Tuesday, February 26, 2013

டக்ள்ஸ் உடன் நாலு ஆண்டுகள் முன்னால், சதி செய்தவர் யார் கலைஞரே?

டக்ள்ஸ் உடன் நாலு ஆண்டுகள் முன்னால், சதி செய்தவர் யார் கலைஞரே?
     டக்லஸ் தேவானந்தா என்ற இலங்கை அமைச்சர் கச்சதீவு வந்து, ஈழத்து மீனவர்களைக் கொண்டு,தமிழகத்தில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவேன் என்று மிரட்டியதற்கு, சூடாக திமுக தலைவர் கலைஞர் பதில் கொடுத்து மகிழ்ச்சி. ஒரு தேடப்படும் கொலைக் குற்றவாளி எப்படி இப்படி பேசுகிறான் என்று கலைஞர் கேட்டது சரியானதே. ஆனால் நமக்கு நான்கு ஆண்டுகள் முன்னால், இந்திய நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில், நடந்தா நிகழ்ச்சி நினைவுக்கு வந்து தொலைக்கிறதே? அது என்ன? இதே மீநேவர் பிரச்சனைதான் அது.அப்போது மும்பையில் ஒரு மட்டை பந்து ஆட்டம் நடந்தது. அது "தங்க கோப்பை" போட்டி கலைஞர் ஒரு மட்டை பந்து விளையாட்டு ரசிகர் என்பதால் அதை மறந்திருக்க மாட்டார் 

                        அந்த போட்டி, இந்திய அணிக்கும், இலங்கை அணிக்கும் நடந்த போட்டி. அந்த நேரத்தில், ராமேவரத்திளிருந்து கடலுக்கு மீன் பிடிக்க ஜென்ர மீனவர்கள் சிங்கள கடல்படையால் அத்துமீறி கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள், மும்பையில் நடக்கும் மட்டை பந்து விளையாட்டில், இந்தியா வெற்றி பெறக்கூடாதே என்று ஆண்டவனை வேண்டினர் காரணம் இலங்கை தோற்று விட்டால், கொடுமதி படைத்த சிங்கள கடல் படையினர், கைதிகளாக உள்ள, ராமேஸ்வரம் மீனவர்கள் அனைவரையும் கொன்று விடுவார்களே? என்று அவர்களுக்கு அச்சம். அப்படி சூழலில், மும்பை மட்டை பந்து போட்டியில் இந்தியா வென்றது. இலங்கை தோற்றது. தாங்கி கொள்ள முடியாத சிங்கள இன வெறியர்கள், தங்கள் கை வசம் இருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் அனைவரையும், கண்டபடி கொடுமை செய்து, படுகொலை செய்துவிட்டனர். 

       அப்போது தமிழ்நாட்டில், திமுக.வின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. நடுவணரசில் பங்குதாரராக இருந்த திமுக, டில்லி காங்கிரஸ் தலைவர்களுடன், இலங்கை வன்னி போர் பற்றி தொடர்ந்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருந்த நேரம் அது. கொலை செய்யப்பட தமிழ்நாட்டு மீனவர்களை பற்றிய உண்மை செய்தியை "வெளியே விட்டால்" தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நிலைமை "காங்கிரஸ் தலைமையிலான ஐ.முகூ."விற்கு எதிராக திரும்பி விடும் என்பதை டில்லி தலைமை உணர்ந்திருந்தது.  அது தலைவர் கலைஞருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ராமேஸ்வரம் தமிழ்நாட்டில் உள்ளது. அதனால் தமிழ்நாட்டு முதல்வர் கலைஞர் இலங்கை சிங்கள கடல் படையால் கைது செய்யப்பட மீனவர்களின் நிலைமை பற்றியோ, அவர்களை சிங்கள வெறியர்கள் மட்டை பந்து விளையாட்டை ஒட்டி கொலை செய்தது பற்றியோ, தெரியாமல் இருந்தார் என்று உலகில் யாருமே கூற முடியாது.  கலைஞரின் நம்பிக்கைக்கு உரியவராக அந்த நேரம் இருந்த ஜாபர் சேட் தனது உளவு துறை மூலம் அது பற்றி தெரியாமல் இருந்திருப்பாரா? உலகத்திற்கு அந்த நான்கு தமிழ்நாட்டு மீனவர்களும் கொலை செய்யப்பட்டதை வெளியே கூறாமலேயே, முதல்வர் கலைஞர்  அவர்களே நீங்கள் எப்படி அந்த நால்வர் குடும்பத்திற்கும் "லட்சங்களை நிதியாக" அறிவித்தீர்கள்?  அப்படியானால் உங்களுக்கு அவர்கள் நால்வரும் கொலை செய்யப்பட்டது தெரிந்தும், அதை "மறைத்து" தேர்தலில் எதிர் விளைவு ஏற்படாமல் பாதுகாத்தீர்களா? 


                        விக்டஸ், ஜான்பால், அந்தோணிராஜ், மாரிமுத்து ஆகிய நான்கு மீனவர்களின் உயிருடன் விளையாடியது 2009 நாடாளுமன்ற தேர்தலில் அதிகைடன்களை கைப்பற்ற தானே கலைஞர் அவர்களே? அடுத்து தேர்தல் வரு முன்பே  , வடக்கு இலங்கையில் உள்ள "நெடுந்தீவு" என்ற {டெல்ப் தீவு} டக்ள்ஸ்  செல்வாக்கு மிகுந்த இடத்தில், விக்டஸ் உடல் கிடைத்தே? அதை பெற்றுக் கொள்ள ராமேஸ்வரத்திலிருந்து, விக்டசின் தம்பி "சின்னத்தம்பி" சென்றாரே? அப்போது ஏன்  அந்த அமைச்சர் டக்லஸ்  "விகடச் உடலை" இந்தியா கொண்டு செல்ல அனுமதிக்க வில்லை.? காங்கிரஸ் தலைமையிலான அரசின் ஆலோன்சையிலா? தமிழக அரசின் ஆலோசனையும் சேர்ந்தா? நெடுந்தீவில் சின்னத்தம்பி தனது அண்ணன் உடலை இந்தியா கொண்டுவர கடும் முயற்சி எடுத்தார். அவரை டக்ள்ஸ் முறைத்தார்.
அவசரமாக ஒரு கத்தோலிக்க பாதிரியாரை டக்லஸ் வரவழைத்து, விக்டஸ் உடலை அங்கேயே பதித்தார் இதுதானே கலைஞர் அவர்களே உங்களையும்   அந்த தேர்தல் நேரம் காப்பாற்றியது? அதை செய்த டக்லஸ் அன்று யாருடைய "கூட்டு சதியில்" அதை செய்தார்? இப்போது அவரை எதிர்க்கும் தங்களது அறிக்கை மட்டுமே நாங்கள் நம்பும்படி உள்ளதா ?

       அடுத்து மீதிமூன்று பேருடைய சடலங்களை "கை,கால், கழுத்து" அருபட்டநிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகுதானே தமழக கடலோரம் காண முடிந்தது? அதுவும் கூட, நாடாளுமன்ற தேர்தலில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று   செய்யப்பட்டதுதானே? அவையெல்லாம் இலங்கை அமைச்சர் டக்லஸ் யாருக்காக யார் இந்திய தேர்தலில், தமிழகத்தில் வெற்றி பெறுவதற்காக , செய்த "உதவி" என்று நினைவு கலைஞரே தெரியும்? அதனால் இன்று எதிர்ப்பு போல காட்டினாலும், நான்கு அனடுகளுக்கு முன்னாள் யார், யாருடன் சேர்ந்து "சதி" செய்தார்கள் என்பது தமிழக மக்களுக்கு தெரியவேண்டாமா?  
              

No comments:

Post a Comment