ஹைதராபாத் நீதிமன்றத்தில் இரண்டாவது வெற்றி உத்தரவு.
-------------------------------------------------------------------------------------------------
திருப்பதி படுகொலைகளை நடத்திய ஆந்திர மாநில காவல்துறை,குறிப்பாக "செம்மரக்கடதடத்தல் தடுப்பு அதிரடிப்படை" திட்டமிட்டு, முன்கூட்டியே கைது செய்த தமிழ் தொழிலாளர்களை,பிடித்து சித்திரவதை செய்து பிறகு, சேஷாசலம் ரிசர்வ் காடுகளுக்கு கொண்டுவந்து, படுகொலைகளை செய்துள்ளனர் என்ற "உண்மையறியும் குழு"வின் கண்டுபிடிப்பை நிருபிக்கும் முயற்சியில், ஏற்கனவே 20 உடல்களையும் "உடற்கூறு ஆய்வு"செய்த ஆந்திர அரசின் செயல்பாட்டில், அதன் கீழ் பணியாற்றும் மருத்துவர்களின் செயல்பாட்டில் "முழு நம்பிக்கை" இல்லாத "சொந்தங்களை பறிகொடுத்தோர்" போட்ட "மறு உடற்கூறு ஆய்வு" வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த திங்கள் கிழமை அன்று "ஹைதேராபாத் உயர்நீதிமன்றம்" சென்று நீதி கேளுங்கள் என்று கூறியதால், பா.ம.க.வழக்கறிஞர் பாலு,தான் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் பெற்ற உத்தரவான "ஏப்ரல் 17 ஆம் தேதிவரை" எரிக்கப்படாத உடல்களான திருவண்ணாமலை போளூர் வட்டம் 6 உடல்களுக்கும் "மறு உடற்கூறு ஆய்வு" கேட்டு, செவ்வாய்கிழமை ஆந்திராவின் ஒன்றுபட்ட உயர்நீதிமன்றமான ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார்.
அது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களை கேட்ட நீதியரசர், ஒரு உத்தரவை வழங்கினார்."ஆந்திராவோ,தமிழ்நாடோ, இந்த பிரச்சனையில் சம்பந்தப்பட்டிருப்பதால்" அவை இரண்டும் இல்லாத "மூன்றாவது மாநிலம் ஒன்றில் வேறு சிறப்பு தன்மை உள்ள மருதுவமனையின் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனை வேண்டும்" என்ற கோரிக்கையை வழக்கறிஞர் பாலு வாதாட அதை ஏற்று, "ஆந்திராவும் வேண்டாம்.தமிழ்நாடும் வேண்டாம். மூன்றாவது மாநிலமான தெலுங்கானாவில் சிறப்பு தன்மை உள்ள நிஜாம் மருதுவமனியின் சிறப்பு மருத்துவர்களை கொண்டு மறு உடற்கூறு ஆய்வு" செய்ய உத்தரவிட்டார். அதேநேரம் 6 உடல்களுக்கு என்று ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்ற வாரம் வழக்கறிஞர் பாலு கேட்டிருந்த வேண்டுகோளின் அடிப்படையில், இந்த வழக்கு தொடர்வதால், அந்த ஆறு பேருக்கும் மறு உடற்கூறு ஆய்வு வேண்டும்" என்று பாலு வாதிட்டார். ஆனால் என்ன காரணத்தாலோ, நீதியரசர் "நேரில் வந்த மனு செய்த சசிகுமார் என்பவரது உடலுக்காக போராடிய அவரது மனைவி முனியம்மாளின் மனு மீது மட்டும் தனது உத்தரவு" என்று தீர்ப்பு கொடுத்தார்.
எப்படியும் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில், நேற்று சந்திரகிரி காவல் நிலையத்தின் "முதல் தகவல் அறிக்கையில் காவல்துறை அதிகாரிகள் மீது 302, 364 ஆகிய கொலை,கடத்தல் பிரிவுகளில் இந்திய தண்டனைஉ சட்டம் 34 இன் கீழ் வழக்கு பதிவு செய்த" முதல் வெற்றியை கண்டோம்.இன்று "இறந்தவர்களின் உடலில் மறு உடற்கூறு ஆய்வு" என்பதும் முதலில் ஒரு உடலுக்கு கிடைத்த வெற்றியை காண்கிறோம்.நமக்கு கிடைத்த தகவ்லகளின்படி, "காவல்துறையினர், மருத்துவர்களின் உதவியோடு, உடற்கூறு ஆய்வில் சில தில்லுமுல்லுகளை செய்வது பழக்கமாம்".அதாவது "எந்த கோணத்தில் காணொளிக் கருவியை[ கேமராவை] வைப்பது, எந்த அளவுக்கு விளக்கின் வெளிச்சத்தை உடல் மீது எந்த இடத்தில செலுத்துவது" என்பதில் கூட சில தில்லு முல்லுகளை செய்யமுடியுமாம். அப்படி செய்வது சில "கருப்பு ஆடுகளுக்கு கை வந்த கலையாம்". இதை கேள்விப்பட்டதனால்தான் நமக்கு, "மூன்றாவது மாநிலத்தில், சிறப்பு மருத்துவமனையில், சிறப்பு மறுத்தவர்களை வைத்து சோதனை" என்ற கருத்தே உருவானது.

No comments:
Post a Comment