Tuesday, July 28, 2015

தோழர் சாருமசும்தார் மறைந்த நாள்.;

நக்சல்பாரி இயக்கத்தின்தந்தை,தலைவர்,வழிகாட்டி,கருத்தியல்பெட்டகம்,
----------------------------------------------------------------------------------------------------------------------தோழர் சாருமசும்தார் மறைந்த நாள்.;
------------------------------------------------------------

        இன்று ஜூலை 28 ஆம் நாள்தான் மேற்குவங்கத்தின், தலைநகர் கொல்கத்தாவில், சி.பி.எம்.கட்சியின் ஆட்சியில், 1972 ஆம் ஆண்டு, சிறையில்  இருந்த தோழர் சாருமசும்தார்  ஆளும் வர்க்கத்தின் சதிவலையில் சிக்கி, அவருடைய "உயிர் காக்கும் மருந்துகளை" ஆள்வோர் வழங்காமல் இருந்ததால், ஜூலை 12 ஆம் நாளிலிருந்து, சிறைக்குள்ளேயே அடைக்கப்பட்ட நிலையில்,தனது மரணத்தை தழுவினார். இந்தியப் புரட்சியின் "பிதாமகன்" தோழர் சாருமசும்தார் ,1967 ஆம் ஆண்டு, மேற்கு வங்கத்தில், " ஐக்கிய முன்னணி " ஆட்சியை பங்களா காங்கிரசுடன் சேர்ந்து, மார்க்சிஸ்ட் கட்சி" ஏற்படுத்திய நேரத்தில்,,டார்ஜிலிங் மாவட்டத்தில், சிலிகுரி வட்டத்தில், நக்சல்பாரி கிராமத்தில், விவசாயிகளை திரட்டி, ஆயுதம் தாங்கிய புரட்சியை அங்குள்ள நிலச்சுவான்தார்கள் மீது நடத்திய காலத்தில், "கிழத்திய எல்கை  துப்பாக்கி படை" என்ற துணை ராணுவத்தை இறக்கிவிட்டு, விவசாயிகளின் போர்குணத்தை எதிர்த்து, "சுற்றி வளைத்து" தாக்குதல் என்ற தந்திரத்தின் மூலம் நக்சல்பாரி கிராமத்தை சுற்றி வளைத்து,சுட்டனர். அதில் தோழர் பாபுலால் பிச்வகர்மா என்ற தோழர் தியாகியானார்.

      இந்த படுகொலையை செய்த சி.பி.எம்.ஆட்சி  தொடர்ந்து தலைமறைவு இயக்கத்தை கட்டி "இந்தியப் புரட்சியை" நடத்த தயாரான தோழர் சாருமசும்தாரை தேடியது. அந்த நக்சல்பாரி எழுச்சியை அன்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி,தோழர் மா-சே- துங் தலைமையில், "இந்தியாவில் வசந்தத்தின் இடி முழக்கம்" என வர்ணித்து பாராட்டியது. அத்தகைய கட்டுரை, சீனக் கம்யுனிஸ்ட் கட்சியின் ஏடான, "பீப்பில்ஸ் டெமாக்ரசி" இதழில் வெளிவந்தது. மாவோ வின் "விவசாயப் புரட்சி" தத்துவத்தை இந்தியச் சூழலுக்கு பொறுததியதுதான் தோழர் சாருமசும்தாரின், பங்களிப்பு.இந்திய சமூக, அரசியல் சூழலை, "அரைக் காலனி, அரை நிலப்ப்ரபுதுவம்" என்று விவரித்ததுதான் தோழர் சாருமசும்தாரின் சிந்தனை தந்த படப்பிடிப்பு. "தரகு, அதிகாரவர்க்க ஏகபோக முதலாளித்துவமும், பெரு நிலப்பிரபுத்துவமும்" இந்திய ஆளும்வர்க்கங்கள் என்ற தெளிவான வரையருப்புதான் தோழர் சாருமசும்தாரின் கண்டுபிடிப்பு. அத்தகைய ஆளும்வர்க்கதை எதிர்த்து, "மக்கள் ஜனநாயக புரட்சியை" முன்னெடுப்பதுதான் இந்த நாட்டின் விடுதலைக்கான வழி என்பதுதான் தோழர் சாருமசும்தார் முன்வைத்தார். அதற்கான "விவசாயப் புரட்சியை" தோழர் முன்னெடுத்தார்.

              1968 ஆம் ஆண்டு, நாடெங்கும் உள்ள புரட்சியாளர்களைக் கூட்டி, " அகில இந்திய கம்யுனிஸ்ட் புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்பு குழு" என்ற { All india coordination committee of the communist Revolutionries } என அமைத்தார். அதற்கு வந்த்ஜிருந்த "ஆந்திராவின் தரிமள நாகிரெட்டி"   தேர்தலும், புரட்சியும்  என்ற பாதையை முன்வைத்து விட்டு பிரிந்தார்."கேரளாவின் அஜிதாவின் தந்தை,குன்னிகல் நாராயணனும், தாய் மந்தாகினியும்" ஏகாதிபத்தியமே பிரதான முரண்பாடு என்றும், ஆயுதம் தாங்கிய தாக்குதல்களை நேரடியாக அரசு மீது நடத்தவேண்டும் எனவும், ஒரு தந்திரத்தை முன்வைத்து பிரிந்தனர். அப்போதுதான் "அடுத்த அறுவடை நமக்கே" என்ற தோழர் சாருவின் முழக்கத்தை ஏந்திய இந்திய விவசாயிகள், அதற்கு தடையாக இருந்த பண்ணைப் பிரபுக்களை ஆயுதம் தாங்கி  அழித்து, அறுவடையை கைப்பற்றினர்.

                        அத்தகைய நடைமுறையிலிருந்து கற்று, 1969 இல் ஏப்ரல் 22 ஆம் நாள் லெனினது பிறந்த நாளில்,"இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி[ மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்] என்ற புரட்சிகர தலைமறைவு கட்சியை தோழர் சாருமசும்தார் தொடங்கினார். அதன் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அந்த கட்சியின் செயல் தந்திரமாக " வர்க்க எதிரிகளை அழித்தொழிக்கும்" கொரில்லா போர்முறையை, மேற்குறிப்பிட்ட விவசாயிகளின் போராட்ட நடைமுறையிலிருந்து கற்று, கட்சிக்கு வழிவகுத்தார். தொடர் எதிர்களின் "சுற்றிவளைத்த " தாக்குதல்களால், படுகொலை செய்யப்பட தோழர்களது பட்டியலில், 1972 இல் தோழர் சாருமசும்தாரும் சேர்க்கப்பட்டார். அதனால் இந்த நாள் "தியாகிகள் தினமாக" கடைப்பிடிக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment