Monday, December 31, 2012

முஸ்லிம் தமிழர்களும் தமிழினமே.


      தமிழினப் படுகொலை  ஈழத்தில் நடத்தப்பட்டது. அதை அரங்கேற்றியவர்கள் சிங்கள பேராண்மை வாதிகள். அதற்கு  ஒத்துழைப்பு கொடுத்தவர்கள் இந்திய அரசு உட்பட இருபது பெரும் வல்லரசு நாடுகளின் அரசாங்கங்கள். போரில் தமிழர்களை தற்காலிகமாக அவர்கள் வென்று  இருக்கலாம்  போரில்  அவர்கள் ஆயுத பலத்தால் மட்டுமே வெற்றியை எட்டினார்களா? இல்லையே?  அவர்களது உளவுத்துறை  தம்ஜிஹர்கள் வாழும் சிறு பகுதிக்குள், நிலம் வழியாகவும், வான் வழியாகவும்  உளவு பார்த்ததே? அதற்க்கு இந்திய ராடார் கருவிகளும், இந்திய உளவு துறையும் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்ததே? அவ்வாறு தம்ஜிஹர்களை உலக அரங்கில் தனிமைப்படுத்தியதால் தான் ஈந்த எதிரிகளால் வெற்றியை தற்காலிகமாக எட்ட முடிந்தது? அதற்காக அவர்கள் விடுதலைப் புலிகளை விட்டு வெளியேறிய வர்களையும், பயன்படுத்திக் கொண்டார்களா? இல்லையா? அதற்காக தம்ஜிஹர்கள் எல்லோரும் துரோகிகள் என்றோ கிழக்கு மாகான தமிழர்களா துரோகிகள் என்றோ கூறமாட்டோம் அல்லவா? அதில் சிலர் செய்த தவறுகளுக்காக, துர்கொகத்திர்காக ஒட்டுமொத்த மக்கள் கூட்டத்தை நாம் குறை சொல்ல மாட்டோமே? நமக்குதான் காரணம் புரிகிறதே?

                                   அதுபோலத்தான் போர் நேரத்தில் யாழ்ப்பாணத்தை விட்டு, முஸ்லிம் தமிழர்கள் வெளிஎடர்ப்பட்டதும் நடந்தது இல்லையா? நாம் சிலரை சந்தேகப்படுவது போர் நேரத்தில் தவிர்க்க முடியாதது. அந்த நெருக்கடி நேரத்தில் நம்மிடம் சில சரியாகவும், தவரகாவும் கட்டளைகள் வரலாம் அவற்றை சரியானது என்று கூருவதர்க்கான காரணங்களும் நிறைய இருக்கின்றன என்பது அண்மைக்கு தெரியும். ஆனாலும் புண்பட்ட உள்ளங்களை எப்படி ஆற்றுவது?  எப்படி மீண்டும் பிரிந்த உள்ளங்களை சேர்ப்பது? அது பெரிய கடினமான் அசெயல் இல்லையா? சிங்களம்  முஸ்லிம் தமிழர்களையும், முஸ்லிம் அல்லாத தமிழர்களையும் பிரித்து நிருற்ற்ஹ்துவதில் இதுவரை வென்று விட்டதே? இந்திய அரசும் அதன் உளவுத்துறையும் கூட அந்த அபன்னிகளை செவ்வனே செய்யும் திறமை உள்ளவர்கள்தானே ? அதை முறியடிக்க, முஸ்லிம் தமிழர்கள், இந்து தமிழர்கள், கிருத்துவ தமிழர்கள், மதமற்ற தமிழர்கள், நாத்திக தமிழர்கள் என்ற அனைவரும் தமிழர்களே என்ற முழக்கத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டின் வீதிகளில் நான்கள் கிளப்பி வருகிறோம். எங்களுடன்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித நேய மக்கள் கட்சி  இந்திய தவுஹித் ஜமாஅத் ஆகிய அமைப்புகளும் பேரணிகளில் கலந்துகொண்டு, கூட்டங்களில் கலந்துகொண்டு இடெஹ் முழக்கத்தை  எழுப்புகிறார்கள். அதவே இலங்கையில் உள்ள இந்திய தவுஹித் ஜமாத்தின் தொடர்பு அமைப்பு, இலங்கை தீவின் கிழக்கு, வடக்கு மாகனங்களில் பிற தமிழர்களுடன் யைந்து செயல்பட்டு வருகிறார்கள்  

                           நான்கள் சென்னையில் கத்தோலிக்க பேராயர் தலைமையில், அனைத்து கிருத்துவ அமைப்புகளின் தலைவர்களையும் அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும், பல இந்து அமைப்புகளையும் இணைத்து "அனைத்து மத தமிழ மக்கள்  என்ற பெயரில், ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் இந்து, கிருத்துவ, முஸ்லிம் வழிபாட்டு தளங்களை இடிக்கிரறாக்கள் என்று குரல் கொடுத்தோமே? அதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய தவுஹித் கமாத்  பாபுலர் ப்ரண்ட்  ஆப் இந்தியா  தேசிய லீக், ஆகியவற்றின் தலைவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்களே? எங்களுடன்  அவர்கள் தமிழீழத்திற்கு ஆதரவு குரல் எழுப்பி வருகிரரகளே? இப்போது 28 ஆம் நாள் மலேசியாவில், கோலாலம்பூரில் நடந்த "இரண்டாவது  தமிழர் பாதுகாப்பு மாநாட்டிலும்" இந்திய தவுஹித் ஜமாஅத் தலைவர்  எசெம்.பாக்கர் கலந்துகொண்டு, முஸ்லிம்கள் மதத்தால் வேறுபட்டாலும் தமிழர்கள்தான் என்றும் தமிழீழம் அடைந்தே தீருவோம் என்றும் பேசினாரே? இந்த  நாம்   வேண்டாமா? இங்கே ஏற்கனவே அ.மார்க்ஸ் போன்றவர்கள் முஸ்லிம்களை  விடுற்ற்ஹளைப் புலிகள்தான என்று  செய்து சிங்களத்திற்கு உதவி வருகிறார்களே? நாமும் அத்தகைய வேளைகளில் "பலியாகக்" கூடாது அல்லவா? ஆகவே கடந்த காலத்தில் நடந்தவற்றை ஆராய்வது தவறு அல்ல. பல நியாயங்களை போர் நேர நீதிகளை, போர் இல்லா  சூழலில் பலருக்கும்  புரியவைப்பது கடினம்,. ஆகவே நாம்   எப்படி     அணுக வேண்டும்  என்பதில் கவனம் தேவை 

Sunday, December 30, 2012


மலேசியாவில் நடந்த இரண்டாவது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு. 

         மலேசியாவில் பெட்டாலிங்  ஜெயாவில் உள்ள தோட்ட  மாளிகையில், டிசம்பர் 28ஆம் நாள் வெள்ளிக்கிழமை இஅர்ண்டாவது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடந்தது. பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி தலைமையில், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும், புதிய தமிழகத் தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி இணை அமைப்பாளராக செயல்பாடா அந்த மாநாடு நடந்தது. மாநாட்டின் இயக்குனராக பொண்ணுரங்கன் செயல்பட்டு மாநாட்டை வழிநடத்தினார். மாநாட்டிற்கு, உலகம் முழுவதிலும் இருந்து தமிழ பேராளர்கள் வந்திருந்தனர்.லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இலங்கை, நார்வே,தென்னாப்பிரிக்கா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் இருந்து, பல பேராளர்கள் வந்திருந்து கலந்து கொண்டு உரையாற்றினர்.மலேசியா நாட்டின் எதிர்க் கட்சி கூட்டணியின் தலைவர் டத்தோ.அன்வர் இப்ராஹீம் மாலையில் மாட்டில் கலந்துகொண்டு, சிறப்புரை  நிகழ்த்தியது முக்கிய நிகழ்வாக காணப்பட்டது.

            திருவள்ளுவர் சிலைக்கு கிருஷ்ணசாமி சால்வை போர்த்த, பேராசிரியர் ராமசாமி அதற்க்கு மாலை அணிவிக்க, மாநாட்டு வாயிலில் மலேசியா நாட்டு கொடியேற்றி, முழக்கங்கள் எழுப்பி, மாநாட்டை தொடங்கினார்கள்.விநூஷா,தனது பரதநாட்டிய நிகழ்வின் மூலம் மாநாட்டு அரங்கை உர்ச்சாகப்படுத்தினார்..மாநாட்டின் வரவேறப்பு உரையை நிகழ்த்திய தமிழச்சி என்ற காமாட்சி துரைராஜ், மிக நேர்த்தியான விளக்கத்துடன் பேராளர்களை வவேற்றார். தமழர்கள் உலகம் முழுவதும் படும் துன்பங்களை கூறி, நம்பிக்கை நட்ச்சத்திரமாக தமழீழ தேசியத்  தலைவர் மேதகு.வே.பிரபாகரன் நிகழ்த்தி காட்டிய தமிழீழ விடுதலை, தற்காலிகமாக பின்னடைவை சந்தித்திருந்தாலும், எதிர்காலம் ஒளிமிக்கது, அதற்கான பணிகளை துரிதப்படுத்துவோம் என்றார். மாநாட்டின் இயக்குனர் பொன்னுரங்கன் உலகத் தம்ழிகர் பிரச்சனைகள்,உள்ளூர் மலேசிய மண்ணின் பிரச்சனைகள், கோவையில் நடந்த முதல் மாநாடு, இன்று நடத்தப்படும் மாநாட்டின் நோக்கம் என்று விளக்கமாக உரையாற்றினார்.தமிழர்கள் எங்கணும் நிலம் இழந்ததையும்,ஏமாளித்தனமாக இருப்பதையும் அப்பது அவர் சுட்டிக் காட்டினார். அடுத்து மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் பேசினார்..மாநாட்டு செயலாளர் மலேசியாவின் சாமுவேல்ராஜ் பேசினார்.அடுத்து உரையாற்றிய பேராசிரியர் ராமசாமி உணர்ச்சிவசப்பட்டு, ஈழத்தமிழர் இன அழிப்பில் பங்கு கொண்ட இந்தியா தன்னை வரவிடாமல் 'தடை" செய்துள்ளது என்பதை சுட்டிக் காட்டினார்.மருத்துவர்  கிருஷ்ணசாமி, மலேசிய எம்.பி. மனோகரன்,ஆகியோர் உரையாற்றினர். 

 இலங்கையிலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மா.வே.சேனாதிராஜா, சிறிதரன், அரியேந்திரன்,யோகேஸ்வரன் ஆகியோரும், அவர்களுடன் பேராளர்களும் வந்திருந்தனர்    தமிழ்நாட்டிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்தியாவிற்கான நாடாளுமன்ற உறப்பினர் பேராசிரியர் சரஸ்வதி, புதுக்கோட்டை குருமூர்த்தி, டி.எஸ்.எஸ்.மணி, அரிமாவளவன், வழக்கறிஞர்.பார்வேந்தன்,ஆகியோர் தங்களுடைய உரைகளை நிகழ்த்தினர்.அவர்களுடன் மேலும் பத்து பேராளர்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்தனர்.நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆஸ்திரேலியா பிரதிநிதி மாணிக்கவாசகம், தனது உரையில் புலம் பெயர்ந்த தமிழர்களின் கோரிக்கைகளை எடுத்து கூறினார்.யாழ்ப்பாண எம்.பி. மா.வே.சேனாதிராஜா,தாங்கள் உள்நாட்டு சுயநிர்ணய உரிமையை வேண்டுவதாகவும், அதற்கு மேல் தங்களால் கோர இயலாது என்றும், மாநாடு "தமிழீழம் தான்" தீர்வு என்ற கருத்தை முன்வைக்கும் நிலையில் தாங்கள் பெரும் ஆறுதல் அடையலாம், என்றாலும், வெளி சுயநிர்ணய கோரிக்கையை  புலம்பெயர்ந்தோர் முன்வைக்கின்றீர்கள் என்றும் கூறினார். அரியேந்திரன் எம்.பி.தங்களது  தமிழ்தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்களுக்கு  நாடாளுமன்ற உரையையும் தாண்டி, இலங்கையின் புலனாய்வு துறையான, "பயங்கரவாத புலனாய்வு துறை"யின் நான்காவது மாடியிலும் பேசவேண்டிய கட்டாயம் உண்டு என்று  அங்கெ தனைகளுக்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்பதை பகிர்ந்து கொண்டார். "காணொளி" மூலம் மாட்டு ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்த "நாடுகடந்த தமிழீழ ரசாங்கத்தின் தலைமை அமைச்சர் உருத்திரகுமார்,உரை" ஒன்று காட்டப்பட்டது.அதில் அவர் மாநாட்டை வாழ்த்தியதோடு மட்டுமின்றி, தமிழீழமே ஒரே தீர்வு என்பதை, " தங்களது தாகம் தமிழீழ தாயகம்" என்று முடித்தார்.  


           பேராசிரியர் சரஸ்வதி தனது உரையில் மாநாட்டில் மேடையில் பெண் பேச்சாளர்களை அமர்த்தவில்லை எனபதை சுட்டிக் காட்டினார்.இந்திய தவுஹித் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், முஸ்லிம் தம்ஜிஹர்களும், தமிழர்கள்தான் என்பதை வலியுறுத்தினார். மலேசியா நாட்டு எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம், தனது உரையில்,தங்களது  மக்கள் கூட்டணி இலங்கை இன அழிப்பை கண்டிக்கிறது என்றும், அது உள்நாட்டு பிரச்ச்னை அல்ல என்றும், அது அனைத்துலக மனித உரிமை மீறல் என்றும், இலங்கை தம்ஜிஹர்களின் அடிப்படை உரிமைகளுக்கு தாங்கள் எப்போதும் குரல் கொடுப்போம் என்றும் கூறினார். அன்வர் இப்ராஹீம் அடுத்த மலேசியாவின்  பிரதமாராக வருவார் என்று மாநாட்டில் பலரும் பேசினார்கள். அனவரும் தான் தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு வர  விரும்புவதாக கூறினார்.மாநாடு பல தீர்மானங்களை நிறைவேற்றியது.அவற்றில் மலேசியா நாடு கடந்த ஐ.நா.மனித உரிமை கழகத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வந்தபோது,நடுநிலை வகித்ததை மாநாடு பெருமிதம் கொள்கிறது என்றும், வருகிற மார்ச் மாதம் வரும் அதே ஐ.நா.வின் மனித உரிமை கழக கூட்டத்தில், மலேசியாவும், இந்தியாவும், அனைத்து நாட்டு சுதந்திரமான விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல, போராடும் யாழ்ப்பாண பலகளிக் கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேறியது.நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அங்கீகரிக்கக் வேண்டும் என்றும் கோரப்பட்டது. மலேசியாவில் தமிழர்களுக்கான அபல்லிகளை அதிகரிக்கவேண்டும் என்றும் கோரப்பட்டது.இரவு பத்து மணிக்கு மாநாடு இனிது முடிந்தது. மிக்கேல் தமழரசன் நன்றி கூறினார். 

Wednesday, December 26, 2012

தமிழ்நாட்டு பேராளர்கள் மலேசியா பயணம்


     உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு மலேசியாவில்  வருகிற வெள்ளிக் கிழமை 28 ஆம் நாள் நடைபெற உள்ளது. 2009 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கோவையில் ம் இன அழிப்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள் நடத்திய செம்மொழி மாநாட்டிற்கு எதிராக, மருத்துவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடத்தப்பட்ட முதல் மாநாட்டின் கோடியை அப்போது பெற்றுக் கொண்ட மலேசியா நாட்டு பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி அடுத்த மாநாட்டை மலேசியாவில் நடத்த உறுதி செய்தார். அப்போது கோவை மாநாட்டிற்கு வந்திருந்த மலேசியாவின் 100 க்கு மேற்பட்ட பேராளர்கள் அதே உறுதியை எடுத்தனர். அந்த கோடி தோழர் வீர சந்தானத்தால், வரையப்பட்டது. அந்த கோவை மாநாட்டில்  கலந்துகொண்ட  மலேசியாவின் நாடாளுமன்ற உறப்பினர் குலசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் சிவநேசன், குணசேகரன், குலசேகரன், மற்றும் பொன்னுரங்கன், கலையரசன், டைகர் கண்ணன் சாமுவேல்ராஜ், குமார், போன்றோர்   மலேசியாவில் மாநாடு நடத்த ஏற்பாடு செய்துள்ளார்கள். 2011 இல் மலேசியாவில் நாடிபெருவதாக இருந்த இந்த மாநாடு இப்போது 2012 இல் நடக்கிறது. அதற்க்கான பணிகளை தமிழ்நாட்டை சேர்ந்த புதுக்கோட்டை குருமூர்த்தி திறம்பட ஊக்குவித்துள்ளார். சென்ற மாதம் பேராசிரியர் சரஸ்வதியும் குருமுர்த்தியுடன் மலேசியா சென்று இந்த மாநாட்டு பணிகளை செய்து வந்தார்.

                          கோவையில் நடந்த முதல் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்த மருத்துவர் கிருஷ்ணசாமி, பேராசிரியர் சரஸ்வதி, இந்திய தவுஹித் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்பாக்கர், குருமூர்த்தி, டி .எஸ்.எஸ்.மணி இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், ஆகியோரும் இந்த மலேசியா மாநாட்டில் கலந்துகொள்ள புறப்பட்டுவிட்டனர்.புலமைப் பித்தன், யாடவர் மகாஜன சங்கம் தலைவர் தேவநாதன், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் திருமதி பத்மாவதி ஆகியோரும் மாநாட்டில் கலந்துகொள்ள புறப்பட்டுவிட்டனர். உலகம் எங்கும் உள்ள தமிழ் உணர்வாளர்கள் பலரும் மாநட்டில் கலந்துகொன்ம்டு சிறப்பான  முடிவுகளை எடுக்க உள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளையும் மனத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். தமிழர்கலம் அரிமாவளவன், தூயவன் ஆகியோரும் வருகின்றனர்.  

Monday, December 24, 2012

சிங்கள ஆண் ராணுவம், மலையகத் தமிழர் மீதும் ஆக்கிரமிப்பு.


     தொடர்ந்து சிங்கள ஆண்  ராணுவத்தின் ஆக்கிரமிப்பு, வடக்கு கிழக்கு மாகாணங்களில் இலங்கையில் தொடர்வதால் அங்கு வாழும் தமிழ் மக்களின் அன்றாட வாழ்நிலையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று உலகமே அதிர நாம் கூறிவருகிறோம். ஈழத்தில் தமிழ்ப் பெண்கள் "தொண்ணூறு ஆயிரம் பேர்" விதவைகளாக இருக்கும் நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் "காவல்துறை" செய்யும் பணிகளைக் கூட, ராணுவத்தின் மூலம் செய்யவைப்பது என்பது, சாதாரண குடிமக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு சிறு பிரச்சனைகளுக்கும் அந்த சிங்கள ஆண் இராணுவத்தினரின் அனுமதி பெற்றுக் கொண்டுதான் செயல்பட முடியட்டும் எனபது பெரும் இடையூறுகளை அன்றாடம் மக்களுக்கு ஏற்படுத்துகிறது. அது "மக்கள் வாழும் பகுதிகளை ராணுவ மயமாக்கல்" என்ற கொடுமையான "போர் சூழலை" போர் இல்லா நேரத்திலும் அமுலாக்குவது என்று நாமும் கத்தி வருகிறோம். அதை சிறிதும் சட்டை செய்யாத மஹிநதா அரசு அவர்களின் பாதுகாப்பு செயலாளரான கோத்தப்பாயே மூலம்,  "அதிகமாக ராணுவத்திற்கு ஆள் எடுத்து விட்டோம் என்றும் அதனால் அவர்களுக்கு வேலை கொடுக்க இப்படி செய்கிறோம்" என்றும் விளக்கத்தை கொடுத்தது இது கேவலமான ராணுவமயமாக்களை நியாயப்படுத்தும் அகங்கார பேச்சு.

                       வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மக்கள் குறிப்பாக பல்லாயிரக்கணக்கான விதவை தமிழ் பெண்கள், வெளியே செல்ல முற்படும்போது, சிங்கள ஆண் இராணுவத்தினரின் "ஒப்புதல்" பெற்றே, கடை,கன்னிக்கோ, இயற்கை உபாதைகளை கழிக்கவோ சிறுமிகள் பள்ளிக்கு செல்லவோ பெண்கள் பணிகளுக்கு சென்று வரவோ முடியும் என்றால் இது என்ன ஆட்சி? ராணுவ ஆட்சிதானே? அதேபோல இப்போது பல்கலைக் கழக மாணவர்களை கைது செய்து வைத்திருப்பது தவறு என்று கூறிய பலகளிக் கழக ஆசிரியர்களையும் சிங்கள ஆண் ராணுவம் கொடுமை செய்ய தொடக்கி விட்டது. பலாலி ராணுவ முகாமுக்கு அந்த ஆசிரியர்களான ஆண்ங்களையும் பெண்களையும் வரவழைத்து, அவர்கள் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக பேசக் கூடாதுஎ ன்று மிரட்டியுள்ளது. இது சிங்கள ஆண் ராணுவ ஆக்கிரமிப்பை "பலகளிக் கழகத்திர்க்குள்ளும்" நீட்டிப்பதை பட்டவர்த்தத்னமாக காட்டுய்கிறது.

                     இப்போது அடுத்த "தாக்குதல்" மலையக மக்களான, இந்தியவம்சாவளியான "தோட்டத் தொழிலாளர்கள்" மீது அதே சிங்கள ஆண் ராணுவம் தொடங்கியுள்ளது.தென்னிலங்கையில் உள்ள மலையக பகுதிகளில், கடந்த ஒரு மாதமாக அந்த சிங்கள ஆண் ராணுவம் தனது முகாம்களை அமைத்து மலையக தமிழர்களின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறது. இது மலையாக தமிழ் பெண்கள் "இயற்கை உபாதைகளுக்கு" சுதந்திரமாக வெளியே செல்லக்கூட தடுக்கிறது அல்லது சிங்கள ஆண் ராணுவ வீரர்களால் உற்று பார்க்க வைக்கிறது. அதற்கு பயந்து எத்தனை நாள்தான் தமிழ் பெண்கள் வெளியே செல்லாமல் இருக்க முடியும்?  மலையக மக்களின் வீடுகள் தோட்டங்களில் அமைந்துள்ளதால் அவை "வரிசையாக" கட்டப்பட்டிருக்கும். அங்கே ராணுவ முகாம் ஒன்றை அமைத்தால் அவர்கள்  அந்த பெண்களின் போக்குவரத்தை, முழுமையாக கண்காணித்து வருவர். அப்படி ஒரு மாத காலமாக அங்குள்ள மலையகப் பெண்கள் தாங்கள் எப்படி சிங்கள ஆண் ராணுவப் பிடிக்குள் "மாட்டிக் கொண்டுள்ளோம்" என்று பல கதைகளை சொல்லுகிறார்கள் முதலில் சிங்கள தேசத்தை "நட்பு நாடு" என்று கூறும் இந்திய அரசியல்வாதிகள் "ராணுவ ஆட்சியை" தமிழ் மக்கள் மீது 'திணிப்பதை" நிறுத்த சொல்லி, தங்களது நட்பு ஆட்சியாளர்களுக்கு கூறுவார்களா? நடுவணரசில் அங்கம் வகிக்கும் திமுக அதுபற்றி நடவனரசின்  தலை அமைச்சருக்கு கூறி ராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து ஈழத் தமிழர் வாழ்விடங்களையும்  மலையகத் தமிழர் வாழ்விடங்களையும் காப்பாற்ற உதவுவார்களா?

Thursday, December 20, 2012

தென்மொழி அம்மா தாமரை, இறைக்குரவனார் நினைவேந்தல் நிகழ்வு.

தென்மொழி அம்மா தாமரை, இறைக்குரவனார் நினைவேந்தல் நிகழ்வு.
            22-12-2012 சனிக்கிழமை  காலை 9-30 மணிக்கு தொடங்கி,  பாவலரேறு  பெருஞ்சித்திரனாரின் மனைவி, அம்மா தாமரையம்மாள்  மற்றும்  திருக்குரல்மணி இறக்குரவனார் அய்யா ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு,  அடையாறு ராஜரத்தினம் அரங்கில்  நடைபெறும். அந்த அரங்கு எம்.ஜி.ஆர்.-ஜானகி பெண்கள் கல்லூரிக்கு எதிரே உள்ளது. பாலம் தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது. தென்மொழி இதழிலிருந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நினைவேந்தல் கூட்டத்தில், தமிழ் அறிஞர்கள், தமிழ்தேச உரிமை இயக்கங்களின் தலைவர்கள், அரசியல்கட்சி தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள், தென்மொழி அன்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு உரையாற்றுவார்கள்.

                      தாமரையம்மாள் பற்றி பாவலரேறு  குறிப்பிட்டுள்ள  குறிப்புகளில் .........................

                         எளிமையின் தோற்றத்தாள். வலிமையின் போர்வாள்.
                          ஏழ்மையில் மனங்கோணா என்னொடுந்தேர்வாள் 

                           பொன்னுக்கும், பட்டுக்கும் விழைவில்லா துறவி 
                            பொழுதுக்கும் காலாறா நடைபாவும் இறைவி 
                            சின்னக்கைக்குழந்தைக்கும்  குழந்தையவள் நெஞ்சம் 
                             சீறியெழின்  பெண்புலியின் சீற்றத்தை விஞ்சும்.
                             எனக்கெனவே வாழ்கின்றாள். எனக்கெனவே உயிர்ப்பாள். 
                             இனிவரும் எப்பிறப்பினும் எனைப்பிரிந்து வாழாள்.
                              
                             தாமரையாள் அன்புணர்வுக்கு  அவளன்பே  எல்லை.

 போராளி பொழிலனை  கருவில் சுமந்த தாய், வீரத்தாய்,  என்பதில் நமக்கேன் சந்தேகம். வாருங்கள். வரலாற்றில் பதிவுருங்கள்    

Wednesday, December 19, 2012

வெற்றிபெற்றது கணினி தமிழ் வளர்ச்சி மாநாடு

வெற்றிபெற்றது கணினி தமிழ் வளர்ச்சி மாநாடு
    
                  ஞாயிறு காலை தொடங்கிய கணினி தமிழ் வளர்ச்சி மாநாடு தொடக்கிய நிலையிலேயே, அரசு செயலாளர் உட்பட,  பல அரசுதரப்பு அதிகாரிகள் மேடையில் காட்சி அளித்தும், முதல் வரிசையில் அமர்ந்திருந்ததையும் காண முடிந்தது. அதுவே மாநாட்டின் வெற்றியை பறை சாற்றுவதாக அமைந்தது. அதையும் தாண்டி தமிழ் அறிஞர்கள் பலர் குறிப்பாக "பலகலைக்கழக தமிழ் ஆய்வாளர்களும், மாணவர்களும்" கலந்துகொண்டது மேலும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்தது. .மொழியியல் அறிஞரும், முன்னாள் சென்னை பலகலை கழக தமிழ்த் துரையின் தலைவருமான ந.தெய்வசுந்தரம் தலைமையில் மாநாடு தொடங்கியது.கண்ணன் "மதிநிறைந்த நன்னாளில்" என்று தொடங்கினார். அன்று மார்கழி முதல் நாள். மார்கழி மாதம் எப்படி ஓசோன் என்ற 'பிராணவாயு மணடலத்தை"வலுப்படுத்தும் தன்மையை  கொண்டதோ, அந்த மண்டலம் வலுப்பெறும் பாணியில் "கணினி தமிழும் வலுப்பெறும்" என்று இந்த மாநாடு கட்டியம்  கூறியதோ? 

                   தெய்வசுந்தரம் தனது வரவேற்புரையில் "பல கணினி வழி தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களையும்" சுட்டிக் காட்ட தவறவில்லை. அடுத்து பேசிய "தமிழ்  வளர்ச்சி துறை / அறநிலைய துறை / செய்தி துறை ஆகியவற்றின் அரசு செயலாளர் திரு. ராசாராம் பேச தொடங்கினார். தொடக்கத்திலேயே, "இந்த மாநாட்டின் கதாநாயகனான தெய்வசுந்தரம் அவர்களே" என்று விளித்து ஆரம்பித்தது, சிறப்பாக இருந்தது. தமிழ் அறிஞர்களுக்கு இப்படி ஒரு சிறப்பை கொடுக்கும் அளவில் அரசு செயலாளர் உரையாற்றுகிறாரே?  என்ற எண்ணம் அண்மைக்கு வந்தது. அப்படியானால் அவர் கூறியதுபோல தமிழக முதல்வர் உடனடியாக "கணினி தமிழ் வளர்ச்சிக்கு" ஒரு தொகையை ஒதுக்கி, தமிழ் வளர்ச்சிக்கு உண்மையாகவே உதவுவார் போன்ற தோற்றம் வந்தது. அதுவே மாநாடு முழுவதும் நமக்கு வரும் அளவில், அரசு தரப்பு பிரமுகர்கள் ஒவ்வொருவரும் பேசியது ஆறுதலாக இருந்தது. 

                            அடுத்து அருள் நடராசன் பேச வந்தார். அவர் தமிழ்நாடு அரசின் மொழிபெயர்ப்பு துரையின் இயக்குனர். அவர்  "தான் தெஇவசுனடரத்தின் மாணவர் என்றும், தங்களுக்கு உலக மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கியை அறிமுகம் செயடஹ்வைரே பேராசிரியத் டேஹிவசுந்தரம் என்றும் கூறினார். அதேபோல அவரது முயற்ச்சியில் கணினி தமிழ் வளர்ச்சிக்கு அரசின் அனைத்து உதவிகளையும் பெற்று தஹ்ருவோம் என்று உறுதி கூறினார். 

                        தஞ்சை தமிழ் பலகளிக்கழக துணை வேந்தர் திருமலை பேசினார். அவர் மதுரை பலகலையில் இருக்கும் போது, பேராசிரியர் தெஇவசுண்டரத்தை அழைத்து, ஆர்வமிகு பேச்சு ஒன்றை அமைத்ததாகவும், அதேபோல எப்போதும் அவர் மீது பெரும் பற்று கொண்டிருப்பதாகவும், அது தெஇவசுண்டரத்திர்க்கெ தெரியாதுஎ ன்றும் கூறி வியக்க வைத்தார். அதேபோல தான் மேடையிலேயே அரசு செயலாளரிடம், பேராசிரியர் தெய்வசுந்தரம் இப்போது ஒய்வு பெற்று இருப்பதால், நாம் அவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியதாகவும், அதருக்கு அரசு செயலாளர் ராசாராம் "என்ன செய்யவேண்டும். சொல்லுங்கள்" என்று கேட்டதாகவும் தஞ்சை தமிழ் பலகலையில் அவரை கவுரவ பேராசிரியாக நியமிக்க வேண்டும் என்று கூறியதாகவும், அவரும், செய்யுங்கள் என்று ஒப்புதல் கொடுத்ததாகவும் கூறி கைதட்டலை பெற்றார். 

                    தஞ்சை தமிழ் பலகளிக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் குணாகரன் பேசினார். அவர் தமிழின் கணினி வளர்ச்சி என்றால் என்ன என்பதை எளிமையாக ஆதரங்களுடன் விளக்கம் தந்தார். அன்றைய காலை 
அமர்வு நிறைவுற்றது .

              "மின்னணு கருவிகளில் தமிழ் பயன்பாடு" என்ற தலைப்பில் அடுத்த மறவு பன்னிரண்டு மணிக்கு தொடங்கியது. அதில் ராம்கி அய்யா தலைமை  ஏற்று, இப்போது இருக்கும் இழி நிலையில், தமிழ் தமிழ்நாட்டில் பேச்சு மொழியிலும் எழுத்து மொழியிலும், ஊடக மொழியிலும், வழக்காடு மனறத்திலும், பித்ரு மொழி நிலையிலும், இல்லாமல் இருப்பதை வேதனையுடன் எடுத்து சொன்னார். மெல்ல, மெல்ல சாகும் நிலையில் தமிழ் இருப்பதை எடுத்து கூறினார்.  தமிழ் அருதியியல் அவ்ள்ளுனர் நாக.இளங்கோ அடுத்து பேசினார். அவரும் தமிழ் கண்ணினியில், இணையத்தில் முன்னேறி இருப்பதாக கூரபப்டுவது ஒரு "மாயையே" என்று விளக்கினார். தேனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜெச்வின் பிரசிசிடா பேசினார். அவரும் தமிழ் இன்று இருக்கும் வலரா நிலையி சுட்டி காட்டினார். எப்படி கிராமப்புறங்களில், இணையமமே எட்டா கனியாக இருக்கிறது என்றும் அவர் கூறினார். அடுத்து பேசிய ராஜ்குமார் பழனிச்சாமி, சில செய்திகளை கூறி பார்வையாளர்களை உசுப்பிவிட்டார். தொடர்வண்டி துறையில் நடுவண் அரசு "பயணச்சீட்டிலும், வண்டியில் ஓட்டும் பயணிகள் பட்டியலிலும்" தமிழில் எழுதாமல் இருப்பது தமிழ் மட்டுமே தெரிந்த ஏழை மக்களுக்கு பெரும் துன்பமாக இருக்கிறது என்றார். கடைகளில் கொடுக்கும்  " பொருள் விலை சீட்டுகளில்" தமிழில் இல்லை என்ற குறையை தமிழனின் குறை என்றார். 

                             புதுச்சேரி ஊடகவியலாளர் சுகுமாரன் பேசினார். அவரும் தமிழின் பயன்பாடு எந்த அளவில் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்பதை  எடுத்து சொன்னார்.   அடுத்து பேசிய தெ சீ.சு.மணி, இந்த கணினி தமிழ் என்பதை கற்காதவர்கள், இன்றைய உயர் தொழில்நுட்ப காலத்தின் "எழுத்தரிவடர்வர்கள்" போல ஆகி விடுகின்றனர் என்றார்.  இந்த மாநாடு வெறும் தமிழ் வளர்ச்சி மட்டுமல்ல என்றும், கணினி இந்தியின் அடக்குமுறை எல்லா இந்திய மொழிகள் மீதும் இருக்கிறது என்றும், இந்த மாநாட்டின் மூலம் தமிழ் அதை எதிர்ப்பதற்கான முதல் குரலை எழுப்பியுள்ளது என்றும், நாம் எல்லா இந்திய மொழிகளின் ஒற்றுமையை கட்டி கணினி இந்தி நம்மை அடக்க முயல்வதை எதிர்த்த போராட்டத்தை கட்டமைக்க வேண்டும் என்றும் கூறினார். அதனால் இது அடுத்த கட்ட இந்தி ஆதிக்க எதிர்ப்பு போரின் பரிமாண வளர்ச்சி என்றார். மொழியை இனத்தை விட்டு பிரித்து பார்க்க முடியாது என்றும், அதனால் நாலாம் வன்னி போருக்கு பின்னால், தமிழ்நாட்டில் எழுந்துள்ள இன உணர்ச்சியை பயன்படுத்தி, "தம்" பிடித்து, தமிழ் வளர்ச்சிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.செந்தமிழ் சொர்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கக பேராசிரியர் மா.பூங்குன்றன் தேவக தமிழின் இன்றைய நிலையம், நாம் செய்யவேண்டிய வேலைகளையும் பட்டியலிட்டார்.

                            அந்த அமர்வில் பேசவேண்டிய செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன பேராசிரியர் அரணமுருவல்   அடுத்த அமர்வில் தனது கருத்துக்களை ஆவேசமாக பதிவு செய்தார்.      இரண்டாம் அமர்வு கணினி தமிழ் வளர்ச்சி திட்டம் என்ற தலைப்பில் நடந்தது. அதில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ தலைமை தாங்கினார். குறிப்பான் திட்டங்களை முன்வையுங்கள் என பேச்சாளர்களை கேட்டுக் கொண்டார். சென்னை பலகளிக்கழக முன்னாள் பேராசிரியர் வ.நாகராசன் இணையம் மூலம் ஒரு வகுப்பே எடுத்தார். அண்ணா பலகலையின் முன்னாள் பேராசிரியர் வி.கிருஷ்ணமூர்த்தி, கனடாவின் வாட்டர்லூ ஓல்களைக் கழக பேராசிரியர் சி.இரா.செல்வகுமார், அண்ணாமலை பல்கலைக் கழக பேராசிரியர் மா.கணேசன், மலாய் பல்கலைக் கழக பேராசிரியர் சோ.சுப்பிரமணி, சிங்கப்பூர் பேராசிரியர் ராஜெச்வரன் பூபாலன்,திராவிட பலகளிக் கழகம் பேராசிரியர் கோ.பாலசுப்பிரமணியன், மதுரை பல்கலை பேராசிரியர் உமாராஜ், புதுவை காஞ்சி மாமுனிவர் ஆய்வுமையம் பேராசிரியர் நா.இளங்கோ ஆகியோர் உரையாற்றினர்.

                நிறைவு விழாவில், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் இயக்குனர் முனைவர் சேகர், சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் முனைவர் கோ.விசயராகவன், ஆகியோர் தமிழ்நாடு அரசு விரைவில் இந்த மாநாட்டி கோரிக்கைகளை ஏற்றக் கொண்டு அமுல் படுத்தும் என்று உறுதி கூறினார். அது ஒரு ஆறுதலாக் இருந்தது. உத்தமம் செயலாளர் எ.இளங்கோவன், தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் ராசேந்திரன்,கணித் தமிழ் சங்கம் தலைவர் சொ.ஆனந்தன் ஆகியோரும் உரையாற்ற, செந்தமிழர் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம் முனைவர் மு.கண்ணன் நன்றி கூறி இனிதே முடித்தார். 

                                    
    

Tuesday, December 18, 2012

காலச்சுவடு நடத்திய மொழிபெயர்த்த புத்தக வெளியீடு தரும் படிப்பினைகள்.


      இப்போதும் பிணங்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்ற பெயரை நாம் தொடர்ந்து கொடுத்து, அந்த ஆங்கிலேய எழுத்தாளர் பிராநிசி ஹாரிசன் எழுதிய "Still counting the  death " என்ற ஆங்கில பெயர் கொண்ட புத்தகத்துக்கு உயிருள்ள  பொருளை ஏற்படுத்தவேண்டும் என்று நினைக்கும் வேளையில், அந்த மொழிபெயர்ப்பு என்ற முக்கிய பணியை எடுத்து, பொறுப்பாக அச்சிட்டு வெளியிட்டுள்ள "காலச்சுவடு" இதழ்காரர்கள், அந்த புத்தகத்தை "சாட்சிகள் இல்லாத யுத்தத்தின் சாட்சிகள்" என்ற பெயருடனேயே வெளியிட்டார்கள். சென்னை அன்னாசாலையில் உள்ள புக்போயன்ட் அரங்கில் 15 ஆம் நாள் சனிக்கிழமை அந்த வெளியீடு மாலையில் நிகழ்ந்தது. முதலில் கவிதை அரங்கமாக ஈழத்தமிழர் வாழ்நிலை பற்றிய அல்லது போர் தந்த வலிகள் பற்றிய கவி அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

                        ஒரு ஆழமான விசயத்தின் மீதான வரலாற்று சாட்சிகளை முன்வைக்கும் தமிழர் அல்லாத பெண் எழுத்தாளரின் புத்தகத்தை தமிழாக்கி தரும் நிகழ்வில், கவி அரண்களை முதற்கட்டமாக ஒழுங்கு செய்த பதிப்பகத்தாறன ஏற்பாட்டாளர்களை பர்ரட்டவே செய்ய வேண்டும். அதிலும் சுகிர்தராணி கவிதை படிக்கிறார் எனும்போது செல்ல வேண்டும் என்ற அவா எழுந்தது. ஏற்கனவே ஊடகவியலாளர் கூட்டம் நடத்தப்பட்ட போது, எழுத்தாளரும், ஊடகவியலாளருமான பிரான்சிஸ் ஹாரிசன் உடன் ஊஅடவியலாலர்  கூட்டம் முடிந்த பிறகு நான் எழுப்பிய கேள்விகளில், ஒரு கேள்விக்கு நல்ல பதிலாக, "ஆமாம் அது போரிலிருந்து தப்பி வந்தவர்கள் கொடுத்த நேர்கானல்கள்தான்" என்றும், அதனால் அவை "உண்மை சார்பே தவிர, ஒரு சார்பல்ல" என்று அவர்கள் கொடுத்த பதில் என்னை திருப்தி படுத்தியது. ஆனால் அதே நேரம், அரசு நடத்திய போரில், தற்காப்பு போரை தவிர்க்க முடியாமல் நடத்த தள்ளப்பட்ட, விடுதலை புலிகளையும் "சமமாக" கணக்கிட்டு "இருபுறமும் நடத்தப்பட்ட போர் குற்றங்கள்" என்று கூறியதை நான் மறுத்தபோது, "அது உங்கள் கருத்து" என்று உலகின் "மனித உரிமை பார்வைக்கே சவால்" விட்டு அவர்கள் பதில் கூறியதை நான ஏற்கனவே சுட்டி காட்டி எழுதியுள்ளேன் தங்கள் சொந்த நாட்டு மக்கள் மீதே போர் நடத்திய சக்திகளையும்அந்த போரை எதிர்கொண்ட விடுதலை வீரர்களையும் "ஒரே நிலையில்" வைத்து காணும் சர்வ தேசியம் எப்படி மனித உரிமைகளுக்கு குரல் கொடுக்க முடியும் என்ற நமது ஆதங்கத்தை அப்போது வெளிப்படுத்தியிருந்தோம். 

                           இப்போது புத்தக வெளியீட்டு விழா என்ற நல்லதொரு நிகழ்வுக்கு வருவோம். கவிதை அரங்கு எதிர்பார்ர்புடன் தொடங்கியது. முதலில் சேரன் கவிதைகள். தனது கவிதையை வரலாற்றின் மேல் பயணம் செய்ய அனுப்பினார். அதை தான் எழுதிய பழைய கவிதை என்றார்.உள்ளபடியே ரசிக்க முடிந்தது. அந்த வரிகளில், வேதனை, வலி, கொடுமை, இன அழிப்பு, பெண்களின் கதறல் எல்லாம் சேர்ந்து இந்த கவிதை இப்படியெல்லாம் பயணம் செய்துலல்தே? என்று வியக்க வைத்து. தனது இரண்டாவது கவிதையை கூறினார். அதில் 2009 ஆம் அண்டு நிகழ்வுகளை வேதனையுடன் வடித்திருந்தார். இந்த நூற்றாண்டுன் முதல் இன அழிப்பு போர் என்ற அவரது மதிப்பீடு  அதில் பதிவாகி இருந்தது. புத்தக வெளியீட்டிற்கு நல்ல தொடக்கம் என்று எண்ணினோம்.

                   மூன்றாவது கவிஞராக பரமேஸ்வரி வந்தார். பா.பொ சி.அவர்களின் பேத்தி. அவர் போற்குடர்ந்கள் பற்றி கொடுத்த படப்பிடிப்பு, தமிழ் உள்ளங்களை அசைக்கும். விதைகளாக ஆந்த போராளிகள் ஆகிப்போனார்கள் என்பதை கூறி முடிப்பார். அதற்காக கைதட்டல் பெற்றார். அடுத்து சுகிரதராணி வந்தார். அவர் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வாக்கியத்தை எடுத்துக் கொண்டு சொல் சிலம்பம் ஆடினார். இப்படியும் இதை பார்க்கலாமா? என்று என்ன வைத்தார். ஈழத்தமிழனின் விடுதலைபோர் பற்றிய விவரிப்பில், போர் நடத்திய ரத்த சாட்சிகளை வர்ணித்து, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கு சிந்திக்க வைக்கும் கேள்விகளை தந்தார். அடுத்து வரே "இசைப்ப்ரியா" பற்றிய கவிதையை அனைவரின் உள்ளமும் உருக கூறினார். இசைப்ப்ரியாவின் உடல் பேசியது . அப்பப்பப்பா. தாங்க முடியவில்லை. இசப்ப்ரியா மட்டுமே போர் குற்றத்திற்கான  முக்கிய சாட்சியாக இருப்பார். அந்த அளவுக்கு அந்த கவிதை தாக்கம் தந்தது. இளம்பிறை மேடையில் காணவில்லை. தாமதமாக வந்ததால், பின்னால் மறந்திருந்தார். கவிதை வாசிக்கவில்லை. அடுத்து யுவபாரதி மனிகண்டன். அவரது கவிதையில் ஈழ சூழலுக்கும், இங்கே தமிழ்நாட்டில் இருக்கும் "போலிகளுக்கும்" ஒப்பீட்டு வர்ணிப்பு என்னைக் கவர்ந்தது. 

                         இந்த வரிசயில் இஅர்ண்டவது கவிதை வாசித்த, "தேவேந்திர பூபதி" கவிதை பற்றி குறிப்பிட மறந்துவிட்டேன். அவர் ஈழம் பற்றி பாடவில்லை. அவர் "கடல் கடந்து பிழைக்க சென்றவர்கள்" என்று இரண்டு முறை அல்லது அதற்கும் மேலே குறிப்பிட்டார். ஓகோ."மலையக தமிழர் பற்றி" குறிப்பிடுகிறார் என்று புரிந்து கொண்டேன். "தேயிலை தோட்டங்களில் தமிழர்கள், வேர்வையையும், ரத்தத்தையும் சிந்தி, வளம் ஏற்படுத்தியதை" குறிப்பிட்டார். சரி. இவர் மைலையக தோட்டத் தொழிலாளர்களான "இந்திய வம்சாவளி" என்று அழைக்கப்படுபவர்களை குறிப்பிடுகிறார் என அறிந்துகொண்டேன். அவர்கள் "தென்னிலங்கையில் சிங்களர் இடையே வாழ்கிறார்கள்" என்பது கவிஞருக்கு தெரியுமா என எனக்குதெரியாது. ஆனால் நாம் பேசும் கவிப்பொருளும், போர் நிகழ்வும், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பாரம்பரியமாக வாழும்,ஈழத் தமிழர்கள் பற்றி என்பது அவருக்கு சொல்லப் பட்டதா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இக் சிலபேர் "பிழைக்க போனவனுக்கு என்ன தனிநாடு கேட்குது?" என்று அதிக "அறிவுசாலிகளாக " கேட்கும் கேள்வியும் நினைவுக்கு வந்தது. இந்த கவிஞர் "வணிக வரித்துறையில் ஒரு பெரிய அதிகாரி" என அறிந்தேன். அதற்காக என்ன செய்ய முடியும்? அவருக்கு ஈழத்தமிழர் தான் அந்த நிலத்தின் பாரம்பரிய சொந்தங்கள் என்று டேஹ்ரியாவிட்டால் நாம என்ன செய்முடியும்? 

                        கூட்டம் முடிந்த பிறகு, இதே கேள்வியை எனக்குள் எழுந்ததை, நான் அறிவிப்பு செய்த கவிதா விடமும், சுகிரதராணி, மணிகண்டன், சேரன் ஆகியோரிடமும் வினவினேன். யாருமே பூபதி கவிதை எதை "பாடுபொருளாக" வைத்து படிக்கப்பட்டது என்று கவனித்தது போல தெரியவில்லை. கவனிக்கிறோம் இனி என்றார்கள். ஏற்பாட்டாளர்கள் இது பற்றி அதிகம் கவலை கொல்ல்வதில்லையா? பதிப்பகம் என்றால், வணிக பயன்பாட்டு மட்டுமே இல்லையே? இது படைப்பாற்றல் சம்பந்தப்பட்டது ஆயிற்றே?  அடுத்து சேரனும், சதானந்த மேனனும் பேசினார்கள். குர்டிஷ் இனத்தை சேர்ந்த ஒருவரை பிடித்து பயங்கரவாதி என்று முத்திரை குத்தி, சித்திரவதை செய்து, அவரை ஆப்கான் எடுத்து வந்து அங்கும் சித்திரவதை செய்த கதையை விளக்கினார். அரசுகள்தான் பயங்கரவாதிகளே தவிர, தனிநபர்கள் அல்ல என்றார். ஆனால் அரசுகள் தனிநபர்களை பயங்கரவாதம் என்று கோருகின்றன என்ற விளக்கத்தை தந்தார். உலகப் போர் நடத்தியவர்களை யாரும் கேள்வி கேட்கவில்லை.
இலங்கையை கேள்வி கேட்க ஏற்கனவே போர் குற்றம் செய்துவரும் நாடுகளால் முடியவில்லை என்றார். நிதி நிறுவனங்கள் மாபெரும் குற்றங்களை செய்கின்றன என்றார். தேசிய அரசுகள்தான் அதிகம் குற்றங்களை செய்கின்றன என்றார். 

 குர்டிஷ் இனம் போன்றோர், ஈழத் தமிழர் போன்றோர் உலகில் நாடுகள் இல்லாத, அரசுகள் இல்லாத இனங்கள் என்றார். அத்தகைய இனங்களுக்கு சர்வதேச மைப்புகளில் இடம் இல்லை என்றார். ஐ.நா.சாய் இன்று ஈழப்போரில் குற்றம்  செய்துள்ளது அம்பலப்பட்டுள்ளது என்றார். அதை நாம் ஒரு தளத்தில் எதிர்க்க வேண்டும் என்றும், அதே ன்றத்தில் இன்னொரு தளத்தில்  அதே ஐ.நா.வை இருக்கும் அனைத்து நாட்டு நிறுவனம் அதுதான் என்பதால் பயன்படுத்தவும் வேண்டும் என்றார். இந்த விவரம் இங்கே சிலருக்கு இல்லாமல், எதிர்த்தால் மட்டுமே "பெரிய ஆள்" ஆகலாம் கணக்கு போடுகிறார்களே? என எண்ண தூண்டியது. அடுத்து சதானந்த மேனன் வந்தார். நூலை பெற்றுக் கொண்டவர் அவர். சதானந்த மேனன் 1970 ஆண்டுகளின் மனித உரிமை ஆர்வலர், ஊடகவியலாளர். அவரை அன்றுமுதல் தெரியும் என்பதால் அவரது உரையை கவனமாக அகவந்த்தேன். ஆங்கிலத்தில் உரை ஆற்றினாலும் அவருக்கு இருக்கும் மனித உரிமை பற்று வெளியே வந்தது. ஒவ்வொரு டேஹ்சிய இனப் போராட்டங்களும், எதிரியை மேலும் மேலும் வலுப் படுத்த தூண்டுகிறது என்று எதிரிகளை அமபலப்படுத்தினார். ஆனாலும் அதில் இழப்பை சந்திப்பவர்கள் ஆள்வோரே என்றார்.

                         நேரடி சாட்சிகளை ஆவணப்படுத்துவது போரில் வெற்றி பெற்றோருக்கும், தோல்வியை சந்தித்தவர்களுக்கும், மிகவும் முக்கியம் என்றார். அந்த பணியை இந்த புத்தகம் செய்திருப்பதை சுட்டிக் காட்டினார். புத்தகத்தின் எழுத்தாளர் பிரான்சிஸ் ஹாரிசன் இதை ஒரு முக்கிய சாட்சியாக போற்குற்றங்களின் விசாரணையில் வைக்கமுடியும் என்று நம்புவதை நாம் எண்ணி பார்க்கிறோம். அனைத்து நாட்டு சமூகம் இந்த பெருக்கு ஒரு சாட்சொயாக் உள்ளது என்றும், மவுன சாட்சியாக் அவர்கள் இருந்ததை குற்றமாக கூறிய சதானந்தா மேனன் "இந்தியாவும் அந்த சமூகத்தில் ஒரு அங்கம் எனபது வெட்ககரமானது " என்று அமபலப்படுத்தினார். முன்னாள் தலைமை நீதியரசர் சமீபத்தில் காஷ்மீர் பற்றி கூர்யா சொற்களை, இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்துவிட்டால் காஷ்மீர் பிரச்சனை இருக்காது என்ற கருத்தை சுட்டிக் காட்டி  இரு அரசுகளின் செயல்களையும் சதானந்த மேனன் அம்பலப்படுத்தினார். எல்லை ரீதியான தேசிய இனம் பற்றியும், இன்று உலகில் வளரும்  நாடுகள் தாண்டிய மனித ஊடாடல் பற்றியும் அவர் குறிப்பிட்டார். எபப்டியோ, நாமும் நல்ல செய்திகளை அசைபோட இந்த ஹாரிசன் புத்தக் வெளியீடு உதவியதே என்று எண்ணிக் கொண்டு வெளியேறி வந்தோம்.