Friday, February 8, 2013

ராஜபக்சேக்கு எதிர்ப்பு -,புத்தகயாவிலும், திருப்பதியுலும், கைதுகள்.

ராஜபக்சேக்கு எதிர்ப்பு கொடுத்து,புத்தகயாவிலும், திருப்பதியுலும், கைதுகள்.
    திருப்பதியில்  தேவஸ்தான நிர்வாகம், கடுமையான காவல்துறையினரை நிறுத்தி, தமிழ்நாட்டு தொலைக் காட்சிகளை உள்ளே வரவிடாமல், விரட்டிவிட்டன. தமிழர்களை சாமி கும்பிடக் கூட அனுமதிக்காமல், விரட்டிவிட்டன. ஆயிரத்திற்கு மேல் ம.திமுக. உட்பட தமிழக ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்துள்ளனர். அந்த அளவுக்கு காங்கிரஸ் ஆட்சி ராஜபக்சேவை பாதுகாக்க எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்லும் என நிரூபிக்கிறது.

                      அதேபோல நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை அதுவும் பீகார் காரர்களை திரட்டி, புத்தகயா கொவில்முன்பே ஆர்ப்பாட்டம் செய்த பீகார் மாநில எம்.எல்.ஏ .சோம பிரகாஷ் சிங் அவரது ஆதரவாளர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் தமிழக திமுக தலைமை மேடை போட்டு, சென்னையிலேயே கருப்பு சட்டை அணிந்த ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இவர்களது கூட்டணி ஆட்சிதானே டில்லியில் இருந்துகொண்டு, மகிந்தாவிற்கு  "சிவப்பு கம்பளம்" விரிக்கிறது? ஆமாம். லண்டன் தமிழர்கள்  இதேபோல ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு கொடுத்த பொது, அந்த அரசு அவரை " வராதே" என்று தடுத்ததே? மலேசியா நாட்டில் தமிழர்கள் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த போது, அங்குள்ள மலேசியா அரசு அவரது வருகையை "ரத்து" செய்ததே? இந்திய  அரசு மட்டும் ஏன்  எதிர்ப்பு வந்தாலும் அனுமதிக்கிறது? திமுக நடுவணரசில்  இருந்தும்கூட ஒன்றும் செய்ய முடியவில்லையா? அல்லது ஒன்றும் செய்ய  விரும்பவில்லையா?

No comments:

Post a Comment