Wednesday, October 3, 2012

திமுக செயற்கரிய குழுவிற்குள் மோதல்?


   திமுக செயற்குழுவின் ஏழு தீர்மானங்கள் பற்றி பேசும்போது எல்லோருக்கும் அந்த "ஆறாவது" தீர்மானம்தான் உதைத்தது. அதில் சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாக கொண்டு, அதாவது அலைகற்றை விற்பனை தவிர மற்ற இயற்க்கை மூலாதாரங்களை ஏலத்திற்கு விடலாம் என்ற டெண்டர் முறையை ஆலோசனையாக நீதிமன்றம் வைத்திருந்தது. . அதாவது அலைகற்றை விற்பனையில் டெண்டர் என்ற ஏல முறையில்லாமல், "முதலில் வருபவருக்கு முதலில்" என்று ஆ.ராஜா கொடுத்து சரியானதே  என்று பொருள்.அதை அடிப்படையாக கொண்டு " ரத்து செய்யப்ப்பட்ட பழைய உரிமங்களை அவர்களுக்கே தர நடுவணரசு மீண்டும் ஒரு மனுவை நீதிமன்றத்தின் முன் வைக்கவேண்டும்" என்று ஒரு தீர்மானத்தை "ஆறாவது" தீர்மானமாக அந்த செயற்குழு போட்டிருந்தது. இந்த தீர்மானம் முதலில் திமுக தலைமை "தயார் செய்த" தீர்மானங்களில் வரவில்லையாம்.அதாவது தலைமை உறுப்பினர்களை கலந்து கொண்டு முதலில் தலைவர் கலைஞர் "ஆறு" தீர்மானங்களை மட்டுமே போட்டிருந்தார் என்ற செய்தியும், ஒரு புதிய தீர்மானமாக இந்த "வில்லங்கமான" தீர்மானம் நுழைக்கப்பட்டது எனவும், இப்போது அமபலமாகி உள்ளது. இந்த "இல்லன்கான தீராணம்" ஆறாவது தீர்மானமாக "நுழைக்கப்பட்டுள்ளது". மேற்படி செய்தியை  இன்றைய "டைம்ஸ் ஆப் இந்தியா" ஆங்கில ஏடு எடுத்து வெளியிட்டுள்ளது..

                  அத குறித்து  நக்கீரன் ஏடு இன்று,  ஆறு தீர்மானங்களை தயார் செய்த நிலையில்    
செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானத்தை கூறியது "திருச்சி சிவா" என்பதையும் பதிவு செய்துள்ளது. அந்த வில்லங்கமான தீர்மானம் ஏற்கனவே  உரிமம் பெற்ற "டாட்டா" குழுவினருக்கு மீண்டும் அதை பெற்றுக் கொடுக்கும் முயற்சியே தவிற வேறு எதுவும் இல்லை.  இததகைய அமபலப்படுத்தல்கள் வெளியே வந்த பிறகு அந்த தீர்மானம் வந்த "திசை" நோக்கி திமுக முன்னணி தலைவர்கள் கொந்தளிக்கிறார்கள். அதை இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா மேற்கோள் காட்டி, அழகிரி, டி.ஆர்..பாலு,போன்றோர் கனிமொழி உட்பட இப்படி ஒரு "தீர்மானத்தை" விரும்பவில்லை என எழுதிவிட்டது.  உள்ளே போய் ஆராய்ந்தால், முந்திய நாள் இத்தகைய ஒரு தீர்மானத்தை, அதாவது "டாட்டா" விற்கு  "வக்காலத்து" வாங்கும் தீர்மானத்தை கொண்டு வர "ராஜா கொடுத்த வழிகாட்டலில், திருச்சி சிவா முற்பட்டபோது, அதை எதிர்த்து கடுமையாக மறுத்தவர் டி.ஆர்.பாலு" என்ற உண்மையும்  வெளியே தெரிய வந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.கே.எஸ்.இளங்கோவன், கே.பி.ராமலிங்கம், மு.க.அழகிரி, டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆகியோர் இதே கருத்தில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே "போதுமக்க்ஜளுக்கான ஆறு தீர்மானங்களுடன், தனிநபர் நலனுக்கான இந்த தீர்மானத்தை சேர்த்ததால்,ஒட்டுமொத்த  செயற்குழு தீர்மானகளுக்கும் கெட்ட பெயர்" என்று கருதுகிறார்கள்.

                  ஆ.ராஜா தனது நோக்கத்தை நிறைவேற்றி விட்டாரே? என்று கூறுகிறார்கள். அதற்கு தலைவர் கலைஞரும் உடன்பட்டு விட்டாரே? என்று கோபம் கொள்கிறார்கள். கலைஞர்தான் "டாட்டா விற்கு உதவ ஆ.ராஜாவை அமைச்சர் ஆக்கினார்" என்ற உண்மையை,  அன்று "ரிலையன்ஸ்" க்கு உதவி செய்து, டாட்டா வை ஒதுக்கிய "தயாநிதி" ,தான் பதவி இழந்ததை எண்ணி புலம்புகிறார். ஆகவே இந்த "டாட்டா---ரிலையன்ஸ்" மோதல் என்ற கார்பரேட் மோதல், இன்று திமுக விற்குள் "ஆ.ராஜா-கலைஞர்" கும்பலுக்கும், மற்றவர்களுக்கும் உள்ள மோதலாக வெடித்துள்ளது. ஆகவே கலைஞர் "தெரியாமல்" இந்த தீர்மானத்தை உள்ளே நுழைய ஏற்பாடு செய்யவில்லை, "தெரிந்தேதான்" செய்துள்ளார் என்பது  அம்பலமாகி உள்ளது. கார்பரேட் யுகத்தில் "பேராசை" படுகின்ற அரசியல்வாதிகளுக்கு  இது ஒரு பாடமாக அமையுமா? ஆனால் கலைஞரை பொறுத்தவரை  இந்த தீர்மானத்தை "தெளிவாக" ஆ.ராஜா எழுதி, முதல் நாளே தயார்  செய்து,திருச்சி சிவா கையில் கொடுத்து  முன்மொழிய செய்து, கலைஞரின் ஆசிர்வாதத்துடன் வெற்றி பெற வைத்தது, வேறு ஒரு தீர்மானத்தை "அன்னை சோனியாவிற்காக" போட வைத்ததன் "தொடர்ச்சியே" என்ற விவரம் இந்த திமுக முன்னணி தலைவர்களுக்கு தெரியாது. 

                     அது  என்ன? என்று கேட்டால், முதல் தீர்மானமாக திமுக தலைமை செயற்குழு போட்ட தீர்மானத்தை பாருங்கள் புரியும். அது கேல்கர் குழுவின் பரிந்துரைக்கு எதிரானது. அதாவது "ஏழை நலிந்த வாக்காளர்களுக்கான மானியங்களை ரத்து செய்தால், காங்கிரஸ் தலைமையிலான  கூட்டணி வருகிற நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முடியாது" என்று சோனியா கும்பல் கருதுவதை அந்த கும்பல் மூலம் கொடுக்கப்பட்ட "ஆலோசனையின்" பேரிலேயே திமுக வின் முதல் தீர்மானமாக ஆக்கி உள்ளார்கள் என்பது இந்த கழகத்தின் கலக முன்னோடிகளுக்கு தெரியாத செய்தி. இப்படி ஒரு கள்ள கூட்டு இரண்டு கட்சிகளுக்கும் இடையில் உள்ளது. ஆனால் கனிமொழி தான் நீதிமன்றத்தில் ப[ஒத்துள்ள மனுவில், "வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க" வேண்டுகோள் விடுத்தது இந்த தீர்மானத்தால் மறுக்கப்பட்டு விடுமோ என அஞ்சுவதும் நியாம்தான்.   

No comments:

Post a Comment