Tuesday, February 22, 2011

திருமாவை திருப்பி அனுப்பியது கொழும்பா? டில்லியா?

பார்வதியமாளின் இறுதி அஞ்சலி நிகழ்விற்கு சென்னையிலிருந்து இலங்கை செல்ல நெடுமாறனின் உதவோயாளர்கள் இருவர் செல்ல இருந்ததாகவும், அவர்களை இலங்கை அரசின் ராணுவம் அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டதாகவும் வைகோ சென்னை இரங்கல் கூட்டத்தில் கூறினார். அப்போதுகூட திருமாவும், நண்பர்களும் செல்லவதை இலங்கை அனுமத்தித்துவிட்டது என்றுதான் செய்திகள் வெளிவந்தன. அதற்கு காரணம் அவர்கள் தமிழக முதல்வரின் நெருக்கத்தில் இருப்பதால் என்று பலரும் எண்ணினார். ஆனால் இப்போது இங்கிருந்து சென்று கொழும்பு விமான நிலையத்தில் இறங்கிய திருமாவையும், நண்பர்களையும் கொழும்பின் ராணுவ தலைமை திருப்பி அனுப்பியுள்ளது. இதை செய்தது யார்?
சென்ற முறை தமிழக முதல்வருக்கு இலங்கை அரசத்தலைவர் ராஜபக்சே அனுப்பிய கடிதத்தை ஒட்டி, கலிஞர் ஏற்பாட்டில் அனுப்பப்பட்ட பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் திருமாவும் சென்றார். அப்போது அதை ஏற்றுக்கொண்டிருந்த இலங்கை அரசு இப்போது ஏன் இப்படி நடந்து கொள்ளவேண்டும்? இலங்கையில் இப்போது எல்லாமே அரசத்தலைவர் பணிப்படைதான் [பிரசிடன்ஷியல் டாஸ்க் போர்ஸ்] என்றும்,அதற்கு கொத்தபாஎதான் தலைமை தாங்குகிறார் என்றும் கூறப்படுகிறது. அவர்தான் இத்தகைய முடிவை எடுத்திருக்கவேண்டும். அந்த கொத்தபாயே இந்திய மத்திய அரசுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதையும் அவர்களது ஆலோசனைப்படி நடப்பதாகவும் தெரிகிறது. அப்படியானால் காங்கிரஸ் தலைமையிலான நடுவண் அரசு இத்தகைய உத்தரவை கொடுத்துள்ளதா? டில்லி சொல்லித்தான் திருமாவை கொழும்பு திருப்பி அனுப்பியதா?
டில்லி ஏன் அப்படி செய்யவேண்டும்? ஏற்கனவே டில்லி சம்மதத்துடன் தானே கலைஞர் பத்து எம்பிக்களை இலங்கை அனுப்பினார்? இப்போது என்ன வந்துவிட்டது? வந்துவிட்டதே? தமிழக தேர்தல் வந்துவிட்டதே? அதில் தி.மு.க தலைமை காங்கிரசை ஓரங்கட்ட பா.மா.க.விற்கு முப்பத்தொரு தொகுதி என ஒதுக்கிவிட்டதே? அதனால்தானே காங்கிரஸ் வழிகாட்டலில், சீ.பி.ஐ. அன்புமணியின் உதவியாளரை குறிவைத்து சோதனை செய்து மிரட்டுகிறது? அடுத்து தி.மு.க. தலைமையின் நெருக்கத்தில் உள்ள திருமாவை திருப்பி அனுப்பி தி.மு.க.விற்கு மைமுக தொந்தரவை அல்லது அவமானத்தை கொடுக்க இப்படி ஒரு உத்தியா? இதுதான் இப்போது எழும் கேள்விகள்.

No comments:

Post a Comment