Thursday, October 20, 2011

மாற்றத்திற்கான செய்தியாளர்கள் பட்டினி போரில் சுவையானவை...

நடந்து வரும் கோயம்பேடு மூவர் உயிர் காக்கும் தொடர் பட்டினி போரில் 28 ஆம் நாள் அதை நடத்திய மாற்றத்திற்கான செய்தியாளர்கள், அழைத்ததன் பேரில் வந்தவர்கள் பல சுவையான செய்திகளை விட்டு சென்றனர்.காலையில் 11 மணிக்கு தோழர் ஆர்.நல்லகான்னு, பேராசிரியர் சரஸ்வதி போன்றோர் வந்துவிட,ஒரு ஆர்ப்பாட்டத்தை முன் வாசலில் சாலையை ஒட்டி நடத்த ஏற்பாட்டாளர் ஜீவசகாப்தன் ஏற்பாடு செய்தார். ஆர்ப்பாட்டத்தை தோழர் நல்லகண்ணு தலைமை ஏற்று நடத்தினார்.அதை அடுத்து செங்கொடி படத்திற்கு மாலை அனுவித்து, பேரா.சரஸ்வதி அந்த படம் அருகே "குத்துவிளக்கு" ஏற்றிவைத்தார். அப்போது மக்கள் மன்றம் மஹேஷ், ஜெசி ஆகியோர் உடன் இறந்தனர் அவர்களுடன் மக்கள் மன்றத்தை சேர்ந்த பாலு, நாத்திகன், மகேந்திரவர்மா ஆகியோரும் வந்திருந்தனர்.

தொடர் பட்டினி போர் ஏற்பாட்டாளர்களான செல்வராஜ், ராஜ்குமார் பழனிசாமி ஆகியோரும் வந்துவிட்டனர். ஊடகவியலாளர்களான எழில், உமா, ரெஜி, சீ தமிழ் செய்தி ஆசிரியர் ஜெயக்குமார், மார்க்சிய பெரியாரிய கட்சியின் தமிழேந்தி, உழைக்கும் பத்திர்கையாளர் சங்க தலைவர் சகாயராஜ், டாக்டர் ரவீந்திரநாத், டி.எஸ்.எஸ்.மணி ஆகியோரும் வந்திருந்தனர். தோழர் நல்லகண்ணு தலைமை உரை நிகழ்த்தினார். அதில் சிறைக்குள் அவர் இருந்த காலத்திய நிலையையும், மரண தண்டனை கைதிகள் நிலையையும்,பாலன் போன்றோர் மீது பொய்வழக்கு போடப்பட்ட நிலையையும், எடுத்து சொன்னார். 1999 ஆம் ஆண்டே சோனியா காந்தி அன்றைய தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தை சுட்டி காட்டினார்.

அதில் தன் கணவன் இறந்ததால் தாங்கள் படும் துயரை இப்போது ராஜீவ் கொலையில் மரணதண்டனையை எதிர்கொள்ளும் "நால்வரும்" மரணம் அடைவதன் மூலம் அவர்களது குடும்பங்களும் அடையக்கூடாது என்று எழுதியுள்ளதை நல்லகண்ணு சுட்டி பேசினார். தானும் தனது குழந்தைகளும் அதை விரும்பவில்லை என்று சோனியா எழுதியிருந்தார். நளினியின் பெண் குழந்தை ஒன்று இருப்பதால் நளினிக்கு மரண தண்டனை என்பதை தாங்கள் விரும்பவேயில்லை என்று சோனியா எழுதியிருந்ததையும் படித்து காண்பித்தார்.தோழர் நல்லகண்ணுவின் முழு உரையை மறுநாள் "ஜனசக்தி" ஏடு அப்படியே பதிப்பித்துள்ளது. அடுத்து பேரா.சரஸ்வதி பட்டினி போரை துவக்கி வைத்து துவக்க உரை நிகழ்த்தினார். அதில் ராஜீவ் கொலை வழக்கில் உச்சநீதிமன்றமே தடா வழக்குக்கு அது பொருந்தாது என்றும், தனி நபர் மீதான பழிவாங்கும் கொலைதான் அது என்றும், கூறியுள்ளதை சுட்டி காட்டி, தடாவில் எடுக்கப்பட்ட சித்திரவதை மூலமான வாக்குமூலங்களை வைத்து கொடுக்கப்பட்ட தீர்ப்பு எப்படி பொருந்தும் என்று கேள்வி எழுப்பினார்.

அடுத்து உழைக்கும் பத்திரிகையாளர் சங்க தலைவர் சகாயம் பேசினார். அவரும் தங்கள் சங்கத்தின் முழு ஆதரவையும் மூன்று தமிழர் உயிர் காக்க தருகிறோம் என்றார். அவர் பணியாற்றும் தமிழன் தொலைக்காட்சியினரும் வ்ந்திருந்து படப்பிடிப்பு நடத்தினர்.அதேபோல மக்கள் டி.வி., இமயம் டி.வி. ஆகியோரும் வந்திருந்து படம் எடுத்து வெளியிட்டனர். அடுத்து பேசிய டி.எஸ்.எஸ்.மணி, செப்டம்பர் கடைசியில் வெளிவந்த "ஓபன்" என்ற் ஆங்கில வார ஏட்டில் வந்துள்ள கட்டுரைகளை சுட்டி காட்டி பேசினார். அதில் ராஜீவ் கொலையை விசாரிக்க ஜெயின் ஆணையத்தால் கூறப்பட்ட சீ.பி.அய். ஏற்படுத்திய எம்.டி.எம்.சீ. என்ற பல்முனை கட்டுப்பாடு கண்காணிப்பு ஆணையம் இன்னமும் தனது விசாரணையை நடத்தி கொண்டு இருக்கிறது என்ற உண்மையை போட்டு உடைத்தார். ராஜீவ் கொலை விசாரணையே இன்னமும் முடிவடையாத நிலையில் எப்படி மூவருக்கு தூக்கு போடலாம் என்ற கேள்வியை முன்வைத்தார்.

தமிழ் ஊடகங்களில் வராத அத்தகைய செய்திகளை அந்த ஆங்கில ஏடு வெளியிட்டுள்ளதை சுட்டி காட்டி, விசாரணையில் சித்திரவதை செய்ததை விசாரணை அதிகாரி மோகன்ராஜ் ஒப்புக்கொண்டுள்ளதையும், அதை மறுத்து,புத்தகத்தில் பொய் எழுதிய கார்திகேயனையும் மோகன்ராஜ் அமபலப்படுத்தியுள்ளதையும் அந்த ஏடு வெளியிட்டிருந்தது. ராஜீவ் கொலையை விடுதலை புலிகள் செய்யவில்லை என்று ஒரு "ரா" அதிகாரி சொன்னதையும், கொலை நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட "காணொளியை" எம்.கே.நாராயணன் மறைத்து விட்டதையும் விசாரணை தலைமை அதிகாரி ரகோத்தமன் சொன்னதை அந்த ஆங்கில ஏடு அம்பலப்படுத்தி இருந்தது. அதை அவர் சுட்டி காட்டினார்.


செய்தியாளர் நிகழ்ச்சிக்கு "நியு இந்தியன் எக்ஸ்ப்ரெஸ" ஏட்டின் தலைமை செய்தி ஆசிரியர் பாபு ஜெயக்குமார் வந்திருந்தார். தமிழ்நியுஸ் நாளேட்டின் சிறப்பு செய்தியாளர் ராஜன் வந்து கலந்துகொண்டு பேசினார்.தேசியதலைவர் அய்யா பிரபாகரனுக்கு இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் இப்படி ஒரு முன்னாள் பிரதமரை கொலை செய்தால் அது தங்கள் இயக்கத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரியாதா?அபப்டி செய்வாரா? என்று பகுத்தறிவு கேள்வி ஒன்றை எடுத்து வைத்தார். மதியம் சிறிது நேரம் மின்வெட்டு அமைதியை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் நாத்திகன் தனது செங்கொடி பற்றிய பாடலை பாடினார்.வந்திருந்தவர்கள் உள்ளே வைத்திருக்கும் ஓவியர்களின் கைவண்ணத்தில் வரையப்பட்ட "தூக்கு தண்டனை எதிர்ப்பு ஓவியங்களை" கண்டு உளம் நெகிழ்ந்தனர்.


மாலை வரும் முன்பே சீ.பி.அய்.யின் சீ.மகேந்திரன் வந்தார். அவருடன் திருமலை வந்தார்.விடுதலை சிறுத்தைகள் தலைவர்தொல்.திருமாவளவன் வந்தார்.அவருடன் வன்னிய அரசு உட்பட பல சிறுத்தைகள் வந்தனர். இயக்குனர் கவுதமன், இதழியல் மற்றும் திரைப்பட இயக்குனர் ரேவதி, ஜென்னி, சதீஷ், உயிர்மை துணை ஆசிரியர் அமர், பெ.தி.க. அண்ணாமலை, டி.லட்சுமணன், கணேசன், ஆகியோரும் வந்திருந்தனர். மகேந்திரன் பேசும்போது "சீ.பி.அய். கட்சியும் ஒரு நாள் முழுவதும் இந்த பட்டினி போரை நடத்த முடிவு செய்துள்ளது" என்றார். அதேபோல திருமாவளவன் பேசும்போதும், விடுதலை சிறுத்தைகளும் ஒரு நாள் முழுவதும் இந்த பட்டினி போரை நடத்தும் என்றார். இடத்தை தந்து உதவும் முன்னாள் திருச்சி எம்.எல்.ஏ. கே.சொந்தரராஜன் பேசினார்.


அவரது பேச்சில் ஒரு செய்தியை கூறினார்.தனது உறவுக்காரர் ஒருவர் நீதியரசராக இருந்தவர் கூறிய செடிதியை கூறினார். அவர் "வழக்கு திட்டமிட்டு சதி செய்து மாற்றி அமைக்கப்பட்டது" என்று ஆதாரத்துடன் கூறியதை கூறினார். அதாவது ராஜீவ் கொலை வழக்கை நடத்திய நீதியரசர் சித்திக் சரிவர மாட்டார் என அவரை கார்த்திகேயன் மாற்றினார். நவநீதனை நீதியரசராக போட்டனர். அவரும் 26 பேருக்கு தூக்கு போடவேண்டுமா? என்று கேட்டபோது, நீங்கள் ஒரு பெண் தட்டச்சு உதவியாளரை மானபங்கம் செய்ததாக கூறி உள்ளே தள்ளிவிடுவோம் என மிரட்டி கார்த்திகேயன் தீர்ப்பு எழுத வைத்தார் என்று அமபலப்படுத்தினார். அதன்பிறகு பேசிய தியாகு பல வெளிநாட்டு விசயங்களை கூறி அதிகநேரம் பேசினார்.

தமிழா, தமிழா பாண்டியன் எப்படி தமிழ் ஊடகங்கள் ஈழத்தமிழருக்கு எதிராக செயலப்டுகின்றன என்று விளக்கினார். பெண்ணிய எழுத்தாளர் ஓவியா பேசினார். அவர் டில்லியில் ஒரு கருத்தரங்கில் பேசிய சிங்கள பெண்,தங்களுக்கு மட்டுமான நாடாக இலங்கையை விளக்கி பேசியதை சுட்டி காட்டினார். இன்னமும் சிங்களர்கள் அங்குள்ள தமிழர்களை தங்கள் குடிகளாக ஏற்றுக் கொள்ளவில்லை எனபதை சுட்டி காட்டினார். அதிலிருந்தே "தமிழீழம் மட்டுமே" தீர்வு எனபதை புரிய முடிந்தது. இடையில் மாலை நேரத்தில் மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்வாசலில் நின்று நடத்த ஜீவசாக்ப்தன் ஏற்பாடு செய்தார். அது திருமாவளவன் தலைமையில் சிறிது நேரம் முழக்கங்களாக நடத்தப்பட்டது.அதன்பிறகு பேசிய அ.மார்க்ஸ், வாய்ப்பை பயன்படுத்தி பல பழைய செய்திகளை கூறி ஜெயலலிதாவை நிறைய திட்டி பேசினார்.அவருக்கு அரசுக்கு எதிராக ஒரு புரட்சியை நடத்திய திருப்தி கிடைத்திருக்கும். அதன்பிறகு விடுதலை ராஜேந்திரன் வழக்கம் போல முறையான சில வாதங்கள் மூலம் மரண தண்டனை யாருக்கும் இருக்க கூடாது என்று வலியுறுத்தினார்.நியாயமாகவே தமிழக அரசின் சட்டமன்ற தீர்மானத்தை பர்ராட்டினார். அதன்பிறகு நிறைவாக திருமாவளவன் பேசினார்.தமிழீழத்தை ஆதரிப்பவர்கள் மத்தியிலும், விடுதலை புலிகளை ஆதரிப்பவர்கள் மத்தியிலும் இருக்கின்ற முரண்பாடுகளை எதற்காக வெளியே சொல்லி நம்மை நாமே பலவீனப்படுத்த வேண்டும் என வினவினார்.

அவர் கூறியதில் ஆளுநர் ரோசையாவை சந்தித்தபோது, சட்டமன்ற தீர்மானத்தை ஏன் நீங்கள் அமைச்சரவை தீர்மானம் போல எடுத்து கொண்டு மரண தண்டனையை ரத்து செய்ய கூடாது என கேட்டதையும், அதற்கு ஆளுநர் முதல்வர் அப்படி தனக்கு எழுதினால் தான் "கவனிப்பதாக" கூறியதையும் எடுத்து சொன்னார். அது புதிய தெம்பை ஏற்படுத்தியது.ஊடகங்கள் ஒற்றுமையை ஏற்படுத்த உதவ வேண்டும் என்றார் அவர்.மொத்தத்தில் இளம் செய்தியாளர்களின் ஏற்பாடு சிறப்பாக நிறைவுற்றது.

கடாபி கைது செய்யப்பட்டாலும், சுடப்பட்டாலும், கடைசிவரை போராடினார்.

லிபியாவில் மக்கள் புரட்சி நடத்தினர். தெருவுக்கு வந்தனர். ஆயுதம் தூக்கினர்.எட்டு மாத காலமாக பெரும் திரளுடன் போராடி வருகின்றனர். இரண்டு மாதம் முன்பு தலைநகர் "திருபோலி" யை புரட்சி படை கைப்பற்றியது. அதற்கு பிறகும் கடாபி யின் சொந்த பகுதியான "சிர்டி" உள்ளே நுழைய முடியவில்லை. அதனால் "முழு வெற்றி" யை அறிவிக்க முடியவில்லை. ஜனநாயகம் கடாபி ஆட்சியில் இல்லை என்பதே அந்த புரட்சி படையின் முழக்கம். ஆயுதம் தாங்கிய புரட்சி படை, கடாபி யின் ஆயுதம் தாங்கிய படையுடன் மோதி வந்தது. இரண்டு படைகளும், லிபியா நாட்டு மக்களை போராளிகளாக் கொண்ட படைகள்தான்.

அப்படியானால் அவர்களுக்குள் என்ன வேறுபாடு? லிபியா நாட்டில் அதிகமாக "எண்ணெய் வளம்" இருக்கிறது. அது அமெரிக்காவிற்கு மூக்கை "வியர்த்து" விட்டது. அதனால் அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் லிபியாவில் கடாபிக்கு எதிராக போராடும் "புரட்சிபடைக்கு" ஆயுதங்கள் கொடுக்கிறார்கள். அந்த புரட்சி படை பல இடங்களை கைப்பற்றிய பிறகு , "ஒரு தற்காலிக அரசாங்கத்தை" ஏற்படுத்தி கொண்டுள்ளது. ஆனாலும் கடாபி பிடிபடும் வரை, மீதம் உள்ள சிர்டி பகுதி கையில் வரும்வரை முழு வெற்றியை அவர்கள் அறிவிக்க முடியவில்லை. இன்மேல் அறிவிப்பார்கள். கடாபி ஒரு ஆயுதம் தாங்கிய வாகன வரிசையில் செல்லும்போது, பிடிபட்டார், இல்லை சுடப்பட்டார், அல்லது கடுமையாக காயம் பட்டு உயிருக்கு போராடிவருகிறார் அல்லது கொள்ள்ளப்பட்டார் என்று இப்போது செய்திகள் வருகின்றன. எது எப்படி இருந்தாலும் மாபெரும் அமெரிக்கா படைகள், மாபெரும் நேடோ படைகளுடன், உள்ளூர் புரட்சியாளர்களுக்கு உதவி வரும்போது, தங்கள் நாட்டை அல்லது தாங்கள் ஆண்டு வந்த நாட்டை கைப்பற்றி வரும்போது, தைரியமாக ஆயுதம் தாங்கிய எதிர்ப்பை கொடுத்து கொண்டே பிடிபட்டார் அல்லது வீழ்ந்தார் என்றால், யார் வீரர்? கடாபியா? அமெரிக்காவா? இது போர் பற்றிய கேள்வி.

அடுத்து எதற்காக மக்கள் போராடுகிறார்கள்? எதற்காக அமெரிக்கா நுழைகிறது? இந்த கேள்விகளுக்கு விடை காண வேண்டும். மக்கள் ஜனநாயகம் வேண்டும் என்பதற்காக கடாபியின் சர்வாதிகாரத்தை எத்ரித்து போராடினார்கள். அவர்களும் இஸ்லாம் மீது நம்பிக்கை அவித்தே போராடினார்கள். அவர்கள் கடாபியின் ஆயுதம் தாங்கிய படையை எதிர்க்க வேண்டி இருந்தது. அதனால் அமெரிக்கா மற்றும் நேடோ நாடுகளின் சக்திகளை பயன்படுத்தினார்கள். இது ஒரு பார்வை. எதற்காக அமெரிக்காவும், நேடோ நாடுகளும் இந்த போரில் குதிக்கின்றன? அவர்களுக்கு லிபியாவின் "எண்ணெய் வளத்தை" கைப்பற்ற வேண்டும். அவர்கள் இராக்கை கடும் போர் புரிந்து கைப்பற்றியும் போதுமான எண்ணெய் கிடைக்கவில்லை. அவர்கள் ஆப்கானிஸ்தானை குறிவைத்து போர் நடத்தியும் இன்னமும் "தலிபான்களின்" கையிலிருந்து முழு நாட்டையும் கைப்பற்ற முடியவில்லை. இன்னமும் ஆப்கான் தலியான்கள் கைகளில்தான் "எண்ணெய் வளத்துடன்" இருக்கிறது. அதற்காகத்தான் அவர்கள் இப்போது பாகிஸ்தானின் வசிரிஸ்தான் பகுதியான பழங்குடி மக்களின் பகுதிகளில் தாக்குதல் நடத்த புதிய தந்திரங்களை போட்டு வருகிறார்கள்.


அதேபோலத்தான் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் லிபியாவை பார்கிறார்கள். அதனால் கடாபியை எத்ரிக்கும் சக்திகளை பயன்படுத்தி அவர்களுக்கு ஆயுதம் கொடுத்து, போர் நடத்தி, நாட்டை கைப்பற்றி "எண்ணெய் வளம்" உள்ள லிபியாவை கையில் எடுக்க முயல்கிறார்கள். ஆனால் அதற்கு "ஜனநாயகம்" கொண்டு வரும் முயற்சி என்று வேறு கூறுகிறார்கள் அப்படியானால் அந்த "ஜனநாயகம்" என்பது என்ன? அமெரிக்கா கூறும் ஜனநாயகம் "அமெரிக்கா ஆதரவு சக்திகளை" ஆட்சியில் அமர்த்துவது மட்டும்தான் என்றால் ஜனநாயம், சர்வாதிகாரம் ஆகியவற்றிற்குள் இந்த இடத்தில் எப்படி வேறுபாடு காண வேண்டும்? ஜனநாயமும், சர்வாதிகாரமும் இரண்டும் ஒரே நாணயத்தின் இரு வெவ்வேறு பக்கங்கள் என்று லெனின் கூறியது இங்கே பொருந்துமா? பொருந்தும். எப்படி பொருந்தும்?

ஒரு நாட்டிற்குள் ஒரே குடும்பத்தின் அல்லது ஒரே குடையின் கீழ் ஆட்சி ஒன்று பல பத்து ஆண்டுகளாக நடந்துவந்தால், அது எந்த பெயரில் நடந்தாலும் யார் அதன் கதாநாயகனாக இருந்தாலும் அந்த ஆட்சியில் ."அதிகாரத்தை சுவைத்தவர்கள்" இறுக்கமாக அமர்ந்து கொள்கிறார்கள். அவர்களை மக்கள் காலப்போக்கில் வெறுத்து விடுகிறார்கள். அந்த நேரத்தில் அந்த ஆட்சியாளர்களை "மேற்கத்திய நாடுகள்" தங்கள் நலனுக்காக நெருக்குமானால், அவர்கள் அந்த மேற்கத்திய நெருக்களுக்கு "அடிபணியாமல்" இருப்பார்களானால், அமெரிக்கா உட்பட நேடோ படை நாடுகளுக்கு அந்த ஆட்சியாளர்கள் மீது ஒரு "கண்" விழுந்தி விடுகிறது. அதை ஒட்டி, குறிப்பிட்ட ஆட்சியாளர்களை எதிர்த்து அந்த நாட்டிற்குள் ஒரு 'எதிர்ப்பு" வராதா என்று அதிர்பார்த்திருந் அமெர்கத்திய நாடுகளுக்கு திடீரென கிளம்பும் எந்த எதிர்ப்பையும் கைப்பற்றி செயல்பட போதுமான "உலகளாவிய" வசதிகள், ஊடகங்கள் உள்ளன.


கேட்கவே வேண்டாம். அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் உடனடியாக அந்த குறிப்பிட்ட நாட்டில் ஜனநாயகம் இல்லை என்றும், சர்வாதிகாரம் நடக்கிறது என்றும் பேச அதிக வாய்ப்பு உள்ளது. அது போராடும் புரட்ச்சியாலர்களுக்கு "இனிப்பு" செய்தியாக இருக்கிறது. இந்த இடத்தில் கடாபியையோ, இராக்கில் சதாம் ஹுசைனையோ, நாம் சர்வாதிகாரம் இல்லை என்று கூற முடியாத நிலை உள்ளது. ஆனால் அது அந்த நாட்டிற்குள் உள்ள பிரச்சனை. அந்த "ஒப்புமை ரீதியான சர்வாதிகாரத்தை" ஒழிக்க மக்கள் போராடும்போது, அமெரிக்கா நுழைகிறது. தான் முழு ஜனநாயக காவலன் என்று வேடம் போடுகிறது. உடனே மக்களும் நம்பி அதன் உற்ற்ஹவியை வாங்குகிறார்கள். அமெரிக்காவின் நோக்கம் அங்கே தனது "அடிவருடிகளை" ஆட்சியில் அமர்த்த வேண்டும் எனபதுதான்.

அதனால் அமெரிக்காவும் ஜனநாயகத்தை உண்மையில் கொண்டுவர இறங்க வில்லை. "ஒப்பீட்டளவு ஜனநாயகத்தை" காட்டி தனகது "சர்வாதிகாரத்தை" கொட்னுவர அமெரிக்கா முயல்கிறது. இதுதான் இராக்கிலும், ஆப்கானிலும், இப்போது லிபியாவிலும் நடத்தப்படும் நிகழ்ச்சிகள். அபப்டியானால் கடாப்பி செய்தது எல்லாம் சரியா? சரியில்லைதான். ஆனால் அமெரிக்கா செய்வதும் சரியில்லை எனபதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஒப்பீட்டளவு ஜனநாயகம், ஒப்பீட்டளவு சர்வாதிகாரம் ஆகிய இரண்டுமே மக்களை ஆட்சியாளர்களாக மாற்றாது. ஒன்று அமட்டும் தெரிகிறது. சதாம் ஹுசைனோ, கடாபியோ, கடைசிவரை போர் செய்து, பிடிபட்டு, கொள்ளப்படுவதால், "வராலாற்றில்" மா வீரர்களாக நிற்கிறார்கள். சர்வாதிகாரமும், ஜனநாயகமும் "ஒரே நாணயத்தின் இரு வெவ்வேறு பக்கங்கள்" எனபது இதுதான். .

Tuesday, October 18, 2011

சோ.அய்யர் எடுத்த முடிவு மதுரை வாக்களர்களது உரிமையை பாதிக்க வில்லையா?

எல்லா இட்ங்களிலும் உள்ளாட்சி தேர்தல நடத்தப்படுகிறது. ஒரு இடத்தில் ஒரு வேட்பாளர் இறந்துவிட்டால் அங்கு தேர்தல் தள்ளிவைக்கப்படும். இது வழமைதான். ஆனால் மதுரை மாநகராட்சிக்கும் தேர்தல் மேயருக்கும், ஒவ்வொரு வட்ட உறுப்பினருக்கும் நடந்தது. அதில் 15 ஆவது அவ்ட்டத்தில் நின்ற ஒரு வேட்பாளர் மரணமடைந்து விடுகிறார்.அதற்காக அந்த குறிப்ப்பிட்ட வட்ட தேர்தலை "தள்ளி" போடுவது நியாயம்தான். ஆனால் கெடுவாய்ப்பாக அதே நேரத்தில் அதே வாக்குசாவடியில், அதே வாக்காளர்களை வைத்து "மேயர்" டேஹ்ர்தலும் நடத்தப்படும் சூழலில், ஒரு தேர்தல் ஆணையம் "விவேகமாக" என்ன செய்திருக்க வேண்டும்?

எல்லா வாக்கு சாவடிகளிலும் மேயர் டேஹ்ர்தல் நடப்பது போல அந்த "குறிப்பிட்ட" வாக்கு சாவடியிலும் மேயர் டேஹ்ர்தல் நடத்த எந்த "தஹ்டையும்" இல்லை. அந்த குறிப்ப்பிட்ட "வட்ட மாநகர உறுப்பினர்" டேஹ்ர்தல் மட்டுமே தள்ளிப் போடப்படவேண்டும். ஆனால் சோ.அய்யரின் "அறிவார்ந்த" மூளை,அந்த குறிப்பிட்ட வட்டத்தில் உள்ள மேயர் டேஹ்ர்தளையும் சேர்த்து "தள்ளிப்"போட்டுள்ளது. ஒரே வாக்கு சாவடிக்குள் இரண்டு டேஹ்ர்தளையும் "தனி, தனியாக" நடத்த புத்திசாலித்தனமாக முடிவெடுத்த திரு.சோ.அய்யர் அவர்கள், ஏன் அதே புரிதலில், அந்த குறிப்பிட்ட வட்டத்தின் வாக்கு சாவடிகளில், இரண்டில் ஒரு டேஹ்ர்தலை நடத்த "அனைத்து ஏற்பாடுகளும்" தயாராக இருந்த போது, அதை செய்யாமல் "வாட் ஆருப்பினர்" டேஹ்ர்தலை தள்ளி போடும் போது, மேயர் டேஹ்ர்தளையும் அந்த குறிப்பிட்ட வட்டத்திற்கு தள்ளி போட்டார்?

இது அந்த குறிப்பிட்ட வட்டத்தின் "வாக்கலர்களது" உரிமையை பறித்த செயலாக அல்லது "தள்ளி" போட்ட செயலாக அல்லது மற்ற மதுரை வாக்களர்களுடன் சேர்ந்து தாங்களும் வாக்களிக்க உரிமை மறுக்கப்பட்ட நிலையாக ஆகிவிடாதா? இதை புரிந்து கொள்ளும் அளவுக்கு சோ.அய்யர் இருக்கிறாரா? ஏன் என்றால் ஒரு புதிய ஊடகத்திற்காக சோ.அய்யரை நேர்காணல் எடுத்தார்கள். அப்போது சென்னை மாநகராட்சிக்கான டேஹ்ர்தல் அன்டந்து கொண்டிருந்தது. திமுக தலைமை "வேப்காமரா" வைக்கவில்லை என்று புகார் கொடுக்கிறார்களே? என்ற கேள்வியை ஊடகவியலாளர் ஒருவர் கேட்கிறார். அதற்கு பதில் சொல்கிறேன் என்று சோ.அய்யர் " பொதுமக்கள் யாரும் புகார் கூறவில்லை" என்று பதில் சொல்கிறார். அபப்டியானால் திமுக என்ற எதிர்கட்சி கொடுக்கும் புகாரை அவர் "புறம் தள்ளுகிறாரா ?".அல்லது அரசியல் கட்சிகளுக்கு "புகார்" தர உரிமையில்லை என்று உள்ளாட்சி தேர்தல் பற்றி புதிய விளக்கத்தை மறைமுகமாக கொடுக்கிறாரா? அப்படியானால் ஏன் அரசியல் அக்ட்சிகளை அவர்களது சின்னங்களுடன் நிற்க அவர் சம்மதித்தார்? "பொதுமக்கள்" என்று ஒரு "அருவமான" விஷயத்தை கூறி தப்பித்து கொள்ள முயல்கிறாரா? பெரிய தலைவலிதான் இந்த தேர்தல் ஆணையர் போல?

மரணதண்டனை ஒழிக்க ஊடகவியலாளர் பட்டினி போர்.

மரண தண்டனையை சட்டத்திலிருந்து அறவே நீக்குவதற்கும், மூன்று தமிழர் உயிர் காப்பதற்கும், "மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு" கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள "இரண்டாவது சிக்னலில்" தொடர் ப்ட்டினிப் போரை ஒரு மாத காலம்மாக நடத்தி வருகிறது. அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்புகள் பங்கு கொண்டு வருகிறார்கள். நாளை அக்டோபர் 19 ஆம் நாள் ஊடகவியலாளர்கள், கல்லூரி மாணவர்களையும், கலைஞர்களையும இணைத்துக் கொண்டு, பட்டினிப போரை நடத்துகிறார்கள்.காலை 10 மணிக்கு பட்டினிப் போரை "அன்னையர் முன்னணியின்" தலைவரும், "நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம்" அமைப்பாளருமான பேராசிரியர் சரஸ்வதி, தொடங்கி வைத்து துவக்க உரையாற்றுகிறார்.

தமிழ்நாடு சட்டமன்றம் மரணதண்டனையை பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு குறைக்க வேண்டி, இந்திய குடியரசு தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்த தீர்மானம் இந்திய அரசியல் வானில் ஒரு விவாதத்தை கிளப்பிவிட்டுள்ளது. காஷ்மீர் சட்டமன்றத்தில் இதேபோன்ற ஒரு தீர்மானத்தை "அப்சல் குருவின்" மரணதண்டனையை குறைக்க வலியுறுத்தி போடவேண்டும் என்ற முயற்சி நடைபெறுகிறது.பஞ்சாபை சேர்ந்த காலிஸ்தான் போராளி "தேவேன்றபல்சிங் புல்லார்" மரணதண்டனையை குறைக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், நீதியரசரால் "தமிழக சட்டமன்றத்தின் ஏகமனதான தீர்மானம்" மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.அத்தகைய தாக்கத்தை இந்தியா முழுவதும் அரசியல் வானில் ஏற்படுத்தியுள்ள அந்த தமிழக சட்டமன்ற தீர்மானத்தை வலுப்படுத்தவும், மரண தண்டனையை சட்டத்திளிருந்தே நீக்கவேண்டும் என்ற 2007 ஆம் ஆண்டு,மற்றும் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம்நாள் "அய்.நா. பொதுசபையின்" தீர்மானத்தை செயல்படுத்தவும், ஊடகவியலாளர்கள் தங்கள் சிறிய பங்களிப்பாக இந்த பட்டினி போரை நடத்துகிறோம். அதில் கலந்துகொண்டு பணகளிப்பு செலுத்துங்கள் என்று ஊடகவியலாளர் ஏற்பாட்டாளர் ஜீவசகாப்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Monday, October 17, 2011

சோ அய்யர் "விவரம்" உள்ளவாரா?

தமிழ்நாடு தேர்தல் ஆணையர் என்ற பொறுப்பில் அமர்த்தப்பட்டிருக்கும் சோ.அய்யர், எப்படி நடந்து கொல்கிறார் என்று பார்த்தால் வேடிக்கையாக உள்ளது. ஊடகவியலாளர்கள் கேட்டா கேள்வி, திமுக தலைமை தேர்தல் நடத்தும் விதம் பற்றி கொடுத்த புகாரை பற்றியது. சோ.அய்யரின் பதிலில், பொதுமக்கள் எந்த புகாரையும் கொடுக்க வில்லையே என்பது. அந்த குறிப்பிட்ட ஊடகவியலாளர் "ஏன் கேள்விக் கென்ன பதில்?" என்று கேட்டிருக்க வேண்டும். அதை கேட்கவில்லை. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை அவற்றின் சின்னங்களுடன் நிற்க ஆனுமதி அளித்துள்ள தேர்தல் ஆணையர் சோ.அய்யர் அவர்களே, பெரிய கட்சியான திமுக கொடுத்த புகாருக்கு ஒழுங்காக பதில் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள். மாறாக பொதுமக்கள் புகார் சொல்லவில்லை என்பது எத்தகைய "நழுவல்வாதம்?"

எந்தெந்த இடத்தில் வாக்காளர்கள் இரண்டு வாக்கு போடவேண்டும், எந்தெந்த இடத்தில் நான்கு வாக்கு போடவேண்டும் என்று சோ.அய்யர் அவர்களே நீங்கள் எத்தனை நாள் முன்பு மக்களுக்கு தெரிவிக்க ஊடகங்களையும், அதில் வெளியிடப்படும் விளம்பரங்களையும் பயன்படுத்தினீர்கள்? இன்று தேர்தல் அனர் காலையில் சில ஊடகங்களில் இருந்து உணகளிடம் கேட்டதற்கு இப்போது அனுப்பி வைக்கிறேன் என்று கூறும் நீங்கள் உண்மையில் மக்களுக்கு இந்த உள்ளாட்சி டேஹ்ர்தல் பற்றி முன்கூட்டியே டேஹ்ரிவிக்கவேண்டும் என்றோ, விளக்கம் அளிக்க வேண்டும் என்றோ நினைக்க வில்லையா? .பெரும்பாலும் மக்கள் இந்த உள்ளாட்சி டேஹ்ர்தலில் வாக்கு அளிக்காததற்கு காரணமே நீங்கள் அது பற்றிய விளக்கத்தை முன்கூட்டியே ஊடகங்கள் மூலம் கொடுக்காமல் தாமத படுத்தியதுதான் என்று உங்களுக்கு தெரியுமா?

வாக்கு சீட்டுகளில் வழக்கமாக "சட்டமன்ற, நாடாளுமன்ற" டேஹ்ர்தல்களுக்கு, பெயர்களை அச்சிடும்போது " ஆங்கிலத்தில் உள்ள அகர வரிசையில்" அதுவும் முதலில், "அங்கீகரிக்கப்பட்ட" கட்சிகளின் அகர வரிசை, பிறகு " அங்கீகரிக்கப்படாத" பதிவு செய்யப்ப்பட்ட கட்சிகளின் ஆக்ரா வரிசை, பிறகுதான் சுயேட்சைகளின் அகர வரிசை என்று வரும். இப்போது மட்டும் எல்லா வேட்பலகளையும் ஒரே பாணியில், அகர வரிசையில் வாக்கு சீட்டில் பெயர்களை அச்சடித்து விட்டீர்களே? ஏன்? உனக்க்கு விளங்கவில்லையா? பிறகு எதற்காக "அங்கீகரிக்கப்பட்ட" அக்ட்சிகள் தங்கள் சின்னங்களில் நிற்க அனுமதித்தீர்கள்? அதை அனுமதித்தவர் அவர்களுக்கு முதலில் வரிசையில் பெயர் எழுதப்பட்ட சீட்டுகளை வாக்கு சீட்டுகளாக கொடுக்க வேண்டாமா? நேநேகள் சட்டமன்ற, நாடாளுமன்ர் தேர்தல்களில் வாக்கு சீட்டுகளை பார்த்தது இல்லையா?

இப்படி குழப்பி கொண்டு ஒரு தேர்தலை நடத்த உங்களை எப்படி ஆணையாராக போட்டார்கள்? எந்த தஹ்குதியை கொண்டு உங்களை தேர்வு செய்தார்கள்? "தேவர்" சமூகத்தை சேர்ந்தவர் என்பது மட்டுமேதான் உங்களுக்கு உள்ள தகுதியா? உள்ளாட்சி டேஹ்ர்தல் எனபது சட்டமன்ற, நாடாளுமன்ற டேஹ்ர்தல்களை விட "பொதுமக்களுக்கு" முக்கியமானது என்பது உணகளுக்கு டேஹ்ரியுமா? கலையில் உங்கள் "வாக்கு சாவடி அதிகாரிகள்" எத்தனை பேர் 'எட்டு மணிக்கும்" ஒன்பது மணிக்கும் வாக்கு சாவடிக்கு வந்தார்கள் தெரியுமா? அதற்கெல்லாம் நீங்கள்தான் பொறுப்பு? அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? மேயர் வேட்பாளருக்கான ஏஜெண்டு அந்த "வட்டத்தை" சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று தேர்தல் விதிமுறை தெறியாமல் உங்கள் அதிகாரிகள் "தூத்துக்குடியில்" சண்டை போட்டது உணகளுக்கு தெரியுமா? ஏதாவது நடவடிக்கை எடுத்தீர்களா?

Sunday, October 16, 2011

அணு உலையில் தலையைவிட்ட இந்திய பிரதமர்.

அணு உலைகள் மின்சாரம் தரும் என்று நாட்டு மக்களை ஏமாற்றி விட்டு, அமெரிக்காவுடன் ஒரு அணு சக்தி ஒப்பந்தத்தை பொட்டுக் கொண்ட நமது பிரதமர், இப்போது கூடங்குளம் மக்கள் போராட்டம், ஜைதாபுரில் வர இருக்கும் அணு உலைகளை தயார் செய்யும் பிரான்ஸ் நாட்டு முதலாளியின் "பாதுகாப்பற்ற " நடவடிக்கைக்கு நீதிமன்றத்தின் "அபராதம்" ஆகிய செய்திகளால் "நிலை குலைந்து" இருப்பது ஒருபுறம். இப்போது "முன்னால் அதிகாரிகளால்" போடப்பட்ட அவ்ழக்கில் "இந்நாள் பிரதமர்" மாட்டிக் கொண்டார் என்பது புது கதை.

முன்னாள் அமைச்சரவை செயலாளர் டி.ஆர்.எஸ்.சுப்பிரமணியம், முன்னாள் கடல்படை தலைவர் அட்மிரல் எல். ராமதாஸ், மத்திய தேர்தல் ஆணைய முன்னாள் தலைவர் கோபால்சாமி, அறிவு ஆணைய முன்னாள் உறுப்பினர் பி.எம்.பார்கவா, பிரதமரின் முன்னாள் செயலாளர் ஆர்.வேணுகோபால், ஆகியோரும் இணைந்து ஒரு வழக்கை உச்சநீதிமன்றத்தில் அணு உலைகளுக்கு எதிராக போட்டுள்ளனர். இந்த வழக்கு அணு உலைகளை செயல்படுத்தும்போது, வருகின்ற "ஆபத்துகளில்" பாதிக்கப்படும் மக்களுக்கு "நட்ட ஏஅடு" கொடுப்பதற்காக் போடப்பட்ட "சட்டம்" நியாயமாக இல்லை என்று குற்றம் சாட்டுகிறது. இந்திய ஆரசியல் சட்டத்தின் அடிப்படையில், அணு உலை ஆபத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு "இழப்பீடு" கொடுப்பதில் ,அணு உலையை "இயக்கிய" அந்நிய நாட்டு முதலாளிக்கும், அதை "விநியோகம்" செய்த தனியார் முதலாளிக்கும் "பொறுப்பு" அதிகம் உண்டு என்று இந்த வழக்கு குற்றம் சாட்டுகிறது.

ஏற்கனவே போடப்பட்ட "இழப்பீடு" சட்டம் போததாது என்றும், அணு உலைகளை இறக்கும் மற்றும் விநியோகிக்கும் தனியார் ஏகபோக கார்பரேட் முதலாளிகளை "முக்கிய" பொறுப்பு ஏற்க வைத்து அவர்களை " முக்கிய நட்ட ஈட்டை" கட்ட வைக்க வேண்டுமே ன்று இந்த வழக்கு கூறுகிறது. இந்த "கூற்று" இதிய நீதிமன்றங்களிலும், இந்திய மக்களின் மனங்களிலும், இந்திய நாட்டு பற்றாளர் மத்தியிலும், ஏகமனதாக வரவேற்கப்படும். ஆகவே இந்த அவ்ழக்கும் இன்னொரு தலைவலியை "மத்திய அரசுக்கு" ஏற்படுத்தும் என்பதை அணு உலை எதிர்ப்பாளர்கள் புரிந்து கொண்டு அதையே மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

உள்ளாட்சியில் உள்ள மகிமை.

உள்ளாட்சியில் உள்ள மகிமை.
உள்ளாட்சி தேர்தல் "திங்கள் அன்றும், புதனன்றும்" தமிழ்நாடெங்கும் நடக்கும். அதில் பத்து மாநகராட்சிகள், மற்றும் அறுபது நகராட்சிகள் முதல் கட்டத்திலும் மீதி இரண்டாம் கட்டத்திலும் நடக்கும். மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும், ஒவ்வொரு வாக்காளரும், "இரண்டு" வாக்குகளை அளிக்க வேண்டும். ஒன்று அந்த மாநகராட்சி தலைவர் அல்லது நகராட்சி தலைவர், அல்லது பேரூராட்சி தலைவர் என்ற பொறுப்புக்கு போடப்பட வேண்டிய வாக்கு. இன்னொன்று தாங்கள் வாக்காளராக இருக்கும் வட்டத்தில், நிற்கின்ற மாநகராட்சி உறுப்பினருக்கோ, நகராட்சி உறுப்பினருக்கோ, பேரூராட்சி உறுப்பினருக்கோ போடப்பட வேண்டிய வாக்கு.

இந்த பகுதிகளை தாண்டி,உள்ளாட்சியில் கிராமங்களில் இருக்கும் வாக்காளர்கள், "நான்கு" வாக்குகளை போடவேண்டும். அதாவது தங்கள் "மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கும், தங்கள் ஒன்றிய உறுப்பினருக்கும், தங்கள் ஊராட்சிமன்ற தலைவருக்கும், தங்கள் ஊராட்சிமன்ற உறுப்பினருக்கும் என நான்கு வாக்க்குகளை ஒவ்வொரு வாக்காளரும் போட வேண்டும். இந்த விளக்கத்தை எந்த அளவுக்கு "தமிழ்நாடு தேர்தல் ஆணையம்" புரிய வைத்துள்ளது என்பது நமக்கு தெரியாது. ஆனால் கண்டிப்பாக இந்த "உள்ளாட்சிதேர்தல்" எந்த வகையில் "சட்டமன்ற, நாடாளுமன்ற" தேர்தல்களில் இருந்து "வேறுபட்டது" என்பதை புரிய வைக்க வில்லை என்பது நமக்கு தெரியும்.


சட்டமன்ற தேர்தலில் நிற்கின்ற வேட்பாளர் வெற்றிபெற்றால் "சட்டமன்ற உறுப்பினராக" ஆகிறார். அவர் சட்டமன்றம் சென்று தனது "தொகுதி மக்களுக்கு" என்ன செய்ய முடியும்? தங்கள் தொகுதியை பற்றி, தொகுதி மக்களது கோரிக்கைகளைபற்றி சட்டமனரத்தில் "வாய்ப்பு" கிடைத்தால் பேச முடியும். ஆனால் அவற்றை "நிறைவேற்றும்" அதிகாரம் அவருக்கு கிடையாது. அது "அமைச்சரவைக்கு" மட்டுமே உண்டு. அதேபோல "நாடாளுமணர் தேர்தலில்" நிற்கின்ற வேட்பாளர் "நாடாளுமன்ற உறப்பினர்" ஆகிறார். அவரும் நாடாளுமன்றத்தில், தங்கள் தொகுதி பற்றியோ, தொகுதி மக்களது கோரிக்கைகள் பற்றியோ, "பேசத்தான்" முடியும். அவற்றை அவரால் செய்ய முடியாது. அங்கும் "அமைச்சரவைதான்" அவற்றை நிறைவேற்ற முடியும். அதனால்தான் "புரட்சியாளர் லெனின்" இந்த நாடாளுமன்ற பாதையை " அரசுக்கும், மக்களுக்கும் மத்தியில் இடப்பட்டிருக்கும் ஒரு திரை" என்று குறிப்பிட்டார்.


ஆனால் இந்த உள்ளாட்சி தேர்தல்கள் வித்தியாசமானவை. அவை தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு "திட்டமிடும் அதிகாரத்தை" கொடுக்கிறது. அதாவது வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் "மாநகராட்சி உறுப்பினரோ, நகராட்சி உர்ப்பினரோ, பேரூராட்சி உறுப்பினரோ, மாவட்ட ஊராட்சி உறுப்பினரோ, ஒன்றிய ஊராட்சயுருப்பினரோ, ஊராட்சி தலைவரோ, ஊராட்சிமன்ற உறுப்பினரோ" தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி மக்களின் "நலனுக்காகான" திட்டங்களை தீட்டுவதற்கு அந்த அவைகள் இடம் கொடுக்கின்றன. அத்தகைய திட்டங்களுக்கான "நிதியை" ஒதுக்க அவர் சம்பந்தப்பட்ட அவைகளில் கருத்து தெரிவித்து "பெற்று கொள்ள" வசதி செய்கினறன. உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்படுகின்ற "ஒவ்வொரு உறுப்பினரும்" அவர் தலைவராக இருந்தாலும், உறுப்பினராக இருந்தாலும் "திட்டமிடவும்,.நிதி ஒதுக்கவும்" அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்ற "அதிகாரத்தை" அந்த உள்ளாட்சி அமைப்பு அளிக்கிறது.


ஆகவே உள்ளாட்சி அமைப்புகள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை விட, "கூடுதலான" அம்க்களுக்கு தேவையான "அதிகாரத்தை" பெற்றிருக்கிறார்கள். இந்த செய்தியை தேர்தல் ஆணையம் கூட மக்களுக்கு எடுத்து சொல்வது இல்லை. உள்ளாட்சிகளுக்கு "அதிகாரத்தை பரவலாக்க" நாடாளுமன்றம் "பண்ச்சாயத் ராஜ், நகர்பாளிகா" என்ற சட்டத் திருத்தங்களை கொண்டு வந்த போது, முதிர்ச்சி பெற்ற மாநில கட்சிகளின் தலைமைகள் அதை "ரசிக்கவில்லை". தங்களிடம் உள்ள "திரை" போன்ற அதிகாரத்தை மக்களுக்கான அதிகாரம் என்று "ஏமாற்றி கொடு" இருக்கும் போது, உண்மையான "அதிகார பரவலாக்கலை" மக்களுக்காக இந்த உள்ளாட்சிகள் கொண்டு வந்து விடுமே என்றும், அதனால் "தங்கள் அதிகாரம்" குறிக்கப்பட்டு விடுமே என்றும் அந்த கட்சி தலைமைகள் எண்ணி பார்த்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

ஆகவே இந்த உண்மையை "உள்ளாட்சிகளின் உணமையான் ஆதிகாரத்தை" மக்கள் மத்தியில் கொண்டு சென்றால், அதை விளங்கிய பிறகு மக்கள் எங்காவது "குழுக்கள் முறையில்" அல்லது "குத்தகை" முறையில் அல்லது "ஏல முறையில்" தங்கள் ஊராட்சி தலைவர்களை தேர்வு செய்வார்களா? உள்ளாட்சியில் நிற்கும் வேட்பாளர்களிடம் "காசும், பொருளும்" வாங்கி கொண்டு வாகளிப்பார்களா? உண்மை அதிகாரம் தங்கள் உறுப்பினருக்கு இருப்பது தெரிந்தால், அதை பயன்படுத்த "சரியான" வேட்பாளரை தேர்வு செய்யவேண்டும் என்ற "அவா" கூடாதா? அதன் மூலம் "ஊழல்" குறையாதா? அது கூடாது என்பதற்காகவே இந்த தேர்தல் ஆணையர்களும், அரசியல்வாதிகளுடன் சேர்ந்து கொண்டு உள்ளாட்சி அதிகாரம் எப்படி வேறுபட்டது என்று கூராமால் இருக்கிறார்களா?