Wednesday, July 24, 2013

அய்யய்யோ, அய்யய்யோ, கடற்கரை காணமல் போகுதே ?


      கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம். ஆகா. எத்தனை அழகான திட்டம். வெங்காயம். எவனயா சொன்னான் அழகான திட்டம்னு?  ஆமாம்.மாநிலமெங்கும் "தண்ணீர்" கிடைக்காதபோது, அது அழகான திட்டம்தானே? யோவ். கடல்னா என்னனு தெரியுமா? கடல் நீர்னா  என்னனு புரியுமா? அதுல இருக்கற உப்பு எப்படிப்பட்டதுணி அறியுமா? அதிலிருந்து "உப்பை நீக்கி குடிநீர்" ஆக்கினா,என்னாகும்னு விளங்குமா? இப்போ "சூளேரி காட்டுகுப்பதுல" ஒரு டிசேலிநேசன் பிளான்ட் இருக்கே? கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் நால்லாதானே போய்க்கிட்டு இருக்கு? எவனய்யா சொன்னான்?  முதல்ல மீனவர் சங்கதுகாரங்க, "இது ஆபத்தான திட்டம்னு" சொல்லியும் அந்த ஊர் சனம் கேக்கல்ல.இப்போ அடிச்சிக்கிறாங்க,வயித்துல?  ஏன்? கடலுக்கு மீன் பிடிக்க போன ஒரு மீனவர் இந்த திட்டத்திற்காக கட்டிய "கடலுக்குள் சுவர்" என்பதில் படகு மோதி இறந்தார்.கடல் நீர் ஊருக்குள் வரத்தொடங்கி, ஊரையே :காலி" செய்யும் நிலைமை வந்துவிட்டது. 

                   கடல் நீரை எடுக்கும் "குழாயில்" சிறிய மணல்களும் உள்ளே நுழைந்து, அந்த "ஆலை" பழுதாகி, ஒரு குழாயில் உற்பத்தி பாதிப்பு. அதன்மூலம் கொட்டிவாக்கம் வரை குடிநீர் கொடுத்துவந்த "சென்னை குடிநீர் வாரியம்" ஒரு வாரத்திற்கு மேல் குடிநீர் கொடுக்க முடியவில்லை. அத்தகைய "குடிநீரும்" எப்படி இருக்கும்? மயிலாப்பூர் நொச்சி குப்பத்தில் ஒரு "டிசெலினெசன் பிளான்ட்" "டீம்" என்ற அரசு நிறுவனம் பெயரில் பல ஆண்டுகளாக இருக்கிறது. அதில் முதல் நாள் தண்ணீர் சுவையாக இருக்கும் அய்யா.மூன்றாம் நாள் "புழு நெளியும்" அய்யா. என்கிறார்கள். இதிதான் அனுபவம் என்றால், ஏன் இந்த அதிகாரிகள் இப்படி "தவறான திட்டத்தை" ஆலோசனை கூறி அரசை அசிங்கப் படுத்துகிறார்கள்? அவர்கள் என்ன சொல்கிறார்கள்? துபாயில் இந்த திட்டம் இருக்கிறதே? என்கிறார்கள். அய்யா, அங்கே நிலத்தின் அடியில் நீர் எடுக்க முடியாது. பாலைவனம். நம்ம ஊர்ல "ஒழுங்கா ஏரி, குளம்",என்று மூதாதையர்களால் தோண்டப்பட்டவற்றை  "பராமரித்தாலே" போதுமே?   அதுல போய் "பிளாட் போட்டு விக்கறீங்க". ஏறி,குளம், தூர் வாரி ஆழப்படுத்த "அரசுக்கும், அதிகாரிகளுக்கும் துப்பில்லை". கடல்ல போய்  ஓங்க விளையாட்டை காட்டறீங்க. அது திருப்பி அடிக்குது. 

             நீங்க எடுக்கற கடல் உப்பின் "கழிவு உப்பை" கடலிலேயே கொட்டறீங்களே? அது "மீன் வளத்தை" அடர்த்தியான உப்பு காரணமாக ஆழிக்காதா? என்ன மூளை அய்யா உங்களுக்கு? கடலை பற்றி ஒன்னும் விளங்கலைனா, மீனவரகளை  கூப்பிட்டு கேளுங்கய்யா?  உங்க "நிலம் சார்ந்த உலக சிந்தனையை" கடல் வாழ் பழங்குடிகளான மீனவர்கள் மீது ஏன் "திணிக்கிறீங்க?" கடற்கரை முழுக்க இப்போ "சூளேரி காட்டு  குப்பத்தில்" அரிக்கப்பட்டு விட்டதே? அதை ஈடுகட்ட "பாரங்கல்களை" போடும் அதிகாரிகளே, உங்கள் மூலையில் இருப்பது "பாரங்கல்களா?" துபாயில் மட்டும் எப்படி இந்த திட்டம் வெற்றி அடிக்கிறது? என்று கேட்கிறீர்களே? அங்க "கரையோர மீன்பிடி தொழில்"நம்ம ஊரைப் போல கிடையாது. அங்க "ஆழ்கடல் மீன்பிடி" மட்டும்தான். அதனால் நீங்க கரையோரம் "பாரங்கல்லை" போட்டாலும், போடாவிட்டாலும், அது மீன் பிடி தொழிலை ஒன்றும் செய்யாது. இந்த லட்சணத்தில், தமிழக அரசு, தமிழக கடற்கரையோரம் "நூறு டிசேலிநேசன் பிளான்ட்" கொண்டுவர திட்டமிடுகிறதாம்.அது எப்படி இருக்கு? 

               துபாயில் ஒவ்வொரு கடலோர ஊருக்கும் இடையில் நூற்றுக் கணக்கான மைல் தூரம் இருக்கு. தமிழக கடற்கரை மொத்தம் இருக்கற "ஆயிரம் கிலோமீட்டரில்" பத்து கோழி மீட்டருக்கு ஒரு மீனவர் கிராமம் இருக்கு. அந்த கடலோர கிராமங்கள் என்னாகும்? இதற்க்கு பெயர் "மீனவர் நண்பர் ஆட்சியா?" மீனவர் விர்தோத அடசியா? நிலம்சார்ந்த உலங்கின் அரசியல்வாதிகளே,அதிகாரிகளே, ஆட்சியாளர்களே, நீங்கள் இனி "கடல்சார்ந்த உலகின் " மீனவ மக்களையோ, அவர்களின் கடற்கரையையோ, கடலையோ" தொட்டு அழிக்க முற்பட்டால், இங்கொரு "சோமாலியா" உருவாவதை தஹ்டுக்க முடியாது? சோமாலியாவின் கடல்சார் மீனவ மக்களை ஏகாதிபத்தியம் அழித்ததால்தான் அவர்கள் இன்று," கடல் கொல்லைகாரகளாக" உருவாக்கி உங்களது உலகத்திற்கே சிம்ம சொப்பனமாக மாறி இருக்கிறார்கள். நினைவில் வைத்து கொள்ளுங்கள். இங்கும் அப்படி ஒரு ன் இலையை அரசு தோற்றுவிக்கத்தான்,"சூளேரி காட்டு குப்பங்கள்" உருவாக்க விரும்புகிறதா? 

1 comment:

சேக்காளி said...

ஒரே நாள்லேயா ஒலகம் அழிஞ்சுர போவுது. கொஞ்சம் கொஞ்சமா தானே அழியும்.அதுக்கு போயிட்டு இப்படி கூப்பாடு போடுதியளே.இந்த பதிவ எத்தன பேரு படிச்சாங்கன்னு தெரியல.பின்னூட்டதுல ஒன்னையும் காணலேங்க போது மக்களுக்கு அக்கறை எம்புட்டு இருக்குன்னு தெரிஞ்சுக்க முடியுது. ஆப்பிளின் காம்பு இருக்கும் குழி போல் அந்த(ஏதாவது ஒரு நடிகை) நடிகையின் தொப்புள் இருக்கிறது என்று ஒரு படத்தின் நாயகியை வர்ணித்து திரை விமர்சனம் எழுதுவியளா. அத உட்டுட்டு.

Post a Comment