.
இலங்கையில் தமிழின அழிப்பை கொடூரமாக செய்த அரச தலைவர் ராஜபக்சேவை பாதுகாக்க மும்பை காவல்துறை வரிந்து கட்டிக்கொண்டு இறங்கியுள்ளது. நேற்றிரவே தான் திருப்பதி மலையில் தங்க இருப்பதாக பொய் தகவலை கொடுத்த ராஜபக்சே, அது இன்று ஆங்கில ஏடுகளில் வெளிவர செய்துவிட்டு, அதேசமயம் மும்பைக்கு நேற்று இரவே வந்திறங்கி ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கிவிட்டான். அது மாத்திரமின்றி ராஜபக்சேவை பாதுகாக்க மும்பை காவல்துறை எடுத்துக்கொண்ட செயல்பாடுகள் கணக்கில் அடங்கா.
நூறு மீட்டர் தூரத்திற்கு முன்னூறு காவலர்களை மும்பை காவல்துறை போட்டு அராஜகமான மிரட்டலை செய்தது. அவை அனைத்துமே இந்திய மத்திய அரசின் வழிகாட்டலில் செய்யப்பட்டுள்ளது. அதுவும் சிதம்பரம் என்ற துரோகம் செய்ய அஞ்சாத ஒரு தமிழனின் நேரடி ஏற்பாட்டில் மத்திய அரசின் உள்துறை செய்த வேலை என்று தெரிய வருகிறது. முதலில் வந்த செய்தியான விமான நிலையத்தில் தமிழர்களின் எதிர்ப்பு என்ற செய்தி தவறானது என்றும், உணர்ச்சி வசப்பட்ட தமிழர்கள் பொய் செய்த்கிகளை தரவேண்டாம் என்றும் நாமும் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்த கெடுபிடிகளுக்கு மத்தியில் மும்பை தமிழர் அமைப்புக்கள் எல்லோரும் சேர்ந்து அந்தேரி என்ற இடத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு இடத்தில் முன்னூறு பேராக கூடி ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்டபோது அதையும் மும்பை காவல்துறை தடுத்து விரட்டி விட்டது. அதன் பின், மும்பை தமிழ் சங்க கட்டிடம் முன்பு அனைவரும் மீண்டும் கூடி சிறப்பாக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
கொடியவன் ராஜபக்சேவுக்கு வால்பிடிக்கும் காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரா அரசையும் , மத்திய அரசையும் கண்டித்து தமிழர்கள் விழிப்புடன் இருக்க இந்த நிகழ்வுகள் எடுத்துக்காட்டாய் அமைந்துவிட்டன
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment