இலங்கை முழுவதும் பலத்த மழை. முதல் மழை பொய் இரண்டாம் மழை மேலும் அதிகமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பதினெட்டு மாவட்டங்களில் அந்த தீவு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகள்;ஐ இழந்து தவிக்கிறார்கள். அதில் சிங்கரும், ஈழத்தமிழரும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் இருக்கின்றனர். ஆனால் பதினெட்டு மாவட்டங்களில் மூன்றே மாவட்டங்களில்தான் அதிகமான பாதிப்பு. அந்த மூன்று மாவட்டங்களும் முறையே மாட்டகிலப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகியவையே. அவை மூன்றும் கிழக்கு மாகாணத்தில் வருகின்றன. அதாவது தமிழர் பகுதிகளாக அடையாளம் காட்டப்பட்டவை. அதிக சேதம் நடந்துள்ள அந்த மாவட்டங்களை சிங்கள் இன வெறி அரசு கவனிக்கவே இல்லை.
பதிக்கப்பட்ட சிங்கள பகுதிகளுக்கு சென்ற அரசத்தலைவர் மஹிந்த ராஜபக்ஷே, தமிழர் பகுதிகளை எட்டிக்கூட பார்க்கவில்லை. மொத்தம் பதிமூன்று அச்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசு மொத்தம் நூறு கோடி ரூபாயை இதர்த்க்காக நிவாரத்தொகையாக ஒதுக்கியுள்ளது என்று அறிவித்துள்ளார்கள். பாதிக்கப்பட்ட பதிமூன்று லட்சம் மக்களுக்கும் இந்த நூறு கோடி ரூபாய் பணம், பிரித்துக்கொடுத்தாலே ஆளுக்கு நூறு ரூபாய் கூட வராது. அந்த அளவுக்கு மக்கள் மீது அக்கறை இல்லாத ஒரு அரசு அங்கே இருக்கிறது. அதிலும் மூன்று கிழக்கு மாவட்டங்களிலும் வாழும் தமிழர்களான முஸ்லிம்களும், இந்துக்களும், கிறித்துவர்களும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் ஆயிரம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அந்த முகாம்கள் பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு முகாமில் குறைந்தது இரநூற்றைம்பது குடும்பங்கள் தங்கியுள்ளனர். அதாவது ஆயிரம் தமிழர்கள் தங்கி உள்ளனர். அதில் இந்துக்களும், முஸ்லிம்களும் கலந்தே இருக்கின்றனர்.
இவ்வாறு மூன்று மாவட்டங்களிலும் மொத்தம் மூவாயிரம் தமிழர்களின் நிலைதான் உள்ளதிலேயே அதிக கடினப்பாட்டுடன் இருக்கிறது. அவர்கள் மத்தியில் மக்கள் சார்பு அமைப்புகள் தான் உதவிகளை செய்து வருகின்றன. அதில் கிழக்கு மாகாண அனர்த்த பாதிப்பு முகாமைத்து குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. அதற்கு அனுப்பபடுகின்ற நிதிகளை அது பொருள்கள் வாங்கி கொடுத்து இடம் பெயர்ந்துல்லோரை கவனித்து வருகிறது. அதில் கணிசமாக முஸ்லிம் ஆர்வலர்களும் செயல்படுகின்றனர். சிங்க சூழ்ச்சியால் பிரிக்கப்பட்ட முஸ்லிம், இந்து சகோதரர்கள் இங்குதான் சேர்ந்து உதவிகளை செய்வதும், சேர்ந்து அமர்ந்து உண்பதுமான இணக்கம் ஏற்பட்டுவருகிறது.
இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட இடரை பயன்படுத்தி தமிழ் இனத்தை மேலும் அழிக்க சிங்க பேரினவாத அரசு திட்டமிட்டுவருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
'மேட்டுக் குடி மக்கள்' என்ற ஒரு சொல் நமக்குத் தெரியும். அதாவது உயர்சாதியினர் பூமியின் உயர்ந்த பகுதிகளில் குடியிருக்க உரிமை படைத்தவர்கள். மழை வெள்ளம் அவர்களைத் தாக்காது. ஒரு ஊர் உருவாகும் முன் நிலத்தின் அமைப்பைப் பார்த்து மேட்டுப் பகுதியில் கோயில்கள், அரசு இல்லம், உயர் குடியினர் வாழும் குடியிருப்பு இப்படி அந்நாளில் உருவாக்குவார்கள். 'பள்ளத்தூர்' என்னும் வடிகால் நிலங்களில் தாழ்ந்த சாதியினரைக் குடி அமர்த்துவார்கள். அதே நிலை தான் இலங்கைப் பூமியில் இன்றும் காணப் படுகிறது. தமிழர்கள் பள்ளப் பகுதிகளில் அமர வைக்கப் பட்டிருக்கின்றனர். இது மகிந்த அரசு/முன்னிருந்த அரசுகளில் தொடர்ந்த சூழ்ச்சி நிலை ஆகும். மேலும், தமிழர் வாழும் பள்ளத்தூரில் வெள்ள நீரைச் சூழ்ச்சியாகத் திருப்பி விடுவது என்பதும் சிங்கள இனவெறி அரசுக்கு ஆகாத காரியம் அன்று! இங்குள்ள தலைவர்கள் அது போன்ற எது பற்றியும் அக்கறை இன்றி வோட்டுப் பிச்சை எடுப்பது பற்றியே சிந்தித்து வருகின்றனர்.
அன்புடன்,
மோகன் பாலகிருஷ்ணா
Yozen Mind Couseling Psychology Center
T- Nagar.
( தோழர் மணி அவர்களுக்கு! நான் தங்களை நேற்று செல்வி.இசை அரசி - சரவணன் திருமண வரவேற்பு நிகழ்வில் சந்தித்து உங்கள் வலைத் தளம் பற்றி அறிந்தேன். தங்களின் சிறப்பான கட்டுரைகள் படித்து மகிழ்ந்தேன். இன்னும் படிக்க வேண்டும். எனது வலைத் தளங்களுக்கும் உங்களை அழைக்கிறேன். http://www.yozenmind.com http://www.yozenbalki.blogspot.com http://www.yozenmind.blogspot.com )
Post a Comment