Sunday, May 8, 2011

கோத்தபாயேவை சந்திக்க நிரூபமாராவும், சீவசங்கர்மேணனும் ஏன் போகணும்?

வருகிற மே 13 ஆம் நாள், .கொழும்பு சென்று, இந்திய அரசின் வெளிவிவகார துறையின் செயலாளர் நிரூபமா ராவ், மற்றும் " தேசிய ஆலோசனை குழு" தலைவர் சிவசங்கர் மேனன் ஆகியோர் சந்திக்க இருக்கிறார்கள். இந்த திடீர் சந்திப்பு ஏன்?.யார் இந்த கோத்தபாயே? இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடந்த, நான்காவது வாணி போரில், " பெரும் போர் குடர்ந்கள்" நடந்ததாக இன்று ஐ.நா. நிபுணர் குழு வெளியிட்டதால் ஒரு பர,பரப்பு உலக சமூகம் மத்தியல் கிளம்பியுள்ளது. அந்த "போர்குற்றங்களை" இழைத்தது என்று, இலங்கை அரசத்தலைவர் மஹிந்த ராஜபக்சே குற்றம் சாட்டப்பட்டாலும், களத்தில் நடந்த அனைத்து சிங்கள ராணுவ, "தமிழின அழிப்பு" மோசடிகளுக்கும் நேரடி பொறுப்பாக இருப்பவர், இலங்கையின் பாதுகாப்பு செயலாளரான " கோத்தபாயே ராஜேபக்சே" என்ற மஹிந்த ராஜபக்சேவின் அன்பு தம்பிதான்.

இந்த கொடிய மனிதனை ஐ.ந. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இலங்கை "போர்குற்ற அறிக்கை" பற்றிய விவாதம் வருவதற்கு முன்னால், எதற்காக இந்திய அரசின் முக்கிய முடிவுகளை எடுக்கும், மற்றும் முக்கிய முடிவுகளை அரங்கேற்றும் இரண்டு முக்கிய அதிகாரிகள் கோத்தபாயேவை சந்திக்க வேண்டும்? நிரூபமா ராவ் இந்திய வெளிவிவகார செயலாளர். அவர் இந்த நேரத்தில் இலங்கை அரசை அனைத்து நாட்டு சமூகத்திலிருந்து காப்பாற்ற ஆலோசனை கொடுக்க போகிறாரா? என்ற கேள்வி எழுகிறது. அதையும் தாண்டி, "சிவசங்கர் மேனன்" இந்த ஈழத்தமிழர் இன அழிப்பு போரில் ஒரு முக்கிய பங்காளி. அந்த முக்கிய போர்குற்ற பங்காளி இப்போது அங்கே சென்று, இந்திய அரசின் "போர்குற்ற பங்கை" மறைக்கவோ, இலங்கை அரசின் போர்குற்றங்களை திசை திருப்பி விடவோ ஏதாவது சதி திட்டங்களை ஆலோசிப்பதற்கு செல்கிறாரா என்ற கேள்வி தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


அதற்கு அவர்கள் தேர்ந்துடுதுள்ள நாள் மே 13 . இது மேலும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. அதாவது ஈழத்தமிழர் மீதான இன அழிப்பு நடவடிக்கைகளில், இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில்தான் ஈழரை கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் கொந்தளித்தால் இந்திய அரசு "தமிழின அழிப்பை" வெற்றிகரமாக செயல்படுத்த முடியாது என்றும், ஏற்கனவே இந்திய உளவு துறைகள் மத்திய அரசுக்கு தெளிவுபடுத்தி இருந்தன. அதை ஒட்டி, மத்திய அரசும் தமிழ்நாட்டு ஆள்வோருக்கு முக்கியத்துவம் தந்து, அவர்கள் மூலம் அனைத்து ராஜபக்சே ஆதரவு பணிகளையும் செய்து, இன அழிப்பு போரை ஒரு கட்டம் சாதித்துவிட்டது. . அதில் நேரடியாக ராஜபக்சேவும், தமிழக முதல்வர் களிஞருக்கு கடிதம் எழுத, அதை அடிப்படையாக வைத்து கலைஞரும், பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைக்க என்ற கதைகள் அரங்கேறியது. ராஜபக்சே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்ப சொல்லி, இந்திய தலைமை மைச்சர் மன்மோகனுக்கு கடிதம் அனுப்பவில்லை. மாறாக தமிழக முதல்வருக்கே கடிதம் அனுப்பினார். அது வெற்றியும் பெற்றது. காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறப்பினர்கள் உட்பட கலைஞரின் கட்டுப்பாட்டில், வழிகாட்டலில் இலங்கை சென்று வந்ததும் முதல் அறிககையை கலைஞரிடம் காட்டிவிட்டே டில்லி சென்றதும் நடந்த கதை.


அந்த அளவுக்கு தமிழ் பேசி,பேசியே வளர்ந்த ஒரு இயக்க தலிவரையே கைக்குள் போட்டு தனது சதிகளை நடத்திட ராஜபக்சேவிற்கு ஆலோசனை வழங்கியவர்களும் இதே டில்லி அதிகாரிகள்தான்.இப்போது பதின்மூன்றாம் நாள் அவர்களுக்கு ஏன் இந்த அவசரம்? அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாள். டில்லிக்கு ஒரு பெரும் சந்தேகம். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு, திமுக கூட்டணி வெற்றிபெற்று வராமல், அதிமுக கூட்டணி வெற்றிபெற்று வந்துவிட்டால், இலங்கை பிரச்சனையை எப்படி சமாளிப்பது? ஏற்கனவே அதிமுக தலைவி செல்வி.ஜெயலலிதா தனது அறிக்கைகளில் தெளிவாக ஐ.நா. அறிக்கை பற்றி குறிப்பிட்டுள்ளார். டில்லி அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அதில் போர்க்குற்றவாளி ராஜபக்சே மற்றும் பொறுப்பாளர்களை, " அனைத்து நாட்டு விசாரணைக்கு உட்படுத்த" மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்காக தேவைப் பட்டால் " இலங்கை அரசின் மீது பொருளாதார தடையை" அறிவிக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளார். இதை மத்திய அரசு கவனமாக் கவனித்துள்ளது.


அதன்விளைவாக தேர்தல் முடிவு வெளியாகும்போது, தங்களை கேள்வி கேட்கும் அரசு தமிழ்நாட்டில் அமையும்போது, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்த இந்த இலங்கை பயணத்தை இந்திய முக்கிய அதிகாரிகள் மேற்கொள்வதாக தெரிகிறது. தமிழ்மக்கள் என்ன செய்யப்போகிறோம்? .

No comments:

Post a Comment