Friday, August 24, 2012

புத்தர் எலும்பை காட்டினாரா? மகிந்தா எலும்பை காப்பாற்றினாரா?


     கவுதம புத்தரின் எலும்பை டில்லியில் உள்ள "தேசிய அருங்காட்சியகத்தில்" வைத்திருந்ததை, பவுத்த மத நம்பிக்கை உள்ள நாட்டு மக்களுக்கு உலகம் முழுவதும் கொண்டுபோய் "காட்டுவது" என்று ஒரு பழக்கம் வைத்திருக்கிறார்கள். அதுபோல இலங்கையில் உள்ள பவுத்த மத நம்பிக்கை உள்ளவர்கள் மகிழவும், "முப்பது" ஆண்டுகளுக்கு முன்பு காட்டினார்களாம். அந்த பழக்கம் தொடரலாம். வழிபாட்டு நம்பிக்கைகளில் அப்படி ஒரு பழக்கம் இருக்குமாயின் அதை யாரும்புரிந்து கொண்டாக வேண்டும்.அதேமுறையில் மன்மோகன்சிங் என்ற ஒரு இந்திய தலைமை அமைச்சர் கூறினார் என்றவுடன், இந்திய அரசின் மத்திய பண்பாட்டுத்துறை அமைச்சர் குமாரி செல்ஜா, அந்த எலும்புகளை கொழும்பு கொண்டு செல்வதும், அதை  இலங்கை அரசத் தலைவர் மகிந்தா வரவேற்பதும், இரு அரசுகளுக்கும் இடையிலான் அவர்கள் கூறும் தூதரக நல்லுறவின் வெளிப்பாடாக, நடக்கும் என்பது நமக்கும் புரிகிறது. பிறகு ஏன் அதை நாம் இப்போது எதிர்க்க வேண்டும்?

                       இது சாதரான விஷயம் அல்ல. புத்த பெருமானின் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களின் உணர்வுகளை அங்கீகரித்து , புத்தரின் எலும்புகள் என்று இந்தியாவில் காக்கப்படும் எலும்புகளை அருங்காட்சி அகத்திலிருந்து, எடுத்து ஒரு முக்கிய அமைச்சர் மூலமாக அதை இலங்கைக்கு எடுத்து செல்வதும் அங்கேயுள்ள அர்சத்ததலைவர் அதை வரவேற்று உபசரிப்பதும், இந்த நேரத்தில் சாதாரண நிகழ்வு அல்ல. அங்கே அந்த விழாவிற்கு திரண்டிருந்த சிங்கள பவுத்த நம்பிக்கை உள்ள பெரும் அளவிலான மக்கள் கூட்டமே அது சாதாரண நிகழ்வு அல்ல என்பதை கட்டியம் கூறும். அதாவது ஆள்வோர்மீது  மக்கள் நம்பிக்கை இழந்து வரும் காலங்களில் எல்லாம், ஏதோ ஒரு "மக்களது நம்பிக்கையை" அடிப்படையாக கொண்டு தங்களை அந்த மக்கள் மீது அதாவது தன் மீது நம்பிக்கை இழந்த மக்கள் மீது, மீண்டும்  நிறுவிக்கொள்வது என்பது உலக வரலாற்றில் முதன்முறையாக நடக்கும் செயல் அல்ல.   மக்களது இன, மொழி, கடவுள் மத நம்பிக்களைகளை "ஆள்வோர்" எப்போதுமே தங்களுக்கு சாதகமாக திருப்ப முயற்சி மேற்கொள்வார்கள். அதுதான் இலங்கையிலும் நடந்துள்ளதா?

                           இலங்கை தீவில் மகிந்தாவின் ஆட்சி தமிழின அழிப்பு போரை  வெற்றிகரமாக நடத்தி முடித்ததாக காட்டி, பெரும்பான்மை சிங்கள மக்களிடம் முதலில் நற்பெயர் வாங்கியது. அப்போதும் "பயங்கரவாதத்திற்கு எதிரான் போர்" என்பதாகத்தான் அதை பறை சாற்றி நற்பெயர் பெற்றது. போரை நடத்தியது  யார் என்ற கேள்விக்கு, மகிந்தாவின் குடும்பமா? அல்லது சரத் பொன்சேகா வகையறாவா ? என்ற கேள்வியும் சிங்கள மக்கள் மத்தியில் இருந்தது. அதுவே அரசத் தலைவருக்கான  தேர்தலில், மகிந்தாவா? அல்லது பொன்சேகாவா? என்று சர்ச்சையானது. அதில் மகிந்தா வென்ற பின், பொன்சேகாவிற்கு வளர்ந்துவரும் செல்வாக்கை கண்டு பயந்துபோன ராஜபக்சே குடும்பம் பொன்சேகாவை சிறையில் தள்ளியது. இன்று அமெரிக்கா தலையிட்டு பொன்சேகாவை விடுதலை செய்ய சொன்னபிறகே, மகிந்தா அவரை விடுதலை செய்துள்ளார். இந்த நேரத்தில், அமெரிக்கா பொன்சேகாவை ஆதரிக்க முயல்வதால், அதுவும் இந்திய அரசை கலந்துகொள்ளாமல் செய்வதால், டில்லி தனது பங்கிற்கு மகிந்தாவை தூக்கி பிடித்து சில வேலைகளை செய்துவருகிறது. 

                         அத்தகைய டில்லியின் "காய் நகர்த்தல்களில்" முதலில் "டெசோ மாநாடு" வரும் என்றால், அடுத்து வருவதுதான் "புத்தரின் எலும்புகளை" கொழும்பு கொண்டுபோய் சிங்கள பவுத்த மக்களிடம் காட்டுவது. இது சிங்கள பவுத்த மக்களிடம் "செல்வாக்கு இழந்துவரும்"மகிந்தாவிற்கு மீண்டும் மறுவாழ்வு கொடுக்க, சிங்கள பவுத்த அப்பாவி மக்களை மகிந்தா பக்கம் திருப்ப, இந்திய அரசின் தலைமை அமைச்சர் மன்மோகன்சிங் எடுக்கும் ஒரு முயற்சி. ஏற்கனவே மகிந்தா தனக்கு எதிர்ப்பு இருப்பதை அறிந்தே வேண்டுமென்றே, தனது  கடைசி லண்டன் பயணத்தை மேற்கொண்டு, அதில் தமிழர்களின் கடும் எதிர்ப்பை உலகறியச் செய்து, அதை "விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாகிறார்கள்" என்று கூறி சிங்கள அப்பாவி மக்களை ஏமாற்றி, அவர்கள் மத்தியில் ஒரு பயத்தை தோற்றுவித்து, அதன்மூலம், இழந்துபோன தனது செல்வாக்கை மீண்டும்  தக்க வைத்துக் கொள்ள முயன்றான் என்பது சமீபத்திய கதை. அதையே மீண்டும் இந்திய அரசின் நலன்களுக்காக மகிந்தவை " ஸ்டிக் அண்ட் கேரட் " என்ற குச்சியும், கேரட்டும் எனும் தத்துவத்தை பயன்படுத்த இந்திய அரசு ஒருபுறம் டெசோ மாநாடு, இன்னொரு புறம் புத்தர் எலும்புகளை காட்டுதல் என்று நடவடிக்கை எடுக்கிறது.
    
     ஸ்டிக் அண்ட் கேரட் என்றால், அதாவது குச்சியும், கேரட்டும் என்றால் என்ன? குதிரை வண்டிக்காரர் தான் புதியதாக வாங்கிய குதிரையை "வண்டியில் பூட்டி பழக்க" ஒரு தந்திரம் செய்வார். அதாவது குதிரையை பூட்டும்போது, அதற்கு முன்பு "தொங்கும் நிலையில்" ஒரு கேரட்டை கட்டிவிடுவார். அந்த கேரட்டை "கவ்வும்" நோக்கத்தில், குதிரை வண்டியை இழுத்துக் கொண்டு முன் செல்லும். அதை "துரிதப் படுத்த" ஒரு குச்சியை கையில் வைத்ஹ்டுக் கொண்டு, குதிரையை அடிப்பார். குதிரை வண்டியை இழுத்துக் கொண்டு வேகமாக ஓடும். இதைத்தான் ஆங்கிலேயர்கள் "குச்சியும், கேரட்டும்" என்ற பொருளில், "ஸ்டிக் அண்ட் கேரட்" என்று கூறுவார்கள். அந்த தந்திரத்தை இந்திய அரசு, இலங்கை அரசின் மீதும், பதிலுக்கு அதே ஆங்கிலேயர்களிடம் "பயின்ற" இலங்கை அரசு இந்திய அரசிடமும் காட்டுகிறது என்பதுதான் இதில் அடங்கியிருக்கும் தத்துவம்.

                        அதாவது அய்.நா.சபையின் மனித உரிமை கவுன்சிலில் அக்டோபர் மாதம் இறுதியில், இலங்கை பற்றிய மனித உரிமை பட்டியல் விவாதிக்கப்படும்போது, மூன்றில் ஒரு அமைப்பாளராக இந்திய அரசு அமரப்போவதை பயன்படுத்தி, பேரம் பேசுவது எனபது டில்லியின் தந்திரம். அதேசமயம் "விட்டேனா பார்" என்று மகிந்தாவும், இந்திய அரசின் பண்பாட்டு துறைக்கு தருவதாக கூறிய நூறு கோடி பெறுமான இடத்தை, சீனாவின் விமான நிறுவனத்திற்கு கொடுத்து, இந்திய அரசுக்கு எதிராக ஒரு காய் நகர்த்தலில், "ஸ்டிக்" எடுத்தும், இந்திய வணிக அமைச்சர் ஆனந்த சர்மா சென்றபோது, நூற்றெட்டு இந்திய முதலாளிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து,தனது "கேரட்" கொள்கையையும் காட்டிவிட்டது. அதுபோல மகிந்தாவிற்கு எழுந்துள்ள சிங்கள மக்களின் எதிர்ப்பை, "டெசோ எதிர்ப்பு" என்பதன்மூலம் மகிந்தாவிற்கு  ஆதரவாக ஒருபுறம் திருப்புவதிலும் இரண்டு கும்பலும் வெற்றி பெற்றுள்ளன. இப்போது பகிரங்கமாகவே, புத்தரின் எலும்புகளை காட்டி சிங்கள பவுத்த  மக்களை ஏமாற்ற, மன்மோகன்-மகிந்தா தந்திரம் பயன்படுத்த ப்டுகிறது என்பதை நாம் எப்போது உணரப்போகிறோ

No comments:

Post a Comment