Friday, February 18, 2011

அமபலப்படுத்தலிலும் ஆணாதிக்கமா?

கலைஞர் டி.வீயில் சோதனை நடத்தியது சீ.பி.ஐ. சரி இது செய்தி. அதையே ஒரு ஏடு தனது எதிர்ப்பு உணவிலிருந்து தி.மு.க. ஆபீசில் ரைடு என்று போட்டது. அதுகூட தி.மு.க. அலுவலகத்தில் கலைஞர் டி.வீ. இருப்பதால் அப்படி படுவதற்காக தங்கள் காழ்ப்புணர்ச்சியை பயன்படுத்திக்கொண்டார்கள் என்றும் பார்க்கலாம். அல்லது ஆச்சர்ய செய்தி, அதிர்ச்சி செய்தி,என்ற வணிக நோக்கு என்று கூறிவிடலாம். ஆனால் அந்த டி.வீ.யில் அறுபது பங்கு மூலதம் தயாளு அம்மையார் பெயரிலும், இருபது விழுக்காடு பங்கு மட்டுமே கனிமொழி பெயரிலும் ஒப்புக்கொள்ளும் ஊடகங்கள் எதற்க்காக குறைவான பங்கை கோடுள்ள கனிமொழியை மட்டுமே ஓரங்கட்டி செய்தி வெளியிடுகிறார்கள்?
கலைஞரின் இன்றைய அதிகாரபூர்வமான மனைவி தயாளு என்பதாலும், துணைவிதான் ராஜாத்தி என்பதாலும், இந்த பாரபட்சம் காட்டப்படுகிறதா? ஆனாலும் உண்மைக்கு மாறாக இத்தகைய பாரபட்சம் காட்டுவது ஆணாதிக்கம் இல்லையா? அதிகாரத்தை கையில் வைத்துள்ள ஸ்டாலின், அழகிரி ஆகியோரது தாயார் என்பதால் எல்லா ஊடகங்களும் வலைகின்றனவா? அதுகூட ஆணாதிக்கம் இல்லையா? கனிமொழி ஒரு ஆணாக இருந்தால் வேறு மாதிரி நடக்குமா? அலல்து முதல் மனைவிக்கு கொடுக்கும் மரியாதையை ஆணாதிக்க சமூகம் இரண்டாவது மனைவிக்கு கொடுக்க கூடாது என்று சொல்வதால் வந்த விளைவா? அல்லது எல்லாவற்றிற்கும் காரணமான தயாநிதி தங்கள் குடும்பத்தைவிட இன்னொரு குடும்பமான ராஜாத்தி மீது மட்டுமே அனைத்து இழிவும் பொய் செற்றட்டும் என்று எண்ணுகிறாரா? ஊடகங்கள் குறி வைப்பதும்கூட ஆணாதிக்க பார்வையிலா? அவங்க வீட்ல அவங்க கட்சில, அவங்க கூட்டணில ஊழல் செய்வதில் ஆணோ, பெண்ணோ வேறுபாடு காட்டுவதில்லையே? அப்புறம் அதை அம்பலப்படுத்துவதில் மட்டும் என்ன பால் வேறுபாடு?

No comments:

Post a Comment