Wednesday, July 24, 2013

தமிழண்ணல் கட்டுரைக்கு சுப.வீ.. முரசொலியில் பதில்? சுப.வீ.யிட்ம் கேள்விகள்?


     இன்று முரசொலியில்,   ஒன்பதாம் பக்கம் "  தமிழறிஞர்களின் அடக்கமும் ஆர்ப்பரிப்பும்" என்ற சுப.வீரபாண்டியன் அவர்களின் கட்டுரை வெளிவந்துள்ளது. அதில் "தினமணி"யில் தமிழண்ணல் 20-07-2013இல் " மொழிக் கொள்கையில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் " என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரைக்கு பதில் எழுதியுள்ளார். சு.ப.வீ.அவர்கள் குறிப்பிட்டுள்ள பல செய்திகள், மேற்கோள் காட்டி தமிழண்ண்லிடம்  கேட்கும் பல கேள்விகள் எனக்கு நான் தமிழண்ணலின் கட்டுரையை படிக்கவில்லையே என்ற வருத்தத்தை ஏற்படுத்தினாலும், நான் நேரில் கண்ட சில காட்சிகளும் எழுதப்பட்டிருப்பதால், அதையாவது நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.

           சுப.வீ.எழுதுகிறார்," 2006 இல் ஆட்சிக்கு வந்தவுடன், தமிழ்நாட்டு பள்ளிகள் அனைத்திலும் ஐந்தாம் வகுப்புவரை தமிழ்மொழி கட்டாயப்பாடம் என்று கலைஞர் அரசு 
அறிவித்ததே அதனை எங்கேனும் தன கட்டுரையில் பேராசிரியர் குறிப்பிட்டிருக்க வேண்டாமா? அரசு பொறுப்பு ஏற்றவுடன் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட முதல் அரசு ஆணையே அதுதான் என்கிறார் அன்றைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு".இந்த செய்தியில்தான் என்னைக்குத் தெரிந்த விவரங்களையும் எழுத எண்ணுகிறேன். 2006 இல் கலைஞர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் "தானாக" முன்வந்து அப்படி ஒரு ஆணையை வெளியிட்டாரா? 
தமிழ்ச் சான்றோர் பேரவை சார்பாக "நூறு தமிழ் அறிஞர்களின் பட்டினிப் போர்" ஒன்று வள்ளுவர் கோட்டத்தில் அய்யா ஆனா.ரூனா.வால்  ஏற்பாடு செய்யப்பட்டதே? அதன் கோரிக்கைதானே "குறைந்தபட்சம் ஐந்தாவது வகுப்புவரை தமிழ் மொழிப் பாடம்" வேண்டும் என்பது. அந்த போராட்டத்திற்கு தலைமை தாங்க ஏற்பாடாகியிருந்த " சிலம்பொலி செல்லப்பன்" திடீரென தனது வருகையை ரத்து செய்துவிட்டார். ஆனால் கவிஞர் இளவேனிலோ சிலம்பொலி செல்லப்பன் தலைமை என்று போட்டு, புரட்சிகர துண்டறிககை விநியோகம் செய்துவிட்டார்.உடனடியாக் தமிழண்ணல் தான் அந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். இஅரண்டு நாள், தமிழறிஞர்களின் பட்டினிப் போர் தொடர, கலைஞர் அரசோ, செவி சாய்க்கவில்லை. நெடுமாறன் கலந்துகொண்டு ஆதரவு தந்தார். இளைஞர்கள் துடித்தனர். உளவு துறை செய்திகளை அனுப்பிக் கொண்டே இருந்தது. பி.வி.பக்தவச்சலம் வந்தார். அவர் மூலம் மருத்துவர் கிருஷ்ணசாமியின் ஆதரவையும் தொலைபேசி மூலம் பெற முடிந்தது. பல தமிழ் அறிஞர்கள் ஆவேசமாக பங்கு கொண்டனர். கடைசியாக அரசு பணிந்தது.

       ஆகவே கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் "தானாக" தமிழுக்கு இறங்கவில்லை.ஒரு போராட்டம்தான் இறக்கியது. இதுவரைதான் எனக்கு தெரியும். ஆனால் நண்பர் அரணமுறுவல் மேலும் பல செய்திகளை இன்று கூறினார். கலைஞர் அரசின் ஆணை வெளிவந்தவுடன், "தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகளின் சங்கம்" அரசு ஆணைக்கு எதிராக நீதிமன்றம் சென்றது.அதுவும்கூட அரசின் கல்வி இயக்ககம் ஏற்பாடு என்று ஒரு கருத்து உண்டு. கலைஞர் அரசு மோகன் குழு ஆலோசனையை கேட்டது. அந்த ஆலோசனையும் தமிழுக்கு சாதகமாகவே இருந்தது. உயர்நீதிமனர்மும் தமிழுக்கு சாதகமாகவே தீர்ப்பு கூறியது. மேல்முறையீடு உச்சநீதிமன்றம் சென்றது. உச்சம் நமது தலையின் உச்சத்தில் "தட்டி அமரச்செய்து" விட்டது.அதற்கு கலைஞர் அரசான தமிழ்நாடு அரசு மேல்முறையீடு "செல்லவில்லையே?" என்று நம்மிடம் அரணமுறுவல் கேள்வி கேட்கிறார். இதை தமிழுக்கு செய்த "பச்சை துரோகம்" என்று எடுத்துக் கொள்ளலாமா? ஜெயலலிதா அரசு தமிழ் மீது ஆகாரை கட்டவில்லை என்றால் நமக்கு அது அதிர்ச்சியாக இருப்பதில்லை ஜெயலலிதாவிற்கு தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை , அதன் பயிற்றுமொழி தேவையை விளங்கிக் கொள்ள முடியுமா? என்பது இன்னமும் நமக்கு தெரியவில்லை. எல்லாமே இந்த அரசில் "இரும்பு திரித்தானே?" ஆனால் கலைஞர் எப்போதும், தமிழ் மொழியின் முக்கியத்துவம் பற்றி பேசுவதால் எழுதுவதால், நடக்கும் நாடகங்கள் "தெரிந்தே" செய்யப்படுகிறதோ? என்ற கேள்வி எழுகிறது. 

No comments:

Post a Comment