Saturday, February 11, 2012

சல்வா சுடும் தலைவரை மாவோவாதிகள் அழித்தார்கள்.

சட்டிஸ்கர் மாநிலத்தில் ஆதிவாசிகள் வாழும் காட்டு பகுதிகளிலும், மலை பகுதிகளிலும் மத்திய அரசின் சதிச்செயலான் "கனிம வளங்களை"களவு செய்யும் கார்போறேட்களை எதிர்த்து போராடும் மக்களுக்கு மாவோவாதிகள் தலைமை தாங்கும் நேரத்தில், அதை எதிர்கொள்ளசட்டிச்கர் காவல்துறை சல்வா சுடும் என்ற கூலி படையை ஆதிவாசிகள் மத்தியில் உள்ள பொறுக்கிகளை வைத்து அமைத்து அதையே ஆதிவாசிகளை எதிர்த்து போராட பயன்படுத்தி வந்தது. அந்த சல்வா சுடும் என்ற பொருக்கி கூலி படைக்கு அனைத்து ஆயுதங்களையும் கொடுத்து காவல்துறை பேணி வந்தது. அந்த கூலி படையும் அனைத்து விதமான் பாலியல் பலாத்காரங்களையும் பெண்கள் மீது கட்டவிழ்த்து விட்டது. பல அப்பாவி ஆதிவாசி மக்களை கொலைகள் செய்துவந்தது. இவை எல்லாமே உச்சநீதி மன்றத்தின் முன்னாள் வைக்கப்பட்டது. உடனேயே அதை நாக்கு அறிந்த உச்சநீதி மன்றம், சல்வா சுடும் கூலி படையை கலைக்க சொன்னது.அதை செய்யசட்டிச்கர் காவல்துறை தயாராக இல்லை.அதனால் அந்த கூலி படையின் ஆட்களையே வைத்து, ஒரு சிறப்பு காவல் அதிகாரிகள் படையென்று ஒன்றை துவங்கியது. இது முழுமையாக் இந்த நாட்டின் அரசியல் சட்டத்தையே மதிக்காமல் செய்யும் போக்கு.


அந்த சிறப்பு காவல் அதிகாரிகள் படைக்கு மீண்டும்தளிவராக அந்த சல்வா சுடும் படையிம்முக்கிய தளபதியான "கார்டோம் சூரியா" என்ற முரடனையே போட்டது. அந்த கார்டோம் சூரியா தனது தலைமையின் கீழ் நூறு சிறப்பு காவல் அதிகாரிகளை வைத்து கொண்டு தனி அராஜக ஆட்சியை அந்த காட்டு பகுதிகளில் நடத்தி வந்தான்.அவன் செய்த கொலைகளையும், பாலியல் வன்முறைகளையும் மக்கள் கணக்கு பார்த்து சொல்கிறார்கள். அந்த அளவுக்கு அரசின் காவல் படை என்ற பெயரில் ஒரு ஆராச கூலி படையை அந்த சட்டிஸ்கர் அரசு பராமரித்து வந்தது. கடைசியாக் அமாவோவாதிகளின் "தோட்டாக்களுக்கு" அந்த கொடியவன் அதாவது அந்த கூலி படை தலைவன் கார்டோம் சூரியா "பலியானான்"என்ற செய்தயு அந்த மக்களுக்கு ஒரு இனிப்பு செய்தியாக இருக்கிறது. நமது ர்டமழ்நாட்டில் இதேபோல பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு கீழவென்மனியின் பண்ணையார் கோபாலகிருஷ்ணன் நாயுடு தனது நாற்பத்தி நாலு தேவேந்திர கூலி விவசாயிகளை கொலை செய்த செயலுக்காக பழி வாங்க பட்டதை மக்கள் வரவேற்றார்களோ,மாநிலமெங்கும் இனிப்பு கொடுத்தார்களோ, அதுபோல வரவேற்றிருப்பார்கள் என்று நமக்கு புரிகிறது.

No comments:

Post a Comment