Friday, March 2, 2012

கலைஞரின் கூற்று பொய்த்து விட்டதா?

நேற்று அதாவது ,மார்ச் முதல் நாள் ஏடுகளில் கலைஞர் கொடுத்த உரை வெளியாக்கி உள்ளது. அதில் கூடங்குளம் அணு உலையை ஆதரிக்க சிரமம் எடுத்து கொண்டு கல்பாக்கம் அணு உலை ஆபத்து எதையும் தரவில்லையே என்றுகூறியுள்ளார். தினகரன் ஏழாம் பக்கத்தில் அது வெளியாகி உள்ளது. நெரடிஆதரத்திர்காக அவரது பாணியிலேயே பேசினால், அவரது முரசொலி ஏட்டிலேயே அது சிறப்பாக வெளி வந்துள்ளது. அதாவது மார்ச் முதல் நாள் முரசொலி ஏடு. அதன் மூன்றாம் பக்கம். தலைவர் கலைஞர் உரை என்ற தலைப்பில், மூன்றாவது பத்தியில் அது வெளியாகி உள்ளது. "கூடங்குளத்திற்கு எதிராக போராடுபவர்களுக்கு பக்கபலமா?. அல்லது பேரத்தின் அடிப்படையில் நடைபெறுகின்ற பலமா? என்ற தலைப்பில் அது வெளியாகி உள்ளது. அது கல்பாக்கம் அணு உலை பற்றியது. மூன்றாம் பத்தியில் இரண்டாம் பாரா.

நம்முடைய சென்னைக்கு பக்கத்தில் கடற்கரையோரத்தில் இருகின்ற இதைப்போன்ற அணு மின் நிலையம் கல்பாக்கத்தில் இருக்கிறது இப்படி அதில் கலைஞர் தொடங்குகிறார். அந்த அணு மின் நிலையம் எத்தனையோ ஆண்டுகளாக இருக்கிறது. இவர்கள் சொல்கின்ற ஆபத்துக்கள் என்றைக்காவது ஏற்பட்டது உண்டா? அப்படி ஏதாவது ஆபத்துகள் ஏற்பட்டு அதை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளாமல் இருந்தது உண்டா? இப்படியாக கலைஞர் தொடர்கிறார். ஒரு கல்ப்பாக்கதை சென்னையின் அருகிலே அனுமதித்திருக்கின்ற நாம் கடற்கரை ஓரத்தில் அனுமதித்திருக்கின்ற நாம் ஒரு கோடந்குலத்தைஎதிர்ப்பதர்க்கு மறைமுகமாக ஆதரவு காட்டுகிறார்கள் என்பதுதான் புரியாத புதிராக இருக்கின்றது. மாநில அரசு என் இதுவரை மவுனமாக இருக்கிறது? என்று அந்த பாராவில் எழுதுகிறார் கலைஞர்.அதாவது கலைஞருக்கு கல்பாக்கம் ஆபத்தானதுதான் என்று நிரூபித்தால் அதை வைத்து அவரே அணு உலைகள் வேண்டாம் என்ற அவரது பழைய நிலைப்பாட்டிற்கு வந்துவிடுவார் என நாம் எதிர்பார்க்கலாமா?

இரண்டு மாதங்களுக்கு முன்பு கல்பாக்கம் அணு உலை அருகே அந்த விபத்திற்கான அறிகுறிகள் தென்பட்டன என்பதை நாம் கலைஞர் அவர்களுக்கு தெரிவிக்க கடைமைப்பட்டுள்ளோம். ஏற்கனவே டாக்டர் புகழேர்ந்தியும், டாக்டர் ரமேஷ் என்பவரும் சேர்ந்து எழுதிய புத்தகத்தில் கல்பாக்கம் அணு உலை அருகே ஒரு எரிமலை கடலுக்குள் இருக்கிறது என்று எழுதியுள்ளார்கள். அதற்கு அனைத்து நாட்டு புவியியலாளர்கள கூற்றையும் மேற்கோள் காட்டியுள்ளனர். அந்த புத்தகம் அணு உலை எத்ரிப்பு மாநாட்டில் சென்னையில் சென்ற வாரம் வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தை இரண்டு நாள் முன்பு முதல்வரை சந்திக்கும்போது, டாக்டர் ரமேஷ் கொடுத்துள்ளார். அந்த எரிமலை வெடித்த சிறிய வெடிப்பு இப்போது நமக்கு தெரிந்துள்ளது. இரண்டு மாதம் முன்பு கல்பாக்கம் அருகே உள்ள "பரமான்கேணி" என்ற மீனவ கிராமத்தில் உள்ளோர் நாற்பது படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது கடலுக்கு மத்தியில் ஒரு புகை கிளம்பி பெரிதாக வந்துகொண்டு இருந்தது. இவர்கள் பாய்ச்சிய நங்கூரம் ஒரு படகில் அறுத்து கொண்டு வந்துள்ளது. தண்ணீர் சுட தொடக்கி விட்டது பயந்துபோன மீனவர்கள் கரைக்கு திரும்பி உள்ளனர். அதை நான்கு மீனவ குப்பங்களை சேர்ந்தோர் கரையில் நின்று கண்டுள்ளனர். அந்த சுடு தண்ணீரில் தன்கள் கைகளில் கொப்புளம் வந்ததையும் அந்த மீனவாகள் கூறுகின்றனர்.


மேற்கண்ட செயல்களை மனித நேய மக்கள் கட்சியின் பொது செயலாளர் அப்துல் சமது கானொளியில் எடுத்து வந்துள்ளார். கலைஞர் அவர்களே இப்போது கூறுங்கள்? இப்போது நீங்களும் எங்களுடன் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு வருகிறீர்களா? அல்லது தங்கள் கூற்று பொய் என்று அம்பலப்பட்டுவிடாதா?

No comments:

Post a Comment