Wednesday, February 16, 2011

நிலமுதலைகளுக்கு, கடல் சார் பழங்குடி பற்றி தெரியுமா?

இரட்டை மடி மற்றும் சுருக்கு வலை என்ற தடை செய்யப்ப்பட்ட வலைகளை மீன் பிடிக்க பயன்படுத்த கூடாது என்பது தமிழகத்தில் மட்டுமல்ல, அனைத்து நாட்டளவிலேயே அமுலில் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள ஊழல் பிடித்த மீனவர் அல்லாத மீன்வளத்துறையின் அதிகாரிகள் தங்கள் பனிக்காலத்திர்க்குள் எவ்வளவு ச்ய்ருட்டலாம் என்ற நோக்கம் கொண்டவர்கள் கை நிறைய காசை வாங்கிக்கொண்டு அத்தகைய தடை செய்யப்ப்பட்ட வலைகளை பயன்படுத்துபவர்களுக்கு பல்லக்கு தூக்குகிறார்கள். கடலிலே இருக்கும் சூழலை பற்றியோ, கடலின் நீரோட்டங்கள் பற்றியோ, மீன்களின் வளர்ச்சி பற்றியோ, மீன்களை பிடிப்பதில் இருக்கவேண்டிய கட்டுப்பாடு, ஒழுங்குமுறை, மற்றும் விதிகள் பற்றியோ, வெவ்வேறு வகை மீன்களை வெவ்வேறு காலத்தில் பிடிப்பதற்கான வெவ்வேறு வகையான வலைகளை பற்றியோ எந்த அறிவும் இல்லாத அதிகாரிகள், மீன் வளத்துறையை ஆக்கிரமித்துள்ளனர். அதேபோல மீன்வளம் பற்றிய, மீன் பிடித்தல் பற்றிய அடிப்படை அறிவே இல்லாத அரசியல்வாதிகளும், இந்த நாட்டில் கடற்கரை தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்களாக, மற்றும் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அநேக காலங்களில் கடலை பற்றிய அறிவே இல்லாத மீனவர் அல்லாத மாற்று சமூகங்களை சேர்ந்தவர்கள் அப்படிப்பட்ட அமைச்சர்களாக வந்துவிடுகிறார்கள். சிலநேரம் மீனவர் சமூகத்தை சேர்ந்த மனிதர்களே அமைச்சர்களாக வந்தாலும் அவர்கள் விவரம் தெரிந்தவர்ஹளாக இருந்தாலும், தவறான அறிவியலுக்கு எதிரான வழிமுறைகளை கையாண்டு அதிகமான லாபத்தை சுரண்டலாம் என்ற லாப வெறி கொண்டவர்களாக இருக்கிறார்கள். அப்படித்தான் ஒரு அமைச்சர் இப்போது தமிழ்நாட்டு அமைச்சரவைக்கு கிடைத்துள்ளார்.
இவ்வாறு நிலம் சார்ந்த மனிதர்களுக்கோ, அதிலும் நிலம் சார்ந்த முதலாளிகளுக்கும், அதாவது நிலம் சார்ந்த முதலைகளுக்கு, கடல் சார்ந்த மக்களான மீனவர்கள் என்ற கடல் சார் பழங்குடிகள் பற்றிய அறிவே இருப்பதில்லை. அறிவு இருந்தாலே அதில் எப்படி ஊழல் அதிகமாக செய்து சொத்து சேர்க்கலாம் என்ற புத்தி கொண்ட இன்றைய உலகமயமாக்கல் காலகட்டத்தில், இயற்கை விதிகள் பற்றிய அறிவே இல்லாவிட்டால் எந்த மனச்சாட்சி உரத்தால் கூட இல்லாமல் இந்த முதலைகள் தவறு செய்கின்றன. அப்படித்தான் இங்கே கடல் சார் உலகத்தை இவர்கள் கொடுமை படுத்துகிரரகள். உதாரணமாக மீன் பிடித்தலில் பொதுவாக உலகம் முழுவதும் கில்நெட் வலையை பயன்படுத்துவார்கள். ஆனால் லாப வெறி பிடித்த தன்னலவாதிகள் இந்த தொழிலில் நுழைந்த பின், டிராலர் முறையை அறிமுகப்படுத்தி கொள்ளை அடிக்க தொடங்கினார்கள். இந்த டிராலர் முறை எல்லா மீனவர்களாலும் எப்போதும் எதிர்க்கப்படும் முறை. ஆனால் இன்றைய சாக்கடை அரசியலின் விளைவாக, ஊழல் பெருச்சாளிகள் அதிகாரிகளாக இருப்பதன் விளைவாக இந்த டிராலர் முறை பயன்படுத்தப்படுகிறது.
இலங்கை தீவில் தமிழ் மீனவர்களும், சிங்கள மீனவர்களும் டிராலர் முறையை பயன்படுத்துவதில்லை. அவர்கள் கில்நெட் முறையைத்தான் பின்பற்றுகிறார்கள். கேரளாவில் கடற்கரைகளில் டிராலர் முறையை பின்பற்றுவதில்லை. அவர்கள் கில்நெட் முறையைத்தான் பின்பற்றுகிறர்கள். ஆனால் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி தொடங்கி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் என்று எல்லா ஊர்களிலும் டிராலர் முறையை பின்பற்றி மீன் பிடிக்கிறார்கள். இந்த டிராலர் முறை என்பது கடலுக்குள் அடியாழம் வரை கருவி மூலம் வலையை கொண்டு சென்று, அரித்து எடுக்கும் தன்மை கொண்டது. இதுவே மீன்வலனகளை அடுத்த மீனவனின் தேவைக்கு ஏற்று கிடைக்கவிடாமல் கடலை உடனடியாக காலி செய்யும் தன்மைத்தது. ஆறு மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டு மீனவர் சங்கங்களை சந்திக்க வந்திருந்த இலங்கை மீனவர்களான தமிழ் மீனவர்களும், சிங்கள மீனவர்களும் இங்குள்ள விசைப்படகு மீனவர்களுடன் இது பற்றி ஒரு பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அந்த பேச்சுவார்த்தையில் இலங்கை மீனவர்கள் டிராலர் முறையை விட்டுவிடுங்கள் என்று வற்புறுத்தினார்கள்.
அதன்பிறகு ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் டிராலர் முறையில் இன்னும் எழுபது நாட்களுக்கு அதாவது இந்த ஆண்டிற்கு இந்த சீசன் காலத்தில் வேண்டுமானால் விடமுடியவில்லை என்பதால் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஆனால் எங்கள் அதாவது இலங்கை கடற்கரைக்கு ஐந்து மைல்களுக்கு [ கடல் மைல்கள்] அப்பால் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதேநேரம் அடுத்த ஆண்டிலிருந்து இத்தகைய டிராலர் பயன்படுத்தும் முறையை கைவிட்டு விடுங்கள் என்பதே வர்களது கோரிக்கையாக வைக்கப்பட்டது. அதை இங்குள்ள விசைப்படகு மீனவர் சங்கங்களும் ஏற்றுக்கொண்டு அதில் கையெழுத்திட்டனர். அதன்பிறகு சமீபத்தில் கடந்த மூன்று வாரமாக இலங்கை தமிழ் மீனவர்கள் இந்திய தமிழ் மீனவர்களிடம் இதை ந இணைவு படுத்தி டிராலர் வேண்டாம் என்று அறைக்கொவல் விடுத்து வந்தனர். அதன்பிறகும் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ஊழல் மீன்வளத்துறை அற்ற்ஹைகாரிகள், மற்றும் அரசியல்வாதிகளான ஆளும் கட்சிக்காரகளின் ஒத்துழைப்பில், அமைச்சரின் பங்களிப்புடன் இந்த சட்டவிரோத மீன்பிடிக்கும் முறை தொடரத்தொடங்கியது.
அதில் குறிப்பாக ராமேஸ்வரம் பகுதியின் மீன்வலத்த்டுரை துணை இயக்குனரான மார்க்கண்டன், இந்த ஆண்டுக்கான இலஞ்சத்தொகையாக இந்த சட்டவிரோத டிராலர்காரர்களிடம், ஆறு லட்சம் ரூபாயை பெற்றுள்ளார். அதேபோல நாகப்பட்டினம் பகுதியின் மீன்வளத்துறை அதிகாரிகள் ஐந்து கோடி ரூபாயை பெற்றுள்ளார்கள். இந்த பணத்தில் ஒரு பகுதி அமைச்சகம் வரை செல்வதால் அவர்களும் இவர்களுக்கு ஆதரவாக செயபடுகின்றனர். இத்தகைய சூழலில்தான் பிப்ரவரி பதினைந்தாம் நாள் யாழ்ப்பாணம் கடற்கரை வரை சென்று அதாவது அவர்கள் கேட்டுக்கொண்ட ஐந்து மெயில் தூரத்திர்க்குள்ளும் சென்று திராலரில் இரட்டை மடியையும், ஒற்றை மடியையும் கொண்ட வலைகளை வைத்துக்கொண்டு மீன் பிடித்த நாகப்பட்டினம் மீனவர்கள் நூற்று ஆறு பேரை அவர்களது பதினெட்டு படகுகளுடன் யாழ்ப்பாண மீனவர்கள் பிடித்து படித்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இத்தனை விவரங்களும் தமிழக அரசின் அதிகாரிகளுக்கும், அமைச்சருக்கும் தெரியும். ஆனாலும் இதை வைத்து ஒரு நாடகம் ஆடி தங்களது அரசியலை நடத்த முயற்ச்சிக்கிறார்கள்.

2 comments:

பாரம்பரிய மீனவன் said...

இழுவலையை(டிராலர்) இந்திய மீனவர்களுக்கு எழுபதுகளின் தொடக்கத்தில் அறிமுகம் செய்தது அப்போதைய காங்கிரஸ் அரசுதான். தமிழ்நாட்டு மீனர்வகளுக்கு தந்தவர் காமராஜர். எனவே இதில் குற்றவாளிகள் அன்றும் இன்றும் காங்கிரசாரே. இழுவலை மீனவர்கள் கடந்த 40 வருடங்களாக இழுவலை தொழில் செய்து பழகிவிட்டார்கள். அவர்களுடைய வலை மற்றும் படகின் விலை கிட்டத்தட்ட 50 லட்சம். எனவே இழுவலை தொழிலில் இருந்து பாரம்பரிய மீன்பிடித்தல் முறைக்கு திரும்புவது என்பது ஒன்றிரண்டு வருடங்களில் முடியாத காரியம். அது படிபடியாகத்தான் நடக்கும். மிக முக்கியமான விஷயம் இழுவலை(டிராலர்) என்பது இந்தியாவில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையல்ல என்பதும், இந்தியா முழுவதும் இழுவலை(டிராலர்) முறையில் மீன்பிடித்தல் நடைபெறுகிறது என்பதும், இரட்டைமடி,சுருக்குவலை இவைகள்தான் தடை செய்யப்பட்ட வலைகள் என்பதும் உங்களுக்கு தெரிந்த விஷயம்தான். இப்போது கைது செய்யப்பட்ட படகுகளில் இரண்டு படகுகள் மட்டுமே இரட்டைமடி படகுகள். மற்றவை சாதாரண இழுவலை படகுகளே. நீங்கள் சொல்ல வருவதுபோல் நமது மீனவர்கள் பாரம்பரிய தொழிலுக்கு மாறினாலும், நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட GAAT ஒப்பந்தத்தின் மூலம் நமது கடலில் அன்னிய நாட்டு கப்பல் முதலாளிகள் இழுவலை இழுத்து மீன்களை அள்ளிக்கொண்டு போகிறார்களே அதை தடுக்க என்ன வழி?
இழுவலை தொழிலுக்கும் மீனவர் படுகொலைகளுக்கும் சம்மந்தமில்லை என்பது உங்களுக்கு தெரிந்த விஷயம்தான். ஆனால் இந்த இழுவலை எதிர்ப்பு பிரச்சாரம் மூலம் இலங்கை அரசு, தான் செய்த 500 தமிழக மீனவர்களின் படுகொலையை நியாயப் படுத்தப் பார்க்கிறது. இந்த இலங்கை, இந்தியா கூட்டு களவாணித்தனத்தில் நாமும் பலியாக வேண்டாம்.

பாரம்பரிய மீனவன் said...

அரசுகள் அன்னிய செலவாணி அதிகம் ஈட்டுவதற்காக கொண்டுவந்த (இழுவலை போன்ற) திட்டங்களை சுட்டிக்காட்டி இழுவலை தொழில் செய்யும் மீனவர்களை ஊழல் வாதிகள் என்றும் கருணாநிதி சொல்வதுபோல் பேராசைக்காரர்கள் என்றும் சொல்வதை ஏற்று கொள்ள முடியாது.
மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதால்தனே சிங்களப் படை சுடுகிறது என்று தமிழ்நாட்டிலுள்ள சில பெருந்தன்மை பு _ங்கிகள் சொல்வதுண்டு. நீங்கள் தமிழக கடலோரங்களை எல்லாம் ஆலை கழிவுகளாலும், அணுசக்தி கழிவுகளாலும், அனல் சக்தி கழிவுகளாலும், கடலை நாசப்படுத்தும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களாலும் மீன் குஞ்சுகள் கூட பொரிக்க முடியாத அளவில் தமிழக கடலை நாசப்படுத்தி, தமிழக மீனவனை நிர்மூலமாக்கி சின்னாபின்னபடுத்திவிட்ட பின்பு, தமிழக மீனவனை பார்த்து குற்றம் குற்றம் சாட்ட தகுதி, அதிகாரம் இங்கே தமிழ்நாட்டில் எவனுக்குமில்லை. இது போதாது என்று இப்போது திருப்பூர் சாய ஆலை கழிவுகளை குழாய் அமைத்து கடலூரில் கடலில் கலக்க போகிறார்களாம்

Post a Comment