அதிமுக வில் பேரவை தலைவர் தனது பொறுப்பிலிருந்து விலகினார். இது செய்தி. அதற்கு இப்போது நக்கீரன் ஏடு பெருமைப்பட்டுக் கொள்ளலாம் . அதுவும் உண்மைதான். நக்கீரன் எடுத்தான் அவரது பிறந்த நாளில் நாளை வரும் பெங்களூரு நீதிமன்ற தீர்ப்பை விரும்பி "நாக்கை சப்பிக்கொண்டு" தனது ஆதரவாளர்கள் "நாளைய முதல்வர்" பட்டம் சூடினார்கள் என்ற செய்தியை ஆழமாக, படம் பிடித்து, சுவரொட்டிகளின் ஆதரங்களுடன், பெயர் பட்டியலுடன் வெளியிட்டது. அது அதிமுக விலுள்ள அவருக்கு எதிரான கோஷ்டிகளின் "கைவண்ணமாகவும்" இருக்கலாம். ஆனாலும் அதை ஆராய்ந்த ஆட்சியாளர்கள், உளவு துறை மூலம் விவரம் கேட்டு, ஆங்காங்கே சிலரை முதலில் தூக்கி விட்டு கடைசியாக "அவரிடம்" இடுதலை பத்திரம் பெற்றுள்ளார்கள். அது சரி.எதற்காக அந்த முடிவை பல மீனவர் சங்க நிர்வாகிகள், இனிப்பு கொடுத்து, பிரியாணி சாப்பிட்டு கொண்டாடினார்கள்?
ஏற்கனவே சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே திமுக வின் துணை முதல்வருடன் வநிகுரவு என்று சொல்லி தானே அமைச்சர் பொறுப்பை கொடுக்காமல் இருந்தார்கள்? இப்போது மீனவர் சங்கங்கள் போராடிய "சீ.பி.சீ.எல். குழாய் ஒப்பந்தத்தில்" மீனவர் குரலுக்கு எதிராக"அவர்" இருந்தார் என்று குறைப்பட்டார்களே? அதனாலா? தொடர்ந்து மீனவர் சங்கங்களின் போராட்டங்களை ஒடுக்க காவல் துறையினருக்கு "அவர்" நிர்ப்பந்தம் கொடுத்தாக குறைப்பட்டுக் கொண்டார்களே? அதற்காகவா? ராயபுரம் மீன்பிடி துறைமுக பிரச்சனையிலும் மத்திய ரசின் "துறைமுக நிர்வாகத்திற்கு" அவர் ஆதரவாக இருந்ததாக புலம்பினார்களே? அதற்காகவா?
இந்த கதை இப்படி இருந்தாள், திமுக கதை இன்னமும் பெரிசா இருக்கே" அதே நக்கீரன் ஏடு, ஐந்து இதழ்களுக்கு முன்பு "முக்கோண மோதல்" என்று ஸ்டாலின், அழகிரி, கனிமொழி மோதலை" எழுதியது. அது கணிம்சாஹிக்கு எதிரான பல எழுத்துக்களுடன் இருந்தது.ஸ்டாலின் தரப்பிற்கு அப்போது மகிழ்ச்சி. கலைஞருக்கு வருத்தம். கனிமொழி உடைந்தே போனார். அடுத்து விழுப்புரம் முப்பெரும் விழா. அதுபற்றிய எழுத்தில் ஸ்டாலின் குழு செய்த "கனிமொழிக்கு எதிரான சதிகள்" அதே ஏட்டில் எழுதப்பட்டன. இப்போது ஸ்டாலின் குழுவிற்கு கோபம். இது என்ன "சமன் வேலையா?" என்று ஒரு கோபம். அடுத்து மதுரை பிரச்சனையில், அழகிற், ஸ்டாலின் குழுக்களின் மோதல் பற்றி விவரமாக வந்துள்ளது. மீண்டும் ஸ்டாலின் குழவிற்கு வருத்தம். சரி. அந்த எழுத்துக்களில் எதையாவது "இல்லை" என்று ஸ்டாலின் குழு மறுக்க முடிய்டுமா? எல்லாம் கலைஞருக்கே வெளிச்சம். அவர் சொல்லித் தானையா எல்லாம் இப்படி " வருது"> இது ஸ்டாலின் குழுவினரது ஆதங்கம்.
இப்போ சொல்லுங்கள். எந்த மோதல் உயர்ந்தது? அதிமுய்க வை திமுக மிஞ்சி விட்டது என்று ஒப்புக் கொள்கிறீர்களா? எதை எடுத்தாலும் திமுக தானையா வெற்றி பெரும். கோஷ்டி மோதலிலும் திமுக அளவு அதிமுக வால் முடியுமா? பாருங்க. கனகிராஸ் தனது இளைஞர் காங்கிரஸ் டதேர்தலை நடத்தி அறிவித்துள்ளது. தலைவராக வாசன் கோஷ்டி என்றால், துணை தலைவராக ச்டம்பரம் கோஷ்டி வந்துட்டாங்களே? எப்படி பிரிச்சி கொடுத்துட்டாங்க, பார்த்தீங்களா? அதைக் கூட திமுக வில் ஸ்டாலின் கோஷ்டி விடவில்லை என்றால், அது "இளைய அரசரின் ராஜா தந்திரம்தானே?" பாராட்டுன்கையா. கையா..
No comments:
Post a Comment