Wednesday, June 29, 2011

உளவுத்துறைகளுக்குள் உள்ள மோதல் இதழியலாலரை கொன்றதா?

மும்பையில் ஊடகவியலாளர் ஜெ.டே கொடூரமாக சாலைப் பயணத்திலேயே குறிவைத்து சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற சம்பவம் பெரிய அளவில் பேசப்படுகிறது. முதலில் "சோட்டா ஷகீல்" மீது சந்தேகம் என்று ஏடுகளில் காவலர் கூறினார்கள். வெகுண்டெழுந்த "சோட்டா ஷகீல்" தன்னிடம்தான் இதே காவல்துறையினர் இந்த கொலை பற்றிய செய்திகளை எடுத்துக் கூக்க கூறினர் என்று ஒரு ஆங்கில ஏட்டிற்கு "மறைவிடத்திலிருந்து" பேட்டி அளித்தார். அப்போதே யார் இந்த சோட்டா ஷகீல்? என்று நமது வாசகர்கள் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். ஆனால் எழுப்ப வில்லை.


இப்போது "சோட்டா ராஜன்" குழுவினர் எழு பேர் இந்த கொலையை செய்தவர்கள் பிடிபட்டுள்ளார்கள் என்றும், அதில் மூன்று பேர் ராமேஸ்வரத்தில் பிடிபட்டதையும்,கொலையை எப்படி செய்தார்கள் எனவும் விளக்கி இருந்தனர். "சோட்டா ராஜன்" தொலைபேசியில் " ஒரு நடவடிக்கை" இருக்கிறது என்று கூறி, அதற்கான "பணத்தையும், கைத்துப்பாகிகளையும்" குறிப்பிட்ட இடத்தில் பெற்றுக் கொள்ளுமாறும் கூறியதை அவர்கள் பின்பற்றி, "கொள்ளப்படவேண்டியவரின்" மோட்டார்சைக்கில் என்னையும், ஆறடி உயரமானவர் என்ற அடையாளத்தையும் பெற்றுக் கொண்டு " செயலுக்கு" சென்றதாக கூறியிருந்தனர்.

அப்படியானால் சோட்டா ராஜன் யார் என்றாவது நமது மக்கள் வினவி இருக்க வேண்டும். அதையும் கேட்கவில்லை. பிறகு " ஜெ.டே என்ற அந்த ஊடகவியலாளர் ஏன் ஐரோப்பா சென்றார் என்றும், அங்கே யாரை சந்தித்தார் என்றும், பல கேள்விகளை ஏடுகள் வெளியிட்டார்கள். அதில் " தாவூது இப்ராஹீம்" கூட்டாளியை அவர் வெளிநாட்டில் சந்தித்தார் என்றும், சந்திக்க நேரம் கிடைத்தும் சந்திக்க வில்லை என்றும் செய்திகள் வெளியிடப்படுகின்றன. அதற்கும் சோட்டா ராஜன் கொலை செய்ய சொன்னதற்கும் என்ன சம்பந்தம்? தாவூது இப்ராஹிமிடம் அந்த ஊடகவியலாளர் "சோட்டா ராஜன்" பற்றிய விவரங்களை போட்டுக்கொடுத்திருப்பார் அல்லது போட்டுக்கொடுப்பார் என்ற சந்தேகத்தால் கொல்லப்பட்டார் என்று அந்த செய்தி விளக்குகிறது.


அப்படியானால் " தாவூது இப்ராஹிமிற்கும், சோட்டா ராஜனுக்கும்" அப்படி என்ன பகை? யார் இவர்கள்? ஏற்கனவே "துபாயில்" தாவூது இப்ராஹீம் மீது "சோட்டா ராஜன்" துப்பாக்கி சூடு நடத்த முயற்சித்தார் என்று ஒரு செய்தி சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தது நினைவுக்கு வரவேண்டும். அப்போதே சூடு பட்டது, "தாவூதின் தம்பி மீதுதான்" என்று விளக்கம் வந்ததையும் நினைவுக்கு கொண்டுவர வேண்டும். எதற்காக அவர்களுக்குள் சண்டை வரவேண்டும்? "தாவூது இப்ராஹிமின்" கூட்டத்தில்தான் "சோட்டா ராஜன்" ஒரு காலத்தில் இருந்தான். அதன் பிறகு "கும்பலுக்குள்" வந்த முரண்பாட்டில் வெளியேறினான். ஆனால் "சோட்டா ஷகீல்" தாவூது இப்ராஹிமின் கூட்டத்தில்தான் இன்னமும் இருக்கிறான்.

"தாவூது இப்ராகிம்" தனது "அனைத்து நாட்டு வணிக வலைப்பின்னலில்" பல உதவிகளை பாகிஸ்தானின் உளவு நிறுவனமான "ஐ.எஸ்.ஐ. இடம் பெற்றுக் கொல்வது இயல்பான காரியமாக இருக்கிறது. அதனால் இந்திய அரசால் தாவூது மீது ஒரு "அச்சம்" இருந்து வருகிறது. "தாவூது இப்ராகிம்" மும்பையின் பிரிக்க முடியாத "வணிக வலைப்பின்னலுடன்" இருப்பது இந்திய அரசிற்கு தெரியும். மும்பையின் "திரைப்படத்துறை, பங்கு சந்தை, ஊடகத்துறை, அரசியல் தலைவர்கள்" ஆகியோருடன் "தாவூதிற்கு" உள்ள பின்னிப்பிணைந்த உறவு தெரியாதவர்கள் இந்திய உளவுத்துறை அல்ல.

ஆனால் "அரசியல் காரணங்களுகாக" இந்திய அரசின் உளவுத்துறையான "ஐ.பி.யும், ரா வும்" இந்த பாகிஸ்தானின் உளவுத் துறையான "ஐ.எஸ்.ஐ. யை எதிர்ப்பதற்காக" தாவூது இப்ராஹிம்மை பகைத்துக் கொள்கிறார்கள். அதனால் தாவூதும் பாக் உளவுத்துறைக்கு அதிகமாக உதவுகிறார். இதனால் "தாவூதுடன் முரண்பட்ட சோட்டா ராஜனை" இந்திய வெளிவிவகார உளவுத் துறையான "ரா" தனது கையாளாக பயன்படுத்தி வருகிறது. அதில் ஏற்பட்ட " துப்பாக்கி சூடுதான்" துபாயில் நடந்த ஒன்று. இப்போது "சோட்டா ஷகீல்" கதைக்கு வருவோம். அவர் இன்னமும் "தாவூதின் கும்பலில்" இருப்பவர். அதனால்தான் இந்த கொலையில் "சோட்டா ராஜன்" சம்பந்தப்பட்டது தெரிந்த உடனேயே "சோட்டா ஷகீலை" காவல்துறை அணுகி உதவி கேட்டது.

உதவியும் கேட்டுவிட்டு, தனக்கு எதிராக "கதையை" மாற்றிவிட காவல்துறை முயற்சித்த போதுதான் "சோட்டா ஷகீல்" ஊடகம் மூலம் பதிலடி கொடுத்தார். இப்போது கொலையை செய்தது "சோட்டா ராஜன்"கும்பல்தான் என்று காவல்துறையே ஒப்புக்கொள்ளவேண்டிய நிலைமை. ஏன் என்றால் கொள்ளப்பட்டது ஒரு "ஊடகவியலாளர்". சோட்டா ராஜன் மீது சந்தேகப்பட்டால் "சோட்டா ஷகீலிடம்" உதவி கேட்பது என்ற நிலையில்தான் "காவல்துறை" செயல்படுகிறது எண்பதை இந்த இடத்தில் நாம் புரிந்து கொள்ளவேண்டும். இரண்டு " நிழல் உலக தாதாக்கள்" இருந்தால் இருவரையும் ஒழிக்க முடியாத காவல்துறை, ஒருவர் பற்றி ஒருவரிடம் செய்தி எடுப்பார்கள் எண்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏன் இரண்டு "நிழல் உலக தாதாக்களையும்" காவல்துறையால் ஒழிக்க முடியவில்லை? இரண்டு கும்பலும், "அரசியல்வாதிகளின்" அரவணைப்பில் மட்டுமே, காவல்துறையின் பெரிய அதிகாரிகளது துணையில் மட்டுமே, பவனி வருபவர்கள். அதானால் இந்த "அதிகாரவர்க்கம்" என்றைக்குமே "நிழல் உலக தாதாக்களை" ஒழிக்காது. அதேநேரம் அவர்களுக்குள் "மோதலை"உருவாக்கி அதில் பிழைப்பு நடத்துவார்கள். இங்கே " சோட்டா ஷகீல்" எங்கே இருந்து "செயல்படுத்துகிறார்" என்பது வெளியே தெரியாது. அதேபோல "சோட்டா ராஜன்" எங்கேயிருந்து "செயல்படுத்துகிறார்" என்பதும் யாருக்கும் தெரியாது.


ஆனால் அது எல்லாமே "இந்திய உளவுத்துறையான "ரா" மற்றும் "ஐ.பி." யின் பெரிய அதிகாரிகளுக்கு தெரியும். ஆனாலும் அவர்கள் "பிடிக்க மாட்டார்கள்" தாங்கள் தங்களது முதலாளிகளான "இந்திய அரசிற்கு" சில அவசியமான "வன்முறை வேலைகளை" செய்வதற்காக அந்த "தொடர்புகளை" தங்களிடமே வைத்துக் கொள்வார்கள். அதாவது "அரசின் இந்த உளவுத்துறைகள்" இயங்கும் "நிழல் தாதாக்களை" விட கொடியவர்கள். ஏன் என்றால் "தாதாக்கள்" மக்களிடம்தான், மக்கள் மத்தியில்தான் வாழவேண்டும். ஆனால் "உளவுத்துறை" குண்டர்கள் "நமது வரிப்பணத்தில்" எங்கே வேண்டுமானாலும் "மேட்டுக் குடியாக" வாழலாம்.

இப்போது "தாவூதுக்கு சோட்டா ராஜன்" பற்றிய தகவல்களை கூறுவார் என ஒரு ஊடகவியலாளர் சுடப்பட்டு கொள்ளப்பட்டது வெளியே வந்திருக்கிறது. இதே கதையில் அந்த ஊடகவியலாளர் பற்றியும் பல செய்திகள் உண்டு. அதை அடுத்த கட்டுரையில் காணலாம்.

No comments:

Post a Comment