Tuesday, December 21, 2010

தி.மு.க.வை கைவிடும் காங்கிரசு.

காங்கிரசு கட்சி தனது அகில இந்திய காங்கிரசு கட்சி குழுவை டிசம்பர் பத்தொன்பதிளிருந்து டில்லியில் கூட்டியது. இருபயைரம் பேர் கலந்துகொண்ட அந்த மஹாநாட்டில் பல பிரச்சனைகளில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வடக்கு மாநிலங்களில் காங்கிரசு கட்சியின் மரியாதையை சுத்தமாக காயடித்துவிட்டது. அதனால் ஆத்திரம் ஏற்பட்ட காங்கிரசு தலைவர்கள் தமிழ்நாட்டை பொறுத்தவரை என்ன செய்வது என்ற கேள்விகளோடு இருந்தனர். இப்போதைக்கு தி.மு.க.வுடனான கூட்டணியில் மாற்றம் செய்வதாக திட்டமில்லை என்று ஒருபுறம் கூறிவரும் காங்கிரசு இதுபற்றி உண்மையில் கவலைகொண்டிருப்பதை விவத்தித்தனர். தி.மு.க.வை கை விட்டால் யார் என்ற கேள்விக்கு தமிழ்நாட்டில் பா.ம.க., விஜயகாந்த், கொங்கு முன்னேற்ற சங்கம், இந்திய ஜனநாயக கட்சி என்ற பச்சமுத்து உடையார் கட்சி என்ற பெயர்கள் கூறப்பட்டனவாம். அதில் யாருமே போதுமான அளவுக்கு காங்கிரசு தலைமையை செல்வாக்கு செலுத்தவில்லை என்ற நிலையில் இப்போதைக்கு தி.மு.க.வுடன் இருக்கும் கூட்டணியில் மாற்றம் பற்றி பேச வேண்டாம் என்றும், ஆனால் தாங்கள் அதுபற்றி வருகின்ற ஜனவரி மாதம் பேசி முடிவு செய்வோம் என்றும் தலைவர்கள் கூறினார்களாம். அதற்குள் பெரிதாகும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தி.மு.க.வை அடையாளம் காட்டிவிட்டு தாங்கள் தப்பித்து விடலாம் என்று அந்த தலைவர்கள் நினைக்கிறார்களாம். அடுத்த ஆண்டு ஜனவரி தி.மு.க.விற்கு சாதகமான ஆண்டாக இருக்காது என்று டில்லியில் கூறுகிறார்கள். சீ.பி.ஐ. வழக்கில், உச்சநீதிமன்றத்தில் எப்போது விவகாரம் கையை மீறி போகும் என்று காங்கிரசு நினைக்கிறதோ அப்போது தி.மு.க. தான் அத்தனைக்கும் காரணம் என்று கூறிவிட்டு ஓடிவிடலாம் என்று காங்கிரசு நினைப்பதாகவும் கூறுகிறார்கள். காங்கிரசு தங்கள் கட்சியை கழட்டுமானால் அப்படி ஒரு முயற்சி தெரியுமானால் தி.மு.க. தன் பங்கிற்கு முன்னாள் அமைச்சர் ராஜாவை சுட்டிக்காட்டி அவர்தான் அனைத்து ஊழலுக்கும் காரணம் என்று கூறிவிட்டு தி.மு.க.தலைமை தான் தப்பித்துகொள்ள தயாராகிவருகிறது. அப்படியானால் ராஜா தன்மூலம் கருணாநிதி குடும்பத்திற்கு சென்ற தொகைகளை கூற தயாராவாரா என்று பொதுமக்கள் கேட்கிறார்கள். போல்லாதவர்கல்தான் இந்த பொதுமக்கள்.

1 comment:

bandhu said...

//போல்லாதவர்கல்தான் இந்த பொதுமக்கள்.//
ஒரு சின்ன திருத்தம்.. போக்கத்தவர்கள்தான் மக்கள்..

நானும் காங்கிரஸ் இந்த விஷயத்தை காட்டி தி மு க வை கழட்டி விடுவார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் காரணங்கள் வேறு..

என் ப்ளோகில் எழுதி இருக்கிறேன் (ஒரு விளம்பரம் தான்!)

Post a Comment