Sunday, February 12, 2012

பினராய் எறிந்த கல்லில் மாங்காய் விழுமா? கற்கள் விழுமா?

பினராய் விஜயன் கேரளாவின் சி.பி.எம். என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர். கேரளா சிபிஎம் தமிழ்நாட்டு கட்சி போல அல்ல.அங்கே அது ஆளும்வர்க்க கட்சி. அதாவது மீண்டும், மீண்டும் ஆட்சிக்கு வரும் தகுதி கொண்ட கட்சி. அதனால் அதன் செயல்பாடுகள் உங்களுக்கு ஒரு முதலாளித்துவ கட்சியை போலவே தோன்றலாம்.ஆனாலும் அது சிவப்பு கொடிகட்சி என்பதால் நீங்கள் அப்படி நினைக்க கூடாது. மாநில செயலாளர் பினராய் விஜயனுக்கும், வி.எஸ். அச்சுதானந்தன் என்ற முன்னாள் முதல்வருக்கும் என்ன தகராறு என்று நீங்கள் கேட்க கூடாது. அது "தத்துவார்த்த" பிரச்சனையாக இருக்கலாம் என்று நீங்களே நினைத்துக் கொள்ள வேண்டும். நடந்து கொண்டிருக்கும் மாநில மாநாட்டில் அச்சுதானந்தன் ஒர்ங்கட்டபட்டாரே என்று நீங்கள் கேட்க கூடாது. அச்சுதாநாதன் எழுதிய அறுபது புகார் கடிதங்களும் அரசியல் தலைமை குழுவான பொலிட்பீரோவில் விவாதிக்க பட்டதா? என்று நீங்கள் கேட்க கூடாது. பொதுவுடைமை கட்சியில் விமர்சனம், சுய விமர்சனம் இரண்டும் வரும், போகும் என்று நீங்கள் சும்மா இருக்க வேண்டும். பினராய் விஜயனை கண்டித்து அச்சுதானந்ததிற்கு ஆதரவாக, வந்திருந்த யச்சுரியும், பிருந்தாகரந்தும் பேசினார்ககளே என்று நீங்கள் திருப்தி அடைய வேண்டும். ஐந்தாவது முறையாக மாநில செயலாளராக பினராய் விஜயனை இந்த முறை முன்வைத்ததே அச்சுதானந்தன் தான் என்று நீங்கள் அறிய வேண்டும். அதுதான் கம்யுனிஸ்ட் கட்சியின் தந்திரம் என்று கூறக்கூடாது. அது சிறுபான்மையை வைத்து பெரும்பான்மை கருத்தை சொல்ல வைக்கும் கட்சி வழி என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது புதிய பிரச்சனை ஆரம்பமாகி உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டிற்காக பல கிளைஅமைப்புகளும், வெகு மக்கள் அமைப்புகளும் சுவரொட்டி போடுவார்கள் அல்லவா? அதுபோல ஒரு சுவரொட்டியை சி.ஐ.டி.யு.போட்டுள்ளது. அந்த சுவரொட்டியில் "ஏசுநாதரின் கடைசி விருந்து" என்ற பிரபல விருந்தை பற்றி "மாற்று முகங்களுடன்" அச்சிடப்பட்டுள்ளது. அதாவது ஏசுநாதரும், யோவானும், காஷியசும், எல்லா பதின்மூன்று சிஷ்யர்களும் இணைந்து சாப்பிட்ட உணவு சாப்பிடும் படத்தை அப்படியே மாற்றி அரசியல்வாதிகளை போட்டு அச்சடிக்கபட்டுள்ளது. அதாவது ஏசுநாதர் இடத்தில் அமெரிக்க அதிபர் பார்க் ஒபமா, மாட்டார் சீடர்கள் இடங்களில் சோனியா, மன்மோகன், ராகுல்காந்தி, ஏ.கே.அந்தோணி, ஊமன் சாண்டி, ரமேஷ் சென்னிதாலா, எல்.கே.அத்வானி, நரேந்திர மோடி, பிரான்ஸ் நாட்டு அதிபர் நிகோலஸ் சர்கோசி ஆகியோர் இருப்பது போன்ற படம் அது. அந்த படத்தில் " முதலாளித்துவத்தின் கடைசி விருந்து" என்று எழுதப்பட்டுள்ளது. இது ஏசுநாதரின் கடைசி விருந்து என்ற மிகவும் புனிதமாக் கிருத்துவ மக்களால் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளபட்ட ஒரு படத்தை அவமானப்ப்டுத்துவது என்ற முழக்கம் இப்போது கிளம்பி உள்ளது.

இந்த சுவரொட்டியை சி.ஐ.டி.யு. பல இடங்களில், குறிப்பாக திருவனந்தபுரத்தில் குன்னபுழா, பேரூர் கோணம், தக்கனபுரம், ஆகிய இடங்களிலும் ஒட்டியுள்ளது. ஊமன் சாண்டி இந்த சுவரொட்டியை கடுமையாக கண்டித்துள்ளார். மத நம்பிக்கைகளை புண்படுத்துகிறது என்றார். கேரளா கத்தோலிக்க திருசசபை, " இந்த கம்யுனிஸ்டுகள் தான் கடைசி உணவு எடுக்கிறார்கள் என்றும், ரஷியா, கிழக்கு ஜெர்மனி ஆகியவை அழிந்து விட்டன என்றும், சீனாவில் இருப்பது கம்யுனிசம் அல்ல" என்றும் கூறியுள்ளார். அதேபோல சிரோ-மலபார் திருச்சபையின் பாதிரியார் பால் தலைக்கா கடுமையாக விமர்சித்துள்ளார். கேரளா கத்தோலிக்க பேராயர்களின் மாநாட்டின் பேச்சாளர் ஸ்டீபன் அலட்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். அதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பினராய் விஜயன் இந்த சுவரொட்டி கட்சி தலைமைக்கு தெரியாமலேயே வெளிவந்து விட்டது என்றும் அதை தாங்கள் உடனேயே கிழித்து விட சொல்லி விட்டோம் என்றும் பதிலுரை கூறியுள்ளார்.

நம்முடைய சந்தேகம் எல்லாம் பினராய் விஜயனுக்கு வேண்டாத கட்சிக்குள் இருக்கும் கும்பல் செய்திருப்பார்களோ? ஏன்? எதற்காக் அவர்கள் பினராய்க்கும் கிருத்துவர்களுக்கும் "சண்டை" மூட்ட வேண்டும்? மார்க்சிஸ்ட் கட்சிதான் தன்னை எப்போதுமே மதவாத வாக்குகளை விட்டு கேரளாவில் தூரம் தள்ளி நிற்குமே? இப்போது பினராய் விஜயனுக்கும், கிருத்துவ மதவாதிகளுக்கும் இடையில் எதற்காக புதிய சண்டையை மூட்ட அவரது எதிர் அணி வேலை செய்ய எவ்ண்டும்? அதாவது எர்ணாகுளம் மாவட்டத்தின் பிரவம் தொகுதியில் மானி காங்கிரஸ் ஜேக்கப் இறந்தபின் இடைதேர்தல் வருகிறது. அதில் மானி காங்கிரஸ் தோற்றாலும், வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு பெரிய லாபமோ, நட்டமோ இல்லை. அதேநேரம் பினராய் விஜயனின் ஆளான முன்னாள் உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் { மாநில மாட்டில் அச்சுதானததிற்கு எதிராக செயல்பட்டவர்} மானி இடம் ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்தாராம். அதில் மானி காங்கிரசின் எட்டு சட்டமன்ற உறுப்பினர்களும் இடதுசாரி கூட்டணிக்கு வந்துவிட்டால், மானிக்கு முதல்வர் நாற்காலி உறுதி என்று கூறியுள்ளாராம். இத்தகைய காய் நகர்த்தல் மூலம் பினராய் விஜயனின் எதிரான அச்ச்தானந்ததை முதல்வராக வர விடாமல் தடுத்து விடலாம். அதேசமயம் இடதுசாரி அரசாங்கத்தை கேரளாவில் ஏற்படுத்தி விடலாம். ஊமன் சாந்தியின் காங்கிரஸ் தலைமையிலான் ஐக்கிய ஜனநாயக கூட்டணி அரசை கலைத்து விடலாம். பினராய் விஜயனும் ஒரு அமைச்சராக வந்து விடலாம். ஒரே கல்லில் எத்தனை மாங்காய்களை வேண்டுமானாலும் அடித்து விடலாம் என்பது அந்த விஜயன் குழுவிற்கு கணக்கு.

மேற்கண்ட கணக்கை முழுவதும் இந்த குறிப்பிட்ட சுவரொட்டி கலைத்து விட்டதா? இந்த சுவரொட்டி அச்ச்தானந்ததிற்கும், ஊமன் சாந்திக்கும் உதவி செய்து விட்டதா? இந்த சுவரொட்டி பற்றி சி.பி.ஐ. கட்சியின் தலைவர் ஒருவர் மார்க்சிஸ்ட் மாநாடு ஒரு "நிகழ்ச்சி மேலாண்மை" என்று கூறி விட்டார். அதற்கு பினராய் அவரை காய்ச்சி எடுத்து விட்டார். அவரோ பதிலுக்கு ஏசுநாதரை உலகம் முழுவதும் கம்யுனிஸ்டுகள் ஒரு புரட்டிசியாளராக பார்கிறார்கள். அவர் படத்தை வைத்தது தவறல்ல. ஆனால் அந்த கடைசி விருந்து சுவரொட்டியில் நீங்கள் எப்படி "முகங்களை மாற்றலாம்?" என்று கேட்டுள்ளார். அதனால் இன்று சென்னை நியு இந்தியன் எக்ஸ்ப்ரெசில் அந்த செய்தி வந்து விட்டது. தோண்டினால் அதற்கு பின்னால் இவ்வளவு செய்திகள் உள்ளன. அதேசமயம் பினராய் விஜயன் மாநாடு தொடங்கும்போதே "ஏசுநாதர் உலகின் முதல் புரட்சியாளர்" என்று வேறு கூறிவிட்டார். அதை உடனேயே மலபார் பேராயர் ஆதரித்து கூறிவிட்டார். இப்படியாக கிருத்துவ வாக்கு வங்கிகளை குறி வைத்து பேசப்படும் பேச்சுகள், நமக்கு மானி காங்கிரசின் வாக்கு வங்கி முழுவதும் கிருத்துவ வாக்கு வங்கி என்ற உண்மையை கூறாமல் இருக்க முடியவில்லை.

No comments:

Post a Comment