சசிகலா வகையாறாக்கள் அந்த ஆளும்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அந்த பட்டியலில் சசிகலா,ம.நடராசன், மன்னார்குடி திவாகரன், டி.டி.வி.தினகரன், பாஸ்கரன், டாக்டர் வெங்கடேசன், சுதாகரன், ராவணன்,குலோத்துங்கன், மோகன் போன்றோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சசிகலா அதிமுக கட்சியின் உயர் செயற்குழு உறுப்பினர் என்பது முக்கிய செய்தி.ம.நடராஜன், சுதாகரன் போன்றவர்கள் ஏற்கனவே நீக்கப்பட்டவர்கள்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இது நபர்களை நீக்குவதற்காக வெளியிடப்பட்டஅறிவிப்பு அல்ல என்பதை அந்த அறிவிப்பின் அணுகுமுறையே வெளிப்படுத்துகிறது. இவர்களுடன் கட்சியில் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என்றும் வழக்கம் போல அறிவிப்பு உள்ளது.
மேற்கண்டோர் மட்டும்தான் விலக்கப்பட்டார்களா? அவர்கள் மட்டும்தான் இன்று காலையில் போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேறினார்களா? என்று கேட்டால் இல்லை. சமையல்காரர் உட்பட குறிப்பாக மன்னார்குடி குடும்ப உறுப்பினர்களும்,உறவுகளும், வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் முக்கியமாக அதிமுக பொதுசெயலாலருக்கு பாதுகாப்பிற்காக ஏற்பாடு செய்யப்ப்பட்ட "தனியார் பாதுகாப்பு படை" வெளியேற்றப்பட்டுள்ளது. அதாவது இப்படி ஒரு படையை "பழனி" தலைமையில் "தரணி" உடன் சேர்த்து, மூன்று தஞ்சைகாரர்களும், இரண்டு மேலூர் காரர்களும் ஒரே "சாதியை" சேர்ந்தவர்களாக இருந்தார்களே, அவர்கள் ஐந்துபேரும் "கள்ளத்தனாமாக" நடராஜனின் கட்டளைக்கு என்னவேண்டுமானாலும் செய்ய துணிந்தவர்கள் என்று "உளவுத்துறை" கூறிவிட்டதால் வெளியேற்றப்பட்டுள்ளனர். எல்லோரும் "மூட்டை, முடிச்சை" தூக்கி கொண்டு "சூட்கேசுகளுடன்" மதியத்திற்குள் வெளியேறினர்.
அந்த இடங்களை "சிறப்பு காவலர்கள்" நிரப்பினர். சசிகலா வகையறா இரண்டு "ஸ்கார்பியோ" வாகனங்களில் வெளியேறினர். ஆனாலும் "தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை" மாவட்டங்களில் இருந்து நேற்றே நிலைமையை கேள்விப்பட்டு, "சசி குழு "அழைப்பின்" பெயரில் சென்னை வந்துள்ள கள்ளர் சமூக முன்னோடிகள் இன்று "தனியாக" சென்னையில் கூடி விவாதிக்கின்றனர். அவர்கள் மீண்டும் "சமரசம்" பேச வாய்ப்புள்ளதா என்று பேசிக்கொள்கிறார்கள். அதை எதிர்க்கட்சி டி.வி. மூலம் ஒளிபரப்புகிறார்கள். ஏன் இந்த குழப்பம்? பெங்களூரு நீதிமன்றத்தில் வைத்து முதல்வர் போகாத கடந்த வாரம் "சசிகலாவும், இளவரசியும், சுதாகரனுக்கு இருபுறமும் அமர்ந்து கொண்டு "ரகசியம்" பேசியதும், அங்கே நேரில்வராத நடராசன் விடுதி அறையில் இருந்து வழிகாட்டியதும் உளவுத்துறை மூலம் முதல்வருக்கு தெரிந்தது. அதுமட்டுமின்றி தங்களுக்குள் "தொடர்பு இல்லை" என்று கூறி வந்தவர்கள் பெங்களூரில் ஒன்றாக கூடி குசலம் விசாரித்ததில் தன்னிடம் "சசி உட்பட" பொய் கூறியுள்ளார்கள் எனபதும் முதல்வருக்கு வெளிப்பட்டு விட்டது.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றுவிடுவார், அதனால் தன்னை முதல்வராய் ஆக்கு, அல்லது தான் காட்டும் நபரை ஆக்கு என நடராசன் உளவு துறையின் ஏ.டி.ஜி.பி. ராஜேந்திரன் என்ற காரைக்குடிகாரர் வசம் பேசியதை கேள்விப்பட்டுதான் அந்த ராஜேந்திரனை மாற்றினார் முதல்வர். இது இரண்டு மாதமாக நடக்கும் பிரச்சனை.அதற்கு பிறகு போடப்பட்ட "பொன்மாநிக்கவேலும்" ஸ்டாலின் கைது விவகாரத்தில் செயல்படாததை அறிந்து அதற்கும் "நடராசன் விசுவாசம்"காரணமா என ஆராயப்பட்டது. அவரும் அதனால் மாற்றப்பட்டார். அதற்குள் பெங்களூரு நீதிமன்ற "சந்திப்புகள்" உண்மை சதியை அம்பலப்படுத்தின. "சதி" கேள்விப்பட்ட உடனேயே "உளவுத்துறையினர்" தனியார் பாதுகாப்பு படை முதல்வரை சுற்றி நிற்பது "ஆபத்து" என உணர்ந்தனர். அவர்களும் "அதே" கும்பல்தானே என்பதால் "எதையும் செய்வார்கள்" என்று எண்ணினார்கள். ஆகவே அவர்களும் "காலி". பூங்குன்றன் மாத்திரம் "காத்திருப்போர்" பட்டியலில் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
இத்தனை விவாகரமும் "நமது எம்.ஜி.ஆர்" இதழிலும், "முரசொலியிலும்" மறைமுகமாக வந்து கொண்டுதான் இருந்தன. அதை யாரும் "துருவி" பார்க்கவில்லை. டிசம்பர் முதல்வாரம் நமது எம்ஜிஆரில் "ஐந்து மாவட்ட செயலாளர்கள்" மாற்றப்பட்டனர். இன்றைய இதழில் அத்தனை மாற்றமும் "தவறு" என்றும் பழைய மாவட்ட செயலாளர்களே தொடர்வர் எனவும் வந்துள்ளது. இன்று "முரசொலியில்" ஒரு கட்ட செய்தி வந்துள்ளது. அதில் " முதல்வரை காப்பாற்றிய சிறுமிக்கு பரிசு" எனும்போது அந்த சிறுமி "உங்களை காப்பாற்றியதற்கு" எனக்கு அவர்கள் "தூக்கு தண்டனை" கொடுக்கலாம் என கூறியது வெளியாகியுள்ளது. அதை ஆளும் கட்சியின் ஏடு "முந்தா நாள்" வெளியிட்டுள்ளதாக முரசொலி கூறியுள்ளது. அதாவது முதல்வரின் உயிருக்கு "ஆபத்து வார" உள்ள வாய்ப்பை அப்படி முரசொலி எழுதியதும் இப்போது தெரிகிறது.
அப்படியானால் முரசொலியை நடத்தும் திமுக தலைமைக்கு ஏற்கனவே "எல்லாம் " தெரியுமா? ஆமாம். தெரியும். எப்படி? மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அந்த நிழல் மனிதரின் நடவடிக்கைகளை உளவு துறை மூலம் கணக்கெடுத்த அன்றைய முதல்வர் "அந்த கலாட்சேத்ரா காலனி" வாசியை பிடிக்குள் கொண்டுவந்து விட்டார். அவரது "வங்கி கணக்குகளை" எடுத்து வைத்து கொண்டு, அவரை "கிடிக்கி பிடி" போட்டு "ஜாபர் செட்" மூலமே அதிமுக உடைக்கும் படலத்தை தொடங்கி விட்டார். அப்படி வெளியே வந்தவர்கள்தான் "செல்வகணபதி, முத்துசாமி" போன்றோர். அந்த "உள்ளே-வெளியே" விளையாட்டை அப்போதிலிருந்தே இந்த கூட்டம் செய்து வந்துள்ளது. உள்ளேயிருந்து விளையாடியவர்களின் "நடிப்பு" அந்த அதிமுக பொது செயலாளரை நம்ப வைத்து விட்டது.
இந்த சதியை அதனால்தான் "கருணாநிதியின் சதியை முறியடித்ததாக" ஆள்வோர் பேசிக் கொள்கிறார்கள். ஏற்கனவே காவல்துறைக்குள் இருக்கும் "குழுவாதம்" இந்த சதிகளுக்கு உதவி விட்டது. அதாவது "ஜாங்கிட் குழு". இது திமுக விசுவாச குழு. ஜாங்கிட் ராஜாத்தி அம்மையாருக்கும், ஸ்டாலினுக்கும் "முறைவாசல்" செய்தவர். அவருக்கு எதிர்குழு "ராஜெச்தாஸ், பொன்மாணிக்கவேல்,குழு".இவர்கள் ஜான்கிட்டால் "பழி வாங்கப்பட்டவர்கள்". இந்த குழு விளையாட்டில் "சிவனாண்டி" சிக்கி கொண்டார். சென்ற அதிமுக ஆட்சியில் சசிகலா விசுவாசி, பிறகு திமுக ஆட்சியில் அழகிரி மூலம் உள்நுழைவு, பிறகு மீண்டும் சசிகலா மூலம் முயற்சி, ஆனால் இப்போது ஜெயாவால் "வாங்கிய குட்டு". இதேபோல ம.நடராஜனின் நண்பர் பன்னீர்செல்வம் அய்.ஏ.எஸ். அவர் நல்லவர் போல நடந்து எல்லா "சேட்டைகளையும்" அரங்கேற்றியவர்.அம்பலம் ஆனதும் அவரது உயர்ந்த பதவியான " சிறப்பு கடமை அதிகாரி" என்ற ஒ.எஸ்.டி. பறிபோனது. அந்த இடத்தில் எம்.ஜி.ஆர்.கால விசுவாசி "பிச்சாண்டி அய்.ஏ.எஸ்." வந்துவிட்டார்.
இத மாற்றங்கள் "அதிகாரிகளின் ஆலோசனைப்படி" நடக்கின்றன. அதை புரியாமல் எது "கள்ளரை எதிர்த்து" என்று எண்ணிக்கொண்டு, சில "பார்ப்பன விற்ப்பன்னர்கள்" தோட்டத்தில் நுழைய முயற்ச்சித்தார்கலாம். ஆனால் ""மூக்குடைபட்டு" திரும்பினார்களாம். அதனால் பார்ப்பனர்களுக்கு இந்த "மாற்றம்" பயன்படாது. தமிழர்களுக்கே பயன்படும் எனபது "கூடங்குளம், முல்லைபெரியார்" விசயங்களிலும், "மூன்றுபேர் தூக்கு , ஈழத்தமிழர்" விசயங்களிலும நிரூபனமாகி வருகிறது. காஞ்சி "மடசங்கரங்கள்" செய்யும் "நீதியரசருக்கு லஞ்சம் கொடுக்கும்" செயல்களும் தண்டிக்கப்படும். மத்திய அரசின் "தமிழ்நாடு மீதான போர் நடவடிக்கையும்" ப.சிதம்பரத்தின் சதிகளும் முறியடிக்கப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
முதலில் எழுத்துப் பிழை இல்லாமல் எழுதிப் பழகுங்கள் அய்யா. அளவற்ற எழுத்துப் பிழைகள் கடும் எரிச்சலைக் கொடுக்கின்றன.
//அமர பாரதி said...
முதலில் எழுத்துப் பிழை இல்லாமல் எழுதிப் பழகுங்கள் அய்யா. அளவற்ற எழுத்துப் பிழைகள் கடும் எரிச்சலைக் கொடுக்கின்றன.//
அவரோட அவசரம் அவருக்கு:)
ரொம்பத்தான் ஓவர்!இல்ல?
ஆமாங்க ராஜ நடராஜன் சார். ரொம்ப ரொம்ப ஓவர். மேலும் தேவையில்லாத கொட்டேஷன் உபயோகமும் கடுப்பேத்துகிறது மை லார்ட்.
Post a Comment