Monday, May 9, 2011

யாழில் சிங்களவன் நடத்தியதை சென்னையில் தமிழன் நடத்தினால்?

முள்ளிவைகால் இறுதி போரில் பலாயிரகனகான தமிழர்களை கொன்று குவித்த சிங்கள ராணுவ கொடியவர்களை, தமிழர்கள் அல்லாத உலக மனித உரிமை ஆர்வலர்கள், ஐ.நா. நிபுணர் குழு மூலம் அம்பலப்படுத்தியிருந்தனர். அதாவது பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள். பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் சிங்களர்கள். பாதிக்கப்பட்ட தமிழர்கள் சாத்வீக வழியில், தங்கள் கோரிக்கைக்கு ஒரு அடிப்படையாக ஐ.நா. நிபுணர் குழு முன்வைத்துள்ள " போர்குற்ற அறிககையை" வைத்துக்கொண்டு அதை அமுல்படுத்துங்கள் என்று தமிழ்நாடு முழுவதும், ஏன் இந்தியா முழுவதும் கையெழுத்து வாங்குகின்றனர். ஆயுதம் தூக்கி, எதிரியை ஓட, ஒட விரட்டிய கரங்கள் இன்று கைகளில் தாள்களை ஏந்தி, கையெழுத்து வாங்கும் நிலைக்கு தங்களை இறக்கிகொண்டுள்ளனர். அதை கோழைத்தனம் என்று சிங்கள வெறியர்கள் எண்ணிவிட்டார்கள் போலும்.

உலகம் முழுக்க உள்ள தமிழன் கோழைகளாக சிங்கள வெறியன்களுக்கு, பட்டிருக்கிறது போலும். அதனால் பாதிப்பை ஏற்படுத்திய சிங்கள வெறியர்கள், தாங்கள் செய்த தவறுகளை சுட்டிக் காட்டும் ஐ.நா. அறிக்கைக்கு எதிராக கோபம் கொந்தளிக்க பேசிவருகிறார்கள். அதுமட்டுமின்றி ஐ.நா. அறிக்கைக்கு எதிராக கையெழுத்து வாங்கும் வேலையையும் தொடங்கி இருக்கிறார்கள். தங்கள் சொந்தப் பகுதியான தென்னிலங்கையை விட்டு, பாரம்பரிய தமிழர் பகுதியான "யாழ்பாணத்தில்" போய் இறங்கி, அங்கே தமிழர்களை அடித்து, துன்புறுத்தி, அதிலும் கத்தோலிக்க அருள் தந்தையை கூட விடாமல், துரத்தி சென்று தமிழர்களுக்கு எதிராக வலுக்கட்டயமாக கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள். பாதிப்பை ஏற்படுத்திய "சிங்களம்" தனது குண்டர் படை மூலம் இதை செய்யுமானால், பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர்கள் எதை செய்யவேண்டும் என்று வரலாறு எதிர்பார்கிறது?

இந்தியாவிலும், உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் தமிழர்கள், அந்தந்த பகுதியில் உள்ள சிங்களர்களை, நல்ல எண்ணத்தோடு அணுகி, சிங்கள போர்வெறியர்கள் செய்த குற்றங்களுக்கு எதிராக ஐ.நா. நடவடிக்கை கோரி, சிங்கள அப்பாவி மக்களிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்பதைத்தான் உலகமும், அதன் வரலாறும் எத்ரிர்பார்கின்றன என்பது நமக்கு புரிகிறது. அப்படி ஒரு அமைதி புரட்சியை, சிங்கள மக்களும் விரும்புவார்கள் என்பதால், எங்கெங்கு சிங்களர்கள் கண்களுக்கு தென்படுகிரார்களோ, அங்கெல்லாம் சென்று அவர்களது மனிதாபுமான் சிந்தனை மீது நம்பிக்கை கொண்டு அவர்களை நெருங்கி அணுகி, தமிழர்கள் கையெழுத்து வாங்கி அதை விரைவில் ஐ.நா.விற்கு அனுப்பிவைக்கவேண்டும் என்பதுதானே சரியான் கோரிக்கையாக இருக்கும்.

No comments:

Post a Comment