Monday, August 1, 2011

நிருபமாராவ் இந்தியரா? சிங்களரா?

இந்தியாவின் வெளிவிவகாரத் துறையின் இதுவரை செயலாளர் நிரூபமா ராவ், இந்தியக் குடிமகள் என்ற உணர்வுடன் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்வி சமீபத்திய அவரது செயலால் எழுந்து நிற்கிறது. அவர் "வெளிவிவகார துறையின் செயலாளர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் எண்பதை சாதாரணமாக "தமிழர்களால்" எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஏற்கனவே "இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையில் டில்லியின் பங்கு முக்கியமானது" என்று உலகத்தமிழர்களுக்கு தெரிந்திருக்கும்போது, அதை "செம்மையாக" செய்து முடித்தவர்களில் இந்த நிரூபமா ராவும் முக்கிய பங்காற்றியவர். அதற்காகத்தான் அவருக்கு இப்படி அமெரிக்காவில் இந்திய தூதராக இருங்கள் என்று மத்திய அரசு பதவி உயர்வு கொடுத்திருக்கிறதா? என்பது தெரியவில்லை.

இலங்கையில் "போர்க்குற்றவாளி மகிந்தா" தொடர்ந்து பதவியில் இருக்க, இந்திய அரசு நிரூபமா ராவ் மூலம் அனைத்து ஏற்பாடுகளையும் ச்ய்துவருவதும் ஊர் அறிந்த செய்தி. அப்படிப்பட்ட "கெட்டிக்கார" தமிழர் விரோதி என்று சோதிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நிரூபமா ராவை ஏன் டில்லி அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக தூதராக அனுப்பவேண்டும்? அமெரிக்காவில் உள்ள ஈழத் தமிழர்கள் " நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை" நடத்திவரும் வேளையில் அதை எதிர்த்து ராஜபக்சே பல்வேறு இடையூறுகளை செய்தும் வெற்றிபெறாத சூழலில், "ராஜபக்சேவின் நண்பர்" என்று சோதிக்கப்பட்ட நிரூபமா ராவை டில்லி வாஷிங்க்டனுக்கு அனுப்புகிறது.

சிங்களத்தால் செய்யமுடியாத "காரியங்களை" சிங்களத்திற்காக செய்துதர டில்லி இசைந்திருக்கும் வேளையில், முதல் கட்டமாக "ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில்" ராஜபக்சே மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் இருந்து அந்த போற்குற்றவாலையை காப்பாற்றிய டில்லி அதிகாரவர்க்கம் தனது விசுவாசமான பிரதிநிதியை வாஷிங்க்டனுக்கே அனுப்பும் நிர்ப்பந்தம் இப்போது உருவாக்கி உள்ளது."போர்குற்றம் என்று வந்தால் உங்களை காட்டிக்கொடுத்துவிடுவேன்" என்று கூறும் ராஜபக்சேவை காப்பாற்ற அமெரிக்காவில் "ராஜபக்சே ஆதரவு சிங்கலார்கள்" பயன்பட மாட்டார்கள் என்பது டில்லிக்கு தெரிந்துவிட்டது.

அதனாலேயே "இந்திய தூதர்" என்ற முகத்துடன் "ராஜபக்சேவின் கைத்தடி" ஒருவரை அமெரிக்கா அனுப்ப டில்லி முடிவு செய்தது. அதற்கு "தகுதியான ஆள்" நிரூபமா ராவ்தான் என்பது அவர்களது கணிப்பு. சரி. பேசாமல் அமெரிக்கா போகவேண்டியதுதானே. அந்த "அம்மா" ஏன் கொழும்பு சென்று ராஜபக்சேவிடம் "பிரிவு உபசாரம்" வாங்கிவர வேண்டும்? தனது வெளிவிவகார துறை செயலர் பதவியில் இருக்கும்போது, கொழும்பு சென்றது "அதிகாரபூர்வமானது". அந்த பதவியிலிருந்து வெளியே வந்த பிறகு, ராஜபக்சே "பிரிவு உபசாரம்" செய்ய அழைப்பு விடுத்தாராம் இந்த நிரூபமா ராவ் சென்றாராம். இவாறு தந்து கொழும்பு பயணத்தை அவர் விளக்குகிறார்.

அதாவது "போர்க்குற்றவாளி" என்று உலகமே சொல்லும்போது, அந்த போர்க்குற்றவாளி" ஒரு பெரிய அதிகாரியை "பிரிவு உபசாரத்திற்கு அழைப்பு"விடுத்தார் எனபதும், அந்த உயர் அதிகாரியும் சென்று அதை ஏற்றுவந்தார் என்பதும் எதைக் காட்டுகிறது? நிரூபமா ராவ் தனிப்பட்ட முறையில் ராஜபக்சேவின் நண்பராக இருக்கிறார் என்பதும், அவருக்காக "தனிப்பட்ட முறையில் விசுவாசமாக இருப்பார்" என்பதும் இதில் புலப்படுகிறது. இவர் எப்படி அமெரிக்கா சென்று இந்திய நலனை பாதுகாப்பார்? இவர் சிங்கள, பவுத்த வெறி பிடித்த ராஜபக்சேவின் நலனை பாதுகாக்க "இந்தியா" பெயரை பயன்படுத்த போகிறாரா?

2 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

Thekkikattan|தெகா said...

நல்ல கேள்வி, விடை?

Post a Comment