இன்று குமுதம் ரிபோர்ட்டர் ஏட்டில் இலங்கையின் நவ சம சமாஜ கட்சி தலைவர் விக்ரமபாஹு கொடுத்த நேர்காணல் வந்துள்ளது. அதில் தெளிவாக தமிழினப் படுகொலைக்கு இந்திய அரசு முழுமையாக காரணம் என்றும், அமெரிக்கா-இந்திய ராணுவ தந்திரமும், இலங்கை -அமெரிக்கா ராணுவ ஒப்பந்தங்களும், சேர்ந்து இன்கை தீவை அட்டுப்படுத்ஹ்டுகின்றன என்றும் கூறியுள்ளார். அவரை இந்திய அரசை எத்ரிர்த்து பேசவிடாமல் டெசோ மாநாட்டில் தடுத்து விட்டார்கள் என்றும் எழுதியுள்ளார்கள். அப்போது திமுக பற்றி அந்த சிங்கள இடதுசாரி தலைவரிடம் கேட்டதற்கு, "திமுக ஒரு முதலாளித்துவ கட்சி" என்று கூறியதை "தலைப்பாக" போட்டிருந்தார்கள். அது அவரைப் போன்ற இடதுசாரி கட்சிகளின் வழமையான "உச்சரிப்பு". தொழிலாளர் வர்க்க கட்சிகளாக உலகில் பவனிவரும் அணித்து கட்சிகளுமே பிற கட்சிகளை முதலாளித்துவ கட்சிகள் என்றுதான் கூறுவார்கள்.
இத் அடிப்படைகூட தெரியாமல்,டெசோ உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக வின் பாரம்பரிய தலைவர்களில் ஒருவருமான சுப்புலச்சுமி ஜெகதீசன் ஒரு "மோசமான" குற்றச்சாட்டை அதே இதழில் கூறியுள்ளார். அதாவது திமுக வை முதலாலைத்துஅ கட்சி என்று கூறும் விக்ரமபாஹு உடலில் "சிங்கள ரத்தம்" ஓடுகிறது என்பதை காட்டிவிட்டார் என்பதே அந்த விமர்சனம். அப்படியானால் வன்னி போரில் ஒரு லட்சம் பேரை கோளை செய்யம்போது, அதற்கு அமைதியான் அங்கீகாரம் கொடுத்த கலைஞர் உடலில் என்ன ரத்தம் ஓடுகிறது என்று கேட்க மாட்டார்களா? டெசோ மாநாட்டிற்காக அகஸ்ட் ஒன்பதாம் நாள் "ஈழம்" என்ற பெயர் வரக்கூடாது என்ற வெளிவிவகாரத் துறையின் அமைச்சகம் உடலில் எந்த ரத்தம் ஓடுகிறது? அததகைய மத்திய அமைச்சகத்தில் அங்கம் வகிக்கும் திமுக கட்சியின் உடலில் என்ன ரத்தம் ஓடுகிறது?
தங்களது மாநாட்டிற்கு ஒருவரை அழைதது வந்துவிட்டு, அவரது கருத்துக்களை சரியாக ஊட புரிந்து கொள்ள "அறிவு"இல்ல்லாமல் அவரை "தூற்றி" குறை கூறும் திமுக பிரமுகர் தனது கட்சியிடம் ஓடும் ரத்தத்தை முதலில் பரிசோதனை செய்ய வேண்டாமா? சுப்புலச்சுமியை திமுக கட்சி தலைமை எந்த அளவில் மதிக்கிறது என்பதை நாடு அறியும். அப்படி இருக்கையில் "வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ" என்று விமர்சிக்கும் "துணிவு" எங்கிருந்து வந்தது. தங்கள் விருந்தினரையே இழிவாக பேசும் "ப்பாடு" திமுக விற்கு மட்டும்தானே உள்ளது? அது நாகரீகமான அணுகுமுறையா?
No comments:
Post a Comment