இலங்கை முழுவதும் பலத்த மழை. முதல் மழை பொய் இரண்டாம் மழை மேலும் அதிகமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பதினெட்டு மாவட்டங்களில் அந்த தீவு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகள் இழந்து தவிக்கிறார்கள். அதில் சிங்கலரும், ஈழத்தமிழரும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் இருக்கின்றனர். ஆனால் பதினெட்டு மாவட்டங்களில் மூன்றே மாவட்டங்களில்தான் அதிகமான பாதிப்பு. அந்த மூன்று மாவட்டங்களும் முறையே மாட்டகிலப்பு , அம்பாறை, திருகோணமலை ஆகியவையே. அவை மூன்றும் கிழக்கு மாகாணத்தில் வருகின்றன. அதாவது தமிழர் பகுதிகளாக அடையாளம் காட்டப்பட்டவை. அதிக சேதம் நடந்துள்ள அந்த மாவட்டங்களை சிங்கள் இன வெறி அரசு கவனிக்கவே இல்லை.
பாதிக்கப்பட்ட சிங்கள பகுதிகளுக்கு சென்ற அரசத்தலைவர் மஹிந்த ராஜபக்ஷே, தமிழர் பகுதிகளை எட்டிக்கூட பார்க்கவில்லை. மொத்தம் பதிமூன்று லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசு மொத்தம் நூறு கோடி ரூபாயை இதர்த்க்காக நிவாரத்தொகையாக ஒதுக்கியுள்ளது என்று அறிவித்துள்ளார்கள். பாதிக்கப்பட்ட பதிமூன்று லட்சம் மக்களுக்கும் இந்த நூறு கோடி ரூபாய் பணம், பிரித்துக்கொடுத்தாலே ஆளுக்கு நூறு ரூபாய் கூட வராது. ஒரு நாளைக்கு நூறு ரூபாய் பணத்தில் மூன்று வேலையும் சாப்பிடவேண்டும். இந்திய பணத்தில் அது முப்பது ரூபாய்க்கு சமம். அதை வைத்துக்கொண்டு எப்படி அரைவயிறை கூட நிரப்பமுடியாதே?அந்த அளவுக்கு மக்கள் மீது அக்கறை இல்லாத ஒரு அரசு அங்கே இருக்கிறது. அதிலும் மூன்று கிழக்கு மாவட்டங்களிலும் வாழும் தமிழர்களான முஸ்லிம்களும், இந்துக்களும், கிறித்துவர்களும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் ஆயிரம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அந்த முகாம்கள் பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு முகாமில் குறைந்தது இரநூற்றைம்பது குடும்பங்கள் தங்கியுள்ளனர். அதாவது ஆயிரம் தமிழர்கள் தங்கி உள்ளனர். அதில் இந்துக்களும், முஸ்லிம்களும் கலந்தே இருக்கின்றனர்.போர் நேரத்தில் தமிழர்களாக இருக்கும் முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் பியாவை ஏற்படுத்துவதில் வெற்றிபற்றிருந்த சிங்கள அரசு இப்போது இயற்கையின் பேரழிவால் இந்துக்களும், முச்ளிம்க்களுமாக இருக்கும் தமிழர்கள் மத்தியில் ஒரே முகாமில், ஒன்றாக தங்கி ஒன்றாக உணவு உண்டு ஒன்றாக பேசி பழகி வாழ்ந்துவரும் நிலைமையை சகித்துக்கொள்ள முடியவில்லை. போர்தான் தமிழர்களை கொடுமையாக பதித்தது என்றால், சுனாமி தான் இடையில் பெரும் பாதிப்பை தமிழர்களுக்கு ஏற்படுத்தியது என்றால், அதைவிட இப்போது பெய்த இந்த மழை மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு மூன்று மாவட்டங்களிலும் மொத்தம் மூவாயிரம் தமிழர்களின் நிலைதான் உள்ளதிலேயே அதிக கடினப்பாட்டுடன் இருக்கிறது. அவர்கள் மத்தியில் மக்கள் சார்பு அமைப்புகள் தான் உதவிகளை செய்து வருகின்றன. அதில் கிழக்கு மாகாண வெள்ள அனர்த்த முகாமைத்துவ குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. அதற்கு அனுப்பபடுகின்ற நிதிகளை அது பொருள்கள் வாங்கி கொடுத்து இடம் பெயர்ந்துல்லோரை கவனித்து வருகிறது. அதில் கணிசமாக முஸ்லிம் ஆர்வலர்களும் செயல்படுகின்றனர். சிங்கள சூழ்ச்சியால் பிரிக்கப்பட்ட முஸ்லிம், இந்து சகோதரர்கள் இங்குதான் சேர்ந்து உதவிகளை செய்வதும், சேர்ந்து அமர்ந்து உண்பதுமான இணக்கம் ஏற்பட்டுவருகிறது.
இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட இடரை பயன்படுத்தி தமிழ் இனத்தை மேலும் அழிக்க சிங்கல பேரினவாத அரசு திட்டமிட்டுவருகிறது.
அதேசமயம் பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் இலங்கைக்கு அதிகமாக வரத்தொடங்கிவிட்டன. அப்படி வருகின்ற நிருவனகளை தங்களுடைய தென்னிலங்கை பகுதியில் இறங்கவைத்து சிங்களர்கள் வசிக்கும் தென்னிலங்கையை வளமாக்க வேண்டும் என்று ஆள்வோர் இனி செயல்படத்தொடன்கினர். ஆனால் அந்த பன்னாட்டு மூலதன நிறுவங்கள் அந்து இறங்கும்போதே அவர்களுக்காக ஒதுக்கப்படும் இடங்களில் சிங்கள மக்களை, அப்பாவி மக்களை, ஏழை மக்களை இடம் பெயரச்செய்யவேண்டியதாயிற்று. இதுவே சிங்கள ஏழை, எளிய மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்த தொடங்கிவிட்டது. அந்த எதிர்ப்பிலிருந்து எப்படி தப்பிப்பது என்று இலங்கை அரசு இந்திய அரசிடமும், பன்னாட்டு மூலதன நிருவங்களிடமும் ஆலோசனை கேட்டது. அதற்கும் அந்த வல்லாண்மை சக்திகள் ஆலோசனை வழங்கினார்கள்.
அதாவது இலங்கை தீவில் சிங்களர் வசிக்கும் பகுதியான தென்னிலங்கையில் ஜே.வீ.பி. என்ற ஜனதா விமுக்தி பெரமுன என்று அழைக்கப்படும் ,'மக்கள் விடுதலை முன்னணி' அமைப்பு அல்லது கட்சி இருக்கிறது. இது மஹிந்த ராஜபக்சேவின் ஆளும் கட்சிக்கு பெரும் தொல்லையாக இருக்கும் ஒரு கட்சி. அதாவது இந்த ஜே.வீ.பி. கட்சி மகிந்தா முதல் முறை ஆட்சிக்கு வரும்போது, அவருடைய கூட்டணியில் இருந்தது. அதன்பிறகு அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மஹிந்த தன் பக்கம் இழுக்க தொடங்கிய பிறகு மஹிந்த எதிர்ப்பு கட்சியாக மாறிவிட்டது. அந்த கட்சி நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆயுதப்புரட்சியை இலங்கை தீவி நடத்தியது.சிங்களர் இளைஞர்கள் மத்தியில் இருந்த வறுமை, வேலையில்ல திண்டாட்டம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அந்த கட்சி அப்போது சே குவேரா வழியில் ஆயுத கிளர்ச்ச்சியை நடத்தியது.அதில் சிங்கள ராணுவம் செய்த கொலைகளில் வீட்டுக்கு ஒரு இளைஞர் கொல்லப்பட்டார். அவ்வாறு கோளை செய்யப்ப்பட்ட சிங்கள புரட்சியாளர்கள் ஒரு லட்சம் பேருக்கு அதிகமாக இருப்பார்கள். அந்த கட்சி மீண்டும் இந்த பன்னாட்டு மூலதன நிறுவங்களின் உள்நுழைவை எதிர்த்து, இடம் பெயர்ந்து தவிக்கும் சிங்கள ஏழை மக்களை பயன்படுத்தி மீண்டும் ஒரு கிளர்ச்சியை நட்த்திவிடக்கூடாது என்று வள்ளன்மை சக்திகள் மஹிந்த அரசுக்கு ஆலோசனை கூறின.
அதையொட்டி நஹிந்த அரசு புதிய தந்திரம் செய்தது. அதுதான் தென்னிலங்கையில், கட்டாயமாக இடம் பெயர் வைக்கப்பட்ட அப்பாவி சிங்கள மக்களை, வடக்கு, கிழக்கு தமிழர் பகுதிகளில் கட்டாய குடியமர்த்தல் என்ற முறையை அமுல்படுத்த தொடங்கிவிட்டது. அதாவது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல, வடக்கு-கிழக்கு தமிழர் பகுதிகளில் தமிழர்கள் பெரும்பான்மை அல்லது தமிழர்கள் மாட்டுமே வாழ்கிறார்கள் என்ற நிலைமையை மாற்றி அங்கும் சிங்களவர்களை கணிசமான அளவில் கொண்டுபோய் குடியமர்த்தி, அதன்மூலம் கலப்பு இனமாக அந்த வட்டார மக்களை மாற்றிவிட்டால், தமிழின எழுச்சியை, தமிழின விடுதலை உணர்வை, தமிழர் வாழும் பகுதி என்ற அடையாளத்தை மாற்றிவிடலாம் என்று சிங்கள பேரினவாத அரசு இப்போது மனப்பால் குடிக்கிறது.அதன்விளைவே மட்டகிளப்பு பகுதியிலும், அம்பாறை மாவட்டத்திலும் ஏற்கனவே செய்ததுபோல, திரிகோணமலையில் கணிசமாக சிங்களரை குடியமர்த்தியத்தை போல, யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும், மன்னாரிலும், முல்லைத்தீவிலும் இப்போது சிங்கள மக்களை கொண்டு சென்று குடியமர்த்திவருகிறது. அதேநேரம் சிங்கள ராணுவ வீரர்களின் குடும்பங்களையும் அந்த வடக்கு மாகான பகுதிகளில் குடியமர்த்தி வருகிறது.
ஆனால் சூழ்ச்சிகள் மூலம் தமிழின சுத்திகரிப்பை நடத்திவரும் சிங்கள பேரினவாத அரசான ராஜபக்சே அரசு, சிங்கள மக்களின் கோபத்திற்கும் உள்ளாகி, அந்த மக்களே தமிழின பெரும்பான்மை மக்களின் சுய நிர்ணய போராட்ட்டத்திற்கு ஆதரவாக வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஒத்துழைக்கும் ஒரு புதிய எழுச்சிக்கு வித்திடலாம் எனபதும் வரலாறு தெரிந்தவர்களுக்கு விளங்கி க்கொள்ளமுடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment