Tuesday, September 18, 2012

கலைஞரின் ஏவுகணைகள்,புஸ்வானம் ஆகிவிட்டன.


     சமீப நாட்களில், கலைஞருக்கு நெடுமாறனை தாக்கி எழுதுவது என்பது வெல்லம் சாப்பிடுவது போல இருக்கிறது. அவரது நிலைமை "முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு" பிறகு மிகவும் மோசமாக போய்விட்டது. உலகத் தமிழர்கள் யாருமே கலைஞரை இனி நம்ப மாட்டோம் என்ற நிலையை எடுத்துவிட்டனர். தன்னைத்தானே "தமிழினத் தலைவர்" என்று  அறிவித்துக் கொண்டு, அதற்கேற்ற "பக்கவாத்தியங்களையும்" உடன் இழுத்துக் கொண்டு செல்லும் ஒரு தலைவர், அதற்கான "தளம்" காலி ஆகிவிட்டது என்று உணரும்போது, அந்த நிலை "பரிதாபகரமானதுதானே?" அப்படி நிலையில் இன்று கலைஞர்  இருக்கிறார். அதனால் இந்திய மத்திய அரசுதான் அந்த படுகொலைகளுக்கு காரணம் என்பதையும், தனது பங்கும் அதில் உண்டு என்பதையும் "மறைக்க" முயல்வது என்ற "தற்காப்பு" மனோநிலையில் கலைஞர் இருக்கிறார் என்பது பழ.நெடுமாறனின் வாதம்.

                 ஆனால் அப்படி மட்டுமே நாம் கலைஞரை  நினைக்க முடியவில்லை. அவரது முக்கிய நோக்கமே "இந்தியப் பேரரசை " காப்பாற்றும் நோக்கம்தான் என்பதாக எண்ணத் தோன்றுகிறது. "ஏக இந்தியா" என்ற சொற்றொடரை  அவர் "நான்கு ஆண்டுகளாக" தெரிந்தே பயன்படுத்தி வருகிறார். அவருக்கு "தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை" மீது இருந்த நம்பிக்கைகள் உடைந்து பல ஆண்டுகள் ஆகின்றன. தேசிய இனங்களை அடக்கி ஆளும் இந்தியப் பேரரசை "நாடியே" சார்ந்து நின்றே "பிழைக்க" முடியும் என்ற சிந்தனைப் போக்கிற்கு கலைஞர் வ்ந்துவிட்டார் என்ற உண்மையை நாம் காண வேண்டும்.

                    அதனாலேயே அவர் ஈழத்தில் நடந்த "இன ஒடுக்கல்" "இன அழிப்பு" ஆகிய கொடும் செயல்களை இந்திய அரசு ஆதரிக்கிறது என்று தெரிந்திருந்தும்கூட, ஈழப் பிரச்சனையில் "இந்திய அரசின் கொள்கையே, தனது கொள்கை" என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டு செயல்படுகிறார். அப்படிப்பட்டவர் வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டிய கொடுமை இருக்கிறது என்பதுதான் அவரது " இரட்டை நாக்கிற்கு" காரணமாக அமைகிறது. அதனால் அவர் தங்களது   தற்காப்பிற்கு மட்டுமின்றி, "தமிழினத்தின் மீதான தாக்குதலுக்கும்" இன்றைக்கு "வரிந்து" கட்டிக் கொண்டு இறங்குகிறார். அதனால்தான் அவர் நெடுமாறன் கட்டுரைகளை எதிர்த்து "கடுமையாகவே" எழுதி வருகிறார். அவரது அனைத்து பதிகளும், ஒரே "கருத்தை" சுற்றியே வருவதை நாம் காணலாம். அதாவது ஈழத் தமிழரது  விடுதலைப் போராட்டம் வெற்றி பெறாததற்கு கரணம் "சகோதர யுத்தம்" என்பதே கலைஞரின் வாதம் அதன்மூலம் அவர் "தமிழீழ விடுதலைப் புலிகளையும், பிரபாகரனையும், எம்.ஜி.ஆரையும்,அதற்காக நெடுமாறனையும்" விமர்சித்து கடந்த சில நாட்களாக எழுதி வருகிறார். தாங்கள் தப்பித் துக்கொள்ள தற்காப்பிற்காக "சகோதர யுத்தத்தை" காரணமாக கூறுகிறார்  கலைஞர் என்பதே நெடுமாறன் அவர்களது வாதம். 

              அப்படி கலைஞர் கூறும் கூற்றுக்களை நாம் ஆராய்ந்து  ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும், "பதில்" காண  வேண்டிய நிலையில் உள்ளோம். உணமைகளை உண்மை என்று நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். உதாரணமாக "புலிகளுக்கும், டெலோ விற்கும்" மோதல் நடந்து  பலரும் அதில் கொலலப்பட்டதை நாம் மறந்துவிடவோ, மறுத்துவிடவோ முடியாது. ஆனால் அவை ஏன் நிகழ்ந்தன? என்றும், எதற்காக நடந்தன? என்றும், யாரால் நடத்தப்பட்டன? என்றும், துல்லியமாக ஆய்வு நடத்த வேண்டிய கட்டத்தில் இன்று இருக்கிறோம். ஆகவே அத்தகைய மோதல்கள் பற்றி மீண்டும் ஒரு "தமிழர் விரோத" சக்தி, தனது நோக்கத்தை நிறைவு செய்ய முயலுமானால், அதற்கு தக்க பதிலடி உண்மைகளை நாம் பகிரங்கப் படுத்த வேண்டும்.

              அந்த முயற்ச்சியில், நாம் கலைஞரின் கேள்விகளையும், குற்றச்சாட்டுகளையும், விரிவாகவே காணலாம். 1985 ஆம் ஆண்டு நடந்த டெலோ-புலிகள் மோதல் பற்றி கலைஞர் குறிப்பிடுகிறார். அன்றைய சூழலில், பல ஈழ விடுதலை போராளிகளின் அமைப்புகள் தமிழகத்தில் இருந்தன. அவற்றில் "டெலோ" கலைஞருக்கு நெருக்கமான அமைப்பாக இருந்தது. "புலிகள்" அமைப்பு எம்.ஜி.ஆர்.க்கு நெருக்கமாக இருந்தது. கொடூரமான இனக்கலவரம் நடந்து இரண்டே ஆண்டுகளில், பல ஈழ இளைஞர்கள் பல போராளி அமைப்புகள் மூலம் தமிழ்நாட்டிற்குள் கொண்டுவரப் பட்டார்கள். "பிளாட்","ஈரோஸ்", "ஈ.பி.ஆர்.எல்.எப்."ஆகிய அமைப்புகளும் அதே போல செயல்பட்டன. முதலில் "பிளாட்" அமைப்பும், அதன் தலைவர் முகுந்தன் என்ற உமா மகேஸ்வரனும் தான் எம்.ஜி.ஆர்.க்கு நெருக்கமாக இருந்தது. காலப்போக்கில் "புலிகளின்" செயல்பாடுகள் ஈழத்தில் "கொரில்லா  போராட்டத்தை" வெற்றிகரமாக நடத்தியதே பிரபாகரனை எம்ஜி.ஆர்.க்கு நெருக்கமாக ஆக்கியது. 

              அத்தகைய சூழலில், தந்தை செல்வா வின் தமையன், சந்திரஹாசன், இந்திய அரசின் வெளிவிவாகரத் துறையின் உளவுத் துறையான "ரா" அமைப்பிற்கு நெருக்கமாக இருந்தார். அவர் வழக்கறிஞராக இருந்ததால், டெலோ அமைப்பின் முத்த தலைவர்களான  குட்டிமணி , ஜெகன், தங்கதுரை ஆகியோருக்கு வழக்கரிஞராக் வாதாடினார். அவர்கள் மூவரும்  வல்வெட்டித்துறை மீனவ் கிராமத்திலிருந்து வந்தவர்களாக இருந்தனர். அதே கிராமத்திலிருந்து வந்ததால்தான் பிரபாகரனை அவர்கள் "தம்பி" என அழைத்தார்கள்.  டெலோ அமைப்பிற்கு   அடுத்து தலைமை ஏற்ற ஸ்ரீ சபாரத்னமும், வல்வெட்டித்துறை கிராமத்திலிருந்து வந்தவர்தான். அவரை முதலில் "டால் ஸ்ரீ " என்று அழைப்பார்கள். அந்த டால் ஸ்ரீ மூலம், சந்திரஹாசன் ஈழ இளைஞர்களை வரவழைத்து, சென்னை விமான நிலையம் அருகே "முகாம்" அமைத்து, ரா அமைப்பின் உதவியுடன் "பயிற்ச்சிகளை" கொடுத்து வந்தார். அந்த அமைப்பு அன்று கலைஞருக்கும் நெருக்கமாக் இருந்தது. இன்றுவரை எதற்கெடுத்தாலும், கலைஞர் அவர்கள் "சந்திரஹாசன் கூற்றையே" மேற்கோள் காட்டி தனக்கு சாதகமாக இலங்கை பிரச்சனையை பேசுவதை நாம் எல்லோரும் கண்டு வருகிறோம். இந்திய மத்திய அரசின் உளவுத் துறையான "ரா" அமைப்பிற்கு நெருக்கமான் போராளி அமைப்புடன் நெருக்கமாக இருப்பது என்பது எப்போதுமே கலைஞர் அவர்களுக்கு "சவுகரியமானதாக" இருந்திருக்கும். 

               அப்படி சூழலில், 1983 இல் ஜூலை 23  இல் இனப்படுகொலை இலங்கையில் உச்சகட்டத்தில் நடக்கிறது. அதில் வெலிக்கடை சிறையில் "குட்டிமணி, ஜெகன், தங்கதுரை" ஆகியோர் "கண்கள் பிடுங்கப்பட்டு" கொடூரமாக சிங்கள காடையர்களால்  கொலை செய்யபப்டுகின்றனர். அப்போது அவர்களை இந்தியாவில் பிடிபட்டபோது, இலங்கைக்கு அனுப்பிவைத்தது யார் ஆட்சியில் என்ற "சர்ச்சை" மீண்டும் வ்ருகிறது.கலைஞர் ஆட்சியில்தான் குட்டிமணி,ஜெகன்" தமிழ்நாட்டில் பிடிபட்டபோது, "கைதிகள் பரிமாற்ற  ஒப்பந்தம்" இல்லாமலேயே இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள் என்பது ஏற்கனவே அம்பலமாகி இருந்தது. அதை எம்.ஜி.ஆர். ஆட்சியில், நெடுமாறன் கேள்விக்கு, எம்.ஜி.ஆர். பதில் கொடுக்கும்போது, சட்டமன்றத்திலேயே கலைஞர் மறுக்க, எம்.ஜி.ஆர். "கோப்புகளை" காட்டி அம்பலப்படுத்தியிருக்கிறார்.  அதனால் வெலிக்கடை சிறை கொலைகள் கலைஞரை அன்றே "தற்காப்புக்கு" தள்ளிவிட்டது.

                     அன்றைய தற்காப்பை கலைஞர் யார் மூலம் எடுத்தார் தெரியுமா? அன்றைய டெலோ தலைவர் ஸ்ரீ மூலம்தான். எப்படி? டெலோ வின் அன்றைய தலைவர்களான ஸ்ரீ சபாரத்னமும், ராசுப் பிள்ளையும் ஏடுகளுக்கு கொடுத்த அறிக்கையில், "குட்டிமணியும், ஜெகனும், தமிழ்நாட்டில் பிடிபடும்போது, தங்களை விடுதலைப் போராளிகள் என்று அறிவிக்கவில்லை என்றும், கடத்தல்காரர்களாக காவல்துறை எண்ணியே இலங்கைக்கு அனுப்பி வைத்தார்கள்" என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார்கள். இத்தகைய "தற்காப்பு" அன்று கலைஞருக்கு மட்டுமே தேவைப்பட்டது. அதேபோல குட்டிமணியின் மனிவி எழுதிய கடிதம் ஒன்றும் "தேவி" வார இதழில் வெளியிடப்பட்டது. இவ்வாறு தன்னை தற்காத்துக் கொள்ள உண்மைகளை மறைப்பவரா கலைஞர் என்று நான் வினவலாம்.  அணாவிற்கு பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர், அண்ணாமலை பலகலை கழகத்தில் டாகடர் பட்டம் வாங்க போனபோய்சு, காங்கிரஸ் மாணவர்களால் கலக்கம் செய்யப்பட்டு, காவல்துறையில் தாக்குதலில், உயிர் இழந்த "உதயகுமார்" என்ற  மாணவனை, அவரது தனத்தை மூலமே "தன் மகன் அல்ல" என்று கூறவைத்த "வைரம்" போன்ற மனம் படைத்தவர் அல்லவா கலைஞர் என்று எண்ணிப் பார்க்க தோன்றுகிறது. அதனால் சகோதர யுத்தம் என்று 1985 ஆம் ஆண்டு நிகழ்வுகளை கூறி நெடுமாறனையும், எம்.ஜி.ஆர்.யும் வம்புக்கு இழுக்கும் கலைஞர் அவர்கள்,  அதற்கு இரண்டு ஆண்டுக முன்பே, ஒரு போராளி இயக்க தலைவர் பற்றியே, அதே இயக்கத்தின் அடுத்த தலைவர் மூலம் "அவதூறாக" கூற வைத்த பெருந்தகை என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.அதனால் அப்போதே சகோதர யுத்தத்தை தொடங்கி வைத்த "பெருமையை" அவர் பற்று விடுகிறார். ஒருமுறை இந்திய உளவு துறையான "ரா"தான் சகோதர யுத்தத்தை "தூண்டிவிட்டது" என்று கலைஞர் பேசியதையும் நாம் மறக்க முடியாது. அதனால் அவரது இன்றைய குற்றச்சாட்டுகள் தானாகவே முறிந்துவிடுகின்றன.

       அடுத்து  கலைஞரை நியாயப்படுத்தி, நெடுமாறனையும், எம்.ஜி.ஆர். அவர்களையும் குற்றம் சாட்டி, கலைஞரது கூடாரத்திலிருந்து, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஒரு  கட்டுரையாக, "ராஜபக்சேக்கு தெரிந்தது நெடுமாறனுக்கு எப்படி தெரியாமல் போனது?" என்ற தலைப்பில் ,  "ஜூனியர் விகடன்" வார இருமுறை ஏட்டில் எழுதியுள்ளார். அதை எடுத்து இன்றைய முரசொலியில் மறு பதிப்பு செய்துள்ளார்கள். அதில் "எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில்தான் புலிகளிடமிருந்து ஒயர்லஸ், ஆயுதங்கள் பறிக்கப்பட்டன . அதற்கு எதிராக  பிரபாகரன் உண்ணாவிரதம் இருந்தது, கிட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டது யார் ஆட்சியில்? " என்று நினைவாகவே கேட்டுள்ளார். அது நல்ல வாதம்தான். நாமும்  முழு விவரம் அறிய முன்னாள் போராளிகளை அணுகி நடந்த விவரங்களை சேகரித்தோம்.

                      எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் , பெங்களூருவில் "சார்க்" மாநாடு நடந்தது. அதற்கு பெங்களூரு வந்த ராஜிவ்காந்தி, உத்தரவின் பேரில் பிரபாகரன் பெங்களூருவிற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கே மத்திய அரசின் நிர்ப்பந்தத்திற்கு பிரபாகரன் பணியவில்லை என்பதால்,  மத்திய அரசின் "கட்டளைப்படி" அனைத்து போராளிகள் அமைப்புகளின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டும், தலைவர்கள் சிறை வைக்கப்பட்டும் ஒரு ஒடுக்கல் நடந்தது. மத்திய அரசின் கட்டளைப்படி அதை மாநில அரசின் காவல்துறை நிறைவேற்ற வேண்டி வந்தது.அப்போது "கிட்டுவை" திருவான்மியூரில் வீட்டு காவலில் வைத்தனர். ஆனால் எம்.ஜி.ஆர். கட்டளைப்படி "கெடுபிடி" செய்யப்படவில்லை.  நெடுமாறன், வீரமணி, வைகோ போன்றோரும் கிட்டுவை வீட்டிற்குள் சென்று பார்த்து, பேசிவர அனுமதிக்கப்பட்டார்கள். பீகாரின் பிரபல எம்.பி.யான  சகாபுதீன்கூட  நெடுமாறன் மூலம் வீட்டு காவலில் இருந்த கிட்டுவை போய் சந்தித்தார், என்ற செய்தியை இப்போது நெடுமாறன் அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொளகிறார்.


                அந்த நேரத்தில் முகுந்தன் என்ற உமா மகேஸ்வரன் டில்லி செல்கிறார். அதிமுக எம்பி.யாக இருந்த ஆலடி அருணா  வீட்டில் முகுந்தனின் "பிளாட்" அமைப்பு அலுவலகம் போல செயல்பட்டுவந்தது. அங்கே சென்ற எம்.ஜி.ஆர். மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் அங்கே முகுந்தனை பார்க்கிறார்கள். எம்.ஜி.ஆர்.உடன் வந்த பாதுகாப்பு அதிகாரி ரவி ஆறுமுகம் அய்.பி.எஸ். முகுந்தன் இருக்கும் தகவலை டில்லி அதிகார்வர்க்கத்திர்க்கு கொடுக்க,  டில்லி காவல்துறை அங்கேயே முகுந்தனுக்கு "வீட்டு காவல்" தாக்கீது கொடுக்கிறது. அப்போது அங்கே வந்த வைகோ அதை நேரடியாக பார்வையிடுகிறார். 

              மறுநாள் நாடாளுமன்றத்தில், அதிமுக எம்.பி. ஆலடி அருணாவும், திமுக எம்.பி.வைகோ வும், போராளிகளுக்கு கைதும், வீட்டு காவலும் ஏன்? என்று கேள்வி எழுப்புகிறார்கள். மத்திய அரசோ "தாங்கள் அதை செய்யவில்லை. மாநில அரசுதான் செய்துள்ளது" என அறிவிக்க,  வைகோ "டில்லி காவல்துறையின்" தாக்கீதை எடுத்து காட்டி அம்பலப்படுத்துகிறார். ஆடிப்போன மத்திய அரசு உடனடியாக போராளிகளை விடுதலை செய்ய சொல்கிறது.  இதில் எப்படி எம்.ஜி.ஆர். பற்றி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் குறை செல்ல முடியும்? அதை கலைஞரும் பயன்படுத்தி, முரசொலியில்,போட்டு நெடுமாறனுக்கு கேள்விகள் என குற்றம் சாட்ட முடியும்?


           எம்.ஜி.ஆர். மத்திய அரசின் கட்டளையை வீட்டு காவலில் வைக்க கூறியதை செயலப்டுத்தும் மாநில காவல்துறையிடம், "சுதந்திரமாக போராளிகளை" சந்திக்க செய்தவர். ஆனால் கலைஞர் தனது ஆட்சியில் என்ன செய்தார்? 1988 இல்  இந்திய அமைதிப்படை மூலம் ஈழத் தமிழர்கள் கடுமையாக தாக்குதல்களுக்கு உள்ளான நேரம். கை,கால்கள் இழந்த போராளிகள் பலரையும் "சிகிச்சைகாக" தமிழ்நாடு அனுப்ப, புலிப்படை தலைவர் பிரபாகரன் கலைஞருக்கு செய்தி சொல்லி விடுகிறார். "அனுப்புங்கள்" என்று பச்சை கோடி காட்டிய கலைஞர் அதன்படி, தமிழ்நாடு வந்த புலி பொடியன்களை "நூறு பேரை" சிகிச்சை நடக்கும்போதே பிடித்து,"தேசிய பாதுகாப்பு சட்டத்தின்" கீழ் உள்ளே தள்ளிவிட்டார். அதில் "ஹிட்லர்" என்ற பொடியன் இரண்டு கைகளிலும் முட்டு வரை இல்லாமலும், இரண்டு கால்களிலும் அதேபோல முட்டுவரை இல்லாமலும் மற்றவர் உதவியுடன்தான் உணவு ஊட்டப்படும் நிலையில் இருந்தவர். அவரையும் கலைஞர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அடைத்து விட்டார். இதுதான் எம்.ஜி.ஆர். செயலுக்கும், கலைஞர் செயலுக்கும் உள்ள வேறுபாடு என்கிறார் நெடுமாறன்.

            அடுத்து  கலைஞருக்கு இப்போது ஜெயலலிதா பற்றி "லாவணி கச்ச்சேரி" நடத்தவே நேரம் சரியாக இருக்கிறது. அதாவது முதல்வர் ஜெயலலிதா, சிங்கள விளையாட்டு வீரர்களை இலங்கைக்கு அனுப்பியது பெரும் தவறு என்று கூகரிக்கிறார் கலைஞர். விளையாட்டு வீரர்கள் இரு நாடுகளுக்கு இடையே  போய் வரவேண்டும் என்கிறர அவர். ஒலிம்பிக் ஆட்டத்தில்,  நிறவெறி பிடித்த "அபர்தைடு" நாடு என்று முத்திரை குத்தப்பட்ட "தென் ஆப்பிரிக்கா" வெள்ளையர்களின்  ஆதிக்கத்தில் இருந்தபோது, அதை ஒலிம்பிக் குழு, 1992 வரை "விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள விடாமல் தடை" போட்டிருந்ததே, அதை கலைஞர் "தவறு" என்று கூறுகிறாரா? அல்லது "ராஜபக்சே அரசு இனவெறி அரசு அல்ல" என்று கூறுகிறாரா? அதனால் அந்த அரசின் விளையாட்டு வீரர்களுக்கு இந்தியாவில் விளையாட "தடை" போடக்கூடாது  என்கிறாரா? 

                  கலைஞர்  அதிமுக அரசு பற்றி "லாவணி" பாட ஏதாவது சொல்லி விட்டு போகட்டும். ஆனால் சிங்கள விளையாட்டு வீரர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பியது, ஜெயலலிதா செய்த தவறு என்று கூறும் கலைஞர் என்ன செய்தார்? தனது ஆட்சியில் தமிழ்நாட்டிற்குள் வந்த "சிவாஜிலிங்கத்தை" விமான நிலையதிலேயே திருப்பி அனுப்பினார். அப்பாவியாக வலம் வந்துகொண்டிருந்த "ஈழ வேந்தனை" ஆபத்தான சூழலிலும் இலங்கைக்கு திருப்பி அனுப்பினார். சிகிச்சைக்கு இந்தியாவின் "விசா" பெற்று வந்த பார்வதி அம்மாளை விமான நிலையத்திலேயே ஜாங்கிட் தலைமையில் ஆயுத காவலர்களை போட்டு தடுத்து திருப்பி அனுப்பினார். தமிழர்களை திருப்பி அனுப்பிய கலைஞர் ஆட்சியையும், சினக்ளர்களை திருப்பி அனுப்பிய ஜெயலலிதா ஆட்சியையும் இன்று நெடுமாறன் நம்மிடம்  " ஒப்பிடுகிறார்" என்றால் என்ன சொல்ல?

             அடுத்து கலைஞர் தஞ்சை மாத கோவிலுக்கு வந்த சிங்கள பக்தர்களை விரட்டி அடித்த மக்களின் கோபத்திற்கு காரணம், முதல்வர் ஜெயலலிதா சிங்கள விளையாட்டு வீரர்களை திருப்பி அனுப்பியதுதான என்று வியாக்யானம் செய்கிறார். அய்யா. கலைஞர் அவர்களே, நீங்கள் நான்கு முறை முதலமைச்சராக இருந்தவர். மக்களின் உணர்வுகளை  கணித்துக்கொண்டு அதன்படி ஆட்சி நடத்தவேண்டும் என்பது உங்களுக்கு நாங்கள் கூறவேண்டிய அவசியமில்லை. இங்கே தாம்பரம் சியோன் பள்ளி பேருந்தில் ஒரு குழந்தை ஓட்டை வழியே விழுந்து இறந்துவிட்டது என்றவுடன், மக்கள் அந்த "பேருந்தை நெருப்பிடவில்லையா?" சிவாகாசியில் பட்டாசு ஆலை வெடிவிபத்து என்றதும், அப்பாவி மக்கள் ஓடிப்போய் தனகளது உயிரையும் பார்க்காமல் 31 பேர் மடியவில்லையா?  இவ்வாறு மக்கள் "கோபாவேசம்" கொள்ளும் ஒரு சூழலில்,  சென்னை நேரு விளையாட்டு அரங்கில் விளையாட வந்த சிங்கள மாணவர்கள்,ஆனந்த கூத்து  ஆடினால், அங்கே கூடும் தமிழ்நாட்டு மக்கள் அவர்களை அடித்து "விபரீதம்" நிகழக் கூடாதே என்று ஒரு மாநில முதல்வர் அந்த சிங்கள விளையாட்டு வீரர்களை உடனடியாக அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறாரே? அது சமயோசித வேலை என்று நீங்கள் பாராட்டி அல்லவா  இருக்க வேண்டும்? அதில் என்ன உங்களுக்கு "அரசியல் விளையாட்டு?" 

              ஓஹோ, ஹிந்து ஏடும், தினமணி ஏடும் தலையங்கம் எழுதி, கொழும்பில் உள்ள மேட்டுக்குடி கல்வி நிறுவனமான "ராயல் கல்லூரி" மாணவர்களை ஆதரிப்பது போல சிங்கள மேட்டுக்குடி அறிவுஜீவிகளை "சொரிந்துவிடுவதால்" உங்களுக்கும் அதில் ஒரு "அரசியல் லாபம்" கிடைக்கும் என்று எண்ணிவிட்டீர்களா? எப்படியோ, நீங்கள் கடந்த சில நாட்களாக எறிந்துவரும் ஒவ்வொரு "ஏவுகணையும்" உடனடியாகவே "புஸ்வாணமாகி" வருவதை இப்போதாவது உணர்வீர்களா? 

No comments:

Post a Comment