Tuesday, October 2, 2012

திமுக செயற்குழு செயற்கரிய குழுவா?


     அக்டோபர் ஒன்றாம் நாள் திமுக தனது உயர்மட்ட செயற்குழுவை கூட்டியது. உள்ளே ஸ்டாலின் குழுவினர் எமார்.கே.பன்னீர்செல்வம், சுரேஷ்ராஜன், ஜெ.அன்பழகன் போன்ற மாவட்டங்கள் அதாவது மாவட்ட செயலாளர்கள் "காங்கிரஸ் உடன் உறவு வேண்டாம்" என ஒரு முகம் காட்டினர். காங்கிரஸ் மீது கடும் கோபம் உள்ள ஆ.ராஜாவ், அழகிரியோ, கனிமொழி குழுவினரோ அப்படி கிளப்ப வில்லை. ஏன்? சீ.பி.அய்.இடம் மாட்டிக் கொண்டுள்ள ராஜா, கனிமொழி போன்றோர் "நிரந்தரமாக " மட்டட்டுமே என்று ஸ்டாலின் குழு நினைக்கிறதா? அதில் ஜெ.அன்பழகன் என்ற தென் சென்னை மாவட்டம் " காவல்துறைக்கு பயந்து ஏன் பொன்முடியும்,நேருவும் ஓடவேண்டும்?" என்று சுயமரியாதை புராணம் பாடியது இன்னமும் வியப்பாக இருந்தது. திருச்சி சிவா "ராஜாவுடன், சிதம்பரமும் அலைக்கற்றை ஊழலில் விசாரிக்கப்பட வேண்டியவர்" ஆனால் சிதம்பரத்தை மட்டும் கிரீடம் கட்டி மகிழும் காங்கிரஸ் வேண்டாம் என்று கூறிய வார்த்தைகள், அவரது இயக்கப் படறி காட்டியது. 

              எது எப்படியோ, ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அதில் முதல் தீர்மானம் "முத்தாய்ப்பானது".முன்னாள் நிதி அமைச்சக செயலாளரும், பதிமூன்றாவது நிதிக்குழு தலைவருமான, விஜய் கேல்கர் தலைமையில் நடுவணரசு ஒரு குழுவை மைத்து, உலக வங்கி நீண்ட நாட்களாக கூறிவரும் "மானியங்களை ரத்து செய்வது" சம்பந்தமாக ஆய்வு செய்ய கூறியிருந்தது. அந்த கேல்கர் குழு பரிந்துரை செபடம்பர் மூன்றாம் நாள் வெளிவந்தது.அதில் மக்களுக்கு, அதாவது ஏழைகளுக்கு, அதாவது நலிந்த பிரிவினருக்கு கொடுக்கும் "அனைத்து மானியங்களையும்" ரத்து செய்ய வேண்டும் என்று பரிந்துரை வழங்கி இருந்தது. அந்த கேல்கர் குழுவின் பரிந்துரை இந்திய மக்களுக்கு எதிரானது என்று தனது முதல்தீரமானத்திலேயே திமுக கொண்டுவந்து அதை ரத்து செய்யவேண்டும் என்று கோரியுள்ளது. இத்தகைய ஒரு தீர்ம்மனத்தை வேறு கட்சிகள் யாரும் பெரிதுபடுத்தாத பொது,  திமுக கொண்டுவந்தது ஒரு அதிசயம்தான். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு, மன்மோகன் கும்பல் செய்யும் உலகவங்கிக்கு ஆதரவான சேட்டைகளை  எதிர்த்து சோனியா கும்பல் மக்கல்வாக்குகளை பெற இப்படி ஒரு தீர்மானத்தை முன்மொழிய சொன்னார்களா? எவ்ன்பது நமக்கு தெரியவில்லை.   


    ஆனால் தான் போட்ட ஏழு தீர்மானங்களில், ஆறாவது தீர்மானம்தான் சிறப்பானது என்று திமுக அகமகிழவேண்டும். உச்சநீதிமன்றம  அலைக்கற்றை ஒதுக்கீடு தவிர வேறு  எந்த ஒதுக்கீட்டிலும், டெண்டர் முறையை புறம் தள்ளக் கூடாது என்று தீர்ப்பளித்ததை வழிகாட்டியாக கொண்டு, ஏற்கனவே அலைக்கற்றைகளை முதலில் வந்தவருக்கு முதலில் கொடுத்ததை உச்சநீதிமன்றமே ஏற்றுக் கொண்டு விட்டது. ஆகவே அப்போது கொடுத்த "அலைக்கற்றை உரிமங்களை" ரத்து செய்த உச்சநீதிமன்ற பழைய தீர்ப்பை எதிர்த்து  ஏற்கனவே நடுவணரசு நீதிமன்றத்தில் முன்வைத்த, "உரிம ரத்து" உத்தரவை திரும்ப பெற கொடுத்த மனுவை, திரும்ப பெற்றுள்ளது. அதை மீண்டும் மறுபரிசீலனை செய்து இப்போது, "ஏற்கனவே கொடுத்த உரிமங்களை ரத்து செய்ததை, மீண்டும் ஏற்றுக் கொள்ள" மனு செய்யவேண்டும் என்று ஒரு தீர்மானத்தை கலைஞர் போட்டுவிட்டார். அதற்கு பொருளென்ன? ஏற்கனவே நான்கள் ராஜா காலத்தில் "தயாநிதி ஆட்சியில் மறுக்கப்பட்ட டாடா விற்கு, ராஜா மூலம்  கொடுத்த உரிமங்களை மீண்டும் கொடுங்கள்" என்று கேட்பதை தவிர வேறு என்ன? டாடா விற்கு ஆதரவாக் தாத்தா பேசுவதுதானே இது? இதைத்தானே "கடைசியாக பையை விட்டு பூனை வெளியே வந்துவிட்டது" என்று கூறுவார்கள்?
இப்படியாக செயற்குழு செயற்கரிய குழு ஆனதே?

No comments:

Post a Comment