடிவில் வெளிப்படுகிறது.அதுதான் நாடாளுமன்ற கணக்கு குழுவில் திமுகவும், தேசியவாத காங்கிரசும் என்றாக எழுப்பும் குரல். இப்போது மம்தா, கருணாநிதி, சரத் பவர் ஆகிய மூவரும் சேர்ந்து செயல்பட முயல்வதை நாம் காண முடிகிறது. இவர்கள் மூவரும் மத்திய ஆட்சிக்கு ஒரு முற்று புள்ளியை வைக்க விழைகின்றனர்.அதன் முதல் வெளிப்பாடு இது.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
பிரிக்க முடியாதது கட்சிகளும்,கார்பரேட்களும்.
தப்பு தப்ப டைப்பிறீங்கன்னு எனது பதிவின் ருஷ்டி பற்றிய பின்னூட்டத்தில் நேற்று சொல்லியிருந்தேன்.
இப்ப தட்டச்சுக்கு நீங்க டியூசன் வைக்கிறமாதிரி தெரிகிறது.கொஞ்சம் முன்னேற்றம்:)
word verification எடுங்கன்னு முன்பே சொல்லியிருந்தேன்.அதையும் நீங்க கேட்கிற மாதிரி தெரியல:)
கட்சிகாரங்கதானே கம்பெனி வச்சிருகிறது.. ஆட்சி மாறினால் காட்சி மாறும்.. ஆனா கதை அதேதான்,
Post a Comment