Friday, February 8, 2013

ராஜபக்சேக்கு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இரண்டு பீகார் சட்டப்பேரவை சுயேச்சை உறுப்பினர்கள்,

பீகார் மாநிலத்தில் புத்தகயா செல்லும் ராஜபக்சேக்கு, அங்கேயே, இன்று 500 மக்களை திரட்டி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தும் இரண்டு பீகார் சட்டப்பேரவை சுயேச்சை உறுப்பினர்கள், சோமப்ரகாஷ் சிங்கும், பரஸ்தாதாவும் நமது நண்பரான டில்லியில் உள்ள ஊடகவியலாளருக்கு, இந்தியில் கொடுத்த நேர்காணலின் தமிழ் ஆக்கம்.

சோம் பிரகாஷ் .( சுயேட்சை எம் எல் ஏ  ,ஒபர தொகுதி ஔரங்காபாத் மாவட்டம் ,பீகார்)

 ஊழலுக்கு எதிராக போராடுவதற்காகவே காவல் துறை அதிகாரி என்ற தமக்கு மிகவும் பிடித்த  வேலையை விட்டு சட்டசபை உறுப்பினராக மாறியவர் சோம பிரகாஷ் ஜி.( http://indiatoday.intoday.in/story/bihar-cop-turned-mla-wants-to-quit-politics/1/218042.html)

ராஜபக்சேயின் இந்திய வருகைக்கு  ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் திரு சோம பிரகாஷிடம்
டெல்லி நிருபர் ஒருவர் பேட்டி எடுத்த போது  ,அவர் கூறியதாவது:

ஒருபீஹாரியாகவோ தமிழனாகவோ நின்று நான் எதிர்க்கவில்லை. ஒரு நல்ல இந்திய குடிமகனாக  மனசாட்சி உள்ள மனிதனாக இருந்து   செய்ய வேண்டியதை செய்கிறேன். அவ்வளவு தான் . ராஜபக்சே ஒரு விருந்தாளியாக தான் இங்கு வருகிறார் . நம் அரசும் அப்படி தான் அவரை வரவேற்கவும் உள்ளது . இப்படி வரவேற்கும் அவர் எப்படி ப்பட்டவர் என்பது தான் எங்களை எதிர்க்க வைத்திருக்கிறது., 

அவர் ஒரு போர் குற்றவாளி . அப்படிப்பட்ட ஒருவரை விருந்தாளியாக வரவேற்பது பகவான் புத்தரை ஏளனப்படுத்துவதை போன்றது.  எநை வெற்றி பெற வைத்து சட்ட சபைக்கு அனுப்பிய மக்களிடம் எனக்கு ஒரு கடமை இருக்கிறது. அதனால் அரசின் இத்தகைய செயலை ஜனநாயக முறையில் எதிர்ப்பது அரசுக்கு நாங்கள் கொடுக்கும் ஒரு message கூட தான். 

நம் மனிதர்களை கொன்றவரை மாலை அணிவித்து வரவேற்பதை எக்காரணம் கொண்டும்  நியாயப்படுத்தவே முடியாது.  . ஆனால் எங்களின் போராட்டங்களும் மற்றும் அமைதியாகவும் அரசுக்கு எடுத்து சொல்லும் விதமாகவும் இருக்கும்.


பரஸ் தாதா ( சுயேட்சை எம் எல் ஏ  ,ரத்லம் தொகுதி , மத்திய பிரதேஷ்  )

ஒரு engineer ஆக பணியாற்றி பிறகு அரசியலுக்கு வந்தவர்..  அவர் கூறுகையில் ,

தமிழின அழிப்பை பயங்கரமாக அரேங்கேற்றி  உலக நாடுகளின் முன் போர் குற்றவாளியாக நிற்கும் ஒருவரை நம் ஊரின் விருந்தினராக வரவேற்பதை ஒருபொழுதும் ஏற்று கொள்ள முடியாது. இந்தியா மகா நாடு அமைதியின் ஊர் . அமைதிக்கு பேர் பெற்ற ஊர். அந்த மகத்துவத்தை நாம் ஏற்றுகொள்ள வேண்டும் 

 இலங்கையில் கொடூரங்களை நடத்தி அந்த ஊரின் அமைதியையே நொறுக்கிய ஒருவரை இங்கு அரசு விருந்தாளியாக வரவேற்பது  அகிம்சை , அமைதி, அன்பு , போன்ற கொள்கைகளை உள்ளடக்கிய புத்த மதத்தை, புத்தரை இழிவுப் படுத்துவது தான் என்பதில் எந்த சந்தேகவும் .இல்லை . நாங்கள் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துவோம். ஆப்கானிஸ்தானை போலவே பிற மதங்கள் மீதும் நம்பிக்கைகள் மீதும் வெறுப்பை உமிழும் நாடாக மாறி விட்டது இலங்கை.

No comments:

Post a Comment