Saturday, May 7, 2011

வென்றால் வெளியே. தோற்றால் உள்ளேயா?

சீ.பி.ஐ. நீதிமன்றமும், அதில் வாய்தா கெட்ட சீ.பி.ஐயும் சேர்ந்து கனிமொழி பிணை விசாரணை முடிவை, மே பதினாலாம் தேதிக்கு ஏன் தள்ளிவைக்க வேண்டும்? அந்த அளவுக்கு இந்த நாடும், இந்த நாட்டின் உயர் புலனாய்வு நிறுவனமும், அதன் நீதிமன்றமும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் முடிவுகளை எதிர்பார்க்கும் கைப்பாவைகளா? என்ற கேள்வி எங்கு நோக்கினும் எழுந்துள்ளது. மே பதிமூன்றாம் நாள் தமிழக தேர்தல்முடிவுகள் வெளிவருகிறது. அதில் அதிமுக அணி பெரும்பான்மையுடன் வெற்றி பெரும் என்பது மக்களின் கணிப்பு. அதற்கு விரோதமாக ," நாங்கள் கடைசி நேரத்திலும், வாக்குக்கு ஐநூறு ரூபாய் குறைந்த பட்சம் கொடுத்துள்ளோம். அதனால் தேர்தல் முடிவுகள் இழுபரியாகத் தான் வரும்" என்று திமுக தரப்பு பரப்பி வருகிறது.

அதை பார்த்து காங்கிரஸ் தரப்பும் ஒரு போதை ஏறி நிற்கிறது. அப்படி இழுபறி நிலையில் திமுக தரப்பு வந்தால், கூட்டணி அமைச்சரவை என்பதுதான் உறுதி என்றும், அதில் காங்கிரஸ் துணை முதல்வர் பொறுப்பை வாங்கி கொள்ளலாம் என்றும் கருதி இத்தகைய ஏற்பாட்டை தனது செல்வாக்கில் உள்ள சீ.பி.ஐ. மற்றும் நீதிமன்றம் மூலம் செய்துவருகிறது. இந்த முடிவு நீதிமன்றத்தில் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, திமுக தலைவர்கள், குலாம் நபி ஆசாத்தை சந்தித்து, நீங்கள் கண்ணிமொழியை கைது செய்தால், நாங்கள் அமைச்சரவையை விட்டு விலகி விடுவோம் என்று எச்சரிக்கை செய்ததும் ஏடுகளில் வந்துவிட்டது. இந்த எச்சரிக்கைக்கு அடிபணிந்து காங்கிரஸ் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துள்ளது என்று நாடே ஒட்டுமொத்தமாக கூடி கூப்பாடு போடுகிறது.

ஏற்கனவே தி.மு.க. தங்களை பத்தொன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு மிரட்டுகிறது என்று கோபம் கொண்ட காங்கிரஸ், தமிழ்நாடு சட்டமன்ற போது தேர்தலில், திமுக தோற்கட்டும் என்று , தேர்தல் ஆணையத்திடம் கறாராக இருங்கள் என்பதாக கூறியிருந்தது அனைவருக்கும் தெரியும். அப்படி திமுக தோற்றால் தான், மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு அரசாங்க ஆட்சியில் மிரட்டல் வேலை செய்யாமல், ஒழுங்காக காங்கிரசை சார்ந்து நிற்பார்கள் என்பது காங்கிரஸ் கட்சியின் டில்லி தலைமையில் இருக்கும் வாதம்.. இப்போது தப்பி, தவறி திமுக சொல்வது போல, இழுபறி நிலையில் அவர்கள் கூட்டணி மூலம் அதிக அளவில் வந்துவிட்டால், அதை வைத்து கூட்டணி அமைச்சரவையில் பங்கு வாங்க வேண்டும் என்பது காங்கிரஸ் தலைமைக்கு ஏற்பட்டிருக்கும் புதிய ஆசை. அதற்கேற்றார்போல அவர்கள் காய் நகர்த்துவதுதான் இந்த மே பதினாலு கனிமொழி பிணை பற்றிய தீர்ப்பு என்ற முடிவு.

ஏற்கனவே கண்கியர்சுக்கு அறுபத்தி மூன்று தொகுதிகளை தரமாட்டேன் என்று சொன்ன கலைஞரை நிர்ப்பந்திக்க, ஒருபுறம் ஐந்து காங்கிரஸ் தலைவர்கள் அறிவாலயத்தில் கீழ் தளத்தில் அமர்ந்து பேரம் பேசும்போதே, இதே சீ.பி.ஐ. யை பயன்படுத்தி, இதே ஸ்பெக்ட்ரம் வழக்கிற்காக, விசாரணை என்ற பெயரில், தயாளு அம்மையாரையும், கனிமொழியையும் அதே அறிவாலய மேல்மாடியில், விசாரணை என்று கொக்கி போட்டு, அந்த நிர்ப்பந்தத்தில், கலைஞரை காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் அறுபத்தி மூன்று தொகுதி என்று ஒப்புக்கொள்ள வைக்கவில்லையா? அதே செயல்தந்திரம் தானே இப்போதும் தொடர்கிறது? இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் கண்கிரச்காரன் கையில் கிடைத்ததும் கிடைத்தது அதை வைத்து திமுகவை இந்த பாடு படுத்துகிறான்.

காங்கிரஸ் என்பது அந்த அளவுக்கு ஒரு மோசடியான அமைப்பு எண்பதை அவர்கள் இதில் பச்சையாக நிரூபிக்கிறார்கள். இப்போது கனிமொழி பின்னால் முழு கட்சியும் போய் நின்று விட்டது. அழகிரியும், தயாநிதியும் எடுத்த னைத்து முயற்சிகளும், கனிமொழியை தனிமை படுத்துவதில் வெற்றி பெறவில்லை. சென்ற 2009 நாடாளுமன்ற தேர்தலில், இதே ஸ்பெக்ட்ரம் பணம் டவேரா காரில் சென்றது என்றும், அறிவாலயத்திலிருந்து புறப்பட்டு செல்லும்போது ஒரு சிறு தொகையான ஐந்து கோடியை கடத்திய ஓட்டுனரை தேடி சாட்சி எடுத்து சீ.பி.ஐ. அவித்துல்லார்கள் என்றும் ஒரு ஏடு போட்டுவிட்டது. அந்த பணம் மட்டுமல்ல, அப்போது அறிவாலயத்திலிருந்து லார்ரி,லார்ரி யாக பணம் வெள்ளை கோணிகளில், எடுத்து செல்லப்பட்டதும், அதை மதியம் நேரத்தில் காவல்துறை பல சாலைகளிலும் அனுமதித்ததும் இனி யார் வெளியே கொண்டுவரப்போகிரரகள்?

அதேபோல இந்த முறை தேர்தலிலும் அதே மதிய நேரத்தில், சிறிய டெம்போ லாரிகளில், அதேபோன்ற வெள்ளை சாக்கு மூட்டைகளில், பணம் " கலைஞர் அரங்கத்திலிருந்து" அறிவாலயத்தில் எடுக்கப்பட்டு , பின்புற வழியான "வானவில்" பாதை வழியாக வெளியே சென்றதை யார் நிரூபிக்க போகிறார்கள்? இவை எல்லாமே ஸ்பெக்ட்ரம் பணம்தான் என்றால், உள்ளே இருக்கும் திமுக வின் கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராஜாவிற்கு முழு கட்சியும் நன்றி சொல்ல வேண்டுமே?

No comments:

Post a Comment