Tuesday, October 2, 2012

காந்தியா? பிராந்தியா?


   இன்று காந்தி ஜெயந்தி என்றார்கள். அதாவது மோகன்தாஸ் கரம்சந்த் பிறந்த நாள். என்றும் இல்லாமல் இன்று கடற்கரை காந்தி சிலை அருகே முதல்வர் வரப்போகிறாராமே? என்று வெடிக்கி பார்க்க சென்றோம். எங்களுக்கு ஒரு தினாவெட்டு. முதல்வராவது அறிவித்த பத்து மணிக்கு வருவதாவது? என்று பதினைந்து நிமிடம் தாமதமாக சென்றோம். முதல்வர் விழா முடிந்து அதாவது அவர் மாலை அணிவிப்பது, ஆளுநர் மாலை அணிவிப்பது, சிலைக்குதான் முடிந்து போய் விட்டார்கள். நான்கள் செல்லும்போது, எதிரே அதிமுக கரை வேட்டிகள் வந்துகொண்டு இருந்தார்கள். ஆனால் எந்த ஆண்டும் இல்லாதவகையில் இந்த ஆண்டு நிறைய கூட்டம். வழமையாக வருபவர்கள் கூறினார்கள். ஒரு முப்பது குழந்தைகளுக்கு மோகன்தாஸ் போல வேடமிட்டு, அவர்களை துன்புறுத்தி ஒரு பள்ளி கூட்டி வந்திருந்தது. அப்போது ஒரு ஊடகத்தார் கூறினார். முன்னாள் பேரவை தலைவர் வந்து ஓரமாக நின்றாராம். வரை முதல்வர் கண்டுகொள்ளாமல்  போய்விட்டாராம்.

                 ஜி.கே.வாசன் வந்தார். வாசன் குழுவை சேர்ந்த ஞாதேசிகன், பீடர் அல்போன்ஸ், வேணுகோபால், முக்தா ஸ்ரீனிவாசன், கஜநாதன், இப்படி ஒரு படையே நிழலில் வாசனுடன் நின்றிருந்தது. அப்போது தகபாலு வந்தார். அண்ணே உங்களுக்காகத்ற்ற்ஹான் தலைவர் நிற்கிறார், என்று ஒரு குரல் பொய் சொன்னது.  அதற்கு பிறகு, அவர்கல்குழுவும் பொய் மாலை போட்டு முழக்கம் செய்தது. அடுத்து கோ.கா.மணி, ஏ.கே.மூர்த்தி, உட்பட பா.ம.க.கோஷ்டி. இப்படி பலருமின்று அதிக கூட்டம், வழக்கத்திற்கு மாறாக. அதுதான் டேஹ்ர்தல் காலம் என்று சொல்லிவிட்டோமே? பின்னாலிருந்து திடீரென ஒரு முழக்க குரல். இந்திய தௌஹித் ஜமாஅத் என்ற பச்சை கருப்பு கொடிக்காரர்கள் முழக்கம் போட, காவல்திரை அவர்களை மட்டும் உள்ளே வராமல் தடுக்க, என்னய்யா இது? எனப்பார்த்தால்,  "காந்தி தேசமா?பிராந்தி தேசமா?" என்று முழக்கங்களை பலகைகளிலும், முழக்கமாகவும் போட்டுக் கொண்டு ஒரு சிறு கூட்டம். மதுவில்ககை அமுல்படுத்தாத ஆட்சியாளர்களுக்கு, காந்திக்கு மாலை போட உரிமையில்லை என்று அவர்கள் முழங்கினர். ஓகோ, அவர்கள் முதல்வர் என்றும் இல்லாமல் மாலை போட வந்ததால் முழங்குகிரார்களோ?

No comments:

Post a Comment