கவுதம புத்தர் இந்தியாவில் இன்றைய பீகார் மாநிலத்தில் உள்ள கயா பகுதியில் பிறந்தார். அவரது போதனைகள் அமைதியை, சமாதானத்தை, ஆசையை ஒழிப்பதை மனிதகுல முன்னேற்றத்தை வலியுறுத்தின.அவரது போதனைகள் சீன,ஜப்பான், இலங்கை என்று உலகெங்கும் பரவின. ஆனாலும் புத்தரது உடல் அடக்கம் செய்யப்ப்பட்ட இந்திய மண்ணில் அவரது மீதம் எலும்புகளில் சில இருக்கின்றன. அவற்றை இந்தியாவின் பாரம்பரிய,பண்பாட்டு அடையாளமாக காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. இன்று தமிழர்களை இன அழிப்பு செய்துவரும் இலங்கை அரசத்தலைவர் மஹிந்த ராஜபக்சே, புத்தரது பெயரை சொல்லி, படுகொலைகளை செய்கிறார்.ரத்தத்தில் கைகளை நனைக்கும் ராஜபக்சே கும்பலுக்கு, "புத்தரின்" பெயரைச் சொல்லவே உரிமை கிடையாது.
அப்படிப்பட்ட கொலைகாரன் ராஜபக்சே, இந்தியாவை ஆளும் மன்மோகன்சிங் இடம் இந்தியாவில் இருக்கும் புத்தபெருமானின் உடல் எலும்புகளை தங்களுக்கு தரும்படி கேட்டானாம். ராஜபக்சேவுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள, மன்மோகன்சிங், அந்த எலும்புகளை இலங்கை அதிபருக்கு கொடுக்க சம்மதித்து விட்டாராம். அது நல்லெண்ணத்தின் அடிப்படையில் என்பது தலைமை அமைச்சகத்தின் விளக்கம். அந்த எலும்புகளை அமைச்சர் குமாரி செல்ஜா நேரடியாகவே இலங்கைக்கு எடுத்ஹ்டு சென்று ராஜபக்சே வசம் ஒப்படைக்க போகிறார்களாம். இந்த கொடுமையை, தஹ்டுக்க, எதிர்க்க, இந்த மண்ணில் யாருமே இல்லையா? புத்த மத்ததை நம்பி, இந்தியாவில் அமிதிகாகவும், சமாதானத்திற்க்காகவும், உழைக்கும் மக்கள் அனைவரும் இந்த கொடுங்கோலன் கைகளில் புத்த பெருமானின் எலும்புகள் சென்று சேர்வதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.
தமிழர்களின் "கச்ச தீவை" தாரை வார்த்த இந்திய அரசே, புத்த பெருமானின் எலும்புகளையும் அந்த தமிழர் இன அழிப்பு செய்யும் ராஜபக்சே வசம் ஒப்படைக்காதே, என்று குறள்களை எழுப்பி, அதை உடனடியாக நிறுத்த வேண்டும்..
No comments:
Post a Comment