Tuesday, October 2, 2012

புதிய பரிமாணத்தில் இந்தி எதிர்ப்பு போர்.



    அந்திமழை மாத ஏடு இந்த இதழில் "இந்தி திணிப்பு எதிர்ப்பு போரின் எழுபத்தைந்து ஆண்டு " வரலாற்றை, எல்.கணேசனின் மாணவர் பருவ அனுபவங்கள், பா.ஜெயப்பிராகசின் சிறை அனுபவம் என கட்டுரைகளாக் கொண்டு வந்துள்ளது. சரியான நேரத்தில் சரியான் அத்தேவையை ஒட்டி தெரிந்தோ, தெரியாமலோ, அந்திமழை அத்தகைய முயற்ச்சியை எடுத்து விட்டது. இன்று சென்னையில் நடத்தப்பட்ட "திட்டமிடல் கூட்டம்" அந்த எழுபத்தைந்து ஆண்டுகளின் பரிமான் வளர்ச்சியை நமக்கு எடுத்து சொல்வதாக அமைந்தது. இந்த திட்டமிடல் கூட்டம் சென்ற மாதம் இருபத்தி மூன்றாம் நாள், கன்னிமரா நூல் நிலையத்தில் உள்ள "அண்ணா சிற்றரங்கில்" நடந்த ஆலோசனை கூட்டத்தின் தொடர்ச்சி. 

              அந்த ஆலோசனை கூட்டம் ஒரு "கையேட்டை" விநியோகித்து. அங்கே பேராசிரியர் ந.தெய்வசுந்தரம், ராம்கி, அரணமுறுவல், பூங்குன்றன் போன்றோர் முன்னெடுத்து பல விசயங்களை விவரித்தார்கள். இதுவரை இந்தி மொழி தமிழ் போன்ற பல இந்திய நிலப்பரப்பில் வழங்கப்படும் மொழிகளை அடக்கி, அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தியபோதும், அவற்றின் மீது திணிக்கப்பட்ட போதும், எழுந்த எதிர்ப்பு போர்களை கண்டோம். ஆனால் இப்போது வேறு ஒரு பரிமாந்த்திலிந்த போர் நிகழ்த்தப்படுகிறது. அதாவது "கணினி மொழி" என்று ஒன்று அறிவியல் ரீதியாக வளர்ந்து விட்ட உலக நிலைமை இப்போது நம் கண்முன்னே நிற்கிறது. எல்லா மொழிகளும் கணினி தன்மையில்வலர்ந்தால் மட்டுமே வளர முடியும் என்ற புதிய நிலைமை. இது அறிவியல் வளர்ச்சியை ஒட்டியும், உயர் தொழில் நுட்ப வளர்ச்சியை ஒட்டியும் எழுந்துள்ளது. அதாவது ஒரு மொழியின் "கணினி" வளர்ச்சியை புரிந்து கொள்ளும் ஒருவர் மட்டுமே, "எழுத்தறிவுள்ளவர்" என்றும் மற்றவர் "எழுத்தறிவற்றவர்" என்றும் வழங்கப்படும் "காலம்" வந்து கொண்டிருக்கிறது.. இத்தகைய செய்தியை "இலக்குவனாரின் நினைவு நாள்" கூட்டத்தில் கூறினார்கள். நான் திகைத்துப் போனேன். ஏன் என்றால் இலக்குவனாரின் "குரல் நெறி" என்ற மாதமிருமுறை ஏட்டை,, நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது, வாங்கி படிக்க எங்கள் தமிழாசிரியர் சின்ன சிவஞானம் நெல்லை ம.தி.தா.இந்து கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணித்தார். தவறாமல் ஒவ்வொரு இதழையும் எனது எட்டாம் வகுப்பிலேயே ஒவ்வொரு மாதம் இருமுறையும் வாங்கி படித்தேன். அதுதான் இந்தி எதிர்ப்பு போரின் வீரர்களை, சின்னசாமி, அரங்கநாதன் போன்றோரை எனக்கு அறிமுகம் செய்தது. அந்த பாசத்தில் இலக்குவனார் நினவு கூட்டம் இப்போதும் எனக்கு புதிய கருத்தை தந்தது.

         அப்படிப்பட்ட கணினி மொழியை கள்ளத்தனமாக "பயன்படுத்த" ஒற்றையாட்சி நடுவணரசு திட்டமிட்டுள்ளது.ஏற்கனவே "ஆட்சி மொழி" என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தி மொழியை, கணினி மட்டத்திற்கு உயர்த்த "பல மடங்கு நிதியை" கொட்டி வருகிறது. அதில் சேர்க்கப்பட்டுள்ள "பல்லாயிரம் இந்தி சொற்களை" அடிப்படை சொற்களாக பாவித்து அதற்கு ஈடான அல்ல்து  இணையான சொற்களை உங்கள் மொழியிலிருந்து கொண்டு வந்து சேருங்கள் என நடுவனரசு அழைப்பு விடுக்கிறது. அதற்கு என்ன பொருள்?   ஐநூறு ஆண்டுகளே கொண்ட செயற்கை மொழி இந்தியை, அடிப்படையாக கொண்டுதான் கணினி வழியில் தமிழ் உட்பட இரண்டாயிரம் ஆண்டிற்கு மேலே உள்ளமொழிகளும் இனி பயணிக்க வேண்டும் என்று பொருள். அந்த முறையில்தான் தங்களது இந்தி மொழியை "ஆட்சி மொழி" என்ற யாடத்தில் பலப்படுத்த முடியும் என்று அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி, ஒற்றையாட்சி அரசு தனது "நச்சு வலையை" விரித்துள்ளது. இந்த வலையில் நாம் சிக்க போகிறோமா? பிற இந்திய மொழிகளையும் சிக்க அனுமதிக்க போகிறோமா? கணித் தமிழ் வளர்ச்சியை அறிவியல் ரீதியாக எடுத்து செல்ல என்ன செய்யப்போகிறோம்?  இத்தகைய கேள்விகளுக்கு "விடை" காணத்தான், தமிழறிஞர்களும், மொழியறிஞர்களும், இந்த கூட்டங்கள் மூலம், வருகிற டிசம்பர் மாதம் பதினைந்தாம் நாள் சென்னையில் மாநாடு என்று திட்டமிட நம்மை அழைக்கிறார்கள். அழைத்தார்கள். நாமும் வியந்து போய் இந்த "போர்" ஒரு தேசிய இனத்தின் உரிமைப் போர் எனக் கண்டுகொள்கிறோம். 

No comments:

Post a Comment