கலாம் உங்கள் சொல்லின் பொருளை புரிந்துகொண்டார்களா?
-------------------------------------------------------------------------------------- மணி.
" மரண தண்டனை"யை சுட்டெரிக்கும் உனது
"கதிர்வீச்சு" சொற்கள், உனது உடலைப்
" புதைப்பதற்கு" நான்கு மணிநேரம் முன்பே,
" நாகபுரியில்" அரசால் திட்டமிட்டு,மரணிக்கப்பட்டது.
' நாகபுரியின்" உருவாக்கம் அதிகாரத்தில் அமர்ந்தால்,
ஓரங்கட்டப்பட்டவர்கள்தான் மீண்டும், மீண்டும்,
தூக்கில் ஏறுவார்கள் என்ற உனது " சுடு சொற்கள்"
மக்களை வந்து "தொடுவதற்கு" முன்பே,
"பொய்களை" சுட்டெரிததுவிடுமோ என
அவர்கள் எண்ணினார்களோ? அதனால்தான்
இந்த அவசரமோ? டைகர் கிடைக்காவிட்டால் என்ன?
" தம்பி" கிடைத்தானே, என்ற உள்ளூர் காவல்துறையின்
"தறுதலை" உணர்வின் "தவறுதலையா",காண்கிறோம்?
உச்சகட்ட நீதி தரும் நிலையம் என்றார்களே?
பி.ராமன் எழுதிய தரவுகள் எல்லாம்கூட, அவர்களை
அசைக்க வில்லையே? ஏன்? ஏன் இந்த அவசரம்?
ஓகோ, இவர்கள் "பயங்கரவாதத்தை" இல்லாமல்
ஆக்க இறங்கவில்லை. அப்படி இறங்கினால்
இவர்களும் சேர்ந்து மூழ்கவேண்டுமே?
"பயங்கரவாதத்துடன்" பேரம் பேசவே முயல்கின்றனர்.
ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்பட்ட விமானம் கதை
நினைவுக்கு வரவில்லையா?
ஒருபுறம் "தேர்தல் வெற்றியுடன்" எல்லைக்கு அப்பாலுள்ள
" தேர்தல் வெற்றி" பேசிப் பார்த்தும், "முடிவு" வரவில்லை.
"எங்களை விட்டுவிட்டு" நவாசுடனா?" என்று "ஆக்கிரமிப்பு"
கொரில்லாக்கள் "தலைப்பாகை" நிலத்திலேயே நுழைந்தார்கள்.
"இனி மிரட்டித்தான்" பேரம் என்று இவர்கள் முடிவுக்கு வந்தார்களோ?
நம்மூர் சிறையில் " அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகள்"
அதிகாரிகளால் நேரடியான தாக்குதலுக்கு இலக்காகமாட்டார்கள்.
" ஒரு லுனாடிக்" சிறைவாசி அப்போது கிடைப்பான்.
சம்பந்தப்பட்டவர்களின் "கண்களுக்கு" முன்னாலேயே,
அவரை "அடித்து,உதைப்பார்கள்". அதுவே "தொடமுடியாதவர்களுக்கு"
அனுப்பப்படும் "மிரட்டல்". இங்கே அந்த மிரட்டல்
"டைகருக்கும், தாவூதுக்கும்" போய் சேர, யாகூப்தான் "லுனாடிக்கா?"
உண்மைதான். சிறை மருத்துவரின் "சான்றிதழும்" அதுதான்.
"பலியாடுகளை" பலி போட, எந்த ஒரு சட்ட விதியும் தடுக்காதே?
அதுதானே இங்கேயும்................... ஆனால்
இந்த நிகழ்வுகள், சட்டத்தின் மீதும், ஆட்சிகள் மீதும்,
"நேர்மை" கோருவோரின் நம்பிக்கையை வலுப்படுதாதே?
"பயங்கரவாதத்தை" வலுப்படுத்த, இப்படி ஒரு முயற்சியை
கட்டவிழ்த்து விடுபவர்கள், மக்கள் பிரச்னைகளை
தீர்க்க முடியாததால், "தப்பிக்க" வழி, பயங்கரவாதத்தை
"நீரூற்றி வளர்ப்பதுதானோ?" அதனால்தான் கலாம் அவர்களே,
உங்களை மண்ணில் புதைக்கும் முன்பே உங்கள் சொற்களை
அவர்கள் "புதைத்து" விட்டார்கள்"

No comments:
Post a Comment