கீழ வெண்மணி கிராமம், 1968 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள் உலகம் முழுவதும் ஒரு அதிர்ச்சி தகவலை கொடுத்தது. செழுமையான விவசாயத்தை கட்டிக்காத்துவந்த உழவர் பருன்குடி மக்களான தாழ்த்தப்பட்ட விவசாயக்கூளிகளை சுரண்டி கொழுத்துவந்த ஆதிக்க சாதி வெறி கொண்ட பண்ணையார்களின் சங்கத்தலைவன் கோபாலக்ருஷ்ண நாயுடு, காவல்துறையுடன் சேர்ந்துகொண்டு அறுவடைக்கு அதிகக்கூலி கேட்ட அந்த அடிமட்ட ஏழை மக்களை விரட்டி, வெண்மணி கிராமத்திலேயே ஒரு குடிசைக்குள் தள்ளி கதவை தாளிட்டு அவர்களது வாழ்க்கைக்கும் தாளிட்டுவிட்டான். அனைத்து கூலி மக்களும் அவன் வைத்த வெந்தீயில் எரிந்து சாம்பலாயினர். அந்த கொடூரக்காட்சியை பார்த்துகொண்டு கைகள் தேர்தல்களால் கட்டப்பட்டநிலையில் மார்க்சிஸ்ட் கட்சி கண்ணீர் விட்டது. அந்த மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக இப்போது கீழ்வேள்ளூர் தொகுதியில் ஒரு மகாலிங்கம் நிற்கிறார்.
கீழ வெண்மணியை கொண்ட இந்த கீழ்வெள்ளூர் தொகுதி புதிதாக சமீபத்திய தொகுதி மறுபரிசீலனையில் உருவாக்கப்பட்ட புதிய தொகுதி. அதுவும் தலித் இனத்திற்கான ஒதுக்கீட்டு தொகுதி. கீழ வன்மைநீல் நடந்த கொடூரக்கொளைகளுக்கு எதுவும் செய்யமுடியாமல் சாபிடாமல் மட்டுமே இருந்த முதல்வர்தான் திமுகவின் முதல் முதல்வரான அண்ணாதுரை. அந்த திமுக சார்பாக இப்போது அந்த தொகுதியில் அமைச்சர் மதிவாணன் நிற்கிறார். அந்நாள் வெண்மணி படுகொலையை நினைவு படுத்தி நிற்கின்ற இளம் பெண் மாணவி தேவகி அனைவராலும் கவனிக்கப்படுகிறார். ஏன் என்றால் அவர் மட்டுமே வெண்மணி படுகொலைகள் பற்றி பேசக்கூடியவராக இருக்கிறார். இனி இப்படி கொடுமைகள் நடைபெறாவண்ணம் தடுக்கவேண்டும் என்ற எண்ணத்தை முன்வைத்து தனது தேர்தல் பயணத்தை அந்த இளம் பெண் துவக்கியிருக்கிறார்.
ஆட்சியாளர்களும், நீதிமன்றமும், மார்க்சிஸ்ட் கட்சியும் படுகொலைகளுக்கு தீர்ப்பு எழுதாத ஒரு சூழலில், நக்சல்பாரி இயக்கம் அந்த படுகொலைகள் நடந்து பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து கொடியவன் கோபாலக்ருஷ்ண நாயுடுவை அழித்தொழித்தது. அந்த அழித்தொழிப்பை நடத்திய சி.பி.ஐ.-எம்.எல்.. இயக்கத்தை அன்று வினோத் மிஸ்ரா தலைமை தாங்கினார். அந்த அழித்தொழிப்பை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தோழர்களில் ஒருவர் கண்ணையன் என்ற ராமசாமி. அந்த ராமசாமியின் தம்பி மகள்தான் இந்த தேவகி என்ற சுயேச்சை வேட்பாளர்.
இந்த சுயேச்சை வேட்பாளர் தேவகி, மயிலாடுதுறை ஏ.வி.எம். கல்லூரியில் எம்.ஏ.படிக்கும் மாணவி. பறையர் நல பேரவையின் தலைவர்.அவருக்கு "பள்ளர் நல பேரவை" "சக்கிலியர் நல பேரவை"ஆகியவை ஆதரவு தருகின்றன.இன்றைய தேர்தல் போட்டியில் இப்படி ஒரு சமூக கொடுமையை மையப்படுத்தி பரப்புரை செய்வது பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் கோபலக்ருஷ்ண நாயுடுவின் படுகொலைக்கு காரணமானவர் என்றும், தலைமை தாங்கியவர் என்றும் காவல்துறையால் குற்றம் சாட்டப்பட்ட வெண்மணி குமரன் என்ற சுப்பிரமணியன் இந்த தேர்தல் களத்தில் " தேவகி" க்கு ஆதரவாக இறங்கியுள்ளார் என்ற செய்தி செவிமடுக்கவே மகிழ்ச்சியை தருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//அதில் கோபலக்ருஷ்ண நாயுடுவின் படுகொலைக்கு காரணமானவர் என்றும், தலைமை தாங்கியவர் என்றும் காவல்துறையால் குற்றம் சாட்டப்பட்ட வெண்மணி குமரன் என்ற சுப்பிரமணியன் இந்த தேர்தல் களத்தில் " தேவகி" க்கு ஆதரவாக இறங்கியுள்ளார் என்ற செய்தி செவிமடுக்கவே மகிழ்ச்சியை தருகிறது. //
மிக்க மகிழ்ச்சியான செய்தி, மணி அண்ணா!
Post a Comment