வழக்கம் போல, பேராசிரியர் சரஸ்வதி வீட்டில், மாலையில் சனிகிழமை "நாடு கடந்த தமிழீழஅரசு தோழமை மையம்" கூடியது. நடத்திய பேரணி பற்றிய " நிறை-குறை" பற்றிய ஆய்வு நடத்தியது. திட்டமஈட்ட காலத்திலிருந்து, துண்டறிக்கை வெளியிட்டது, அனுமதி பெற்றது, அணி திரட்டியது, எழுத்து பலகைகள் தயாரித்தது, சுவரொட்டி ஒட்டியது, கொலை செய்யப்ப்பட்ட மீனவர்களின் படங்கள் தயாரித்து அட்டைகளாக்கியது, துணி பதாகை தயாரித்தது, முழக்கங்கள் தயாரித்தது, எழுப்பியது, பேரணி நடத்தியது, ஊடகங்களை அழைத்தது, தமிழ் காட்சி ஊடகங்களில் அனைத்தும் ஒளிபரப்பியது, நியூ இந்தியன் எச்ப்றேஸ் தவிர எந்த ஒரு தமிழ், ஆங்கில அச்சு ஊடகங்களும் வெளியிடாதது, அதற்கான தடுப்பு சக்திகளை அடையாளம் கண்டது, அதையொட்டி அனைத்து ஊடக தலைமைகளையும் சந்திக்க திட்டமிடுவது, இணைய தள ஊடகங்களில் பல வகைகளில் சித்திகளையும், படங்களையும், அவரவர் வெளியிட்டது, போன்ற பல செய்திகளும் பரிமாறப்பட்டது.
கூட்டத்தில் பேராசிரியர் சரஸ்வதி, டாக்டர் பானுமதிபாச்கர், வழக்கறிஞர் பாண்டிமாதேவி, மணிமேகலை,பெதிக-தவசி, தமிழர் உலகம் காஞ்சி தமிழினியன், ச்வ்ரி, மீனவர் முற்போக்கு சங்க மா.கி, இந்திய மீனவர் சங்க தயாளன், தட்சிணா, அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்க ரூபேஷ், தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்க கோபலகிருஷ்ணன், திரைப்பட கலைஞர் சாத்தப்பன்,இந்திய தவ்ஹித் ஜமாத் மொய்தீன், த.தே.வி.இய. தோழர்கள்,ஊடகவியலாளர் மணி, பாலு, செல்வராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டியக்கம் காணும்போது, திட்டமிட்டதை கடந்து தனி நபர், அல்லது தனி அமைப்பு முன்னிலைப் படுத்த முயல்வதை தவிர்க்க உறுதி ஏற்கப்பட்டது. அதேபோல "தோழமை மையம்" கொண்டுள்ள பண்பாடான அந்த இடத்தில் திரட்டிய நிதியை அங்கேயே வெளியிட உறுதி செய்ய முடிவெடுக்கப்பட்டது. பேரணி இருபது நூறுகளை கடந்து திரண்டது பாராட்டப் பட்டது. பெண்கள் இயக்கங்களின் பங்கு அணிதிரட்டலில் மிகுந்து நின்றது. மீனவர் சங்கங்களும், மீனவ பஞ்சாயத்துகளும், அதிக அளவில் திரண்டது பாராட்ட தக்கது. முஸ்லிம் அமைப்புகளான " மனித நேய மக்கள் கட்சி" " தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்" " இந்திய தவ்ஹித் ஜமாத்" ஆகியவை தமிழ் உணர்வுடன் வேகமாக முழக்கமிட்டு, கொடிகள் பிடித்து வந்தது பாராட்டப் பட்டது. "நாம் தமிழர் இயக்கம்", " புதிய தமிழகம்", " தமிழ் தேசிய விடுதலை இயக்கம்", காஞ்சி மக்கள் மன்றம், மே 18 இயக்கம்,மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள், கலந்து கொண்டது பாராட்டப் பட்டது.
மின்சார இயக்கத்தில் ஒலிபெருக்கி வைத்திருக்க வேண்டும் என்று உணரப்பட்டது. துனடரிக்கை சிறியதாக இருந்திருந்தால் பொதுமக்கள் படிக்க ஏதுவாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.அழைப்பு கொடுத்தான் வார இயலாத கட்சிகள், அமைப்புகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது "தோழமை மாயம்" கட்டப்பைப்பு கட்டும்பணியை செய்ய பலரும் வலியுறுத்தினர். " நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்" மீது எழுந்துள்ள கேள்விகளும் விவாதிக்கப் பட்டது. அதன் செயல்களை வைத்துதான் எந்த ஒரு அமைப்பு பற்றியும் கருத்து கொள்ள முடியும் என்று ஏற்கப்பப்ட்டது. "நா.க.த.ஈழ.அரசு." செயல்பாடுகளின் விளைவு ஐ.நா. அறிக்கை வெளிவர உதவியதும் பாராட்டப் பட்டது..
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை மீது "கையெழுத்து இயக்கம்" நடத்தி, "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்" பெற்றுக்கொள்ள அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான படிவங்கள் விநியோகிக்கப்பட்டன. மே 12 முதல் 18 வரை, "கருப்பு பட்டை" அணிய திட்டமிடப்பட்டது. " முள்ளிவாய்க்கால் படுகொலைகளை " யொட்டி, கண்டன கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டது.மே 16 இல், "வடபழனி" யிலும், மே 17 இல் " ராயபுரம்" பகுதியில் மீனவர் சங்கங்கள் பொறுப்பிலும், மே 18 இல் காஞ்சியில் "தமிழர் உலகம்" சார்பிலும், " தோழமை மையம்" கண்டன கூட்டங்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மே 18 இல் "பெரியார் தி.க." சென்னையில் நடத்தும் கண்டன கூட்டம் பற்றியும் தெரிவிக்கப்பட்டது. மேற்கொண்டு "கையெழுத்து இயக்க" பணிகள் முடுக்கி விடப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment