வாலேண்டினே தினம் என்பதை நம்மூரில் காதலர் தினம் என்று அழைக்கின்றனர். அழைத்து விட்டு போகட்டும். அதை இளம் காதலர்கள் கொண்டாடுகின்றனர். கொண்டாடிவிட்டு போகட்டும். ஆனால் கலாச்சார காவலர்கள் நாங்கள் என்று ஒரு இந்துத்துவா கும்பல் அதை கொச்சைபடுத்துவதும், அண்ணனும் தங்கையும் தெருவில் போனால், தாலியை எடுத்து நீட்டுவதும் செய்யும்போது இந்த பத்தாம் பசலிகளில் யார் யோக்கியம் என்று கேட்க தோன்றும். அவர்களை கர்நாடாக சென்று அவர்களது கட்சியின் அமைச்சர்களை பிடித்து அடிக்க சொல்லுங்கள் என்று கூற தோன்றும். அப்படி கூறிவிட்டு காதலுக்கும், காமத்திற்கும் வேறுபாடு தெரியாதவர்களே என்று நாம் கேட்கும் போதே இன்னொரு மதம் சார்ந்த அமைப்பும் இன்று காலை செய்தி ஏட்டில் போட்டபடி "கழிசடைகள் தினம்"" என்று தங்களது பங்கை செலுத்தியுள்ளனர்.
இவர்களது அவசர குடுக்கைதனத்தை ஆதரிப்பவர்கள் சிலர் கடற்கரையில் என்ன ஆபாசம் செய்கிறார்கள் தெரியுமா? என்று கேட்கிறார்கள். அப்படி செய்பவர்கள் எண்ணிக்கை ஒரு பத்து விழுக்காடு கூட கிடையாதே? ஒரு மதம் சார்ந்த தொண்ணூறு விழுக்காடு சமாதானம் பேசும்போது, பத்து பேர் குண்டு வைத்தால் எப்படி அந்த மதம் சார்ந்தவர்களைஎல்லாம் பழிப்பீர்கள்? என்று கேட்க தோன்றுகிறது. டைம்ஸ் ஆப் இந்தியா ஏட்டில் இன்று ஒரு ஆய்வு கட்டுரை. அதில் இளைஞர்கள் மத்தியில் மதம் தாண்டிய காதல், கல்யாணம் நடக்கிறது என்ற செய்தி. சென்ற ஆண்டு எண்ணிக்கையை விட இந்த ஆண்டு மதம் தாண்டிய திருமணங்கள் தமிழ்நாடு சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் இரண்டு மடங்காக ஆகியுள்ளது என்ற புள்ளி விவரம். அதை பார்த்து கோபப்பட்ட மதவாதிகள் திருமணம் முடிந்தபின், எத்தனை விவாக ரத்து தெரியுமா? என்று கேட்கின்றனர். இந்த கேள்வியை தலக் சொல்லி பிரிவதற்கு உரிமை உள்ள மதம் சார்ந்தோர் பேசலாமா என்று மறு கேள்வி. இப்படியாக இன்றைய சர்ச்சை இந்த சர்ச்சைஎல்லாம் நாங்கள் ஒவ்வொரு நாளும் நடத்தும் சித்திகளும், நிஜங்களும் நிகழ்ச்சியில் நடந்தது என்பதுதான் ஆச்சர்யம்.
நகர்மயமாதலால இளைஞர்கள் மதம் தாண்டி, சாதி தாண்டி காதல் திருமணம் புரிவது அதிகரித்துள்ளதா? அதுவும் ஒரு காரணம். இன்றைய உலகமயமாக்கலின் ஒரு விளைவு கிராமம், நகரம் வேறுபாடு இல்லாமல் இளைஞர்கள் முக்கிய நிரோட்டத்தின் பொருளாதரத்தில் இரங்கி விட்டனர். அதனால் பெற்றோரையும், அவர்கது விவசாய பொருளாதரத்தையும் நம்பி வாழவில்லை. சொந்த பொருளாதரத்தில் வாழ தொடக்கி விட்டனர். அதனால் சொந்தமாகவே தனக்கான வாழக்கை பங்காளியை தேர்வு செய்து கொள்கிறார்கள். அவர்களுக்கு பொருளாதரா வாழ்நிலைதான் முக்கியம். அதில் சாதியையும், மதமும் தலையிட இடம்கொடுப்பதில்லை. அதனால் இன்றைய பொருளாதார தேவைகளை அடிப்படையாக கொண்டு திருமண பந்தங்களை இளைஞர்கள் கட்டமைக்கின்றனர். அதற்கு வேறு வழியில்லாமல் கூட, பெற்றோர் ஒப்புக் கொள்கின்றனர். எல்லாம் போருகாதர தேவைகளிலிருந்து தீர்மானிக்க படுகிறது. அது நகர்மயமாதளால் ஊக்குவிக்க படும்தானே? கிராம, நகர வேறுபாடு நல்லுக்கு நாள் குறைந்து வரும் தமிழ்நாட்டில் அது அதிகமாக நடக்கத்தானே செய்யும்? இப்படியாவது சாதியையும், மதமும் உடையட்டுமே?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment