Tuesday, June 23, 2015

மோடியின் நகலுக்கு சங்க பரிவாரம் எதிர்ப்பா?


மோடி மிகவும் கவனமாக கொண்டுவந்த மசோதா "நில கையெடுப்பு"மசோதா.அதை "நிலபறிப்பு"மசோதா என்று பலரும் நக்கல் செய்தாலும், அதை ச்ட்டமாக்குவதில் விடாப்பிடியாக இருந்து வருகிறார்.மக்களவையில் இருக்கும் மிரூகததனமான எண்ணிக்கையை பா.ஜ.க. பெற்றிருந்தாலும், இந்தியாவில் இயங்கும் "நாடாளுமன்ற பாதை" தந்துள்ள விதிகளின்படி,மக்களவையில் நிறைவேறிய ஒரு நகல், மாநிலங்களவையிலும் நிறைவேறினால்தான், குடியரசு தலைவரின் ஒப்பந்தம் பெறுவதற்கான "சட்டமாக" மாறும், இந்த விதிதானே இப்போது உதைக்கிறது என்று பா.ஜ.க.வினர் நொந்து கொள்வது நமக்கு புரிகிறது.ஏன் என்றால் நாளுமன்றத்தில் உள்ள மக்களவையில் பா.ஜ.க. பெரும்பான்மையாக இருந்தாலும், மாநிலங்களவையில் பா.ஜ.க.வும்,அதன் கூட்டணி கட்சிகளும் சேர்ந்தாலும் பெரும்பான்மை இல்லை. மாறாக காங்கிரஸ் கட்சிக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும், மாநிலக் கட்சிகளுக்கும்சேர்ந்துதான் பெரும்பான்மை இருக்கிறது.அதனால்தான் ஒருமுறைக்கு, இரண்டுமுறை,மூன்றாம் முறை
 என்று "அவசரச்சட்டம்"மூலம் இந்த "நில பறிப்பு"மசோதாவுக்கு "சட்ட" அங்கீகாரம் கொடுக்க பா.ஜ.க.சிந்தித்து செயல்பட்டது.ஆனாலும் ஒரு "நாடாளுமன்ற கூட்டுகூட்டதை"கூட்டிதான் அந்த "அவசரச்சட்டதையும்" சட்டமாக மாற்ற முடியும். இந்த "இந்திய ஜனநாயகத்தின் விதிமுறைகள்" மோடி அரசாங்கம் விரும்பும் கார்பொரட்"நலன்களை  முழுமையாக செயல்படுத்த இடையூறாகத்தான் இருக்கிறது.அதேநேரம் இந்த குறிப்பிட்ட "நில பறிப்பு"மசோதாவிற்கு "சங்க பரிவாரத்தை"சேர்ந்த முக்கிய அமைப்புகள் எதிராக இருக்கிறார்கள்.

                அதாவது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இணைப்பில் உள்ள "பாரதீய கிசான் சங்கம்",என்ற லட்சக்கணக்கான விவசாயிகளை திரட்டும் சக்திகொண்ட வட இந்தியாவில் பெரும் தளம் கொண்ட விவசாயிகள் அமைப்பு, "பாரதீய மஸ்தூர் சங்கம்" என்ற தொழிலாளர்களை திரட்டும், "தொழிற்சங்க"அமைப்பு, "அகில இந்திய வநாச்சல் அமைப்பு" என்ற "ஆதிவாசிகள் அமைப்பு" ஆகியவை இந்த மேற்கண்ட "நில எடுப்பு"மசோதாவிற்கு கடும் எதிர்ப்பை தந்து வருகிறார்கள்.அதை மீறி இந்த மசோதாவை "சட்டமாக்குவது"என்பதற்கு சாதியப்படுகளே குறைவு.அப்படிப்பட்ட ஒரு சூழலில் சிக்கியுள்ள மோடி அரசாங்கம், தங்களுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியை வெறும் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற வைத்துவிட்டு, தாங்கள் இந்தியாவின் மக்களவையில் அதிகப்பெரும்பான்மை வந்த பிறகும், சிறிய மாநிலக் கட்சிகளையும் கூட தங்கள் பக்கம் இழுப்பதில் வெற்றி அடைந்து வரும்போது, இடதுசாரிகளையும் ஓரங்கட்டுவதில் சாதித்துள்ள நேரத்தில், தங்களது வரலாற்று அடித்தளமான "சங்க பரிவாரம்"மூலமே ஒரு பெரும் தடங்கல் வருகிறது என்றால் அதை எப்படி எதிர்கொள்வார்கள்?

     கார்பொரேட் காரர்களும் இத்தகைய ஒரு நெருக்கடியை சமாளிக்க மோடி அரசாங்கத்திற்கு எத்தகைய "ஆலோசனையை"கூறுவார்கள்? மோடி அரசாங்கத்தை தங்களது சொந்த உறவுகாரர்களாக அமெரிக்கா நினைப்பது உண்மையானால் அவர்களும் இந்த நெருக்கடியை சமாளிக்க எத்தகைய ஆலோசனையை வழங்குவார்கள்? எல்லாமே உண்மையான "தடையாக"இருக்கும் "இந்திய நாடாளுமன்ற விதிகளை" அதாவது நேரடி தேர்தலில் வென்றாலும், மறைமுக தேர்தல் மூலம் நிரப்பப்படும் மாநிலங்களைவையின் எண்ணிக்கையை பெறமுடியாததால் "திணறும்"ஒரு அரசாங்கத்தை "விதிகளை மீறு,வெளியே வா"என்றுதானே கூறுவார்கள்? அதாவது  "உங்கள் நாட்டு நாடாளுமன்ற விதிகளை மீறு.வெளியே வா"என்றுதானே கூறமுடியும்? அதுதானே "அவசர நிலையை" அறிவித்துவிடு என்ற ஆலோசனை?.அதுதானே "நெருக்கடி நிலையை"அறிவி என்ற கருத்து.

      இதைத்தானே இந்திரா காந்தி இதுபோன்ற ஒரு சூழலை எதிர்கொண்டபோது, ஆளும்வர்க்க அறிவுஜீவிகள் எடுத்து கூறினார்கள்? அதில் கடுமையாக பதிக்கப்பட்டது மட்டுமின்றி, அதை எதிர்த்து போராடியதில் முன்னால் நின்ற "லால் கிஷன் அத்வானி" இன்று அதேபோன்ற "அபாயத்தை" உணர்வதாக கூறியதன் உள்அர்த்தம் புரிகிறதா?  இதுதான் இன்றைய இந்திய சூழல்.

No comments:

Post a Comment