Thursday, March 8, 2012

தோழர் குறுஞ்சி அவர்களுக்கு,

தோழர் குறுஞ்சி அவர்களுக்கு,
நீங்கள் அறிவித்துள்ள மாநாடு ஆய்வு கூட்டம் நல்ல முயற்சி. நான் வரமுடியவில்லை என்றாலும் எனது கருத்துக்களை இங்கே உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். அவற்றில் பயனுள்ளவற்றை எடுத்துக் கொண்டு, பயனற்றவற்றை நீக்கி விட வேண்டுகிறேன். ஏன் என்றால் நாம் எல்லோரும் ஒரே நோக்கத்தில் அணு உலை எதிர்ப்பில் பணியாற்றினாலும், நமக்குள் ஒவ்வொருவரும் பல்வேறு அனுபவங்களில் இருந்து வருவதால், வேறுபட்ட கோணங்களும், பார்வைகளும், கருத்துக்களும் இருக்க வாய்ப்புள்ளது.

முதலில் அந்த சென்னையில் நடத்தப்பட்ட மாநாடு ஒரு நல்ல முயற்சி. சரியான நேரத்தில் நடத்தப்பட்டது. அப்படி ஒரு மாநாட்டை தலைநகர் சென்னையில் நடத்த திட்டமிடும்போது, எனக்கும் பல தோழர்களுக்கும் சென்னையில் உள்ளோருக்கு தெரியாமலேயே திட்டமிடல் திருச்சியில் நடந்து விட்டதே என்ற வருத்தம் உண்டு. தெரிந்திருந்தால் திட்டமிடலில் இருந்தே நாங்களும் கலந்து கொண்டு இருக்கலாமே. பரவாயில்லை. மாநாடு வெற்றிகரமாக நடந்தது. அதில் மூன்று அமர்வுகளாக நடத்தப்பட்டதும் சிறப்பு. அதிலும் ஒவோருவரையும இனைக்க வசதியாக பேச்சாளர்களை கருத்த்ரங்கு , பேரணி, வெளி அரங்கு என பிரித்து நடத்தப்பட்டது வெற்றிகரமாக நடந்தேறியது.. அந்த ஆலோசனைகளை பாராட்ட வேண்டும். பல தரப்பட்டவர்களுகும் நேரம் பிரித்து நடத்தப்பட்ட முறையும் சில தலைவர்கள் விசயத்தில் மீறி சென்றாலும் ந்ல்ல முயற்சி.அதேபோல பேரணி சென்னை ஊடகத்தாருக்கு படங்கள் போட உதவியாக அமைந்தது. அது கூவம் கரையருகே நடத்தப்பட்டதை காவல்துறை அனுமதி என்ற பெயரில் நாம் ஏற்றுக் கொண்டாலும் மாற்று ஆலோசனை பேசியிருக்கலாம். பரவாயில்லை.

அனேகமாக எல்லோருமே அணு உலை எதிர்ப்பில் பக்வேறு க்ருத்துகளை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.அதுவும் மாநிலமெங்கும் இருந்து வந்திருந்த அணு உலை எதிர்ப்பாளர்களுக்கும் பயனுள்ளதாக அமைந்தது. பல மக்கள் பிரிவினர் மத்தியிலும், ஊடகத்தார் மத்தியிலும் அமைச்சர் சிதம்பரம் போன்றவர்கள் கிளப்பி விட்ட பொய் செய்தியான அணு உலையை கட்டி முடித்தபின் ஏன் எதிர்க்கிறார்கள்? என்பதும், என்பத்தி எட்டு காலத்திலிருந்தே ஏன் எதிர்க்கவில்லை? எனபதும் முக்கியமாக் சரியான பதிலுடன் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு தனி அமர்வு ஏற்பாடு செய்து மாநாடு கொடுத்திருந்தால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்ப என்பத்தி ஆறு காலம் தொட்டு, குறிப்பாக என்பத்தி ஏழாம் ஆண்டு மூதல் உருவான கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு வரலாற்றில் உள்ள பல்வேறு முக்கிய படிக்கட்டுகளை சொல்ல உதவியிருக்கும். பல்வேறு வெற்றிகள் மத்தியில் விடுபட்ட விசயமாக அதை வைத்துக கொள்ளலாம்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு எப்படி நீண்ட வரலாறு கொண்டதோ அதேபோல அந்த இயக்கம் மக்களின் பங்களிப்புடன் நடத்தப்படுகிறது என்பதும், மக்கள் இயக்கமாக நடக்கிறது எனபதும் அதை தனிநபர் இயக்கம் போல கட்ட முயலும் ஆளும் கும்பலின் தந்திரத்தை மறுப்பதற்கு மேலும் அழுத்தம் தந்திருக்க வேண்டும். நம்மை திசை திருப்ப அது தனிநபர் சார்ந்தது போல சித்தரிப்பது டில்லியின் தந்திரம். அணு உலை வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதத்தை திசை திருப்ப பிரதமர் முதல் முயர்சிப்பதை நாம் கவனமாக மறுக்க வேண்டும்.அவர்கள் நம்மை நிதி பற்றி பேசி திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். அவர்கள் அந்த போராட்டம் வரலாறு கொண்டதல்ல என கூற முயற்சிக்கிறார்கள். நாம் வரலாற்றை கூறி அதை மறுக்க ஆவண செய்ய வேண்டும்.

சீமான் பேச்சும், திருமா பேச்சும் சிறப்பு. அதில் திருமா இந்த போராட்டம் இருபத்தைதாண்டு வரலாறு கொண்டது, ஆனால் ஊடகங்கள் தான் அதில் தாமதமாக பதிவு செய்துள்ளன என்று கூறியது ஒரு விதத்தில் சாட்டையடி. அதை மதுரை சிம்மக்கல் பாண்டியன் பேசும்போது, அன்று போராட்டத்திற்கு முகமாக ஆண்டன் கோம்ஸ் இருந்தார் , இன்று உதயகுமார் முகமாக இருந்க்கிறார் என்றும், நாளை எந்த குமாராகவும் இருக்கலாம் எனவும் ,ஆனால் போராட்டம் தொடரும் என்று கூறியது சிறப்பு. அதேசமயம் தனது பங்கு இந்த போராட்டத்தில் எப்படி என்று அவர் பதிவு செய்ய எண்ணி "தான் அடிபட்ட செய்தியை கூறும்போது, தனது போராட்டத்துடன் ஆன்டனும் இணைந்து வந்தார் என்று கூறியது விஷயம் தெரிந்தவர்களுக்கு சிரிப்பை வரவழைத்து. உள்ளபடியே ஆண்டன் கோம்ஸ் தலைமையில் ஜி.ரமேஷ், ஐகப் சாமி, சீ.ஏன். தெய்வநாயகம், நான் ஆகியோர் தலைமை குழு பணிகளை செய்து வரும் வேளையில், இந்திய மக்கள் முன்னணி சார்பாக நெல்லை சங்கரபாண்டியன் தலைமையில் நாங்கள் ஏற்பாடு செய்த சைக்கிள் பேரணியில், தூத்துக்குடி முதல் நெல்லை வரை செல்லும்போது, கூடங்குளத்தில் அணு உலை ஆதரவு உழுவாக அன்று செயல்பட்ட காங்கிரஸ், சீ.பி.எம். குழுவினர், சைக்கிள் பேரணியின் கடைசியில் வந்த விளாத்திகுளம் சங்கர்ராஜ், பாண்டியன் ஆகியோரை அடித்து சைக்கிளை பஞ்சர் செயுததை முன்னால் சென்று விட்ட ஆண்டன், நான், சங்கரபாண்டியன் ஆகியோர் அடிபட்டவர்கள் நீண்ட நேரம் கழித்து கூடங்குளம் ஊரை தாண்டி நாங்கள் செல்லும்போது வந்து கூறியதால் மட்டுமே உணரமுடிந்தது. அப்போதும் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் மோதல் உருவாகாமல் நாங்கள் தவிர்த்தோம். ஏன் என்றால் அதை ஒரு சாதி மோதலாக உருவாக்க எதிரிகள் திட்டமிடலாம் என்பதால். இத உண்மையை முழுமையாக கூறினால் அது அனுபவமாக ஆகிவிடும். ஒருவர் தன்னை மட்டும் முன்னிறுத்த அந்த உணமைகளை அறை குறையாக கூறினால் அது இயக்கத்திற்கு உதவாது. அன்று ஆண்டன் தலைமையிலான இயக்கம் "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு" என்ற பெயரில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும், பாண்டிச்சேரியிலும் , கேரளாவிலும் நடைபெற்றது.

அந்த பெயருக்கு அத்தனை வரலாறு இருக்கிறது. அதை விடுத்து ஏன் இரண்டாயிரமாவது ஆண்டுகளில் உருவான புதிய பெயரை சிலர் தொங்கி கொண்டு இருக்கிறார்கள் என்பதே விலக வில்லை. அதனால் அணு உலை ஆதரவாளர்களுக்கு இது இப்போது ஆரம்பித்த போராட்டம் என்று முத்திரை குத்த வசதியாக போயிருக்கலாம். பரவாயில்லை. இன்று களத்தில் அந்த இடத்தில் நிற்பவர்கள் எண்ணுவது போலவே நடக்கட்டும். ஆனால் அங்கேயே கூடங்குளம் ஊரில் உள்ள நாடார் சமூகம் மத்தில்யில் ஊராட்சி தலைவராக இருக்கும் சண்டல்முத்துராசும், போராட்டத்தை ஆறு ஆண்டுகளாக நடத்தும் ரவி என்ற முன்னோடியும், "கூடங்குளம் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம்" என்ற பெயரில்தான் போராட்டங்களை நடத்துகிறார்கள் என்பது அண்மைக்கு சொல்லப்படுகிறதா? அந்த ரவி, சாண்டல் ஆகியோரது போராட்டங்களை எனக்கு ஆண்டன் அவ்வப்போது கூற நான் அதை வின் காட்சி ஊடகத்தில் ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து கூறி வருவது எத்தனை பேருக்கு தெரியும்? நிச்சயமாக ந்த வட்டார அதாவது கூடனுலம் வட்டார மக்களுக்கு அவர்கள் தொடர்ந்து வின் டி.வி. பார்ப்பதால் தெரியும். அனுபவங்களை தெரிந்து கொண்டு தொடர்வதே ஒரு இயக்கத்திற்கு ஆரோக்கியமானது. ஒவ்வொருவரும் தங்களை ஈடுபடுத்தி கொண்டு இயங்குவது சிறப்பு. அதேசமயம் தங்களை "தொடக்கம் என்று எண்ணாமல் தொடர்ச்சி" என்று புரிந்து கொல்வது ஒரு இயக்கத்திற்கு நல்லது.

திட்டமிடலிலும், அதை அறிவித்தலிலும் புறக்கணிக்கப்பட்டதாக எண்ணி நாங்கள் விலகி நின்றபோது எங்களை அரவணைத்து அந்த மாநாட்டிற்கு அழைத்து வந்த பெருமை கொளத்தூர் மன்யு அவர்களுக்கே சாரும். இன்னமும் போராட்டங்களின் மத்தியில் இருக்கும் நாம் மக்கள் பிரதிநிதிகளை முன் நிருத்ஹ்டி, தொண்டு நிறுவன தோழர்கள் சற்று பின் நின்று உதவினால் போராட்டம் மேலும் வலு பெரும். நன்றி, தோழரே. ஏற்கவேண்டும் எனப்டர்காக அல்ல, பதிவு செய்ய எவ்ண்டும் என்பதற்காக எனது கருத்துகளை சிறிய அளவே பதிவு செய்துள்ளேன். நன்றி. -------தோழன்,டி.எஸ்.எஸ்.மணி.

No comments:

Post a Comment