Tuesday, March 29, 2011

வைகோவின் தேர்தல் புறக்கணிப்புக்கு அர்த்தம் என்ன?

வைகோ தான் அங்கம் வகித்த அதிமுக கூட்டணியில் சரியான பங்கு கொடுககவில்லை என்ற மனக்குறைக்கு பிறகு வெளியேறினார் எனபதும், அதையொட்டி தேர்தல் புறக்கணிப்பு என்று அவர் அறிவித்ததாக ஊடகங்களில் வந்ததும் நமக்கு தெரியும்.. ஆனால் அவர் அவரது கட்சியின் தீர்மானத்தில், மதிமுக தேர்தலில் இந்தமுறை போட்டியிடப்போவதில்லை என்றுதான் தெரிவித்திருந்தார்.அப்போதும் பலர் வருத்தப்பட்டது என்னவென்றால், மதிமுக தனித்து போட்டியிட்டிருக்கலாமே என்பதுதான். அதற்கும் வைகோ பதில் கூறியிருந்தார். அதாவது அப்படி தனித்து போட்டியிட்டிருந்தால், திமுக--காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து எதிர்க்கட்சி கூட்டணியின் வாக்குகளை பிளவு படுத்துவதற்க்காக நிற்பதாக அபாண்டமாக பழி சுமத்தி விடுவார்கள் என்று அறிவித்தார்.

வைகோவின் அந்த வாக்குவாதம் நமக்கும் ஏற்புடையதாக இருந்தது. இப்போது புதிய செய்தி மக்களை குழப்ப வந்திருக்கிறது. வைகோ தனது கட்சிக்காரர்களிடம் வேறுவிதமான வழிகாட்டலை கொடுப்பதாகவும், அது அதிமுக கூட்டணியின் அல்லது அதிமுக கட்ச்சியின் வெற்றி வாய்ப்பை பாதிப்பதர்க்காக திட்டமிடப்பட்டிருப்பதாகவும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதற்காக அதிமுகவும், காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் தொகுதிகளில் கூட அதிமுகவை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சியை ஆதரிக்குமாறும் அவர் வழிகாட்டல் கொடுக்கிறார் என்பதே அந்த அதிர்ச்சி செய்தி.இதி நம்பகமாக இல்லை எனபதுதான் நமக்கு வைகோ மீது உள்ள பற்று காட்டுகிறது.

ஆனால் வருகின்ற செய்தி என்னவென்றால், கோவை பகுதியில் வைகோ கொடுத்த வழிகாட்டல்படி, அதிமுகவை தோற்கடிக்க திமுக வேட்பாளரான கண்ணப்பனை ஆதரிக்க சொல்லியிருக்கிறார் என்றும், அதை அங்குள்ள மதிமுக கட்சிக்காரர்கள் எதிர்கிறார்கள் என்றும் கூறுகிறர்கள். அதாவது கண்ணப்பன் மதிமுக கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டு திமுக சென்றவர் என்றும் அவரை எப்படி ஆதரிக்க முடியும் என்றும் கேட்கிறார்களாம். அப்படியானால் காங்கிரஸ் கட்சி துரோகம் செய்ததால், தமிழர்கள் அதை தோற்கடிக்க வேண்டும் என்று கூறியது என்னாயிற்று? பார்வதியம்மாளின் சாம்பலை கரைக்க முன்னிற்கும் வைகோ எப்படி அந்தம்மாளின் சிகிச்சைக்கு கூட வழிகொடுக்காத திமுக, காங்கிரஸ் கட்சிகளை ஆதரித்து அதேநேரம் செயல்படுத்த உத்தரவிடமுடியும்? அப்படி வைகோ செய்திருப்பார் என்று நாம் நம்ப வில்லை.


தமிழீழ தேசியத்தாய் பார்வ்தி அம்மாளின் சாம்பலை சென்னையில் மட்டுமின்றி, குமரியிலும், கரைக்க முற்படும் வைகோ எப்படி அந்த சாம்பலுக்கு துரோகம் செய்த கருணாநிதியையும், சோனியாவையும் ஆடஹ்ரிக்க முடியும்? நடக்கவே நடக்காது என்பதே நமது வாதம். வைகோவிற்கு இப்போது ஜெயலலிதாதான் முதல் எதிராக டேஹ்ரிகிறார் என்றும், ஆகவே இது நடந்திருக்கும் என்றும் கூறுவோரிடம் நமக்கு பல கேள்விகள் எழுகின்றன. ஈழத்தில் தமிழினத்தை அழிக்க வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்த காங்கிரஸ் தலைமையை எப்படி வைகோ ஆதரிக்க சொல்லமுடியும்? இன ழிப்பு போரை நடத்தியது இந்திய அரசுதான் என்று அறிவித்த வைகோ எப்படி அதை மாற்றி எழுத தனது அணிகளுக்கே கூறமுடியும்? அதிமுகவிற்கு நாம் யார் என்று காட்டவேண்டும் என்றால், அதற்கு அவர்களை பல இடங்களிலும் தோற்கடித்து காட்டுவதே சிறந்த வழி என்றி அவர் கூறியதாக கூறுகிறார்கள். அப்படி கூறியிருந்தால் அதை எப்படி மதிமுக தொண்டர்கள் ஏற்பார்கள்?

வைகோ தான் பார்வதியம்மாள் சாம்பலை எடுத்க்துக்கொண்டு அமெரிக்கா செல்வதாக அந்த தகவல்கள் கூறும்போது அவர் எப்படி தேர்தலில் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுப்பார் என்பதே நமது கேள்வி.இது திமுக தலைவரின் கெட்டிக்காரத்தனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பிழையான முத்திரை குத்த்டுதலா என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. இந்த சந்தேகங்கள் தீர தமிழின அழிப்புக்கு துணை நின்ற காங்கிரஸ்-திமுக கூட்டணியை தோற்கடிக்க கூறி வைகோ அறிவிக்கவேண்டும் என்று கூறுவோரும் உண்டு. அதைத்தான் சீமான் உறுதிபட கூறுகிறாரே? அப்படிப்பட்ட கொள்கையில் ஊறி எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட வைகோவும் தொண்டர்கள், மதிமுக கட்சிக்காரர்கள் உடனடியாக சீமானின் கட்சிக்குதாவிவிட மாட்டார்களா?

7 comments:

ராஜேஷ், திருச்சி said...

தி மு க வை விட , கடைசி வரை தலைவரை வைத்து கழுத்தறுத்த, அசிங்கபடுதிய ஜெயலலிதா தோல்வி காண வேண்டும்.. உண்மையான ம தி மு க தொண்டன் பல இடங்களில் அ தி மு க விற்கு எதிராக வாக்களிப்பான் , 30 - 35 தொகுதியில் அ தி மு க வின் தோல்வியை ம தி மு க உறுதி செய்யும்.. சத்தியம் . .எங்கள் பகுதியில் தி மு க விறகு வாக்களிக்க சிக்னல் வந்து விட்டது . ஜெயலலிதா ஒழிக

Unknown said...

ஜெவின் துரோகம் அனைத்தையும் மறக்கடிக்கவைத்துவிட்டது.அதிமுக தோற்க வேண்டும்.தோற்கும்.

Suresh Kumar said...

அட இங்கேயும் ராஜேஷ் திருச்சி வந்திருக்கிறாரா? இப்படியே ஒவ்வெரு பதிவிலேயும் போய் திமுகவிற்கு ஆதரவு கொடுக்கவும் வைகோவின் பெயரை கெடுக்கவும் போலியாக பொய் செய்திகளை கமெண்டாக போட்டு வருகிறீர்கள் .///// உங்கள் திருகு வேலைகள் தொடருங்கள் ///////

@ பதிவர் ////// வைகோவிடம் இருந்து எந்தவிதமான வாய்மொழி உத்தரவோ அதிகார பூர்வ உத்தரவோ தேர்தல் பற்றி தெரிவிக்க வில்லை . குட்டையை குழப்பி மீன் பிடிக்க ஒவ்வருவரும் ஆசை படுகிறார்கள் .

Suresh Kumar said...

. இந்த சந்தேகங்கள் தீர தமிழின அழிப்புக்கு துணை நின்ற காங்கிரஸ்-திமுக கூட்டணியை தோற்கடிக்க கூறி வைகோ அறிவிக்கவேண்டும் என்று கூறுவோரும் உண்டு. அதைத்தான் சீமான் உறுதிபட கூறுகிறாரே? அப்படிப்பட்ட கொள்கையில் ஊறி எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட வைகோவும் தொண்டர்கள், மதிமுக கட்சிக்காரர்கள் உடனடியாக சீமானின் கட்சிக்குதாவிவிட மாட்டார்களா? /////////////

இதில் ஏகப்பட்ட முரண்பாடுகள் காணப்படுகின்றன . சீமான் எங்கேயுமே வெளிப்படையாக திமுகவை எதிர்க்க வில்லை . அதே நேரம் மதிமுக இந்த தேர்தலிலிருந்து விலகி இருக்கிறது . மதிமுக தொண்டர்களுக்கு தெரியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது .

ராவணன் said...

திருச்சி ராஜேஸ் எந்த ஜந்துவிற்கு பிறந்தாரோ?

அவர் யாரென்று எனக்குத் தெரியாதா?

படித்துறை பாண்டி said...

விஜயகாந்தை துரத்திய அண்ணாவின் ஆவி!

ராஜேஷ், திருச்சி said...

சுரேசு - எங்கே நான் வைகோவை தவறாக பேசினேன் என்று சொல்ல முடியுமா?
ராவணா .. உன்னை எந்த ஜந்து பிறக்க வைத்தோ அதே ஜந்து தன் என்று வைத்துக்கொள்ளேன் .. யாரென்று தெரிந்தால் சொல்லேன்.. ஏன் இந்த வீண் சவடால்

Post a Comment