Thursday, June 21, 2012

பிரணாப் யாருடைய வேட்பாளர்?

பிரணாப் யாருடைய வேட்பாளர்?
  பிரணாப் முகரஜி சோனியா கனதியால் நிறுத்தப்பட்ட வேட்பாளர் என்றுதான் எல்லோருக்கும் சொல்லப்பட்டது. அப்படியானால் எது சொல்லப்படாதது? பிரணாப் முகர்ஜி நிதி அமைச்சர். அதனால் இந்திய அரசியல்வாதிகளிடம் உள்ள கருப்பு பணம், சொத்து குவிப்பு வழக்கு எல்லாவற்றிற்கும் அடிபப்டையில் "தடம்" எடுத்து கொடுக்க வேண்டிய அமைச்சகத்தை "கையில்" வைத்து கொண்டுள்ளார். எபப்டியாவது குடியரசு தலைவராக ஆகிவிட வேண்டும் என்று துடிக்கிறார். அவர் துடிக்க காரணமே ராஜீவ் காந்தி மரணத்திற்கு பிறகாவது, இந்திராகாநதிக்கு பதிலாக தனக்கு வரவேண்டிய "பிரதமர்" நாற்காலி கிடைக்கும், என்ற தனது எதிர்பார்ப்பு ஏமாற்றமாக போய்விட்டதே என்ற கவலை அவருக்கு.அதனால் இப்போது கிடைக்கும் வாய்ப்பையாவது பயன்படுத்தி,எப்படியோ குடியரசு தலைவராக ஆகி விடவேண்டும் என்று துடிக்கிறார். ஐயோ பாவம். அது வயதின் கோளாறு. 

                                அதற்காக தனது அமைச்சகத்தை பயன்படுத்துவதுதான் போருக்க முடியவில்லை. நிதி திரட்டுவதில், சொத்து சேர்ப்பதில், ஊழல் செய்வதில் மாட்டிக்கொண்ட அந்த கட்சியின் கூட்டணி கட்சி தலைவர்களும், வெளியே இருந்து ஆதரவு தருகின்ற, ஆதரவு தராத தலைவர்களும், காங்கிரஸ் கட்சிக்கு சவாலாக அமைந்துள்ள தலைவர்களும், இது போன்ற வழக்குகளில் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்கள் மீது ஏற்கனவே சீ.பி.அய். வழக்குகளை போட்டு சிலரை, சிறையிலும், சிலரை வெளியிலும், சிலரை சிறையில்  தள்ளி பிணையிலும், வைத்திருக்கிறது. அவர்களையும், அவர்களது கட்சியையும் இந்த வழக்குகை கூறியே "பியார்நாபிற்கு" ஆதரவு என்ற நிலையை எடுக்க வைக்கலாம் என்று பிரணாப் சிந்திக்கிறார். 


                    அதன்விளைவே 2007 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் மாட்டிக் கொண்ட  முலாயம் சிங் யாதவ், அவரது மகனும் இன்றைய உத்திர பிரதேச முதல்வருமான அகிலேஷ் யாதவ், ஆகியோரை மிரட்டியே பிரனாபிற்கு அடஹரவு என்று கூறவைத்து விட்டார்கள். அதேபோல அவர்களின் எதிரியான மாய்வதியும் "தாஜ்மஹால்" ஊழலில் சிக்கி சீ.பி.அய். விசாரணையில் இருக்கிறார். அதை வைத்து அவரது ஆதரவையும் வாங்கி விட்டார். அடுத்து சிறைக்குள் இருக்கும் ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி. அவரை வெளியே விடவேண்டுமானால் என்று கூறி மக்கள் செல்வாக்கை சமீபத்திய தேர்த்லின் மூலம் நிரூபித்த ஜகன்மோஹனையும் மிரட்டி, சீ.பி.அய். வழக்கி காட்டி அவரது ஆதரவையும் பிரணாப் பெற்று விட்டார்.  திமுக தலைவர் ":கூனியூருக்கு செல்வதர்காக் இங்கிருந்தே குனிந்து செல்பவர்".அதனால் அவர் இரண்டு ஜி வழக்கை எண்ணியே ஆதரவு பிரனாபிற்கு என்று கூறிவிட்டார். பா.ம.க.நிறுவனரோ, சிறிது அசையாமல் இருந்தார். ஒரு கொலை வழக்கில் அவரது சகோதரரை கைது செய்த சீ.பி.அய்.  அவரது  ரத்த உறவான டாக்டர் தனராஜ் என்ற முன்னாள் எம்.பி. யை கைது செய்த உடனே அவரும் பிரனாபிற்கு ஆதரவு என்று கூறிவிட்டார்.  சிவா சேனா எந்த அவ்ழக்கில் சீ.பி.அய்.இடம் சிக்கி கொண்டதோ தெரியவில்லை. அவர்களும் ஆதரவு பிரானாபிற்கு. . சந்திரபாபு நாயுடு ஏன் இதில் மாட்டினார் என்பது தெரியவில்லை. மம்தாவை எதிர்க்கவும், சீ.பி.அய். எம் இன் ஆதரவை பெறவும், "வங்காளி " என்ற அடையாளத்தை பயன்படுத்த பிரணாப் தயங்கவில்லை. மொத்தத்தில் "ஊழலையும், குற்ற வழக்குகளையும்," பயன்படுத்தியும்,  "இனவெறியை" பயன்படுத்தியும் ஒரு மனிதர் தனது குடியரசு தலைவர் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். கேவலம். வெட்கம்.  

                     பிரனாப் முகர்ஜி சீ.பி.அய்.என்று சொல்லகூடிய "மத்திய புலனாய்வு துறையின் " வேட்பாளர் என்பது வெள்ளிடை மலையாக தெரிந்து விட்டது. அதையும் தாண்டி தமிழர்களுக்கு துரோகம் செய்யும் சிங்கள மூதாதையர் என்ற மனோபாவம் கொண்டவர் எனபதும, அதை வைத்தே "ஈழத்தமிழர் படுகொலையில்" சம்பந்தப்பட்டவர் என்பதும், அவருக்கு "கலைஞர் கொடுக்கும்" ஆதரவிற்கான கூடுதலான காரணம் எனபதும் புரிந்து விட்டது. கையில் ரத்த கரையுடன் அந்த மனிதர் வருகிறார். தமிழர்களே, எச்சரிக்கை. 

No comments:

Post a Comment