Wednesday, February 25, 2015

தென் மாவட்டங்களில் கொலைக் களம் என்பது உண்மையா?

தென் மாவட்டங்களில் கொலைக் களம் என்பது உண்மையா?
------------------------------------------------------------------------------------------------
     வள்ளியூர் பகுதியில் இதுபோன்ற சாதிக் கொலைகள் நடந்த தடயங்கள் வரலாற்றில் அதிகம் இல்லை. இப்போது திருவைகுண்டம் நகர புதிய தமிழகம் செயலாளர் பாஸ்கர் படுகொலையானதும், அதையொட்டி அவரது சடலத்தை வாங்க மறுத்து கொலைகாரர்களை கைது செய்யக் கோரியும், புதிய தமிழகத தினரின் மூன்று நாட்களாக மறியல் செய்தும் கூட, வட்டார அதிகாரிகள் எந்த ஆக்கபூர்வமான முயற்சியும் எடுக்கவில்லை எனபதே மக்களது குரல். டாக்டர் கிரூஷ்ணசாமி வருகிறார் என்றதும் வட்டாரத்தில் "தடை" உத்தரவு போட முடிந்த காவல்துறைக்கு, அவர் விமானத்தில் வந்து இறங்கியதும் "பாஸ்கர் கொலையை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு" உத்தரவிடத் தெரிந்த காவல்துறைக்கு, மூன்று நாட்களாக குறிப்பிட்ட "சுவரொட்டி விளம்பரப் புகழ் குற்றம் சாட்டப்பட்டவரை" கைது செய்ய இயலாவிட்டாலும், "முதல் தகவல் அறிக்கையில்" போட முடியாமல் போனது ஏன்? குறிப்பிட்ட "குற்றம் சாட்டப்படும்" கும்பல், தொடர்ந்து இதுபோன்ற கொலைகளை செய்வதாக மக்கள் கூறுவது பொய்யா?

அந்த வட்டாரத்தில் குறிப்பாக வள்ளியூர் பகுதியில் ஒரு அருந்ததியரை கொலை செய்து ஒரு மாதம் முன்பு நடந்த கொடும் செயலை கண்டித்து வட்டாரம் வந்த "அருந்ததியர் தலைவர் அதியமானுக்கும்" இப்போது கிரூஷ்ணசாமிக்கு நடப்பது போலவே,"உள்ளே நுழைய தடை" என்பது போடப்படவில்லையா?  சமூகத் தலைவர்களுக்கு "உள்ளே நுழைய தடை"போடுவதால் வன்முறைகளைத் தடுக்க முடியுமா? பலியான சமூகத்தின் மக்களை ஆறுதல் கூற வரும் தலைவர்களை தடுப்பது, ஒடுக்கப்பட்ட அல்லது அதிகாரத்தில் இல்லாத சமூகத்தினரின் "மன உணர்வை" எழவிடாமல் "அழுத்துவது" ஆகாதா?

சமீபத்தில் வள்ளியூர் பகுதியில் படுகொலை செய்யப்பட "டேவிட் என்ற நாடார் சமூக" நபருக்கும் இதே நிலைதானே? அவரது கொலையிலும் இதே "கொலைக் கும்பல்"தான் இருந்ததாகவும், வட்டார அணைத்து சமூக மக்கள் கூறுகின்றனரே? வட்டாரத்தில் தொடர்ந்து இதுபோன்ற "பயங்கரவாதச் செயல்களை" கட்டவிழ்த்து விடும் கும்பலின் நோக்கம் என்ன? அவர்கள் எங்கிருந்து இந்த தைரியத்தை பெறுகிறார்கள்? தங்கள் சமூகத்தினருக்கு "அதிகாரம்" கைக்கு வந்ததாக அவர்கள் நினைத்து பேசுவது காவல்துறையின் காதுகளுக்கு கேட்கவில்லையா?

        வள்ளியூர் பகுதிக்கு துணை கண்காணிப்பாளராக பாலாஜி வந்த பிறகு ஏன் இந்த கொலைகள் தொடர் நிகழ்வுகளாக ஆக்யுள்ளன" அவர் ஒடுக்கப்பட்ட சமூகம் ஆனாலும் அவருக்கு மட்டும் "அதிகாரம்"இல்லையா?. அதற்கு மக்கள் சொல்வதுபோல காவல்நிலைய ஆய்வாளர் குருனாதன் தான் காரணமா? அவர் இங்கே வள்ளியூரில் பொறுப்பெடுத்து சிறிது காலத்திலேயே இப்படியா? அவர்  கொலையாளிகளுடன் நெருக்கம் கொண்டவரா? மக்கள் இதுபோன்று பேசுவது மேலோட்டமான பார்வையா? உண்மை செய்தியா? அருந்தியர் ஒருவர் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடும்போது, இந்த ஆய்வாளர் குருநாதன் கோவையிலிருந்து கொலையாளிகள் என்று சிலரை கொண்டுவந்து சரணடைய வைத்தாராமே? உண்மையா? இந்த குருநாதன் இப்போதும் தேடப்படும் குற்றவாளிகளுக்கு சாதகமனவரா? இந்த குருநாதன் தனக்கு மேலே உள்ள துணை கண்காணிப்பாளர் பாலஜியையே "மீறி" சாதி உணர்வுடன் செயல்படுகிறார் என்ற குற்றச் சாட்டும் உண்மையா?

  டாக்டர் கிருஷ்ணசாமி கூறும் குற்றச் சாட்டுக்கு, ஆதாரமாகதானே  இந்த வட்டாரத்தின் தொடர் கொலை நிகழ்வுகள் இருக்கின்றன? மீண்டும் தென்மாவட்டங்களில் "சாதி மோதலை" கிளப்பிவிட்டு "ஆர்சுக்கு நெருக்கடி" கொடுக்க எண்ணும் சக்திகள் "எந்த அதிகார மமதையில்" இப்படி செயல்படுகின்றன? இப்போது "நியாயம்" கேட்டு புதிய தமிழகத்தினர் விருதுநகர் மாவட்டம் முழுவதும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போராட,கைதாக தொடங்கிவிட்டது எதனுடைய "எதிர்வினை"?சாதிகளைத் தாண்டி அரசியல்வாதிகள் குறிப்பாக ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தின் அரசியல்வாதிகள் வெளியே வந்தால் மட்டும்தான் இந்த கொலைகார சூழல் மாறும். இது எப்படி அமைதி தவழும் தமிழ்நாடு என்று முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்தான் விளக்கவேண்டும்.No comments:

Post a Comment