Monday, May 16, 2011

கல்வெட்டு கட்டினீர், கட்டிடத்தை முடித்தீரா?

ஐயோ. புதிய தலைமை செயலக கட்டிடத்தை, வளாகத்தை விட்டு,விட்டு பழைய தலைமை செயலக கட்டிடத்தையே, பயன்படுத்துவதா? ஆயிரக்கணக்கான கோடிகள் பணம் என்னாவது? என்று மிகுந்த அக்கறையுடன், அரசுக்கு நட்டம் ஏற்படுத்த விரும்பாத உள்ளங்கள், திமுக பக்கத்திலிருந்து மிகுந்த ஆதங்கத்துடன் குரல் எழுப்புகிறார்கள். நியாயமான குரல் போல தெரிகிறதே? என்று நாமு வினவினோம். அந்த " சொல்லப்படும் புதிய தலைமை செயலகம்" கட்ட ஒப்பந்தம் எடுத்த கீழக்கரை ஈ.டி.ஏ.முதலாளி சலாலுதீன், திமுக தலைமைக்கு மன்னிக்கவும் மன்னர் குடும்பத்திற்கு எவ்வளவு கையூட்டுடன் இவ்வளவு பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினார்? இப்படி ஒரு " ஊழல்" [ஆற்றிய விசாரணை தேவைப்படுகிறதே? அப்படி விசாரணையை தூண்டிவிடத்தான் ஒருவர் நீதிமன்றத்தில், " எப்படி மாற்றலாம் தலைமை செயலகத்தை" என்று வழக்கு போட்டிருக்கிறாரா?

இந்த " சலாலுதீன்" , ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறாரா? என்று சிபிஐ யை கேட்க வேண்டியிருக்கிறதே? அதுமட்டுமின்றி, வானளாவிய அளவில் புகழப்பட்ட " கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்த " சலாலுதீன்" கையில்தானே கொடுக்கப் பட்டுள்ளது? இப்படி பிரபலமடைந்த " ஊழல் மன்னரின்" கட்டுமானங்களை பயன்படுத்தினால், அதுவும் புதிய அரசின் அனைத்து தலைமை காரிடங்களுக்கும் பயன்படுத்தினால், நாளை சிபியை விசாரணை வரும்போது, அதாவது இந்த கட்டிட விசயமாக வந்துவிட்டால், அதற்கு பதில் சொல்ல வேண்டியதும் " புதிய அரசுதானே"? இது எதற்குடா வம்பு என்று எண்ணிவிட்டார்களோ என்னவோ?


ஆமாம். ஏதோ கட்டி முடித்துவிட்ட கட்டிடத்தை பயந்படுத்தவில்லைஎநப்துபொல இந்த மனிதர்கள் பேசுகிறார்களே? இன்னமும் பாதி கூட கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தை எப்படி " புதிய தலைமை செயலகம்" என்று ஆளும் கும்பல் அறிவித்து " திறப்பு விழா" கொண்டாடினார்கள்? அதற்கும் இந்த நாட்டின் பிரதமர், ல்கன்கிராஸ் தலைவர், கர்நாடக முதலைமைச்சர் ஆகியோர் வந்தார்கள்? திறப்பு விழா நடத்தி ஓராண்டுக்கு மேல் ஆகியும் ஏன் இன்னமும் முடிக்கப்படவில்லை அந்த கட்டிடம்? அதில் எதாவது ஊழல் இருக்கிறதா? கட்டப்படாத கட்டிடத்தை " கட்டிய கட்டிடம் போல" திரைப்பட கலைஞரை வைத்தூ " தோட்டா தாரணி" செட் போட்டு சினிமா போல அந்த முதல்வர் செய்தாரே? அது எல்லாம் எந்த கணக்கில் வரும்? அந்த செலகிகளை யார் ஏற்றுக்கொள்வது?

ஸ்பெக்ட்ரம் ஊழலில் பல்லாயிரக் கணக்கான கோடிகளை கொள்ளையடித்த " குடும்பம்" அந்த மக்கள் பணத்தை விரயம் செய்ததற்கு " நட்ட ஈடாக" திரும்ப செலுத்தவேண்டும் என்று தமிழ் மக்கள் கேட்க மாட்டார்களா? புதியா ஆட்சியாளர்களுக்கு, ஊழலை எத்ரித்து வாக்களித்த மக்கள், எப்படி இந்த " ஊழல்கள் மிகுந்த" கட்டப்படாத கட்டிடத்தை பயன்படுத்துவதை ஏற்பார்கள்? மாகளது விருப்பத்தை, புதிய ஆட்சியாளர்கள் மத்தித்தால், உடனடியாக இந்த " கட்டப்படாத கட்டிட" செங்கல்களை எண்ணுவதற்கு விசாரணை ஆணையம் போடவேண்டும். அந்த கட்டிடத்தில் சட்டமன்றத்தை, தலைமை செயலகத்தை நடத்தாமல் மட்டும் விட்டால் போதாது. " கல்வெட்டு கட்டிய முதல்வர், கட்டிடத்தை முடிக்காதது ஏன்" என்று விசாரணை ஆணையம் அமைத்து சோதிக்க வேண்டும்.

1 comment:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மக்கள் பணம்தானே இவர்களுக்கு என்ன கவலை...

Post a Comment