Wednesday, June 29, 2011

இந்தியாவின் அணில் சிங்களத்திற்கு பாலம் போடுகிறதா?

ஏற்கனவே "ரணில் என்ன டில்லியின் அணிலா?" என்று நாம் கேள்வி எழுப்பியிருந்தோம். மூன்று வாரங்களுக்கு முன்பு டில்லி வருவதற்காக சென்னை வந்த "ரணில் விக்கிரமா சிங்கே" என்ற இலங்கையின் எத்ரிகட்சியான "ஐக்கிய தேசிய கட்சி"யின் தலைவர் " அரசத்தலைவர் மஹிந்த ராஜபக்சேவிற்கு" ஆதரவாக சென்னை விமான நிலையத்தில் பேசினார். அதன்பிறகு டில்லி சென்றார். அங்கே "தெற்காசியாவின் விஸ்தரிப்புவாத ஆதிக்க சக்திகளின்" பிரதிநிதிகளை சந்தித்தார். அவர்கள் ஏற்கனவே "அமெரிக்காவின் உலக ஆதிக்கவாதத்திற்கு" இணங்கிப் போனவர்களாக இருந்தனர்.

அதனால் "ரணிலுக்கு அமெரிக்கா ஆலோசனைகளே இந்திய ஆலோசனைகள்" என்ற பெயரில் வழங்கப் பட்டன. அவர் அதை எடுத்துக் கொண்டு, கொழும்பு சென்றார். அங்கே தனது "ஐ.தெ.க." கட்சியின் செயற்குழுவில், "ராஜபக்சே உலக அரங்கில் காலியாய்விட்டதால், தங்கள் கட்சிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது" என்று கூறினாராம். அதற்கும் அங்கே எத்ரிப்பு வந்ததாம். ரணில் ஏற்கனவே சொல்லிக் கொடுத்திருந்த "சிங்கள மேலான்மை" வாதத்தில் திளைத்திருந்த உறுப்பினர்கள் " நமது கட்சி நலனை விட நாட்டு நலனே" முக்கியம் என்று எதிர்வாதம் செய்ததாக கூறுகிறார்கள்.ஆனாலும் "ரணில் முயற்சி செய்து ஐ.நா. நிபுணர் குழு அறிககையை சிங்கள மொழியில் மொழிபயர்த்து வெளியிடவும், சேனல்_4 படங்களை, சிங்கள மக்களிடம் கொண்டு செல்லவும் " திட்டமிடுவதாகவும் செய்திகள் வருகின்றன.


அதற்குள், ரணில், டில்லி ஆலோசனைப் படி, " இந்திய அரசின் விசுவாசியான" சந்திரிகா குமாரதுங்கேயுடன் ரகசியமாக பேசியதாகவும், அவரிடமும் "இந்திய அரசின் திட்டத்தை" கூறியதாகவும் தெரிகிறது. அதேபோல ஏற்கனவே "ராஜபக்சே குடும்பத்தால்" பாதிக்கப்பட்டுள்ள " ஜெ.வி.பி." யுடனும் , ரணில் ஆட்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. அமெரிக்கா சொல்லியும் கேட்காமல், இந்திய அரசு சொல்லியும் கேட்காமல் இருக்கும் "மகிந்தா" கும்பல், "சீனாவிற்கு" அதிகமான வணிகம் கொடுப்பதை "தாங்கமுடியாத" அமெரிக்காவும், டில்லியும், "ராஜபக்சேவிற்கு" பதில் ஆள் தேடுவதில் இத்தனை வேலைகளையும் திட்டமிடுகிறார்கள் என்றும் கேள்விப்பட முடிகிறது.


உலக அரங்கில் "காலியாகி வரும் ராஜபக்சே கும்பலை" நீக்கிவிட்டு " சிங்களத்தை" வேறு ஒரு வகையில் இவர்கள் காப்பாற்ற நினைத்தாலும், "தமிழர்களின் தாகத்தை" தணிக்க "தமிழீழம் மட்டுமே" தீர்வாக இருக்கும்.

No comments:

Post a Comment