இன்று சென்னை பெசன்ட் நகரில், கடற்கரையில் பெரிய ளவில் காவலர்கள் நிற்க, திடீரென முஸ்லிம்கள் ஆங்கும், பெண்களுமாக நூற்றுக் கணக்கில் திரண்டு வந்துவிட்டார்கள். கடற்கரைக்கு காற்று வாங்க வந்த முதியவர்களும், பெண்களும், காதல் ஜோடிகளும் ஆச்சர்யமாக பார்க்க, ஒரு காவல் வலையய்த்திற்க்குள் அந்த முஸ்லிம் பெருமக்கள் கடற்கரையில் ஐந்து மணி சுமாருக்கு நீண்ட வரிசையில் நின்று "தொழுகை" நடத்திவிட்டு, ஒரு சிறிய பேரணி போல சாலையை கடந்து, உழைக்கம் இட்டுக் கொண்டே, காவலர்கள் வைத்திருந்த வளையத்திற்குள் வந்தார்கள். அது என்னமோ சத்தியத்திற்கு கட்டுப்பட்டது போல அவர்கள் செயல்பட்டார்கள். அவர்கள் உயர்த்தி பிடித்த வண்ண பதாகையில் "நேற்று இலங்கை, இன்று மியான்மர் [பர்மா]" என்று எழுதி இருந்தது. பல வண்ண படங்களும் அதில் அச்சிடப்பட்டிருந்தன. அந்த படங்கள் முஸ்லிம் மக்களை மியன்மாரில் புத்த பிக்குகள் அடிப்பதும். உதைப்பது காட்சிகளாக இருந்தது.
மியன்மாரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய புத்த பிக்குகளை கண்டித்து, அந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அதை "இந்திய தௌஹித் ஜமாஅத்" நடத்தினர். அவர்களது தேசிய தலைவர் எஸ்.எம்.பாக்கர் பெயர் அதில் போட்டிருந்தது. அவரும் அங்கே வந்திருந்தார். பாக்கரும், இக்பாலும், பிர்தொசும், சிலரும் அங்கே இரண்டாவது தெருவில் இருந்க்கும் "அய்.நா.அகதிகள் அலுவலகம்" சென்று மனு கொடுத்து விட்டு வந்தார்கள். அந்த அய்.நா. அலுஅலகத்தில் தங்கள் டில்லி அலுவலகத்திற்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள் என்று அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். அதன் பிறகும் அவர்கள் முழக்கமிட்டு கொண்டே இருந்தார்கள். இலங்கையில் சிங்கள பவுத்த பிக்குகள் முஸ்லிம்களின் வழிபட்டுதலன்களை இடிக்கிறான். மியான்மரில் புத்த பிக்குகள் முஸ்லிம்களை எட்டுகிறார்கள், கொல்லுகிறார்கள், முஸ்லிம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள் என்று அவர்கள் முழக்கமிட்டார்கள்.
பவுத்தம் பேசுவது சமாதானம். செயல்படுத்துவதோ வன்முறை. என்று அவர்கள் முழக்கமிட்டார்கள். மியன்மார் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் விரட்டப்பட்டு வன்கால தேசம் நோக்கி ஓடிவருகிறார்கள் என்று அவர்கள் கூறினார்கள். மத சுதந்திரத்தை சமாதனம் பேசும் பவுத்தம் ஏன் இலங்கையிலும் மதிக்கவில்லை, மியன்மாரிலும் மதிக்க வில்லை என்று அவர்கள் கேள்வி கேட்டார்கள். இந்திய தௌஹித் ஜமாஅத் முஸ்லிம்களுக்காக மட்டுமல்ல, எந்த மதம் பத்திக்கப்பட்டாலும் போராடும் என்று அவர்கள் கூறினார்கள். கடைசியில் காவல்துறை அந்த முஸ்லிம் ஆண்களையும், பெண்களையும் கைது செய்தது. எண்பத்து ஐந்து பெண்கள் உட்பட, இருநூற்று ஐம்பது பேர் கைது ஆனார்கள். ஆனாலும் எட்டு மணிக்கெல்லாம் விடுதலை செய்யப்பட்டார்கள். பவுத்தம் சமாதானத்திற்கே பெயர் பெடர்து ஆயிற்றே? ஏன் இப்படி இன்கையிலும், மியன்மாரிலும் வன்முறையை மாட்டார் மதங்களின் மீது கட்டவிழ்த்து விடுகிறது? என்ற கேள்வியுடன் நாமும் திரும்பினோம்.
No comments:
Post a Comment