ஆந்திரக்காடுகளில் 20 தமிழர் சடலங்கள்-உண்மை அறியும் குழு?
---------------------------------------------------------------------------------------------------
திருப்பதி வனப்பகுதியில் அந்தக் கொடுமை நடந்துள்ளது. அது சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி.சந்திரகிரி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதி.சேஷாசலம் ரிசர்வ் காடுகள் என அழைக்கப்படுகிறது. கொல்லப்பட்ட 20 தமிழர்களது உடல்களை கண்டவுடன்,அது ஒரு "படுகொலை"என்பதாக பலராலும் கூறப்பட்டது.அப்படிப்பட்ட கொலைகளை செய்தவர்களாக அறிவிக்கப்பட்டவர்கள், ஆந்திராவில் உள்ள குறிப்பாக "சீமாந்திராவில்" உள்ள "செம்மரங்களை" வெட்டி,கடத்தல் செய்யுய்ம் கும்பலை பிடிப்பதற்காக ஆந்திர அரசால் உருவாக்கப்பட்ட "செம்மரக் கடத்தல் எதிர்ப்பு அதிரடிப்படை" { R .S .A.S .T .F .}என்று [ ஆர்.எஸ்.எ.எஸ்.டி.எப்.\ அழைக்கப்படுகிறது. அதற்க்கு டி.ஐ.ஜி.ஆக காந்தா ராவ் இருக்கிறார். அவரது "ஆட்சி"தான் அங்கே நடக்கிறது.
பி.யு.சி.எல் அகில இந்திய செயலாளர் சுரேஷ் இடமிருந்து ஒரு அழைப்பு வந்தது.ஆந்திராவில் உள்ள சிவில் லிபர்டி குழு,டில்லியில் உள்ள பி.யு.டி.ஆர்.உடனும்,தமிழ்நாட்டின் பி.யு.சி.எல்.உடனும் சேர்ந்து பல மனித உரிமை அமைப்புகளையும் இணைத்துக்கொண்டு உண்மையறியும் குழு அமைத்து,அந்த பகுதிக்கு செல்லலாம் .சனிக்கிழமை என்ற செய்தியை கூறினார்கள்.தமிழ்நாட்டு "மக்கள் சிவில் உரிமைக் கழகம்[பி.யு.சி.எல்]" தலைவரும்,அகில இந்திய துணைத் தலைவருமான பேரா.சரஸ்வதி என்னை போய்வரும்படி கேட்டுக் கொண்டார்.மாநில பி.யு.சி.எல்.செயலாளர் பாலமுருகனிடம் கேட்டதற்கு,சென்று வர சொன்னார்.மாநில பொருளாளர் சரவணன்,சென்னை மாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் ஆகியோரும் குழுவில் இணைந்து வர சம்மதம் தெரிவித்தார்கள். திருப்பதி சி.எல்.சி.பொறுப்பாளர் வழக்கறிஞர் கிராந்தி சைதன்யாவை தொடர்பு கொண்டபோது, டில்லியிலிருந்து வரும் இரண்டு பி.யு.டி.ஆர்.தோழர்களையும் சென்னையிலிருந்து அழைத்து வரும்படி கேட்டுக் கொண்டார். அதேபோல வெள்ளிக்கிழமை { 10-04-2015] மதியம் மூன்று மணிக்கு நாங்கள் டில்லியிலிருந்து வந்திருந்த பி.யு.டி.ஆர்.பிரதிநிதிகளான சண்டனு, அஜிதா இரண்டுபேரையும் அழைத்துக் கொண்டு திருப்பதி புறப்பட்டோம்.சென்னையிலிருந்து வாகனத்தில் சாலை வழியே நானும், பிரான்சிசும் டில்லி தோழர்களுடன் பயணம் ஆனோம்.
இரவு 7 மணிக்கு திருப்பதியில் உள்ள கிராந்தியின் அலுவலகம் அடைந்தோம்.அங்கே அடுத்த நாள் "காட்டிற்குள்" செல்ல முடிவு செய்தோம். ஊடககாரர்களும் உடன் வர உறுதி கூறினர்.காலையில் எங்களுடன் ஆந்திர சிவில் லிபர்டி குழுவின் செயலாளர் சந்திரசேகர்,தெலுங்கான பேரா.லஷ்மணன் போன்ற பிரபலர்களும்,ஆந்திர மனித உரிமை மன்றத்தை சேர்ந்த கிருஷ்ணனும் இன்னும் பலரும் வந்தார்கள். சனிக்கிழமை காலையில் கடலூரிலிருந்து வந்த "மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்" நண்பர்கள் ராஜு மற்றும் சிலரும் இணைந்துகொண்டனர்.மனித உரிமை ஆர்வலர்கள் ஆண்களும், பெண்களும் சேர்ந்து 40 க்கு மேற்பட்டோர் வந்தனர்.சில வாகனங்களில் நாங்களும்,ஊடகததாரும், சில இருசக்கர வாகனங்களில் ஊடககாரர்களும் அந்த குறிப்பிட்ட காட்டுப் பகுதிக்கு சென்றோம்.சாலையிலிருந்து 4 கிலோ மேட்டார் தூரம் செல்ல வேண்டும் என்றார்கள். நாங்கள் முதலில் "சசினோடி பண்டா" என்ற வனப்பகுதிக்குள் சென்றோம்.அதை "ஈதகுண்டா"என்றும் அழைக்கிறார்கள்.அங்குதான் 11 தமிழர்களது உடல்கள் கண்டு எடுக்கப்பட்டனவாம். அது வனப்பகுதி போலவே தெரியவில்லை. வறண்ட காடு.குச்சி,குச்சியாக பல ஒல்லி மரங்கள் முற்களுடன் அங்கு இருந்தன.உள்ளே சென்று தமிழர்களின் உடல்கள் இருந்த இடத்திற்கு சென்றோம்.
அங்கே ஒவ்வொரு உடல் இருந்த இடத்திலும் "ஒரு சிறிய தாளில் டி-1,டி-2,டி-3,டி-4,டி-5,டி-6,டி-7,டி-8,டி-9,டி-10,டி-11, என்று எழுதப்பட்டு அதன்மீது ஒரு கல் வைக்கப்பட்டு இருந்தது. அது "புலனாய்வுக்கு" உதவ காவல்துறை வைத்திருக்கும் அடையாளம். ஒவ்வொரு "தாள்"அருகேயும் கொல்லப்பட்டவரின் உடலிலிருந்து வெளியே வந்த "இரத்தம் " உறைந்து மண்ணில் கிடப்பதை காண முடிந்தது. ஒவ்வொரு உடல் கிடந்ததாக குறிக்கப்பட்ட இடத்திற்கும் இடைவெளி தூரம் 5 அடி,10அடி,15அடி என்று குறித்துக் கொண்டோம். அவை எல்லாமே ஒரே பகுதிக்குள் இருந்தன. மோதல் சண்டையும், சாவும் நடந்திருந்தால் ஆளாளுக்கு ஒரு பக்கம் ஓடியிருப்பார்களே? என்ற சந்தேகம் எழுந்தது. எல்லோருமே ஒரே இடத்திற்குள் கொண்டுவரப்பட்டு கொல்லப்பட்டார்களா?என்ற கேள்வியும் எழுந்தது. அந்த வனத்திற்குள் "செம்மரங்களே" இல்லையே என்ற கேள்வியை எழுப்பினோம். செம்மரங்கள் எங்கே எந்த காட்டிற்குள் இருக்கின்றன என்று வினவினோம்.10 கிலோமீட்டர் ,20 கிலோமீட்டர் தள்ளி மலை உச்சியில் செம்மரங்கள் உள்ளன என்றனர்.அந்த இடத்திற்கு பெயர் "திருமலா" காடுகள் என்றனர். அப்படியானால் 20 கிலோமேடர் தள்ளி எதற்காக செம்மரம் வெட்டியவர்கள் என்ற பெயரில், தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்படவேண்டும்? என்ற கேள்வியும் எழுந்தது. அடர்த்தியான காடாகவும் இது இல்லையே என்ற கேள்வியும் எழுந்தது. ஒரு "துண்டு சீட்டில்" எண் குரிக்கப்பட்டதில், "பின்புறம்" இரத்தம் உறைந்து கிடந்தது. அது புதிய "ஆதாரத்தை" எங்களுக்கு உணர்த்தியது.அதாவது சுட்டுக் கொன்ற காவல்துறையினர் உடனடியாகவே "துண்டு காகிதங்களில் எண்களை" எழுதி அவற்றின் மீது கற்களை வைத்துள்ளனர்.அதில் ஒரு காகிதம் பின்புறம் இரத்தம் கட்டிக் கிடந்ததால், அது இரத்தம் உறைவதற்கு முன்பே போடப்பட்டுள்ளது என்று பொருள்.அப்படியானால் சுட்டுக் கொலை செய்த "அதிரடிப்படையினர்" நிதானமாக திட்டமிட்டு உடனடியாகவே அந்தப் பணியை செய்துள்ளனர். அதாவது அவர்கள் அவசரத்தில்,"மோதல் சண்டை" நடந்த சூழலில் இல்லை எனபது தெரிகிறது.அதுவும் சண்டையும்,சாவுகளும் நடந்து "ஆறு மணி நேரம்" கழித்தே "சந்திரகிரி காவல் நிலையத்தார்" முதல் தகவல் அறிக்கையை எழுதி உள்ளனர். ஆகவே "அதிரடிப்படையினர்" நிதானமாக அந்த கொலைகளை திட்டமிட்டு நடத்தியுள்ளனர் என்று அறியமுடிகிறது.அந்த "இரத்தம் படிந்த துண்டு சீட்டை" நாங்கள் ஊடகவியலா ளர்களிடம் அங்கேயே காண்பித்து எடுத்துரைத்தோம்.
அதேபோல ஒரு 20 ரூபாய் நோட்டையும் நமது தோழர்கள் கண்டெடுத்தார்கள். அதில் "தோட்டா"பாய்ந்து இருந்தது. அதாவது கொல்லப்பட்ட தமிழர்களின் சட்டைப்பையிலிருந்து விழுந்திருக்கலாம்.சுட்ட தோட்டா துளைதிருக்கலாம். இவ்வாறு சிந்திக்க முடிந்தது..ஆச்சர்யம் என்னவென்றால், ஒரு "செடியிலோ,மரத்திலோ" கூட,ஒரு சிறிய அளவில்கூட "தோட்டாக்கள்" துளைக்கவில்லை. அதாவது காவல்துறை கூறும் அந்த இரவு இருட்டில்கூட அவர்கள் "மரங்களைக் காப்பாற்றும்" சுற்றுச்சூழல் ஆர்வலர்களாக" நடந்துகொண்டு, "மனித உயிர்களை மட்டுமே கொல்லும் திறன் படைத்தவர்களோ"??? என்று எண்ணத் தோன்றியது. அந்தாளவு ஒரு நாடகம் நிறைவேறியுள்ளது.
இஅர்ண்டாவ்து காடு என்று அழைக்கப்பட்ட "சீக்கடீகலகொண்டா" என்ற ஒரு கிலோ மீட்டார் தூரத்தில் நாங்கள் சென்ற வழியிலிலேயே திரும்பவந்து,அந்த வனத்திற்குள் சென்றோம்.அங்கேதான் மீதி 9 தமிழர் உடல்கள் கொல்லப்பட்டு கிடந்தன..அதுவும் வறட்சியான, குச்சிகள் போன்ற மரங்களைக் கொண்ட காடுதான்.இவை இரண்டுமே "காடுகள்" என்று சொல்வதற்கான எந்த "அருகதையும் அற்றவையே.". இங்கே ஒவ்வொரு "துண்டு சீட்டிலும் எண்"எழுதப்பட்டு இருந்தாலும்,அதன்மீது கல் வைக்கப்பட்டவை சில இருந்தாலும், அருகிலே அங்கே கண்டதுபோல "இரத்தம் உறைந்து இருப்பதை காண முடியவில்லை. அதாவது இந்த இடத்தில அவர்கள் சுட்டுக் கொல்லப்படவில்லை என்று பொருளா? தெரியவில்லை. கொல்லப்பட்டு பிறகு இங்கே கொண்டுவந்து போடப்பட்டுள்ளார்களா? கேள்விகள் எழுந்தன. இங்கே சில இடங்களில் சிதறிய இரத்தம் உறைந்து இருந்தது. இப்படியாக எங்கள் "நேர்படக் காணுதல்" நடந்தது. அப்போது சனிக்கிழமை மதியம் ஆகிவிட்டது.நாங்கள் திறப்பதி திரும்பினோம். நாலு மணிக்கு ஊடகவியலாளர்கள் சந்திப்பு என்றும், அதற்கு முன்பே சில "அரசு அதிகாரிகளை சந்தித்து" நேரடியாக அவர்களது "கருத்தை" பதிவு செய்ய வேண்டும் என்றும் விரும்பினோம். அதில்தான் ஒரு திருப்பம்

No comments:
Post a Comment